Bibi's lies and delusions
A look at Netanyahu's controversial address to U.S. Congress amid the Gaza war
By Mona Hojat Ansari
நெதன்யாகுவின் சர்ச்சைக்குரிய அமெரிக்க காங்கிரஸில் உரையின்
ஒரு பார்வை
Pix: Al-Jazeera |
கடந்த பத்து மாதங்களில் 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் மரணத்திற்கு
காரணமான இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வியாழன் 25/07/2024 அன்று, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலமுறை எழுந்து நின்று கரகோஷம் செய்ததை
உலகம் அதிர்ச்சியுடன் நோக்கியது.
காங்கிரஸ் சபாநாயகர் மைக் ஜான்சன் "அவரது
மாண்புமிகு பெஞ்சமின் நெதன்யாகுவை" சட்டசபையில் உரையாற்ற அழைத்தபோது, ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் காங்கிரஸ் கட்டிடத்திற்கு வெளியே கூடி, இரத்தக் கறை படிந்த நெதன்யாகுவின் உருவங்களைக் காட்டியும், பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்தும்,
"பாலஸ்தீனத்தை
விடுவி" என்று கோஷமிட்டனர்.
காங்கிரஸிற்குள், வெளிநாட்டில் இருந்து
வந்திருக்கும் தலைவரை அவமதிக்க யாரும் துணியவில்லை. ஒருவேளை சபாநாயகர் ஜான்சன்
செனட்டர்கள், பிரதிநிதிகள் மற்றும்
விருந்தினர்களை (எதிர்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்று) கருத்து வேறுபாட்டின்
வெளிப்பாடுகள் கைதில் முடியலாம் என்று முன்கூட்டியே
எச்சரித்தீர்க்கலாம்,
ரஃபாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் என்றும் "நடைமுறையில்
கிடையாது", என்றும் - காஸாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லும் - இஸ்ரேலிய வீரர்கள் எவ்வளவு
"வீரம்" பொருந்தியவர்கள் என்றும் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான
குற்றங்களுக்காக ஆட்சியையும் அதன் அதிகாரிகளையும் தண்டிக்க சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் காங்கிரஸில் ஒரு மணிநேரம்
பேசுவதற்கு பிரதமரை அனுமதித்தது.
Pix: Reuters |
காஸா போரைக் கண்டித்தும், இஸ்ரேல் அங்கிருந்து வெளியேறக் கோரியும் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்
போராட்டக்காரர்களை நெதன்யாகு கடுமையாகச் சாடினார். மாணவர்கள் ஈரானுக்கு
"பயனுள்ள முட்டாள்கள்" என்று குற்றம் சாட்டிய அவர், போராட்டங்களை நடத்துவதற்கு ஈரானிய அரசாங்கத்தால் பணம் வழங்கப்படுகிறது என்றும்
கூறினார்.
இஸ்ரேலிய தலைவரின் குற்றச்சாட்டு அமெரிக்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் கடும் சீற்றத்தைத் ஏற்படுத்தியுள்ளது. நெத்தன்யாகுவின் கருத்துக்கள் சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் எதிர்ப்பு உரிமை ஆகியவற்றையும் தாக்கி அமெரிக்கர்களின் புத்தியை இழிவுபடுத்தும் ஒரு மோசமான செயலாகக் கருதப்பட்டது.
“இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது என்பதை உலகறியும், அது "இரு நாடுகள்" என்ற
தீர்வைத் தடுக்கிறது, அமைதியைத் தடுக்கிறது
என்று அமெரிக்க மக்களுக்கு வெளிநாட்டு அரசாங்கம் ஒன்று சொல்லித்தான் புரிய
வேண்டும் என்ற தேவையில்லை. சர்வதேச சட்டத்தின் இந்த அப்பட்டமான மற்றும்
மிருகத்தனமான மீறல்களில் அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுடன் உடந்தையாக உள்ளது என்று
அவர்களுக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் சொல்ல தேவையில்லை,” என்று கொலம்பியா
பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜெஃப்ரி சாக்ஸ் தெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார்.
"அமெரிக்கர்களின் எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஈரான் இருக்கிறது” என்று நெதன்யாகு ஓர்
அப்பட்டமான பொய்யையும் அவதூறையும் செய்துள்ளார். இனப்படுகொலைக்கு எதிரான நெறிமுறை
மதிப்புகளைக் கொண்ட கண்ணியமான அமெரிக்கர்களே உண்மையான எதிர்ப்பாளர்கள். அவர்களில்
யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பலர் அடங்குவர்” என்று அவர் மேலும் கூறினார்.
ஈரான், காஸா மற்றும் நெதன்யாகுவின் அபார கற்பனை
நெத்தன்யாகுவின் உரையில் அப்பட்டமான பொய்கள் மற்றும்
இஸ்ரேலை பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்கும் முயற்சிகளில் இருந்து வேறுபடுத்திக்
காட்டும் அம்சங்கள், போருக்குப் பிந்தைய காஸாவிற்கான
அவரது திட்டங்கள் மற்றும் "பரந்த மத்திய கிழக்கு" பற்றிய அவரது பார்வை
பற்றிய அவரது அறிவிப்புகள் மட்டுமே ஆகும்.
காஸாவில் "முழு வெற்றி" என்று சபதம் செய்த
பிறகு, நெதன்யாகு இஸ்ரேல் ஹமாஸை
தோற்கடித்தவுடன், "பயங்கரவாதத்தின் மீள்
எழுச்சியைத் தடுக்க" மற்றும் "காஸா மீண்டும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை
ஏற்படுத்தாது" என்பதை உறுதிப்படுத்துவதற்காக, காஸா மீது முழு கட்டுப்பாட்டையும்
கைப்பற்றும் என்று கூறினார்.
ஆய்வாளர்கள் மற்றும் கருத்துடன் கவனிப்போர் ஏற்கனவே
நெத்தன்யாகுவின் திட்டங்களின் சாத்தியக்கூறுகளை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர்.
இஸ்ரேல் காஸாவில் ஒரு பெரிய இராணுவ பிரசன்னத்தை பராமதிப்பதன் நடைமுறைச்
சாத்தியமற்ற தன்மையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“இது ஒரு புதிய திட்டம்
அல்ல. இஸ்ரேல் இதற்கு முன்பும் காஸாவில் இராணுவப் பிரசன்னத்தைத் தக்கவைக்க
முயன்றது, ஆனால் இறுதியில் 2005 இல் படைகளைத் திரும்பப் பெற நேர்ந்தது, ஏனெனில் அவர்களின் நோக்கத்தை அடைய முடியாது என்று புரிந்து
கொண்டதால், ”என்று மேற்கு ஆசிய விவகாரங்களில்
பணிபுரியும் நிபுணரும் ஆய்வாளருமான அலி சமட்சாதே விளக்கினார். "எதிர்ப்புப் அணியினரின் திறன்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க
முன்னேற்றங்கள், காஸாவில் நடைபெற்று வரும் போரில் 10 மாதங்கள் கழிந்த நிலையில் இஸ்ரேலிய
இராணுவம் தீவிர சோர்வுடன் உள்ளது, இது வெற்றிகரமான இராணுவ
மறுஆக்கிரமிப்பு நிகழ்தகவை வெகுவாகக் குறைக்கிறது."
\காஸா மீதான எந்தவொரு
மறு ஆக்கிரமிப்பும் விடுதலைப் பிரிவுகளை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக இஸ்ரேலிய
இராணுவம் மற்றும் சமூகத்திற்குள் தான் நெருக்கடிகளை ஆழமாக்கும் என்று சமட்சாதே
மேலும் கூறினார். “காஸாவில் 15,000 இஸ்ரேலிய வீரர்கள்
காயமடைந்துள்ளதாக பல்வேறு அறிக்கைகள் காட்டுகின்றன. ஆட்சியின் இராணுவம்
மிகவும் குறுகிய சேவகர் எண்ணிக்கையைக் கொண்டு இருப்பதால், அதை சரிசெய்ய பல
நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. இஸ்ரேலின் இப்போதைய பொருளாதார மற்றும் சமூக
அவலங்கள் மத்தியில் அந்த பகுதியில் இராணுவ இருப்பை மீண்டும் நிலைநிறுத்துமாயின் அவலங்கள்
மேலும் தீவிரமடையும்”.
நெதன்யாகு தனது அரசாங்கத்தை பராமரிக்க
நம்பியிருக்கும் ஆர்த்தடாக்ஸ் ஹரேடி யூதர்கள் பாரம்பரியமாக இராணுவ சேவையில்
இருந்து விலக்கு பெற்றுள்ளனர். ஆளும் கூட்டணியின் கடும் எதிர்ப்பையும் மீறி, இஸ்ரேலின் உச்ச
நீதிமன்றம் ஜூன் மாதம் ஹரேடிஸை இராணுவ சேவையில் சேர்க்க உத்தரவிட்டது. கணிசமான
எண்ணிக்கையிலான இஸ்ரேலிய ரிசர்வ் படையினர் கடந்த மாதங்களில் பலமுறை ராணுவத்திற்கு அழைக்கப்பட்டதை
அடுத்து இந்த முடிவு வெளிவந்தது. பழமைவாத யூதர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில்
பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்புத்
தெரிவித்தனர்.
நெதன்யாகு காசாவின் மறு-ஆக்கிரமிப்பைப் பின்பற்றும்
இரண்டாவது திட்டத்துடன் "வளர்ந்து வரும் ஈரானிய அச்சுறுத்தலை" சமாளிக்க
ஒரு பிராந்திய கூட்டணியை உருவாக்குவது.பற்றிய திட்டத்தையும் தனதுரையில் கோடிட்டுக்
காட்டினார்,
“இஸ்ரேலுடன் சமாதானமாக
இருக்கும் அனைத்து நாடுகளும்
மற்றும் இஸ்ரேலுடன் சமாதானம்
செய்து கொள்ளும் அனைத்து நாடுகளும் இந்தக் கூட்டணியில் சேர அழைக்கப்பட வேண்டும்.
அந்த சாத்தியமான கூட்டணியின் முக்கியத்துவத்தை ஏப்ரல் 14 அன்று கண்டோம். அமெரிக்காவின் தலைமையில், ஈரானினால் எம்மீது ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க
இஸ்ரேலுடன் சில அண்டை (அரபு) நாடுகள் இணைந்து செயல்பட்டன,” என்றார்.
நெதன்யாகு ஏற்கனவே பிராந்திய சக்திகளால்
விவாதிக்கப்பட்ட ஒரு திட்டத்தைப் பற்றி இங்கு பேசுவது போல் தெரிகிறது.
அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய இராணுவத்தின்
தலைமைத் தளபதி ஹெர்சி ஹலேவி பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பல அரபு நாடுகளைச் சேர்ந்த
மூத்த ஜெனரல்களை அமெரிக்க சென்ட்காமின் அனுசரணையில் ஜூன் மாதம் சந்தித்தார்.
பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும்
எகிப்து ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்றதாக
கூறப்படுகிறது.
மனாமா அமர்வின் நிகழ்ச்சி நிரல் குறித்து
உத்தியோகபூர்வ அறிக்கைகள் அல்லது அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆயினும் ஆய்வாளர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஈரானும் ஒன்று என்று
நம்புகின்றனர்.
"ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டணியின் யோசனையும் புதிய விடயம் ஒன்றல்ல.
இஸ்ரேலிய பங்கேற்புடன் 'அரபு நேட்டோ' ஒன்றை அமைப்பதை வாஷிங்டன் சில காலமாக பரிசீலித்து வருகிறது. எவ்வாறாயினும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டினதும் இந்த உடன்படிக்கையை அரபு நாடுகள்
ஆரம்பத்தில் ஆதரித்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்கள் இஸ்ரேலை பிராந்தியத்தின் இராணுவ சக்தியாக அப்போது
கருத்தியிருந்தார்கள். அக்டோபர் 7 சம்பவம் மற்றும்
ஈரானின் பத்தில்தாக்குதல் நிகழ்வுகளைத் தொடர்ந்து நிலைமை மாறியுள்ளது. முன்பிருந்த
நிலை மீதான அவர்களின் நம்பிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி குறைந்துவிட்டது,” என்று சமட்சாதே குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிராக ஒரு பிராந்திய கூட்டணி உருவானாலும்
கூட, அரபு நாடுகள் அக்கூட்டணியிடம் அதிக
சலுகைகளை கோரும் மற்றும் அதில் அவர்களின் ஈடுபாட்டை குறைக்கும் "(அமையக்கூடிய)
அத்தகைய கூட்டணி நீண்ட காலத்திற்கு நிலைக்க முடியாததாக இருக்கும்," என்பதுவே நிபுணரின்
கணிப்பு.
https://www.tehrantimes.com/news/501610/Bibi-s-lies-and-delusions