Thursday, February 3, 2022

முஸ்லிம் உலகை பெருமைப்படுத்தும் இஸ்லாமிய ஈரான்

Iran’s Achievements Since the 1979 Revolution: Islam as a Source and Stimulant of Knowledge - Kevin Barrett


நாடுகடத்தப்பட்ட  நிலையில் இமாம் ருஹுல்லா கொமேனி, பிப்ரவரி 1, 1979 இல், வெற்றிகரமான இஸ்லாமியப் புரட்சிக்கு வழிகாட்ட ஈரானுக்குத் திரும்பி, சமகால வரலாற்றில் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசை ஸ்தாபித்தார்.

மேற்கத்திய அரசியல் தத்துவம் மற்றும் அதன் ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் இருந்து தீவிரமாக முறித்துக் கொள்ளும் ஒரு நவீன, முன்னோக்கு இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதில் இமாம் கொமெய்னி தீவிரமாக இருந்தார் என்பது தெளிவாகியது.

மேற்கத்திய ஆய்வாளர்கள் இஸ்லாமிய குடியரசு ஒரு குறுகிய கால பரிசோதனையாக, நீண்ட ஆயுளற்ற ஒன்றாக இருக்கும் என்று கணித்தனர். அவர்கள் இஸ்லாமிய ஆட்சி மிகவும்குறுகிய காலத்தில் வீழ்ந்துவிடும் என்ற தங்கள் தீர்க்கதரிசனம் யதார்த்தமாக மாறுவதை உறுதிசெய்ய முயற்சிசெய்தார்கள்.

ஏகாதிபத்திய புவி மூலோபாயவாதிகள் முதலில் ஈரான் மீது படையெடுப்பதற்கு சதாம் ஹுசைனின் ஈராக்கைத் தூண்டுவதன் மூலம் "புரட்சிகர குழந்தையை அதன் தொட்டிலிலேயே கழுத்தை நெரிக்க" முயற்சித்தனர்.

1980 செப்டம்பர் 22, இல், ஈராக் ஈரானிய பிரதேசத்தை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் இஸ்லாமிய குடியரசின் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது, குறிப்பாக ஷட் அல்-அரப் மற்றும் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணமான குசெஸ்தான் ஆகிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டது. ஒரு வெற்றிகரமான ஈராக்கிய ஆக்கிரமிப்பு மற்றும் ஈரானிய பிரதேசத்தை ஈராக்குடன் இணைத்தல், இஸ்லாமிய அரசாங்கத்தை பலவீனமடையச் செய்யும் என்றும் அதை கவிழ்க்க வழிவகுக்கும் என்றும் அவர்கள் தப்புக்கணக்கு போட்டனர்.

"திணிக்கப்பட்ட போர்" மூலம் ஈரானை விரைவாக தோற்கடித்து இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் போரை திணித்தவர்கள் ஈரானியர்களின் மத உறுதியை கருத்தில் கொண்டிருக்கவில்லை, ஈரானியர்கள் மேற்கு ஆதரவு மதச்சார்பற்ற ஈராக்கியர்களை விட, இஸ்லாமிய புரட்சியை காக்க தங்கள் உயிரைக் தியாகம் செய்ய தயாராக இருந்தனர். உயர்ந்த மன திடம் மற்றும் நியாயமான காரணத்திற்காக தியாகம் செய்ய தூண்டும் குர்ஆன் கட்டளை அவர்களுக்கு உரமூட்டியது. ஈரானியர்களின் இந்த மன உறுதி உள்ள ஈரானின் பணம் மற்றும் ஆயுதங்களில் இருந்த குறைபாடுகளை ஈடுகட்டியது, ஈரானியர்கள் வசம் பாக்தாத் வீழும் அபாயத்தைத் தடுக்க மேற்குலகம் முன்வரவில்லை என்றால் ஈராக்கை தோற்கடித்து பாக்தாத்தை கைப்பற்றியிருக்கும்.

திணிக்கப்பட்ட போர் ஈரான் இஸ்லாமிய குடியரசை வீழ்த்துவதற்கு பதிலாக, அவர்களது கை மேலோங்கி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்ததால், கம்யூனிசத்தின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜார்ஜ் கென்னனின் புகழ்பெற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மூலோபாயத்தின் மாதிரியான கட்டுப்பாட்டுக் கொள்கைக்கு மேற்கு நாடு மாறியது.

பொருளாதாரத் தடைகள் மற்றும் நாசவேலைகள் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை கழுத்தை நெரித்து, அதன் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம், பிராந்தியத்தில் மேற்கத்திய கைப்பாவை (அரபு) ஆட்சிகளை பலப்படுத்துவதன் மூலம், இஸ்லாமிய புரட்சிகர சித்தாந்தம் மற்றும் நடைமுறை மற்ற நாடுகளுக்கு பரவுவதைத் தடுக்க முடியும் என்று ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் நம்பினர்.

ஈரானின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை நிரந்தரமாக முடக்க முடியுமாயின், இஸ்லாமிய குடியரசு மற்ற மக்களுக்கு ஒரு தோல்வியடைந்த முன்மாதிரியாக அமையும் அதேநேரம் ஈரானியர்களும் விரைவில் தங்கள் புரட்சிகர சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்வார்கள் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் நம்பினர்,

இஸ்லாமிய புரட்சிகர சித்தாந்த மானது சர்வதேச மாதிரியாக வியாபிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதில் திட்டத்தின் மூலகர்த்தாக்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி பெற்றனர் என்பது உண்மையே என்றாலும் அவர்கள் வன்முறையின் மூலம் அதைச் செய்தார்கள்- அதற்காக அவர்கள் பயங்கரவாத வழிமுறையையே கையாண்டார்கள்.

எடுத்துக்காட்டாக, மொராக்கோவில், இஸ்லாமிய இயக்கமான அல் அத்ல் வல் இஹ்சானேயின் தலைமை, வரலாற்று ரீதியாக, இஸ்லாமிய குடியரசுக் கட்சியினை ஒத்த மாதிரி ஒன்றை ஓரளவுக்கு பின்பற்ற விரும்பியது. ஆனால் 1990 களில் அல்ஜீரிய அனுபவம், மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்தின் கொலைப் படைகள் (பெரும்பாலும் "இஸ்லாமியர்கள்" போல் மாறுவேடமிட்டு) ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது. மேற்குலகம் இஸ்லாமிய குடியரசுவாதத்தின் பரவலைத் தடுக்க வரம்பற்றவிதத்தில் அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்த தயங்காது என்பதை காட்டியது என்று அல் அத்ல் வல் இஹ்சானேயின் குழுவின் தலைவர்களான ஷேக் அப்தெஸ்ஸலாம் யாசின் மற்றும் அவரது மகள் மற்றும் வாரிசு நதியா ஆகியோர் பலமுறை விளக்கியுள்ளனர்.

அத்தகைய இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்காக, அல் அத்ல் வல் இஹ்சான் இயக்கத்தவர்கள், மொராக்கோவை இஸ்லாமிய ஆளுகை மற்றும் மேற்கத்திய நவ-ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான பாதையில் ஈரானைப் பின்தொடர்வதில் இருந்து பின்வாங்கினர். இதேபோன்ற சூழ்நிலைகளே பல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் உள்ளன. ஆனால் மேற்கத்திய மூலோபாயம் முஸ்லிம் கிழக்கிலிருந்து ஆங்கிலோ-சியோனிசப் பேரரசை வெளியேற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பின் அச்சு உருவாவதைத் தடுக்கத் தவறிவிட்டது.

இன்று, அந்த அச்சு, அதாவது அநியாயத்தை எதிர்க்கும் சக்தி, யெமன், லெபனான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தொடர்ந்தும் வலுப்பெற்று வருகிறது, அதே சமயம் ஈராக், சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான் மற்றும் யெமன் ஆகிய நாடுகளில் தோற்கடிக்கப்பட்ட ஏகாதிபத்திய பேரரசு பலவீனமடைந்து வருகிறது. விரைவில் அல்லது கொஞ்ச காலத்திற்கு பின்னர், மேற்கு ஆசியாவில் இருந்து ஏகாதிபத்திய சக்திகள் தவிர்க்க முடியாதபடி வெளியேறும், பிராந்திய நாடுகள் உண்மையான சுதந்திரம் மற்றும் இஸ்லாமிய ஆட்சியை அடைவதற்கான வழி திறந்துவிடும்.

அந்த நாள் வரும்போது, இன் ஷா அல்லாஹ், மேற்கத்திய நாசகாரர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கடும் முயற்சிகள் இருந்தபோதிலும், ஈரான் இஸ்லாமிய குடியரசு தொடர்ந்தும் உயிர் வாழும்.

உண்மையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எந்தவொரு நாட்டின் மீதும் இதுவரை விதிக்கப்பட்டிராத கடுமையான பொருளாதாரத் தடைகளிலிருந்து ஈரான் வெளிவரும்போது அது செழிப்பான நாடாக வளர்ந்திருக்கும்.

இஸ்லாமிய ஈரான் பொருளாதார ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் தொடர்ந்து முன்னேறி வருவதன் மூலம் அழிவை எதிர்வுகூறி, பொருளாதாரத் தடைகள்-விதித்தவர்களை திகைக்க வைத்துள்ளது. வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்தின் தீவிர எதிர்ப்பையும் மீறி, மனித வளர்ச்சிக் குறியீட்டில் ஈரான் வேகமாக உயர்ந்து வருகிறது.

1979 ஆம் ஆண்டு முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈரானின் பாரிய முன்னேற்றம் மேற்கத்திய நோக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படையிலான சமூகம் அந்தகாரத்தில் மூழ்கிவிடும் என்று கற்பனை செய்தனர்; பாவம் அவர்கள்.

உண்மையில், ஈரானின் அரசியல் ஸ்தாபனம், சன்மார்க்க பள்ளிகளின் பயிற்சியுடன் வேகமாக முன்னேறுகிறது. இது உலகில் உள்ள உயர்ந்த கல்வி பெற்ற குழுவாக கூட இருக்கலாம்.

உண்மையில், செம்மொழிக் கல்வியை மதிக்கும் மக்களால் ஆளப்படும் ஒரே நாடு இஸ்லாமிய ஈரான் மட்டுமே!

எனவே, ஈரானின் பல்கலைக்கழக அமைப்பு 1979 முதல் செழித்தோங்கியது, கல்வி நிலைகள் (குறிப்பாக பெண்கள் மத்தியில்) பாரிய வளர்ச்சி கண்டுள்ளது, மேலும் ஈரானிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் நாடு பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். இவை கடுமையான பொருளாதார தடைகளின் மத்தியில் நிகழ்ந்துள்ளது என்பது வியக்க வைக்கிறது.

வளரும் நாடுகளில், மனித வளர்ச்சிக் குறியீட்டின் (HDI) அடிப்படையில் ஈரான் முதலிடத்தை நெருங்கி உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டுத் திட்டத்தின்படி, 1990 முதல் மூன்று தசாப்தங்களில் ஈரானின் HDI ஏறக்குறைய 40% வளர்ந்தது - இது எந்த நாட்டிலும் இல்லாத சிறந்த பதிவுகளில் ஒன்றாகும், மேலும் மனிதாபிமானமற்ற தடைகள் விதித்த சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அதிர்ச்சி தரும் அதிசயம் என்று கூட கூறலாம்.

அந்தக் காலகட்டத்தில், மனித ஆயுட்காலம் 12 ஆண்டுகளுக்கும் மேலாகவும், பள்ளிப்படிப்பின் ஆண்டுகள் ஆறு ஆண்டுகளாகவும், தனிநபர் வருமானம் 60% ஆகவும் உயர்ந்தது. ஈரானிய மக்களைக் கடுமையான வறுமை மற்றும் பின்தங்கிய நிலைக்குக் தள்ளி,அவர்களின் மன உறுதியை நசுக்கும் மேற்கத்திய முயற்சி முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

ஈரானிய மருத்துவம் ஆயுட்காலம் கூர்மையான உயர்வுக்கு பங்களித்துள்ளது. 1990 களில் ஈரான் தனது சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் புரட்சிகரமாக மாற்றி கிராமப்புற மக்களில் 90% க்கும் அதிகமான மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதில் வெற்றி பெற்றது.

மேற்கத்திய பொருளாதாரத் தடைகள், மரணம் மற்றும் துன்பங்களுக்கு காரணமாக இருப்பதால், ஈரான் தனது சொந்த மருத்துவப் பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக் கொள்ளும் நிர்பந்தம். இது வருடத்திற்கு $750 மில்லியனைச் சேமிப்பது மட்டுமல்லாமல், உலக சந்தையில் ஈரான் தன்னை ஒரு முக்கிய போட்டியாளராக மாற்றியது. இன்று, ஈரான் அதன் சொந்த மருந்துப்பொருட்களில் 97% க்கும் அதிகமானவற்றை உற்பத்தி செய்கிறது மற்றும் மருத்துவ உயிரி தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.

பல துறைகளில், ஈரானிய அறிவியல் உலக அளவில் போட்டி நிலைகளை எட்டியுள்ளது. விண்வெளி மற்றும் விமான போக்குவரத்து, வேதியியல், கணினி அறிவியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியல், இயற்பியல் மற்றும் பொருட்கள் அறிவியல், அணு அறிவியல் மற்றும் நனோ தொழில்நுட்பம் ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும். ஆச்சரியப்படும் விதமாக, கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனம், சமீபத்திய ஆண்டுகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகளவில் ஈரானுக்கு முதலிடம் கொடுத்துள்ளது.

தி டைம்ஸ் உயர் கல்வி சுட்டின் படி, ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகள் 1970 முதல் 2008 வரை 340,000 சதவீதம் வளர்ச்சியடைந்து, உலகின் மொத்த வெளியீட்டில் 1% க்கும் அதிகமாக உள்ளது, இது சீனா, இந்தியா மற்றும் பிரேசில் தவிர அனைத்து வளரும் நாடுகளை விட ஈரானை மிகவும் முன்னிலைப்படுத்தியது.

தொழில்நுட்ப உற்பத்தியில் ஈரானின் வளர்ச்சியானது பல்வேறு அளவீடுகளின்படி (உலக சராசரியை விட மிக அதிகமாக) ஆண்டுக்கு 10% முதல் 25% வரை ஈர்க்கக்கூடிய விகிதத்தில் தொடர்கிறது, அதன் அணுசக்தித் துறை உலக வளர்ச்சியான  34%.விகிதத்துடன் ஒப்பிடும்போது அதிர்ச்சியூட்டும் வகையில் 8400% முன்னேறியுள்ளது.

ஈரானின் மிகப்பெரிய முன்னேற்றங்கள் சில ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அறிவியல் வியக்கத்தக்க அளவில் வந்துள்ளன. ஈரானிய விண்வெளி ஏஜென்சி ISA யின் அர்ப்பணிப்பு காரணமாக, ஈரான் இஸ்லாமிய குடியரசு 2009 இல் உலகின் 11 செயற்கைக்கோள் சுற்றுப்பாதை-ஏவுதல் திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியது. இன்று, விரிவுபடுத்தக்கூடிய செயற்கைக்கோள் வாகனம் (SLV) ஸுல்ஜானா 200 கிலோ எடையுள்ள வாகனம் 500 கிமீ சுற்றுப்பாதையில் கொண்டு செல்கிறது, அதே நேரத்தில் அதன் பின்னால் வரவிருக்கும் Souroush SLV விரைவில் 8-15 டன் எடையுள்ள வாகனம் விண்வெளிக்கு எடுத்துச் செல்லும்.

ஈரானிய இராணுவம், ஒப்பீட்டளவில் குறைந்த நிதியில் இயங்கிய போதிலும், எதிரிகள் ஈரான் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தும் முடிவில்லா அச்சுறுத்தல்களை தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவ தளங்கள், நகரங்கள் மற்றும்/ அமெரிக்க கப்பல்கள் மற்றும் தளங்கள் மீது நினைத்துப்பார்க்க முடியாத அளவிலான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய தற்காப்பு ராக்கெட்டுகளின் ஈர்க்கக்கூடிய வரிசையை சேகரிக்க முடிந்தது.

ஈரானிய விஞ்ஞானிகள் மற்றும் மூலோபாயவாதிகளின் அர்ப்பணிப்புமிக்க செயற்பாட்டின் காரணமாக, வல்லாதிக்க சக்திகள் இராணுவத்திற்காக செலவழித்த பணத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே செலவுசெய்து ஈரான் தற்காப்பு உயர்நிலையை அடைந்துள்ளது.

மேற்கூறிய துறைகளில் மற்றும் பலவற்றில் இஸ்லாமியக் குடியரசின் முன்னேற்றம், மதச்சார்பின்மையை அறிவுடனும், மதத்தை அறியாமையுடனும் சமன்படுத்தும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பொய்யாக்கி உள்ளது.

1979 இல் இஸ்லாமியக் குடியரசின் பிறப்பிலிருந்து வியக்கத்தக்க வெற்றிகளை திரும்பிப் பார்க்கும்போது, எதிர்கால வரலாற்றாசிரியர்கள் ஒரு புதிய தத்துவக் கண்ணோட்டத்தில் அணுகினால், முழு விவரங்கள் அறியப்படுவதை வேண்டுமென்றே தடுபோராக அல்லாமல், மதத்தை ஒரு ஆதாரமாகவும் அறிவின் தூண்டுதலாகவும் அங்கீகரிக்கலாம்,

https://crescent.icit-digital.org/articles/iran-s-achievements-since-the-1979-revolution-islam-as-a-source-and-stimulant-of-knowledge

No comments:

Post a Comment