Wednesday, July 19, 2023

ஈரானில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுன்னி மஸ்ஜிதுகள் உள்ளன

 Services of the Islamic Republic of Iran to Sunnis; Unity in Practice

இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளிடையே ஒற்றுமையும் நெருக்கமும் எப்போதும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கோஷங்களில் ஒன்றாகும். மதம், சிந்தனைப் பள்ளி, மற்றும் இனம் போன்றன வேறுபாடுகளை ஏற்படுத்தக் கூடாது என்பதில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு உறுதியாக இருக்கிறது. இன்னும், இஸ்லாமிய போதனைகளின்படி, ஒரு நபரின் மதிப்பு இறை அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது.

மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் முன்மொழியப்பட்ட இஸ்லாமிய ஒற்றுமை வாரத்தின் நோக்கம் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்வதாகும், அவை, அவர்கள் கொண்டுள்ள வேறுபாடுகளை விட மிக மிக அதிகமாகும்.. அனைத்து முஸ்லிம்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளதானது ஒரு எடுத்துக்காட்டு. ஒற்றுமை வாரம் இந்த முக்கியமான செய்தியைக் கொண்டுள்ளது.

ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது செயலில் வெளிப்படும்போது அழகாகவும் இனிமையாகவும் இருக்கும். சுன்னி மற்றும் ஷியா இடையே பாகுபாடு இல்லாதபோது பாரசீகர்கள், அரேபியர்கள், துருக்கியர்கள், பலூச், குர்துகள் மற்றும் துருக்கியர்கள் போன்றவர்களிடையே நடைமுறை ஒற்றுமை உணரப்படுகிறது.

பெரும்பான்மையான சுன்னிகளைக் கொண்ட எல்லைப் பகுதிகளுக்கு இஸ்லாமியக் குடியரசின் சேவைகள் நடைமுறை ஒற்றுமைக்கான அதிகாரிகளின் கவனத்தின் அடையாளமாகும். இந்த சேவைகள் கலாச்சார சிந்தனை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியது. உதாரணமாக, சுன்னி பகுதிகளில் எண்ணற்ற மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. ஷியா பள்ளிவாசல்களைப் போலவே, இந்த மசூதிகளின் கட்டுமானமும் மக்களால் செய்யப்பட்டிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில், மசூதிகளின் நிலம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஈரானின் சுன்னி முஸ்லிம்களுடனான அமைப்பின் ஒத்துழைப்பின் விளைவாக இன்று ஈரானில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுன்னி மசூதிகள் உள்ளன. புள்ளிவிவரங்களின்படி, தெஹ்ரானிலும் தலைநகரைச் சுற்றிலும் ஒன்பது சுன்னி மசூதிகள் உள்ளன.

பள்ளிவாசல்கள் பகுதியில் சுன்னிகளுக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சேவைகள் குறித்து, ஈரான் ஷஹ்ர் வெள்ளிக்கிழமை தொழுகை இமாமும், கதீஜா அல்-கப்ரி பள்ளியின் முதல்வருமான மௌலவி அப்துல் சமத் கரீம் ஸாயி இவ்வாறு கூறுகிறார்: புரட்சிக்கு முன்னர், ஈரான் ஷஹ்ரில் 5 மசூதிகள் இருந்தன, இப்போது, இந்த நகரில் 135 மசூதிகள் உள்ளன. இதற்கு நாம் இஸ்லாமிய புரட்சிக்கும் இஸ்லாமிய அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு சுன்னிகளுக்கு வழங்கியுள்ள மத சுதந்திரம் ஒரு மசூதியைக் கட்டுவதோடு நின்றுவிடவில்லை, மாறாக, சுன்னி மத்ஹப் பள்ளிகளும் பெரும் பங்கைப் பெற்றுள்ளன. தற்போது சுன்னி செமினரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் செமினரிகளின் எண்ணிக்கையை புரட்சிக்கு முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த உண்மை நன்கு உணரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, புரட்சிக்கு முன்னர், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் 3 மத செமினரிகள் மட்டுமே இருந்தன, இந்த எண்ணிக்கை 220 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, இதில் 22,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தாருல் உலூம் ஸஹிதான் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் சுன்னி மத்ஹப் பள்ளிகளில் ஒன்றாகும். புரட்சிக்கு முன்பு 60 மாணவர்கள் பயின்று வந்த இப்பள்ளியில் தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கெர்மன்ஷஹரில் உள்ள ஷாஃபி மசூதி

அஹ்ல் அல்-சுன்னா மதப் பள்ளிகளின் திட்டக் குழுவின் உறுப்பினரும், சனந்தஜின் இடைக்கால வெள்ளிக்கிழமை தொழுகை இமாமுமான மாமுஸ்தா (ஆசிரியர்) முகமது அமீன் ரஸ்தி கூறுகிறார்: ஈரான் இஸ்லாமிய குடியரசு சுன்னி மாணவர்களின் வாழ்வாதாரத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய சுன்னி செமினரிகளை நிறுவியுள்ளது, மேலும் செமினரி சேவை மையம் சன்னி மாணவர்களுக்கு ஆயுள் காப்பீடு போன்ற சேவைகளுடன் ஆதரவளிக்கிறது. துணை காப்பீடு, திருமணக் கடன்கள் போன்றவற்றையும் வழங்கி வருகிறது. மேலும், பள்ளிகளில் கணினி மற்றும் நூலகங்களை வழங்குவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சுன்னி மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித் தொகை ஷியா செமினரி மாணவர்களை விட அதிகமாகவே அல்லாது குறைவாக இல்லை, மேலும் வழங்கப்படும் வசதிகளுடன், சுன்னி மாணவர்கள் பி.எச்.டி மட்டம் வரை தங்கள் கல்வியைத் தொடர முடியும்.

கலாச்சாரத் துறையிலும், சுன்னி பகுதிகள் கணிசமாக வளர்ந்துள்ளன. இன்று, ஈரானின் சுன்னிகள் மத்தியில் கல்வித்தரம் பெரிதும் உயர்ந்துள்ளது. நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏராளமான இளைஞர்கள் உயர்கல்வியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் 26,000 க்கும் மேற்பட்ட பள்ளி வகுப்பறைகளும் சுமார் 700,000 மாணவர்களும் உள்ளனர். இந்த மாகாணத்தில், ஒவ்வொரு ஆண்டும் சுன்னி மாணவர்களுக்கு 220 பில்லியன் ரியால் மதிப்புள்ள சுமார் ஏழு மில்லியன் புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. புரட்சிக்கு முன்னர், இந்த மாகாணத்தின் கல்வித் தரம் மிகவும் குறைவாக இருந்தது.

உள்கட்டமைப்பைப் பொறுத்தவரையிலும், புரட்சிக்கு முந்தையதை விட சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இந்த வளர்ச்சிகளில், கருங்காரையிட்ட  சாலைகள் மற்றும் ரயில்வே கட்டுமானம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்திற்கும் தற்போதைய அரசாங்கத்தால் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணம் புரட்சிக்குப் பிந்தைய சகாப்தத்தில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போது, சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் 2,300,000 பேர் சுகாதார காப்பீட்டின் கீழ் உள்ளனர், அவர்களில் 1,600,000 பேர் கிராமப்புற மற்றும் நாடோடிகளாக உள்ளனர், அவர்கள் அரசாங்கத்தால் இலவசமாக காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். கிராமவாசிகள் மற்றும் நாடோடிகளைத் தவிர, சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் நகரங்களில் வசிக்கும் 300,000 பின்தங்கிய மக்களுக்கும் இலவச மருத்துவ காப்பீட்டு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் அவர்கள் மற்ற காப்பீடு செய்யப்பட்ட மக்களைப் போலவே மருத்துவ சேவைகளிலிருந்து பயனடைய முடியும்.

சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு இஸ்லாமியப் புரட்சியின் சேவைகள் குறித்து ஈரான்ஷாஹர் ஆளுநரும், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் துணை ஆளுநராளருமான நபி பக்ஷ் தாவூதி கூறுகிறார்: உச்ச தலைவரின் தந்தை போன்ற பார்வை மற்றும் இந்த மாகாணம் குறித்த அரசாங்கத்தின் நம்பிக்கையான நோக்கு - சமீபத்திய ஆண்டுகளில் மாகாணத்திற்கு ஜனாதிபதியின் நான்கு விஜயங்களின் ஊடாக இது நிரூபணமாகிறது. தற்போது, மாகாணத்தில் பல பெரிய மற்றும் சிறிய திட்டங்கள் கையாளப்படுகின்றன, இது இந்த பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கு மிகவும் பிரகாசமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ரயில்வே விரிவாக்கம், உள்நாட்டு பயன்பாட்டிற்கான இயற்கை எரிவாயு, சாபஹாரின் பெட்ரோகெமிக்கல்ஸ், துறைமுகங்களின் மேலும் மேம்பாடு, விமான நிலையம், போக்குவரத்து அமைப்பு, பல்கலைக்கழகங்களின் மேம்பாடு மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.

இந்த சேவைகள் அனைத்தும் நடைமுறையில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் நோக்கத்தைக் கொண்டதாக உள்ளன. பின்தங்கிய சுன்னி பகுதிகளின் வளர்ச்சியின் முக்கியத்துவம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிகாரிகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும், இது தொடர்பாக உச்ச தலைவர் கூறியதாவது:

புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களுக்குச் சென்று நிலைமையைக் கண்டறிய மறைந்த இமாம் கொமேனி (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்டேன்.

நான் இந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்தேன், இந்த மாகாணத்திற்கான எனது கடமையை உணர்ந்தேன். இந்த பகுதி மக்களுடன் அமர்ந்து அவர்களின் குடிசைகளுக்கு சென்று கடந்த ஆட்சியில் அவர்கள் அனுபவித்த வலிகளையும், இன்னல்களையும் அறிந்து கொண்டேன். அதன் பிறகு, பணிகள் தொடங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இந்த பகுதிகளில் செயல்படத் தொடங்கின. ஸஹிதான், ஈரான்ஷஹர், சாபஹார் மற்றும் புல் ஆகியவற்றின் இன்றைய இளைஞர்களுக்கு புரட்சிக்கு முந்தைய சகாப்தத்தில் இந்த மாகாணத்தின் நிலை என்ன என்பது தெரியாது. கடந்த காலங்களில் இந்த மாகாணத்தின் மோசமான வாழ்க்கை நிலை சித்தரிக்கப்பட்டால், இஸ்லாமிய அமைப்பு இந்த பிராந்தியத்தில் எவ்வளவு பெரிய மற்றும் விலைமதிப்பற்ற சேவைகளை செய்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஆக, ஈரான் இஸ்லாமிய குடியரசில் ஷீஆ, சுன்னி என்ற வேறுபாடு கிடையாது.

http://echoofislam.itfjournals.com/article_4434.html

No comments:

Post a Comment