Monday, November 4, 2024

அமெரிக்க சதித்திட்டங்களை முறியடித்த ஈரானிய மாணவர்கள்

 US Embassy takeover Great Satan's defeat 

அமெரிக்க தூதரகம் கையகப்படுத்தல் பெரிய சாத்தான் நாட்டை தோற்கடித்த  ஈரான்

அமெரிக்க தூதரகம், உளவு குகை, கைப்பற்றப்பட்டது, இது சமகால ஈரானில் ஒரு முக்கியமான சம்பவமாகும், இது ஈரானிய முஸ்லிம் தேசத்தின் முன் பெரிய சாத்தானின் திமிர்பிடித்த ஆதிக்க பிம்பத்தை தகர்த்தெறிகிறது.

இதன் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான பல தசாப்த காலமாக அமெரிக்கா செய்துவந்த விரோதங்கள் பல சதித்திட்டங்கள் பகிரங்கமாகின, இவை அனைத்தும் தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைய செய்வதிலும் மற்றும் அமெரிக்க ஆட்சிக்கு எதிராக ஒரு நிலையான அவநம்பிக்கையை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகித்தன.

1953 ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதம மந்திரி மொசத்திக்கினது ஆட்சிக் கவிழ்ப்பு, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் சதித்திட்டம் தீட்டப்பட்டது, 1979 இல் அமெரிக்க ஆதரவு பெற்ற பஹ்லவி முடியாட்சி தூக்கியெறியப்பட்டது, 1979 இல் இமாம் கொமெய்னி வழியில் முஸ்லிம் மாணவர்களால் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றியது மற்றும் அமெரிக்காவின் விரோத பிற சதித்திட்டங்கள் ஆகியவை ஈரான் மற்றும் அமெரிக்கர்களின் சமகால வரலாற்றில் முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி அமெரிக்க தோல்விகளின் தொடக்கப் புள்ளி

ஜனவரி 1978 மற்றும் பிப்ரவரி 11, 1979 க்கு இடையில், ஈரானின் புரட்சிகர முஸ்லிம் மக்கள், இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் ஆயத்துல்லாஹ் கொமேனியின் (ரஹ்) அவர்களின் உறுதியான தலைமையின் கீழ், பல குற்றங்களைச் செய்த மற்றும் ஈரானிய தேசத்திற்கு பல துன்பங்களைக் கொண்டு வந்த ஷாவின் இஸ்லாம் விரோத மற்றும் அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு எதிராக திரண்டெழுந்தனர்.

1979 ஆரம்பத்தில், நாடு முழுவதும் பெரும் வீதி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஈரானிய பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைந்தபோது, ஈரானின் சர்வாதிகார மன்னன் ஷா பஹ்லவி மற்றும் அவது குடும்பத்தினர் ஜனவரி 16 அன்று ஈரானை விட்டு வெளியேறினர்.

பஹ்லவி முடியாட்சி தூக்கியெறியப்பட்டு இஸ்லாமிய புரட்சி 1979 பிப்ரவரி 11 அன்று வெற்றிபெற்ற பின்னர் ஈரான் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. ஈரானின் வளங்களை நீண்டகாலமாக சுரண்டிவந்த திமிர்பிடித்த வல்லாதிக்க சக்திகளுக்கு இவற்றை அணுகுவது தடைப்பட்டதன் காரணமாக தீங்கு விளைவிப்பதாக இருந்தது.

ஈரானின் எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் காரணமாக இந்த நாட்டின் மூலோபாய மற்றும் புவிசார் அரசியல் நிலைப்பாட்டின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்த திமிர்பிடித்த சக்திகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஈரான் இஸ்லாமிய குடியரசு "கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம்" என்ற குறிக்கோளின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் அவசியமில்லை என்று தடுத்ததன் காரணமாக, வல்லாதிக்க அமெரிக்காவின் முதல் எதிரியாக ஈரான் மாறியது.

1979 தெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

நவம்பர் 3 அன்று, இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் ஆயத்துல்லாஹ் கொமேனி (ரஹ்) ஒரு தீர்க்கமான உரையை நிகழ்த்தினார். அவ்வுரையில் ஈரானிய மக்கள், மாணவர்கள் மற்றும் உலமாக்கள் புதிதாக நிறுவப்பட்ட ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அமெரிக்க மற்றும் சியோனிச ஆட்சியின் சதிகளை முறியடிக்குமாறும், அக்டோபர் கடைசியில் நியூயோர்க் சென்றிருந்த தப்பியோடிய முன்னாள் சர்வாதிகாரியை ஒப்படைக்க அமெரிக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறும் அழைப்பு விடுத்தார்.

ஷா 1978-1979 இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டங்களை வன்முறைகொண்டு அடக்கியதால், தேசிய செல்வத்தை கொள்ளையடித்து, பல ஈரானிய முஸ்லிம்களை சித்திரவதை செய்து தியாகியாக்கியதால், நாட்டில் விசாரணை மற்றும் நீதியை எதிர்கொள்ள அவர் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இமாம் கொமேனி (ரஹ்) வலியுறுத்தினார்.

ஈரானின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ச்சியாக தலையிட்டது, தப்பியோடிய ஷாவை ஒப்படைக்க மறுத்தது, அத்துடன் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski உடன் 1978 நவம்பர் 1இல் சில இடைக்கால அரசாங்க அதிகாரிகள் நடத்திய சந்திப்பு ஈரானியர்களின் ஆத்திரத்தை தூண்டிவிட்டு அவர்களை சில பதிலடி நடவடிக்கைகளை எடுக்க வைத்தது.

அனைத்து சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தொடர்ந்து, ஈரானிய முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முடிவு செய்தது.

நவம்பர் 4, 1979 அன்று, ஷாவின் ராணுவத்தினரால் 56 ஈரானிய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினத்திலும், பஹ்லவியின் அடக்குமுறை ஆட்சியால் இமாம் கொமேனி துருக்கிக்கு நாடுகடத்தப்பட்ட நாளிலும் (4 நவம்பர் 1964), ஈரானுக்கு எதிரான அமெரிக்க சதிகளையும் தலையீடுகளையும் கண்டிக்க மக்கள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கூடினர்.

சாதாரண மக்களில், இமாம் கொமேனி அவர்களை பின்பற்றும் முஸ்லிம் மாணவர்கள் என்று அழைக்கப்படும் கிட்டத்தட்ட 400 ஈரானிய முஸ்லிம் மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர்.

தூதரகக் காவலர்கள் மாணவர்களை மத்திய கட்டிடத்திற்குள் நுழைவதைத் தடுத்த போதிலும், அவர்கள் அமெரிக்கர்களின் அனைத்து ரகசிய ஆவணங்களும் வைக்கப்பட்டிருந்த மத்திய கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டதன் விளைவாக 66 அமெரிக்க தூதரக செயல்பாட்டாளர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அந்த 66 அமெரிக்கர்களில், எட்டு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், உளவாளிகள் அல்ல என்று நிரூபிக்கப்பட்டதால், அவர்களை விடுவிக்குமாறு அயதுல்லா கொமேனியால் நவம்பர் 19, 1979 அன்று உத்தரவிட்டார்.

மீதமுள்ளவர்கள் ஈரானிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்ட அல்ஜீரிய ஒப்பந்தத்தின் மூலம் ஜனவரி 19, 1981 அன்று (444 நாட்களுக்கு பின்) விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க உளவு குகையிலிருந்து ஆவணங்கள்

மாணவர்கள் தூதரகத்தை கைப்பற்றியபின், ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இராஜதந்திர விவகாரங்களுக்கான மையம் அல்ல என்பதை நிரூபிக்கும் பல ஆவணங்களைக் கண்டுபிடித்தனர், புதிதாக நிறுவப்பட்டுள்ள ஈரானிய இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான, ராஜதந்திர செயற்பாட்டுக்கு முரணாக, ஒற்று வேலைக்கு பயன்படுத்தப்பட்ட விவகாரம் நிரூபணமாகியது.

அமெரிக்க தூதரக ஊழியர்கள் காகித துண்டாக்கும் கருவிகளைப் (Shredder) பயன்படுத்தி ஈரானுக்கு எதிரான அமெரிக்க உளவு ஆவணங்களை அழிக்க முயன்றனர், இதில் தந்திகள், கடிதப் போக்குவரத்துகள், அமெரிக்க வெளிவிவகாரத்துறை மற்றும் CIA ஆகியவற்றில் இருந்து வரும் அறிக்கைகளும் அடங்கும்.


இருப்பினும், ஈரானிய மாணவர்களின் சரியான நேரத்தில் வருகை உளவு ஆவணங்களை மீண்டும் கட்டமைக்க முடிந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவை அமெரிக்க உளவு குகையிலிருந்து ஆவணங்கள் என்ற 77 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

இமாம் கொமேனி அமெரிக்காவை "பெரிய சாத்தான்" என்று அழைத்தல்

நவம்பர் 5 அன்று உரையாற்றிய இமாம் கொமேனி, ஈரானிய மாணவர்களுக்கு முழு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டார், மேலும் அவர்களின் துணிச்சலான நடவடிக்கையை "இரண்டாவது புரட்சி" என்று விவரித்தார், இது முதல் புரட்சியை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் அமெரிக்காவை "பெரிய சாத்தான்" என்று அளித்ததோடு முற்றுகையிடப்பட்ட தூதரகத்தை அமெரிக்க உளவு குகை என்று குறிப்பிட்டார்.

தெஹ்ரானில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகம், இப்போது ஒரு அருங்காட்சியகம்

பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டிருப்பதால், இன்று, இந்த இடம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது, அதில் ரகசிய தொடர்புகள், உளவு உபகரணங்கள், அமெரிக்க மேம்பட்ட தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் ரகசிய அறைகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய ஈரான் தேசம் பிரமாண்ட பேரணிகளை நடத்தியது

ஒவ்வொரு ஆண்டும், ஈரானில் மாணவர் தினம் மற்றும் உலகளாவிய ஆணவத்திற்கு எதிரான தேசிய போராட்ட தினம் என்று அறியப்படும் நவம்பர் 4 அன்று, அனைத்து ஈரானிய மக்களும், நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அமெரிக்க கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும், அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டோரை கௌரவிக்கவும் தெருக்களில் பாரிய பேரணிகளை நடத்துகின்றனர். ஈரானில் இஸ்லாமிய அரசை தூக்கியெறிய அமெரிக்கா செய்த சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த பேரணிகளின் போது "அமெரிக்கா ஒழிக", "இஸ்ரேல் ஒழிக" என்ற முழக்கங்களை எழுப்பும் ஈரானிய மக்கள், உலகளாவிய ஆணவத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், ஆணவ சக்திகளின் மிரட்டலுக்கு முஸ்லிம்களும் சுதந்திரம் தேடும் நாடுகளும் அடிபணிய வேண்டாம் என்று அழைப்பு விடுக்கின்றனர்.

https://en.mehrnews.com/news/223927/US-Embassy-takeover-Great-Satan-s-defeat-of-Iranian-nation

No comments:

Post a Comment