Thursday, April 6, 2023

இந்த புனித மாதத்தின் அனைத்து அருளையும் நாம் பெற்றுக் கொள்வோம்

May we receive all the blessings of this holy month - Imam Khamane'i

புனித ரமலான் மாதத்தின் இரண்டாம் பாதியில் பத்ர் யுத்தம், இமாம் அலி (அலை) ஷஹீதாக்கப்பட்ட சரித்திர சம்பவங்களையும் மற்றும் லைலத்துல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவையும் கொண்டுள்ளது என்பதை மறவாதிருப்போம். அதிகமதிகம் தானதருமங்கள் செய்வோம், இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருவோம்.


ரமழான் மாதத்தை ஒரு வசனத்தில் விவரிப்பதாயின் அதனை வாய்ப்புகளின் மாதம் என்று குறிப்பிடலாம்இந்த மாதத்தில்உங்களுக்கும் எனக்கும் முன்னால் பல வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை சரியான வழியில் பயன்படுத்துவோமாயின்ஒரு பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த  வளமொன்று எமக்கு கிட்டும். இது தொடர்பாக இன்னும் கொஞ்சம்  விளக்க விரும்புகிறேன்.

இந்த மாதம் முழுவதும் நாம் இறைவனின் அருள் மழையில் திளைக்க  அழைக்கப் பட்டிருக்கிறோம்.

இந்த உன்னதமான மகிழ்ச்சி கொண்டாத்தில் அனைத்து மக்களுக்கும் கலந்துகொண்டுபயனடைய வேண்டும் என்று கட்டாயமில்லைஅவ்வாறு கட்டாயப்படுத்தப்படவுமில்லை. இதில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமாஇல்லையாஎன்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு.

இறைவனின் இந்த அழைப்பிற்கு செவிசாய்க்காத சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர்அவர்களது கவனம் அனைத்தும் இவ்வுலகுக்கான பொருள் தேடுவதிலேயே இருக்கிறதுரமழான் வருவதும் போவதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. மிகவும் முக்கியமான அழைப்பொன்றை ஏற்க அவர்களால் முடியவில்லைஅதில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லைஅழைப்பிதழைக் கூட அவர்கள் பார்ப்பதில்லை. இந்த அறியா மக்கள் இறை அருளை அவர்களாகவே இழக்கின்றனர்.

ரமழான் மாதத்தில் பசிதாகத்தினால் ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டிருப்பதே இந்த புனித கொண்டாட்டத்தின் மிகப் பெரிய சாதனையாகும்நோன்பிருப்பதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனால்  ஒருவனின் உள்ளத்தில் ஏற்படும் ஆன்மிகம் மற்றும் அறிவொளி இந்த மாதத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று கூறலாம்பல மக்கள் நோன்பிருப்பதன் மூலம் இந்த கொண்டாட்டத்தில் இணைந்து பயனடைகின்றனர்புனித ரமழான் மாதத்தில்கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு நோன்பிருப்பதுபோல் இந்த மக்கள் குர்ஆனிய போதனைகளையும்  சரியான முறையில் பின்பற்றுகிறார்கள்அவர்கள் புனித குர்ஆனைப் ஓதும்போது ஆழமான சிந்தனையில் ஈடுபடுகின்றார்கள்பகலில் நோன்பு நோற்ற நிலையிலும்இரவில்குறிப்பாகநடு இரவில்புனித குர்ஆனை ஓதுகையில்அதனுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். புனித குர்ஆனுடன் இவ்வாறு தொடர்பை அதிகரிக்கையில்இறைவனிடமிருந்து நேரடியாக கட்டளைகளை பெறுவது போன்ற உணர்வை பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஞானமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இத்தகைய குர்ஆன் வாசிப்புகளில் இருந்து பெறும் அனுபவத்தை சாதாரண சூழ்நிலையில் பெற முடியாதுதவிரஅவர்கள் அல்லாஹ்வுடன் பேசும் உணர்வைப் பெறுகையில்,  அவனது கட்டளைகளை நேரடியாக பெறுவது போன்று உணர்கையில் அவனது உள்ளத்தை அல்லாஹ் விரிவடையச் செய்கின்றான். மேலும் அவர்கள் ரமழான் மாதத்தின் விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றனர். அபு-ஹம்ஸா அல்-துமலி துஆவையும் மேலும் அதுபோன்ற துஆக்களையும் ரமழான் மாதத்தின் இரவிலும் பகலிலும் அதிகாலையிலும் ஓதும்போதுஇறைவனிடம் நேரடியாக வேண்டுவது போன்ற உணர்வைப் பெறுவீர்கள். இறைவனிடம் பிரார்த்திப்பது என்பது  உண்மையில் இறைவனை நெருங்கி வருதல் ஆகும். இவற்றின் மூலமும் இவர்கள் பயனடைகின்றனர். எனவேஇந்த புனித மாதத்தின் அனைத்து அருளையும் அவர்கள் பெறுகின்றனர்.

பாவங்களில் இருந்து தவிர்ந்துகொள்வது எல்லாவற்றையும் விட முக்கியமானது. அதாவதுஇந்த பிரார்த்தனைகள்துஆக்களை விட அது முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதத்தில் இந்த மக்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.

அமீருல் முஃமினீன் அலீ இப்னு அபூதாலிப் (அலை) அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் "அமலில் சிறந்தது எது?" என்று வினவுகிறார்கள்அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "பாவங்களில் இருந்து தவிர்ந்துகொள்ளுதல்" என்று கூறியதாக ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாவங்களைத் தவிர்ப்பது இஸ்லாமிய கடமைகளை விட அதிக முக்கியத்துவமிக்கதாகும். இது ஒருவரின் இதயத்தையும் ஆன்மாவையும் கறைபடுத்துவதை விட்டும் தடுக்கிறது. இந்த மக்கள் பாவங்களையும் தவிர்ப்பார்கள். எனவேபுனித ரமழான் மாதத்தில் நோன்பிருத்தல் என்பது என்பதன் அர்த்தம் உணவை தவிர்த்தல்பரிசுத்த குர்ஆனைப் ஓதுதல்துஆ மற்றும் திக்ர் ஆகியவற்றில் ஈடுபடுவதோடுபாவங்களை தவிர்த்தல் என்பதுவும் அதில் அடங்கும். இவையனைத்தும் ஒன்று சேரும் போதே ஒருவன் இஸ்லாம் விரும்பும் ரமழான் இலக்கை நெருங்குகின்றான்.

இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்போதுநம் இருதயம் பகை உணர்வை நீக்கிதியாகம் செய்வதற்கான பக்குவத்தைப் பெற்றிருக்கும்.  ஆத்மா புத்துயிர் பெற்று ஏழைகளுக்கும் வசதி குறைந்தோருக்கும் உதவி செய்வதற்கு மனதை இலகுபடுத்தும். மற்றவர்களின் நன்மைக்காக எமது செல்வங்களில் சிலவற்றை தியாகம் செய்வதற்கு மனமிளகும். ரமழான் மாதத்தில் குற்றங்கள் குறைந்துநல்ல செயல்கள் அதிகரிப்பதற்கான காரணமும் அதுதான். இந்த மாதத்தில்சமுதாயத்தில் இருக்கும் மக்கள்மற்ற காலங்களை விடவும்ஒருவரையொருவர் மிகவும் கருணை கண் கொண்டு பார்க்கிறார்கள். இறைவன் வழங்கியிருக்கும் இந்த ரமழான் அருளுக்கு நன்றி.

ரமழான் மாதத்தைக்கொண்டு பலர் பயனடைகிறார்கள்ஆனால் பலர் ரமழானின் ஓர் அம்சத்திலிருந்து நன்மை பெற்றுக்கொள்ளும் அதேவேளை மற்றுமோர் அம்சத்தில் பாவத்தையும் தேடிக்கொள்கின்றனர். ஒரு முஸ்லிம் இந்த உன்னதமான மாதத்தில் இறைவனின் அருளை பெற முயற்சிக்க வேண்டும். ஒழுக்கக்கேடான செயல்களில் இருந்து மீளவேண்டும். சிறுபாவமோ அல்லது பெரும்பாவமோ அவற்றுக்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்புக் கோரவேண்டும். நாம் எம்மையும் எமது மனங்களை அசுத்தங்களை விட்டும் தீய எண்ணங்களை விட்டும் தூய்மைப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானது. மனம்திருந்திபாவமன்னிப்பு கேட்பதன் மூலம் இதனை சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.

துஆக்களில் சிறந்தது மனம்திருந்திய நிலையில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரலாகும் என்று பல ஹதிஸ்கள் பதியப்பட்டுள்ளன. முன்பின் பாவங்கள் அனைத்தை விட்டும் தூய்மைப்படுத்தப்பட்ட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாவமன்னிப்பு கோருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். நம்மைப் போன்ற மனிதர்கள் பாவம் செய்பவர்களாகவே  இருக்கின்றோம். மனிதரில் உள்ள மிருக உணர்வுகள் எம்மை பாவம் செய்யத் தூண்டுகின்றன. அவை வெளிப்படையான பாவங்கள்.

அநேகர் பாவமன்னிப்பு கோருவதுஅவர்கள் பாவங்கள் செய்துவிட்டார்கள் என்பதால் அல்லஒர் இஸ்லாமிய கடமையை செய்யத் தவறிவிட்டோம் என்பதற்காகவே பலர் பாவமன்னிப்பு கோருகின்றனர். மேலும் இஸ்லாமிய கடமைகளை தவறாது நிறைவேற்றும் பலரும் எம்மத்தியில் உள்ளனர்அவர்களும் பாவமன்னிப்பை வேண்டுகின்றனர். மனிதரில் இயல்பாக உள்ள அலட்சியப் போக்கினால் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால் அவ்வாறு செய்கின்றனர். பெரும் ஞானிகள் கூட பாவமன்னிப்பை கோருகின்றனர்ஏனெனில் சர்வ வல்லமையுள்ள இறைவனின் மகத்துவத்திற்கு முன்பாகஅவர்களது ஞானம் அற்பமானதுஇறைவனின் மகத்துவத்தை பூரணமாக அறிந்துகொள்ள முடியாது என்பதாலாகும்.

சில சமயங்களில் நாமே எமக்கு தவறிழைத்துக்கொள்கிறோம். நாம் பாவங்கள் செய்வதில் இருந்து நீங்கிக் கொள்ள  வேண்டும். பாவமன்னிப்பு கோருவதில் உள்ள பெரிய நன்மை என்னவென்றால் எமது கடமைகளில் நாம் அசிரத்தையாக இருப்பதிலிருந்து அது எம்மை காக்கிறது.

நாம் பாவமன்னிப்பு கோரும்போதுநாம் செய்த பாவங்கள்நாம் செய்த தவறுகள்எமது தவறான காம இச்சைகள்நாம் மீறிய ஒழுக்க விதிகள்நாம் எமக்கும் மற்றவர்களுக்கும் இழைத்த அநியாயங்கள் அனைத்தும் எம் நினைவுக்கு வரும். இது எம்மை பெருமையடையாதிருக்கச் செய்யும்எமது செயல்களிலும் நாம் கவனமாக இருக்க முயற்சிப்போம். இது எமக்கு கிடைக்கும் முதலாவது நன்மை.

இந்த பச்சாதாபம்,  உண்மையிலேயே நாம் தவறுகளையும் பாவங்களையும் விட்டும் விலகிஇறைவனிடம் மீள்வதற்கு தயாராகிவிட்டோம் என்ற அடிப்படையில் இருக்குமாயின்நிச்சயமாக அல்லாஹ் அந்த பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான். இது எமக்கு கிடைக்கும் இரண்டாவது நன்மை.

எவராவது ‘என்னை மன்னித்து விடு’, ‘இறைவா என்னை மன்னித்து விடு’ என்று எவ்வளவுதான் கோரினாலும்உளப்பூர்வமாக அதனை கேட்காவிட்டால் அது பெறுமதியற்றது. இதற்குப் பெயர் பாவமன்னிப்பு அல்ல. பாவமன்னிப்பு என்பது இறைவனிடம் இறைஞ்சி கேட்கும் ஒரு துஆ ஆகும். மகத்துமிக்க இறைவனின் கருணையை நாடிஉளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும். "நான் இந்த பாவத்தைச் செய்துவிட்டேன்இறைவாஎன்மீது கருணை காட்டுஎனது இந்த பாவத்தை மன்னித்துவிடு" என்று கேட்க வேண்டும். இவ்வாறு மனமுருகி கேட்கப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் நிராகரிப்பதில்லை. அல்லாஹ் எமக்காக கருணை எனும் வாசலை திறந்தே வைத்துள்ளான்.

செய்த பாவத்துக்காக மன்னிப்பை வழங்கக்கூடியவன் இறைவன் மட்டுமே. வேறு ஒருவருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது. செய்த பாவத்தைக் கூறிஇறைவனைத்தவிர வேறெவரிடமும் பாவமன்னிப்புக்கோரல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

 "....... தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில்உம்மிடம் அவர்கள் வந்திருந்தால்இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால்அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால்திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள்." [குர்ஆன் 4: 64] என்ற வசனம் அதனை தெளிவுபடுத்துகிறது.

பாவம் செய்த சிலர் இறைவனிடம் மன்னிப்புக்கோரும் அதேவேளைரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்துதமக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டினால்ரசூலுல்லாஹ்வும் பரிந்துரை செய்தால் அல்லாஹ் அவர்களை மன்னிப்பான் என்பதை இந்த குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. அதாவதுநபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்அவரால் பாவங்களை மன்னிக்க முடியாது. அல்லாஹ்வே மிக்க மன்னிப்பவனாக இருக்கின்றான். இதுவே உண்மையான பாவமன்னிப்பு கோரலாகும்அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து உள்ளது. இந்த புனித மாதத்தில் காலையிலும் மற்றும் இரவிலும் பாவமன்னிப்பு கோருவதற்கு மறந்துவிடாதீர்கள். உங்களது தொழுகைகளிலும் துஆக்களின் அர்த்தங்களிலும் கூடிய கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்டவசமாகநமது சமுதாயம் ஒரு ஆன்மீக சமுதாயம்.  துஆதிக்ர் மற்றும் பிரார்த்தனைகள் விரும்பிச் செய்வது எங்கள் மக்களிடையே பொதுவான ஒன்று. நமது இளைஞர்களின் தூய இதயங்கள்இறைவன் ஞாபகத்தை சுமந்திருப்பது பாராட்டப்படத்தக்க விடயம். இவை அனைத்துமே வாய்ப்புகளாகும்.

வந்துள்ள ரமழான் மாதம் இறையருளுக்கான வாய்ப்புகள் நிறைந்ததாகும். இந்த அருமையான மாதம் வழங்கியுள்ள மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்திநாம் அனைவரும் நன்மையடைய முயற்சிக்க வேண்டும். உங்கள் இருதயங்களை அல்லாஹ்வுடன் நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். பாவமன்னிப்பு கோருவதன் மூலம் உங்கள் இருதயங்களையும் ஆத்துமாக்களையும் சுத்திகரியுங்கள். நீங்கள் விரும்பியதைப் பற்றி அல்லாஹ்விடம் பேசுங்கள். அல்லாஹ்வுடன் நாம் கொண்டுள்ள ஆன்மீகத் தொடர்புபெரிய சாதனைகளை கொண்டுவந்துள்ளது. ரமழான் மாதம் இந்த ஆன்மீக உறவை உறுதியாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்.

அல்லாஹ்வின் அருளால் நாம் இந்த ரமழான் மாதத்தில் சுய கற்றலில் கவனம் செலுத்துவோம். இந்த சுய கல்வி ஆண்டு முழுவதும் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

http://english.khamenei.ir/news/6677/Prophet-Muhammad-s-sermon-on-inviting-people-to-enjoy-Ramadan

No comments:

Post a Comment