US and West ‘waged decades of war on Iran by other means’: Analyst
அமெரிக்கா மற்றும் மேற்கு 'ஈரான் மீது பல தசாப்த காலப் போரை
வேறு வழிகளில் நடத்திவருகின்றன': ஆய்வாளர்
“அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈரானின் மீது பல தசாப்தங்களாக வேறு வழிகளில் போர் தொடுத்துள்ளன” அமெரிக்க எழுத்தாளரும் அரசியல் வர்ணனையாளருமான ஸ்டீபன் லெண்ட்மன் கருத்து தெரிவித்துள்ளார்.
2015ல் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி
ஒப்பந்தத்தில் (JCPOA) அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான பேச்சுக்கள் "நன்றாக நடக்கவில்லை" என்று
கடந்த வெள்ளியன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வெளியிட்ட அறிக்கை
குறித்து கருத்து தெரிவிக்கும் போது, சனிக்கிழமையன்று பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் லென்ட்மன்
இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில்
நடத்திய நிகழ்வில் சல்லிவன் கூறுகையில், "நாம் விரும்பும் விதத்தில் பேச்சுவார்த்தை செல்லாததால்
[கூட்டு விரிவான செயல் திட்டத்திற்கு (JCPOA)] திரும்புவதற்கான பாதையில் நாம் இன்னும் இல்லை என்று
கூறியிருந்தார்.
வியன்னாவில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை
முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை மேசையில் "சில முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக
சல்லிவன் கூறினார், ஆனால் 2018 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து
வெளியேறியதிலிருந்து ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை "முன்னோக்கி" நகர்த்தியுள்ளது.
"JCPOA உடன்படுக்கைக்கு திரும்புவது
பரஸ்பர இணக்கத்திற்கு திரும்புவதன் மூலம் அந்த திட்டத்தை மீண்டும் ஒரு கட்டத்திற்குள்
கொண்டுவருவது, இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் பார்க்க விரும்புவதை விட கடினமானது நிரூபிக்கப்பட்டுள்ளது,"
என்று சல்லிவன் கூறினார்.
"2018 இல் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவது என்ற (புத்திசாலித்தனமற்ற) பேரழிவு முடிவின்
பிரதிபலனையே நாங்கள் அனுபவிக்கின்றோம்"
JCPOA வில் இருந்து மே 2018
இல் ட்ரம்ப் வெளியேறினார். டிரம்ப்
பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை குறிவைத்து "அதிகபட்ச அழுத்தம்" பிரச்சாரம்
ஒன்றை அமுல்படுத்தினார், இது ஈரானின் நிலையை மேலும் கடினமாக்கியது, ஒரு "புதிய ஒப்பந்தத்தை" செய்வதற்கு ஈரானை
இணங்கச்செய்து, பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தத் தவறியது.
ஈரான் மற்றும் JCPOA வில் மீதமுள்ள ஐந்து தரப்பினர்
- ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா - ஆகியவற்றுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஒப்பந்தத்திற்குத்
திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்ததை அடுத்து, பொருளாதாரத் தடைகளை அகற்றும் நோக்கத்துடன் ஏப்ரல் மாதம்
ஆஸ்திரிய தலைநகரில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதற்கிடையில், ஈரானின் சார்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச்செல்லும் தலைவர் அலி பாக்கரி கானி கடந்த வெள்ளிக்கிழமை 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூன்று ஐரோப்பியத் தரப்பினரும், "தீவிரமான, முடிவு சார்ந்த" பேச்சுக்களுக்கு தெஹ்ரானின் கண்ணோட்டத்தை அடிப்படையாக ஏற்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில்
ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில், தெஹ்ரான் மீது விதிக்கப்பட்ட அமெரிக்க தடைகளை நீக்கி
ஒப்பந்தத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் பலதரப்பு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட
மீதமுள்ள ஐந்து நாடுகள் உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம்
விளக்குகையிலேயே பாக்கரி கானி மேற்கண்டவாறு கூறினார்.
ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான
வேகம் எதிர் தரப்பின் விருப்பத்தைப் பொறுத்தது. "ஈரான் இஸ்லாமிய குடியரசின் நியாயமான
கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை மறுபுறம் ஏற்றுக்கொண்டால், புதிய சுற்று பேச்சுவார்த்தை
பயனளிப்பதாக இருக்கும், மேலும் குறுகிய காலத்தில் நாம் ஒரு ஒப்பந்தத்தை அடைய முடியும்." என்றார்.
லேண்ட்மன்
"JCPOA பேச்சுக்கள் வியன்னாவில்
எங்கும் இலக்கை நோக்கி செல்வதாகத் தெரியவில்லை, அது ஈரான் மீதான நீண்டகால அமெரிக்க/மேற்கத்திய விரோதப்
போக்கை பிரதிபலிக்கிறது. இந்த ஆட்சிகள் எல்லாவற்றையும் கோருகின்றன, பதிலுக்கு எதையும் வழங்கவில்லை,
ஆனால் இவர்களது வெற்று வாக்குறுதிகள்
மீறப்படும்" என்று கூறினார்
“ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சியின் பின்னர்,
நாட்டையும் அதன் மக்களையும் அமெரிக்காவின்
ஆதிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்ததில் இருந்து இவ்வாறுதான் இருந்து வருகிறது.
போரை விரும்பும் இரு வலதுசாரி கட்சிகளும் ஈரானில் தாம் இழந்ததை மீண்டும் பெற விரும்புகின்றன.
அவர்கள் ஈரானின் அபரிமிதமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களைக் கட்டுப்படுத்த
விரும்புகிறார்கள். அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்ய சாதாரண ஈரானியர்கள் சுரண்டப்படுவதை
அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் ஈரான் மீது பல தசாப்தங்களாக பல்வேறு வழிகளில் போரை
நடத்தி வருகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
"JCPOA ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே ஒபாமா / பிடென் ஆட்சி அதை மீறியது," என்று அவர் கூறினார்.
"வெள்ளை மாளிகையில் வஞ்சகத்தைக்
கட்டுப்படுத்தும் கடும்போக்குவாதிகளுக்கு, பாதுகாப்பு கவுன்சில் 2231 தீர்மானத்தினால் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றும் எண்ணம்
இல்லை. — அதன் மேலாதிக்கப் பிரிவின் கீழ் ஒப்பந்தம் சர்வதேச மற்றும் அமெரிக்க அரசியலமைப்புச்
சட்டம் பிணைக்கப்படுவதைப் புறக்கணிக்கிறது" என்று ஆய்வாளர் கூறினார்.
"வியன்னா பேச்சுக்களில் எட்டப்படும்
முடிவு என்னவாக இருந்தாலும் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் நீண்டகால நோக்கத்தை
மாற்ற முடியாது. இஸ்லாமிய குடியரசின் மீதான போர் சாத்தியமில்லை என்றாலும்,
அது தற்செயலாக அல்லது வடிவமைப்பால்
இடம்பெறக்கூடும், ஏனெனில் அமெரிக்காவின் அடக்கி ஆளும் கொள்கை அதை நோக்கியே தள்ளும்” என்று அவர் கூறினார்.
https://www.presstv.ir/Detail/2021/12/18/672940/US-and-West-%E2%80%98waged-decades-of-war-on-Iran-by-other-means%E2%80%99
No comments:
Post a Comment