The Islamic Resurgence and The
Black Banners of Khorasan - Kevin Barrett
சமீபத்தில் நான் பாலஸ்தீனிய
இன்திபாதா தொடர்பான ஆறாவது சர்வதேச மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 2017ம்
ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஐந்து நாட்களை ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைநகரான
தெஹ்ரானில் கழித்தேன். இந்த மாநாட்டில் உலகெங்கிலும் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 பேர் கலந்துகொண்டனர். இவர்களில்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர உயர் பதவிகள் வகிப்போரும் அடங்குவர்.
பல முன்னணி பாலஸ்தீனிய விடுதலை
போராட்டக் குழுக்களின் உயர் மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இவர்களில் ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத், ஃபத்தாஹ், மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி ஆகியவற்றின்
பிரதிநிதிகளாகும். வெவ்வேறு வழிகளில் செயற்படும்
விடுதலைத் தாகம் கொண்ட இந்த அனைத்து
பாலஸ்தீனிய சுதந்திர போராளிகளின் பிரதானிகளை ஒன்றிணைப்பதற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின்
அர்ப்பணிப்புடனான முயற்சி பாராட்டத்தக்கது. லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை
தீரத்துடன் எதிர்த்து போராடும் ஹிஸ்புல்லாஹ் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில்
பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்த
ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே சியோனிச
ஆக்கிரமிப்பாளர்களின் யூத மேலாதிக்க இனவெறி அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி
வைக்கவேண்டிய அவசியம் பற்றி தெளிவு படுத்தினார். ஜியோனிஸவாதிகளை இனப்படுகொலை வெறியர்கள் என்று வர்ணித்த அவர், ஜியோனிஸத்தை புற்றுநோய் கட்டி என்றும் அதனை வெட்டி அகற்ற வேண்டிய
அவசியத்தையும் வலியுறுத்தினார். அபகரிக்கப்பட்ட அத்தனை பலஸ்தீன நிலங்களும்
வளங்களும் விடுவிக்கப்படும்வரை ஓயமாட்டோம் என்றும் சூளுரைத்தார்.
இந்த மாநாடு பாலஸ்தீனத்தை
விடுவிக்கும் அனைத்து போராளிகளையும் ஒன்றாக இணைக்கும் நோக்கத்தை கொண்டது -
குறிப்பாக முஸ்லிம்களை. ஜியோனிஸ்டுகளின் "நாகரீகங்களின் மோதல்" என்ற சதியினால்
பாதிக்கப்பட்டவர்கள் முக்கிமாக முஸ்லிம்களேயாகும். முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக ஜியோனிஸ்டுகள் 'பிளவுபடுத்தி ஆக்கிரமித்தல்' என்ற ஒரு மூலோபாயத்தை செயற்படுத்தி வருகின்றனர்
என்பதையும் பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்ட இஸ்லாமிய
ஒற்றுமையே இந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி
என்பதையும் மாநாட்டில் பங்குபற்றிய அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த மாநாட்டின்போது முஸ்லிம்
உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்களை சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டியது. அவர்களில் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞரான ஷேக் இம்ரான்
ஹுசைன் மற்றும் ஜியோனிச சதியினை அம்பலப்படுத்தி, 'மெஸியானிக் எஸ்கொட்டாலஜி' என்ற புத்தகத்தை எழுதியுள்ள இளம் சிந்தனையாளர் யூசுஃப் ஹிந்தி
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும். இவர்களுடனான எனது உரையாடல் சமீப
காலங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள பிரபல்யம்வாய்ந்த "கோராசானின் கறுப்பு
பதாகைகள்" ஹதீஸ் மீது மீண்டும் எனது சிந்தனையைத் திருப்பியது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "கொராஸானில் இருந்து கறுப்பு கொடிகளை ஏந்தியவண்ணம் (படையணிகள்) வரும்; எந்த சக்தியாலும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது, இறுதியாக அவர்கள் அல்-குத்ஸை (பைத்துல் முகத்தஸை) அடைந்து அங்கு அவர்கள் (வெற்றிக்)கொடிகளை ஏற்றுவார்கள்." (திர்மிதீ)
தாயேஷ் மற்றும் தக்ஃபிரி பயங்கரவாத
குழுக்கள் தமது ஆட்சேர்ப்பு கருவியாக இந்த ஹதீஸை பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்ல, கறுப்புக் கொடியை ஏந்திக்கொண்டு
அப்பாவிகளை கொலை செய்தும் போதை மயக்கத்தில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டவர்களின்
உட்புற உறுப்புக்களை சப்பித் துப்பும் அளவுக்கு கொடியவர்களாக
மாறி, இஸ்லாத்தின் எதிரிகளுடன் இணைந்து பலஸ்தீன் விடுதலைப் போராளிகளை
அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அக்கொடியின் மகத்துவத்தையே
இல்லாமலாக்கினர்.
இந்த பயங்கரவாதிகள் ஏந்திவந்த
கறுப்பு கொடியானது ஒரு போலியான கொடியாகும். மேலும், முஸ்லிம்களுக்கு பேரழிவை
ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக, 9/11 சம்பவத்தை வடிவமைத்த அதே ஜியோனிச
உளவியலாளர்களான போர்க்கால வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட கொடியே இதுவாகும். (ஹதீஸில்
குறிப்பிடப்பட்ட அந்த கோராஸான் கறுப்புக் கொடிக்கும் இந்தக் கொடிக்கும் எந்த
சம்பந்தமும் கிடையாது.)
"கொராஸானின் கறுப்பு கொடி" ஹதீஸ் ஜியோனிஸ்டுகளை மனோதத்துவ
ரீதியாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக போலியான
கொடியினை உருவாக்கி, தமது ஏவலாளிகளான தாயேஷ் மற்றும்
தக்பீரி பயங்கரவாத குழுக்களை அதனை ஏந்தச் செய்தது. உண்மையான கொடியின் மகத்துவத்தை
கெடுக்க இஸ்லாம் விரோத சியானிஸ சக்திகள் செய்த சாகசமே அதுவாகும். இவர்களது பயங்கரவாதத்தை
வெறுக்கின்ற உலக முஸ்லிம்களில் 95% மானோர் பாலஸ்தீனத்தை
விடுவிப்பதற்கான கறுப்பு கொடியை எப்போதோ ஒரு நாள்
வெறுக்கக்கூடும் என்ற எண்ணக்கருவில்
உருவான திட்டம்தான் இதுவாகும். கொராஸானின் கறுப்புக்கொடி பற்றி
ரசூலுல்லாஹ்வின் முன்னறிவிப்பின் தாக்கத்தை முஸ்லிம்களிடமிருந்து இல்லாதொழிக்க
என்ன அற்புதமாக சிந்தித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.
காயமுற்ற நிலையில், இஸ்ரேலிய மருத்துவ மனைகளில் சிகிச்சைபெற்றுவரும் தாயேஷ் போராளிகளை
இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாஹு சென்று நலன் விசாரிக்கின்றார் என்றால் இவர்கள் பைத்துல்
முகத்திஸை விடுவிக்கும் கொராஸான் படையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு
வருவதற்கு பெரிய சிந்தனை எதுவும் அவசியமில்லை. மேலும், இவர்களில் எவரும் கொராஸானை
சேர்ந்தோருமல்ல. இவர்கள் போலி, தான்தோன்றி கலீஃபாவான அபூபக்கர்
அல்-பக்தாதியின் தலைமையில் (அமெரிக்க மற்றும் ஜியோனிச நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ்) ஈராக்கில் அமைந்துள்ள புக்கா ராணுவ முகாமில் விசேடமாக தயார் செய்யப்பட்டவர்களாகும்.
இந்த புக்கா முகாம் எங்கோ
இருக்கிறது, கொராஸான் எங்கோ இருக்கிறது. மேலும் இந்த தாயேஷ் குழுவினரிடம்
இஸ்லாமிய ராணுவம் கொண்டிருக்கவேண்டிய எந்தப் பண்பும் இருக்கவில்லை.
எல்லா அடையாளங்களையும்
முன்னறிவிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் இறுதி நாளை (ஆகிர் ஸமான்)
நெருங்குவதுபோலவே தெரிகிறது. கொராஸானின் விடுதலை ராணுவம் எந்த நேரத்திலு வரலாம்
என்று ஷேய்க் இம்ரான் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்தார். அது எந்த வகையான ராணுவமாக
இருக்கப்போகிறது...?
கொராஸான் எங்குள்ளது என்பதை முதலில்
பார்ப்போம். கொராஸான் இன்று, ஈரானில் ஒரு முக்கிய மாகாணமாக
உள்ளது. அதன் தலைநகரான மஷ்ஹத், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய
நகரமாகும். இமாம் ரீஸா (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் இங்குள்ளதால் மிகவும்
பிரசித்தமான இடமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய
ஒரு பெரிய பகுதியை கூட கொராஸான் என்பதை குறிக்கும்.
கொராஸான் என்பதற்கான இவ்விரு
அர்த்தங்களும் - ஈரானினதும் ஆப்கனிஸ்தானினதும் குறிப்பிட்ட பகுதியை உள்ளடக்கிய பாரிய
நிலப்பரப்பு - "கறுப்பு கொடிகள்" தீர்க்கதரிசனத்தின் (ஹதீஸின்)
அர்த்தத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை வழங்குகின்றது. 1979 ஆம் ஆண்டில் தோன்றிய இரண்டு மிக
முக்கியமான இஸ்லாமிய விடுதலைப் படைகளை உருவாக்கிய புவியியல் இடத்தின் சரியான
மையத்தில் கொராஸான் உள்ளது: ஈரான் இஸ்லாமிய புரட்சியானது ஷாவின்
அமெரிக்க கைப்பாவை ஆட்சியை துடைத்தெறிந்து, சர்வதேச ரீதியில் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதேசமயம், ஆப்கானிய விடுதலைப் போராட்ட சக்திகள் அந்த நாட்டிலிருந்து ரஷ்ய
கம்யூனிஸ்டுகளை வெளியேற்றி சாதனை புரிந்தன. இவ்விரண்டு
நிகழ்வுகளும், உலகில் வல்லாதிக்கம் செலுத்திவந்த இரண்டு சக்திகளினது
சித்தாந்தத்தின் இருதயத்தையே குத்திக் கிழித்தன.
கொராஸானின் ஒரு பக்கத்தில், ஈரானிய இஸ்லாமிய புரட்சியாளர்கள் அமெரிக்க (முதலாளித்துவ) பேரரசுக்கு எதிராக ஒரு மரண அடியைக் கொடுத்தனர். மறுபுறத்தில், ஆப்கானிய இஸ்லாமிய போராளிகள் ரஷ்ய (கம்யூனிச) சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒரு மரண அடியைக் கொடுத்தனர். இந்த நிகழ்வுகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் இரண்டு பெரிய மேற்கத்திய ஏகாதிபத்திய சித்தாந்தங்களின் சரிவையும் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டின. ஆகவே, இந்த ஹதீஸின் எளிய மற்றும் மிக வெளிப்படையான விளக்கம் என்னவெனில், அல் குத்ஸை விடுவிக்கும் "முஸ்லிம் இராணுவம்" என்பது 1979 ல் கொராஸானின் இரு பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் தோன்றிய இஸ்லாமிய விழிப்புணர்வு கொண்ட ஓர் ஐக்கியப்பட்ட இராணுவமாகும்.
1979 இஸ்லாமியப் புரட்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய சில மேற்கத்திய
அறிவுஜீவிகளில் ஒருவராக மைக்கேல் ஃப்யூகோல்ட் இருந்தார். இவர் தரம்கெட்ட மேற்கத்திய துறையின் தயாரிப்புக்கு ஒரு
முன்மாதிரியாகும். எனவே அதை நன்றாக அவதானித்து, பகுப்பாய்வு செய்யவும் தகுதியும்பெற்றிருந்தார். (அதன் வீழ்ச்சியையம் முன்னறிவித்தல் செய்தார்). புரட்சிகர
இஸ்லாத்தின் மீள்வருகை உலகை அதிரவைக்கும்
ஒரு நிகழ்வாக ஃபூகோல்ட் கண்டார். இவர் முன்னறிவித்ததை சற்று
ஆராய்வோமாயின், கொராஸானை சூழவுள்ள பிரதேசங்களில் 1979ம் ஆண்டு எழுந்த இஸ்லாமிய
எழுச்சியானது உலகின் இரண்டு மேலாதிக்க சிந்தனைகள் - அடிப்படையில் இரண்டு இறைமறுப்பு சிந்தனைகள் - சாத்தானிய ஃப்ரீமசோனிக்-யூத
மெஸியனியவாதத்தின் பொருள்முதல்வாத வெளிப்பாடுகள் சிதைந்து போவதையும் அவற்றுக்கு
பதிலாக மார்க்க அடிப்படையிலான ஒரு கலாசாரம் மேலோங்குவதையும் எழுச்சிபெற்ற இஸ்லாம்
மையம்கொள்வதையும் அவர் அறிந்திருந்தார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அவ்வாறாயின் இந்த கொராஸானிய
படையினால் அல்-குதஸை விரைவாக மீட்டு, பூலோகத்தில் இஸ்லாத்தை மறுபடியும்
ஸ்தாபித்து, முஸ்லிம்களின் கலாச்சாரத்தை காத்து, ஏனைய இறை மார்க்கங்களையும் பாதுகாக்க முடியாதுள்ளது ஏன்...? என்ற கேள்விக்கு வெளிப்படையான ஒரே பதில்: முஸ்லிம்கள்
மத்தியில் உள்ள ஒற்றுமையின்மையே.
ஈரானின் இஸ்லாமிய குடியரசை
தனிமைப்படுத்தவும், அதனை அண்டை முஸ்லிம் நாடுகளிடமிருந்து பிரிக்கவும்
மேற்குலகம் ஒரு கொடூரமான "கட்டுப்படுத்தும்" மூலோபாயத்தை பயன்படுத்தியது. ஆப்கானிஸ்தானிலும் இதேபோன்ற பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும்
மூலோபாயத்தையும் மேற்கொண்டது. இவர்கள் மத்தியில் இஸ்லாமிய ஒற்றுமை
ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சகிப்புத்தன்மையற்ற, ஊழல் மிகுந்த குழுக்களுக்கு
நிதியளித்தல் மற்றும் நவீன ஆயுதங்கள் வழங்கல் போன்ற உத்தியைக் கையாண்டு, குழுக்கள் மத்தியில் பகையை வளர்த்து, அவர்களுக்குள்ளேயே சண்டையை
மூட்டியது..
இன்று, "மேற்கு கொராஸான் " (ஈரான் இஸ்லாமிய குடியரசு) மற்றும்
"கிழக்கு கொராஸான்" (ஆப்கானிய சுதந்திர போராளிகள்) ஒன்றுபடாதவாறு
பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையை நான் ஜியோனிச சாம்ராஜ்ஜியத்தின்
வெற்றிகரமான வஹாபிஸ பயன்பாடு மற்றும் பிற முரண்பாடான அணுகுமுறைகளால் முஸ்லிம்களை
ஏமாற்றுவதற்காகவும், ஷியா எதிர்ப்பு மற்றும் ஈரான் எதிர்ப்பு (Shia-Phobia and Irano-Phobia) பரப்பவும் காரணமாக இருந்தது என்று
கருதுகிறேன்.
உலக முஸ்லிம்கள் தாம் தொடர்ச்சியாக
ஏமாற்றப்படுவதை உணர்ந்து, இறை நம்பிக்கைக் கொண்ட அனைவரும், தஜ்ஜாலையும் உலகின் சர்வாதிகாரத்தை ஜெருசலத்தில் ஸ்தாபிக்கும் தஜ்ஜாலின்
திட்டத்தையும் உணர்ந்து எழுச்சிபெறும்போது, கிழக்கு மற்றும் மேற்கு கொராஸான்
ஐக்கியப்படும்; சத்திய இஸ்லாத்தின் போராளிகளால் தூய இஸ்லாத்தின் வெற்றிக்கொடி, பைத்துல் முகத்தஸில் ஏற்றப்படும், இன் ஷா அல்லாஹ்.
பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!” (17/81)
(இந்தக்கட்டுரை கிரஸண்ட் இன்டர்நஷனல், ஜமாத்துல் ஆகிர் 02, 1438 சஞ்சிகையில் வெளியான கெவின் பறே என்பவரின் கட்டுரையைத் தழுவிய தமிழாக்கமாகும்.)
தமிழில் : தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment