Israel admits to Iran’s drone power, says ‘deadly’ UAVs can cross ‘thousands of kilometers’
ஈரானின் ட்ரோன் சக்தியை இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது, அதன் 'கொடிய' UAV கள் 'ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை' கடந்து தாக்கும் வல்லமை கொண்டது
என்று கூறுகிறது
இஸ்ரேலின் இராணுவ விவகார
அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தனது சமீபத்திய உரையில் ஈரானின் ட்ரோன் சக்தியை ஒப்புக்கொண்டார்,
இஸ்லாமிய குடியரசு ஆயிரக்கணக்கான
கிலோமீட்டர்களைக் கடக்கக்கூடிய "துல்லியமான" மற்றும் "அழிவுகரமான"
ட்ரோன்களை வைத்திருக்கிறது, என்று கூறியிருந்தார்
"ஈரான் உருவாக்கிய மிக
முக்கியமான கருவிகளில் ஒன்று அதன் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்)" என்று பென்னி கான்ட்ஸ்
கூறினார், ஈரான் அதன் மத்திய மாகாணங்களில் ஒன்றில் விமானப்படை தளத்தை பயன்படுத்தி யெமன்,
ஈராக், சிரியா மற்றும் லெபனான் (போராளிகளுக்கு)
ஈரானில் தயாரிக்கப்பட்ட UAV களில் பயிற்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.
"நாங்கள் மிகவும் துல்லியமான மற்றும் அழிவுகரமான ட்ரோன்களைப் பற்றி பேசுகிறோம். பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்லது ஜெட் போர் விமானங்கள் போன்று இந்த ட்ரோன்களால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். ஈரானியர்கள் இந்த ட்ரோன்களை உருவாக்கி, [இஸ்லாமிய புரட்சி] காவலர் படையின் விண்வெளிப் படை மற்றும் குத்டஸ் படையில் தங்கள் பிரதிநிதிகளுக்கு வழங்குகிறார்கள், ”என்று இஸ்ரேலிய அமைச்சர் ஹெர்ஸ்லியாவில் உள்ள ரீச்மேன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெறிவித்தார்.
கடந்த ஜூலை மாதத்தில்
ஓமான் கடற்பிராந்தியத்தில் இஸ்ரேலினால் நிர்வகிக்கப்படும் ‘மெர்சர் ஸ்ட்ரீட்’ டேங்கர்
மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை இந்த சம்பவத்திற்கு ஈரான்
பொறுப்பேற்க வேண்டும் என்று கூறின, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அச்சுறுத்தலும் விடுத்தன. அதைத்தொடர்ந்து இஸ்ரேலுக்கும்
ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட
ட்ரோனினாலேயே குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது. எவ்வாறாயினும்,
தெஹ்ரான் இக் குற்றச்சாட்டை
"ஆதாரமற்றது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று நிராகரித்தது.
லெபனான் நாட்டின் நிதி
மற்றும் அரசியல் நெருக்கடியின் போது லெபனான் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் ஈரான்
சமீபத்தில் எரிபொருள் வழங்கியதை சுட்டிக்காட்டிய இஸ்ரேலிய அமைச்சர், லெபனான் மக்களின் நலனுக்கு முரணாக
ஈரான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எரிபொருள் வழங்குவதாக கூறினார்.
"காஸாவிலும் இவ்வாறே நடக்கிறது; அங்கு ஈரான் உயர்தர ராக்கெட்டுகளை
உருவாக்குவதற்கான தொழில்நுட்ப அறிவையும் ஆயுதங்களையும் வழங்குகிறது," என்று அவர் கூறினார்.
JCPOA எனும் அணுசக்தி ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட நாடுகள் இஸ்லாமிய குடியரசிற்கு
எதிராக தடைகளை விதிக்க வேண்டும் எனவும் காண்ட்ஸ் அழைப்பு விடுத்தார்.
"ஈரான் கையெழுத்திட்ட
ஒப்பந்தங்களை மதிக்கவில்லை, எதிர்காலத்தில் கையெழுத்திடும் எந்த ஒப்பந்தங்களையும் மதிக்கும் என்று நம்புவதற்கு
எந்த காரணமும் இல்லை. ‘செயலுக்கான’ நேரம் வந்துவிட்டது,” என்று அவர் கூறினார்.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை
(கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA)
ஈரானின் முழு இணக்கம்
இருந்தபோதிலும், 2018 இல் இஸ்ரேலிய நெருக்குதலின்
கீழ் அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தை மதிக்காது, அதிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இதேபோன்ற
ஈரான் எதிர்ப்பு குற்றச்சாட்டில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் யைர் லாபிட், "அணு ஆயுதத்தை நோக்கிய ஈரானின் பயணம் இஸ்ரேலிய பிரச்சனை
மட்டுமல்ல; அது முழு உலகிற்குமான ஒரு பிரச்சனை," என்று குறிப்பிட்டிருந்தார்.
"என்ன விலை கொடுத்தாயினும்
சரி, ஈரான் அணுசக்தி திறனைப்
பெறுவதை உலகம் தடுக்க வேண்டும். உலகம் அதைச் செய்யாவிட்டால், இஸ்ரேல் செயல்படும் உரிமையை கொண்டுள்ளது,”
என்று லாபிட் கூறினார்.
இது ஈரான் மீதான போர் அச்சுறுத்தலாகும்.
இதற்கு பதிலளிக்கும்
விதமாக, ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத்
கதிப்சாதே இஸ்ரேலிய ஆட்சியின் எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் எதிராக தகுந்த பதிலடி
கொடுக்கும் இஸ்லாமிய குடியரசின் உரிமையை அடிக்கோடிட்டுக் காட்டினார் மற்றும் ஈரான், இஸ்ரேலைப் போலல்லாமல், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்
(NPT) கையெழுத்திட்டுள்ள உறுப்பு நாடாக இருப்பதையும் அவர்
சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத இஸ்ரேலிய ஆட்சி - சட்டவிரோத அணு ஆயத்தங்களை வைத்துக்கொண்டும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர மறுத்துக் கொண்டும் - NPT உறுப்பு நாடான ஈரானை அச்சுறுத்துகிறது; உலகில் அணுசக்தி திட்டம் தொடர்பாக மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் நாடு ஈரானாகும்,” என்று கதிப்சதே தனது ட்வீட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment