Window to the past: gigantic underground city is full of untold stories
பண்டைய காலத்தில் தற்காப்புப் புகலிடமாக இருந்த ஒரு பெரிய நிலத்தடி நகரம், மத்திய ஈரானில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தயாராகிறது.
தற்போது வரை, இரண்டு பருவ அகழ்வாராய்ச்சி நிலத்தடி நகரத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஈரானில் மட்டுமல்லாது மேற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலத்தடி நகரமாக கருதப்படுகிறது. 400 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தடி இடங்கள் மற்றும் பாதைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலாச்சார பாரம்பரிய நிபுணர்களால் இதுவரை, அகழ்வு செய்யப்பட்டுள்ளன.
தஃப்தேஷ் நகரில் அமைந்துள்ள இந்த நிலத்தடி நகரம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான நடவடிக்கையின் போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மங்கோலிய படையெடுப்பின் போது இது மக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கதைகள் கூறுகின்றன.
கையால் செதுக்கப்பட்ட
நிலத்தடி நகரம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத்
தலமாக மாறும், ஆனால் உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, அதிக தங்குமிட வசதிகள் அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட
வேண்டும்.
நிபுணத்துவ ஆய்வின் அடிப்படையில், கைகளினால் செய்யப்பட்ட இதுபோன்ற மறைவிட தளங்களை உருவாக்குவது காலநிலை உட்பட பல காரணிகளைப் பொறுத்தது மற்றும் புவியியல் நிலைமைகள், பாதுகாப்பு, நீடித்து நிலைத்தல் மற்றும் மதம், கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடக்கலை அவற்றின் வெளிப்புற வடிவம், உள் இடம் மற்றும் செயல்பாடு (மத, கல்லறைகள், குடியிருப்பு மற்றும் தங்குமிடம்) ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு முறையான வகைகளாக வகைப்படுத்தலாம்.
முழுக்க முழுக்க கைகளாலேயே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட நிர்மாணம் ஒரு தனித்துவமான திறமையாகும், இதற்கு பெரிய கட்டுமான பொருட்கள் தேவைப்பட்டிருக்கவில்லை, இதன் விளைவாக சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படாதவண்ணம் அமையப்பெற்றுள்ளது. அதன் உருவாக்கம் முக்கியமாக, சடப்பொருள் பயன்பாட்டை விட அதிக இடத்தை சேமிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிப்பொருட்களைக் கொண்டல்லாது அகழ்வின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அற்புமான கட்டிடக்கலை விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்விற்கு உட்படுத்த பல வாய்ப்புகளை வழங்குகிறது.
பொருள் பயன்பாட்டை விட இடைவெளிகளை உருவாக்குவதில் கட்டாய முறை என்று ஒன்றில்லை என்பதால், இதுபோன்ற ஒரு கட்டமைப்பை நிர்மாணிப்பதில், மேல்தளத்தில் இருந்தோ அல்லது தரையிலிருந்தோ ஆரம்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பாறைகள் மற்றும் மண் குவியல்களை கையாள்வதற்கும் உட்புற இடத்தை வடிவமைக்கவும் கோடாரி, சுத்தி, உளி, மண்வெட்டி, கடப்பாரை மற்றும் சுத்தி போன்ற பல்வேறு கருவிகள் அவசியமாகும். ஆனால் இங்கு அவை எதுவும் பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை.
ஈரானில், அதன் பல்வேறுபட்ட காலநிலை காரணமாக இதுபோன்ற பல அற்புதமான நிர்மாணங்கள் அதன் பல்வேறு பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளன. இந்த தனித்துவமான கட்டிடக்கலை வழக்கமான வாழ்விட முறைகள் மற்றும் கட்டுமான முறைகளுக்கு முரணாக உள்ளது மற்றும் எப்போதும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் சுவராகவோ அல்லது தரையாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். இது பல்வேறு பகுதிகளில் உள்ள காலநிலை ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல வழியாகும்.
No comments:
Post a Comment