Tuesday, December 13, 2022

இஸ்லாமிய நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க எதிரிகள் போடும் திட்டம்

Iran against the West’s hybrid warfare

Viktor Mikhin

மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உருவாக்கியுள்ள சூழ்நிலையை ஈரானிலும் உருவாக்க முயல்கின்றன, நாட்டை அழித்து அதன் வளங்களை கொள்ளையடிக்கவே இவ்வாறு குழப்பத்தை உருவாக்குகின்றன என்பது தெளிவு. இவ்வாறு கூறுவது வேறு யாருமல்ல, முன்னாள் அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கை அதிகாரி ஸ்காட் பென்னட் (Scott Bennett) என்பவரே ஆகும். "ஆப்கானிஸ்தானிலும் பின்னர் ஈராக்கிலும் செய்தது போல், ஈரானிய தேசத்திலும், இராணுவத் துறைகளிலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த மேற்கு நாடுகள் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றன. ஈரானின் தேசிய வளங்களைத் சூறையாட வேண்டுமாயின், அதற்கு வசதியாக நாட்டிற்குள் குழப்பங்களை உருவாக்கி, பிரச்சனைகளை உருவாக்க வேண்டும்என்று  ஸ்காட் பென்னட் தெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார். அமெரிக்க தலைமையிலான மேற்குலகு தமது திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தோடு லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில் பதட்டங்களைப் பயன்படுத்தி, தாக்குதல்களை நடத்தி,  வருகின்றன. ஈரானுக்கு எதிரான இந்த நாடுகளின் விரோதப் போக்கு மற்றும் சூழ்ச்சிகளின் முக்கிய காரணமும் இதுவேயாகும், இதற்கு காரணம் இஸ்ரேலின் தூண்டுதலே என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நேட்டோ சிரியாவில் செய்ததைப் போல, "மனித உரிமைகளை" பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, போராட்டங்கள் என்ற போர்வையில் ஈரானுக்கு எதிராக உள்நாட்டுப் பயங்கரவாதம் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டுள்ளன என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இவர்களது திட்டம் நிறைவேறாது என்று அறிந்துவைத்துள்ள இந்த வெள்ளை இனவாத சக்திகள் ஈரானிய ஆட்சியை மாற்றும் முயற்சியில் இதே முறைகளையும் அதே கூலிப்படையையும் பயன்படுத்துகின்றன. இஸ்ரேலிய மொசாட், லிகுட் கட்சி ஆதரவாளர்கள், அமெரிக்க சிஐஏ, பிரிட்டிஷ் MI-6 உளவுத்துறை ஆகியன இணைந்து வழிதவறிய வஹ்ஹாபிகள் மற்றும் ஈராக்கில் உள்ள சில கைக்கூலிகள், அல்-கய்தா, அல்-நுஸ்ரா பயங்கரவாதிகள், எஞ்சியிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இன்னும் ஏனைய கூலிப்படையினர் மற்றும் கலகக்காரர்கள் போன்றோரை தமது அனுசரணையில் இயக்கிவருகின்றன.

வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஈரானுக்குள் ஊடுருவி உள்நாட்டுக் கலவரம், ஷியா, சன்னி, அலவிகள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் குர்துகளுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி மோதல்களைத் தூண்டுவதே இவர்களது திட்டம் ஆகும். பலதரப்பட்ட மக்கள் கலந்து வாழும் பிரதேசங்களை இலக்காக்கி, மோதல் மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்கு இவர்கள் பயங்கரவாதிகளை பயன்படுத்தி வருவதில் இருந்து இவர்களது திட்டம் துல்லியமாகத் தெரிகிறது. இதற்காக மொபைல் போன்கள், சமூக ஊடகங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் மேற்கத்திய கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதற்கு ஒத்தாசையாக இருக்கின்றன. போலீஸ் சித்திரவதையின் காரணமாக ஒரு பெண் இறந்ததாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் எதிர்ப்பு இயக்கத்தின் தோற்றம் ஆரம்பமானது, உண்மை என்னவெனில் அவர் ஏற்கனவே பீடிக்கப்பட்டிருந்த கடுமையான நோயினால் உயிரிழந்ந்துள்ளார் என்று மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன..

ஒரு சாதாரண சிறிய பிரச்சனை பூதாகாரமாக்கப்பட்டு, ஈரானுக்கு எதிரான இராஜதந்திர, பிரச்சார, இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வடிவத்தை எடுத்திருப்பதானது, ஸ்காட் பென்னட் வாதிடுவது போல், அரசாங்கத்தை சீர்குலைக்கவும் ஈரானில் குழப்பத்தை உருவாக்கவும் கருவியாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இராஜதந்திர முன்னணியில், ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் விரோத அறிக்கைகள், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்புகள் ஈரான் பற்றி மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் போலி பிரச்சாரமானது மேற்கத்திய மேலாதிக்கம் செலுத்தும் நோக்கக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, ஈரானில்  "மனித உரிமைகள்" மீறப்படுவதான  குற்றச்சாட்டு அணுசக்தி திட்டங்கள் பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்கு அதிகளவில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாய் அமையும்.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவில் மட்டுமின்றி, வளைகுடா பகுதி உட்பட வெளிநாடுகளிலும் தங்கள் ராணுவ திறன்களை வலுப்படுத்தி வருகின்றன என்பதை பல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen சமீபத்தில் ஒரு புதிய ஐரோப்பிய பாதுகாப்பு கோட்பாட்டின் கூறுகளை கோடிட்டுக் காட்டினார், அதாவது, பாரசீக வளைகுடாவில் பாதுகாப்புக்கான EU மற்றும் NATO அணுகுமுறை ஆகும். கடந்த நவம்பர் 18 அன்று பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடந்த உரையாடலில் அவர் கூறிய கருத்துக்கள், ஈரான் மீது பிராந்திய நாடுகள் கொண்டுள்ள மிகவும் விரோதமான எண்ணங்களைப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ஒரு புதிய அணுகுமுறையைப்  பயன்படுத்துவதை பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

நெதன்யாகு ஆட்சியின் கீழ் இஸ்ரேல் எவ்வாறு சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டதோ அவ்வாறே ஈரானுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்வதற்காக ஈராக் மற்றும் பாரசீக வளைகுடா வான்வெளியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க விமானப்படைகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை உருவகப்படுத்தி, மிகப்பெரிய கூட்டு விமானப் பயிற்சியை நடத்தும். இரு நாடுகளிலிருந்தும் போர் விமானங்கள் நீண்ட தூர விமானங்கள் மற்றும் தொலைதூர இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை உருவகப்படுத்தி மேற்கொள்ளும்; அது ஈரானுடனான போர் சூழலுக்கான தயார்நிலையை அதிகரிக்கும். சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரே லிய பாதுகாப்புப் படைகள் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளை ஏற்கனவே ஈரானுக்கு எதிரான தாக்குதளுக்காக பல கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஜெருசலேம் பிரகடனம் என்றும் அழைக்கப்படும் அமெரிக்க-இஸ்ரேலிய மூலோபாய கூட்டாண்மை குறித்த கூட்டுப் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Yair Lapid கையெழுத்திட்டனர். "ஈரானை அணுவாயுதத்தைப் பெற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, அதை உறுதிப்படுத்த அதன் தேசிய சக்தியின் அனைத்து கூறுகளையும் பயன்படுத்த அது தயாராக உள்ளது" என்ற அமெரிக்க உறுதிப்பாட்டை அது வலியுறுத்துகிறது. அடுத்தடுத்த கூட்டுப் பயிற்சிகள் வாஷிங்டனில் IDF தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் Aviv Kochavi மற்றும் கூட்டுப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் Mark Milley மற்றும் சென்ட்காம் கமாண்டர் ஜெனரல் Michael Kurilla உட்பட அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்புகளுக்கு உட்பட்டது.

அடுத்த ஆண்டு ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளுக்காக  IDF இன் NIS 58 பில்லியன் ($17 பில்லியன்) பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து NIS 3.5 பில்லியன் ($1 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியேறும் பாதுகாப்பு மந்திரி Benny Gantz, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன், "பிரச்சினையை மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்" என்று புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்திருந்தார். “ஈரானுக்குள் செயல்படும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது. தயார்நிலை, திறன்கள் மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. இந்த சாத்தியத்திற்கு நாங்கள் தயாராக வேண்டும், மேலும் இந்த சிக்கலை செயல்படுத்துவதற்கு முன்பு, நாங்கள் மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

மேற்கத்திய பகைமை மற்றும் ஈரானுக்கு எதிரான சூழ்ச்சியின் முக்கிய காரணி இஸ்ரேல் தான் என்ற வாதத்தை மேற்கூறிய அனைத்தும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன, மேலும் இந்த கொந்தளிப்பு நிலையை பயன்படுத்தி லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் தாக்குதல்களை நடத்துகின்றன.

இனவாத வண்ணப் புரட்சிகள் பொதுவாக மேற்குலகின் ஆக்கிரமிப்பு பிரச்சாரங்களின் இலக்காகும். மற்றும் ஊடக போர்கள் குழப்பம் மற்றும் பதட்டங்களை உருவாக்குவதற்கு கவனச்சிதறல்கள் ஏற்படுத்தி இந்த இனவாத வண்ண புரட்சிகளை தொடங்குவதற்காகவும் ஆகும். ஈராக்கில் அமெரிக்கா உருவாக்கிய பல்வேறு கோத்திர மற்றும் மதப் பிரிவுகளுக்கு இடையே மோதலும் இவர்கள் மூட்டிய போர்களில் அடங்கும். இதற்காக லிபியா மற்றும் சிரியாவில் குழப்பங்களை ஏற்படுத்த, சவூதி அரேபியா, கத்தார், இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கூலிப்படையினர் சிஐஏ மற்றும் பென்டகனால் பணியமர்த்தப்பட்டு, நிதியுதவி மற்றும் பயிற்சியளிக்கப்பட்டனர். இதற்கு பொறுப்பாய் இருந்த ஜெனரல் Lloyd Austin, இப்போது பாதுகாப்புச் செயலர். இந்த நடவடிக்கைகளின் நோக்கம் பிராந்தியங்களில் உள்ள மக்களிடையே பதற்றம், குழப்பம், மோதல் மற்றும் பகைமை ஆகியவற்றை உருவாக்கி, இயற்கை செல்வங்களை கொள்ளையடிப்பதாகும். இவர்களது திட்டத்தை அறிந்துகொள்வதற்கு கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, லிபியா, சிரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வரலாற்றைப் பார்த்தால் போதுமானது. இப்போது உக்ரைனும் ஈரானும் நிச்சயமாக இந்த மேற்கத்திய இனவாத நிறப்புரட்சியின் அடுத்த இலக்காக ஆக்கப்பட்டுள்ளன, எனவே இத்தகைய விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஒரு சர்வதேச கூட்டணி அவசியமாகும்.

Viktor Mikhin, corresponding member of RANS, exclusively for the online magazine “New Eastern Outlook.

https://messageofwisdom.blogspot.com/2022/12/iran-against-wests-hybrid-warfare.html?fbclid=IwAR213rTfR0_d8IcIySbDy_fb4RwerKcpcFDDQtncWZRC4CnQmADxJuI5LHI

No comments:

Post a Comment