Kal-e Jeni Canyon, a Natural Attraction in Iran
கல்-இ ஜெனி பள்ளத்தாக்கு, ஈரானில் ஒரு இயற்கை ஈர்ப்பு
தபாஸில் உள்ள கல்-இ ஜெனி
பள்ளத்தாக்கு ஈரானுக்கான உங்கள் சுற்றுப்பயணத்தில் நீங்கள் காணக்கூடிய மிக அழகான இயற்கை
அதிசயங்களில் ஒன்றாகும். இந்த பள்ளத்தாக்கு தெற்கு-கொராசன் மாகாணத்தில் அமைந்துள்ளது
மற்றும் பல நூற்றாண்டுகளாக நீர் இயக்கம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றால் வடிவமைந்துள்ளது.
கல்-இ ஜெனியின் நீர், கால்வாய் மூலம் தாஷ்குனி என்ற கிராமத்திற்கு மாற்றப்படுகிறது, இது சைரஸ் தி கிரேட் தனது வாழ்க்கையின் முதல் 16 ஆண்டுகளை கழித்த கிராமம் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.
கல்-இ ஜெனி என்பது ஜின் கால்வாய் என்று பொருள்படும் மற்றும் அப்பகுதியின் உள்ளூர் மக்களிடையே
ஒரு மர்மமான இடமாக அறியப்படுகிறது.
இந்த பள்ளத்தாக்குக்கு
ஜின் கால்வாய் என்று பெயரிடுவதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள்
நம்புகின்றனர்.
முதலாவது அதன் மர்மமான
தோற்றம் கொண்ட துாண்கள், வளைவுகள் மற்றும் சுவர்கள்
காரணமாக இது ஜின்கள் மற்றும் வேற்றுகிரக உயிரினங்களின் வீடு என்று மக்கள் நம்புகிறார்கள்.
இரண்டாவது காரணம், பலமான காற்று வீசும் நாளில் நீங்கள் பள்ளத்தாக்கில்
நின்றால், ஜின்கள் உங்கள் மீது
கூழாங்கற்களை வீசும்! கூழாங்கற்கள் உங்களைத் தாக்குவதற்கான உண்மையான காரணம், காற்று வீசும் போது, அது பள்ளத்தாக்கின்
மென்மையான சுவர்களில் உள்ள மணல் மற்றும் கூழாங்கற்கள் உங்கள் உடலைத் தாக்கும், ஆனால் உள்ளூர்வாசிகள்
ஜின்கள் அதைச் செய்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.
மூன்றாவது காரணம், பள்ளத்தாக்கின் சுவர்களில் செதுக்கப்பட்ட அறைகள் உள்ளன, அவற்றின் உண்மையான செயல்பாடு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் வரலாற்றாசிரியர்கள் மித்ராயிசத்தைப் பின்பற்றுபவர்கள்
இந்த அறைகளை நாற்பது நாட்கள் தன்மையில் தங்கியிருக்க பயன்படுத்தியதாக நம்புகிறார்கள்.
ஒரு குறுகிய பாதை உங்களை ஒரு குறுகிய மண்டபத்திற்கு இட்டுச்செல்லும்; செங்குத்து சுரங்கப்பாதை
உள்ளது. அதன் முடிவில் பத்து அறைகள் நீங்கள் காண்பீர்கள். செலே என்பது ஒரு மதச்
சடங்கு, அதில் சிலர் நாற்பது
இரவுகள் ஒரே இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். எனவே இந்த சடங்கைப் பாதுகாப்பதற்காக, மித்ராவைப் பின்பற்றுபவர்கள்
மக்களை பயமுறுத்துவதற்கும், அவர்களால் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் இந்த பள்ளத்தாக்குக்கு கல்-இ ஜெனி
என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர் என்று கூறப்படுகிறது,
இந்த அழகிய பள்ளத்தாக்குக்கு
நீங்கள் செல்லும்போது, சூட்டப்பட்டுள்ள பெயர்
முற்றிலும் பொருத்தமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், இது ஒரு சக்திவாய்ந்த மர்மமான மற்றும் வளிமண்டல சுற்றுப்புறமாகும்.
உள்ளூர்வாசிகள் கல்-இ
ஜென்னியை ஒரு ரகசிய இடமாக பாதுகாத்து வந்ததால்,
ஈரானியர்களினதோ அல்லது ஈரானுக்கு வரும்
சுற்றுப்பயணிகளினதோ கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. ஆனால் இன்று அதிகமான ஈரானியர்கள் இயற்கை
அன்னையின் கைகளால் செய்யப்பட்ட இந்த அற்புதமான இடத்தை அறியத் தொடங்கியுள்ளனர். விடுமுறை
நாட்களில் பலர் இந்த பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்கைப் பார்வையிடுவதற்காக தபாஸ் நகருக்கு
செல்கின்றனர்.
https://irandoostan.com/kal-e-jeni-canyon-a-natural-attraction-in-iran/
Iran seeks UNESCO tag for gigantic geopark
பிரமாண்டமான நிலப்பரப்புக்கான
யுனெஸ்கோ அந்தஸ்தை கோரல்
ஈரான் இஸ்லாமிய குடியரசு
தபாஸில் (மத்திய ஈரானில்) உள்ள இந்த தபாஸ் புவி பூங்காவை (ஜியோபார்க்) பிரமாண்டமான
நிலப்பரப்புக்கான யுனெஸ்கோ அந்தஸ்தை வெல்லும் நம்பிக்கையில் அது தொடர்பாக அனைத்தையும்
உள்ளடக்கிய ஆவணத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார
அமைப்பிற்கு சமர்ப்பித்துள்ளது.
நான்கு வருட கடின உழைப்பு
மற்றும் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்திய பிறகு, இந்த ஆவணம் சாத்தியமான
பதிவுக்காக யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்கப்பட்டது,
மத்திய ஈரானில் அமைந்துள்ள
குறிப்பிட்ட நிலப்பரப்பை கள ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ய யுனெஸ்கோ நிபுணர்கள் அடுத்த
கோடையில் அங்கு செல்ல உள்ளனர்.
தெற்கு கொராசன் மாகாணத்தில்
அமைந்துள்ள தபாஸ் ஜியோபார்க்கில் 50 புவிசார் தளங்கள் மற்றும்
பலவிதமான இயற்கைக் காட்சிகள் மற்றும் அஸ்மிகன் கிராமத்தில் அமைந்துள்ள மர்மமான கல்-இ
ஜெனி (ஜின் பள்ளத்தாக்கு) கொண்டகளங்கப்படுத்தப்படாத நிலப்பரப்புகள் உள்ளன. தபாஸ் ஜியோபார்க் பற்றிய ஆரம்ப ஆய்வுகள்
அதன் பல்வேறு தளங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியுடன்
2011 இல் தொடங்கப்பட்டன.
ஜியோபார்க்கின் சிறப்பம்சங்களில்
ஒன்றான கல்-இ ஜெனி இன்னும் அது போன்ற பல சாத்தியமான இடங்கள் பயணிகள் மற்றும் சாகசக்காரர்களால்
ஆராயப்படவில்லை என்பது ஆச்சர்யமானது, அவர்கள் பூமியில் அத்தகைய
அற்புதமான ஈர்ப்புக்குரிய இடமொன்று இருப்பதைக் கூட அறிந்திருக்க மாட்டார்கள்!
புவியியல் பூங்கா என்பது
ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும், இது புவியியல் பாரம்பரியத்தின்
பாதுகாப்பையும் பயன்பாட்டையும் நிலையான வழியில் முன்னேற்றி அங்கு வாழும் மக்களின் பொருளாதார
நல்வாழ்வை மேம்படுத்துகிறது. உலகளாவிய புவிசார் பூங்காவின் யுனெஸ்கோ வரையறையானது சர்வதேச
முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் பாரம்பரியத்துடன் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.
ஜியோபார்க்ஸ் நாம் வாழும் புவியின் சூழலில் சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்
பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த குறிப்பிட்ட பாரம்பரியத்தை பயன்படுத்துகிறது.
எரிமலைகள், பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் உள்ளிட்ட புவியியல் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை
மேம்படுத்த பெரும்பாலான புவிசார் பூங்காக்கள் உதவுகின்றன என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஜியோபார்க்குகள் கடந்த கால காலநிலை மாற்றங்களின் பதிவுகளை உள்ளடக்கியுள்ளது என்பதால்
தற்போதைய காலநிலை மாற்றங்களின் குறிகாட்டிகளாகும்.
யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்
சமூக-பொருளாதார வளர்ச்சியை தூண்டுகிறது மேலும் இது கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழல்
ரீதியாகவும் நிலையானது, மனித வாழ்க்கை நிலைமைகள்
மற்றும் கிராமப்புற சூழலை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் வாழ்வில் நேரடியாக தாக்கம்
செலுத்துகிறது. இது உள்ளூர் மக்களுக்கு அவர்களின் பிராந்தியத்தின் பெருமையை உரித்தாக்குகிறது, அப்பகுதியின் பொது அடையாளத்தை
வலுப்படுத்துகிறது, மேலும் அப்பகுதியின் புவியியல், இயற்கை சூழல், தொல்பொருள், கலாச்சாரம் மற்றும் தொழில்துறை பாரம்பரியத்தைப் பற்றிய
சிறந்த புரிதலை ஊக்குவிக்கிறது.
ஐ.நா அமைப்பின் கூற்றுப்படி, யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்ஸ் அதன் பிராந்திய புவிசார் பாரம்பரியத்தை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் அப்பகுதியின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வளர்ச்சியை உள்ளடக்கிய பல நோக்கங்களைக் கொண்டுள்ளது.
"யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்ஸ் ஆனது அடிப்படையில் மக்களைப் பற்றியது மற்றும் நமது
சமூகங்களுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வது மற்றும் (அவற்றை வியந்து) கொண்டாடுவது. நாம் யார்
என்பதை பூமி வடிவமைத்துள்ளது: அது நமது விவசாய நடைமுறைகள் என்ன என்பதையும், கட்டுமானப் பொருட்கள்
யாவை என்பது பற்றியும் மற்றும் அவை நமது வீடுகளுக்குப் பயன்படுத்திய முறைகள் பற்றியும், நமது புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள்
மற்றும் நாட்டுப்புற மரபுகளையும் வடிவமைத்துள்ளன. எனவே, யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்ஸ், இந்த இணைப்புகளைக் கொண்டாடும்
வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பல யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்குகள்
கலை சமூகங்களுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன, அங்கு அறிவியலையும் கலைகளையும் ஒன்றாகக் கொண்டுவருவதன்
மூலம் ஆச்சரியமான முடிவுகளைத் தரும்.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும்
பொதுமக்களுக்கு புவியியல் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை தெரிவிப்பதன் மூலம் உள்ளூர்
சமூகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புவி அறிவியல் கல்வியை மேம்படுத்துவது முதன்மை
நோக்கங்களில் ஒன்றாகும்.
https://www.tehrantimes.com/news/467743/Iran-seeks-UNESCO-tag-for-gigantic-geopark
No comments:
Post a Comment