Whither the Islamic Republic of Iran?
- தாஹா முஸம்மில்
உலகில் எத்தனையோ ஆட்சி முறைகள் உள்ளன.
சோசலிசம், கொம்யூனிசம், ஜனநாயகம், மன்னராட்சி என்று இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் எதோ ஒரு அடைப்படை உள்ளது. இவற்றில் குறிப்பிட்ட ஆட்சி முறைதான் சிறந்தது
என்று கூறுவதற்கு நடைமுறையில் எந்த உதாரணமும் கிடையாது. தாம் பின்பற்றும் முறைதான்
சிறந்தது என்று நியாயப்படுத்துவதற்கு சில நாடுகள் முயற்சி செய்தாலும் கூட.
யதார்த்தம் என்னவென்றால், பிராந்திய மற்றும் உலக அளவில் புதிய கலாச்சார அடித்தளங்கள் மற்றும்
கொள்கைகளை திட்டமிடுவதன் மூலம் மேற்கு நாடுகளால் மிகவும் சரியானது என்று கருதப்படும்
ஆளுகை மாதிரிகளை ஈரான் இஸ்லாமிய குடியரசு சவாலுக்கு உட்படுத்தி, இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்ட ஆட்சி முறையை அமுல்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே ஈரானின் எதிரிகள் இஸ்லாமிய ஆட்சிமுறையையும் அதன் அடிப்படையிலான அரசையும்
தாக்குவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
உலக வல்லாதிக்க சக்திகள் அநேகமாக உலகின்
எல்லா நாடுகளிலும் தமக்கென, தமது நலம்காக்கவென சில, பல குழுக்களை அமைத்து, போஷித்து வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த ரகசியம். இவை ஸ்லீப்பிங்
செல்ஸ்களாக, மேலிடத்து உத்தரவு வரும்வரை காத்திருக்கும்.
இதுபோன்ற குழுக்கள் இஸ்லாமிய ஈரானிலும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
மஹ்சா
அமினியின் மரணத்திற்குப் பிறகு மேற்குலகால் ஈரானுக்கு எதிராக முடுக்கிவிப்பட்டுள்ள
பிரசாரங்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசில் பெண்களின் உரிமைகள்
மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூகப் பாத்திரங்களுடன் பிணைத்து வேண்டுமென்றே உலகெங்கும் பரப்பப்பட்டு வருகின்றன.
பெண்
உரிமை மற்றும் ஒரு பெண்ணின் மதிப்பு என்பது அவர்களின் உடலை அவர்களே நிர்வகிப்பதை அடிப்படையாகக்
கொண்டது என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய சன்மார்க்க கண்ணோட்டத்தில், பெண்கள் என்போர் சமூகத்தைக்
கட்டியெழுப்பும் மற்றும் புதிய தலைமுறையினரை சிறந்த முறையில் உருவாக்கும்
கல்வியாளர்களாக மதித்து கண்ணியப்படுத்தப்படுகிறார்கள்.
மஹ்சா அமினியின் மரணம் ஈரான் இஸ்லாமிய
குடியரசின் அதிகாரிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது, ஏனெனில் அவர் ஒரு ஈரானிய பிரஜை. மேலும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான
இயக்கங்களின் பிரச்சார சத்தங்களைப் பொருட்படுத்தாமல் இந்த வழக்கு நீதித்துறை அமைப்பில்
தொடரப்படுகிறது.
"வன்முறை" மற்றும் "எதிர்ப்பு" ஆகியவற்றுக்கு
இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. இன்று தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களின் சில தெருக்களில்
ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகள் பொதுச் சொத்துக்களை அழிக்க வழிவகுத்தது மற்றும் பல
போலீஸ் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது. புனித குர்'ஆணை கிழித்தெறிதல், தீயிட்டு கொளுத்துதல் போன்ற சம்பவங்கள் நிச்சயமாக சுயபுத்தியுள்ள எந்த முஸ்லிமும் செய்யத்துணியாத ஒன்றாகும். எதிரிகளின்
சைபர்ஸ்பேஸ் (Cyberspace) தந்திரங்களில்
பரிச்சயம் இல்லாத இளைஞர்கள் சிலர் துரதிர்ஷ்டவசமாக இவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகிவிடுகின்றனர்.
நாட்டு மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒரு பொறுப்புவாய்ந்த
அரசாங்கத்துக்கு உள்ளது. கிளர்ச்சியாளர்கள் மக்களைத் தூண்டிவிட்டு, தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகளை பரப்புவதற்கு சைபர்ஸ்பேஸை
துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் முயற்சியே இணையத்தை தற்காலிகமாக முடக்குவதற்கான காரணமாகும். எதிர்ப்பாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளும்
பாதுகாக்கப்படவேண்டும். மேலும், இஸ்லாமிய அரசுக்கு எதிரான இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஈரான்
இஸ்லாமிய குடியரசின் எதிர்ப்பாளர்கள் நாட்டில் கலவரங்களை ஒழுங்கமைப்பதற்காக சமூக வலைப்பின்னல்களைப்
பயன்படுத்துவதால், குடிமக்கள்
உயிர் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வலைதள ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது
அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது. இணைய சேவைகளை கட்டுப்படுத்துவது ஈரான் இஸ்லாமிய குடியரசின் உள்ளார்ந்த
நோக்கமல்ல என்பது வெளிப்படையானது, மேலும்
பெரிய அளவிலான குழப்பங்கள் முடிவுக்கு வந்து நாட்டில் முழுமையான அமைதியை நிறுவுவதன்
மூலம்,
இந்த கட்டுப்பாடு இயல்பாகவே மறைந்துவிடும்.
போலீஸ் வாகனங்களை எரிப்பது, போலீஸ்காரரின் கழுத்தை அறுப்பது மற்றும் நாட்டின் பல போலீஸ்
நிலையங்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள், எந்தவொரு சாத்தியமான மற்றும் கணிக்க முடியாத தாக்குதலுக்கு எதிராக காவல்துறை
தனது தடுப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றது என்பது
யதார்த்தம். ஆர்ப்பாட்டங்களின்
போது சில தீய சக்திகள் (கூலிப்படைகள்) அதற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபடுவதை நாம்
அறிவோம். ஆர்ப்பாட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் ஆயுதங்களால் காயமடையவில்லை
அல்லது கொல்லப்படவில்லை என்று ஈரானிய அரசு உறுதியாக கூறுகிறது; அவர்கள் கலகத்தில் ஈடுபட்ட சில இயக்கங்கள் இஸ்லாம் விரோத வெளிநாட்டு
சக்திகளால் இயக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
சமீபத்திய கலவரங்களின் போது, மஹ்ஸா அமினியின் இறப்பை புறக்கணித்து விட்டு, இஸ்லாமியக் குடியரசு அமைப்புக்கு எதிராக, மேற்குலகின் அதிகாரபூர்வ (அரசியல்) மற்றும் அதிகாரபூர்வமற்ற
(ஊடக) நிறுவனங்களால் அனைத்து வகையான பொய்ச் செய்திகளையும் தயாரித்து கட்டவிழ்த்துவிடப்பட்டதை
நாங்கள் கண்டோம். உதாரணமாக, மேற்குலகின் அதிகார எந்திரத்தால் ஆதரிக்கப்படும்
புரட்சிக்கு எதிரான ஊடகங்கள், அமினியின் மண்டையில் அடிபட்டது போன்று நிரூபிக்கும் தெளிவற்ற காட்சி படங்களை வெளியிட்டது, இது, குறுகிய காலத்திலேயே மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் (குறிப்பாக
சமீபத்திய தடயவியல். நம்பகமான மருத்துவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்ட அறிக்கை) பொய்யென
நிரூபிக்கப்பட்டது.
கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட தலைவர்களில்
பெரும்பாலோர் குர்திஸ்தானின் கோம்லே கட்சி (Kurdistan Komle party) போன்ற பிரிவினைவாத குழுக்களையும், முஃபாக்கீன் போன்ற பயங்கரவாத குழுக்களையும் சேர்ந்தவர்கள் என்பதை
தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
எட்டு ஆண்டுகால ஈரான்-ஈராக் போரின் போது
ஈரானின் எதிரியின் பக்கம் இருந்த இதே குழுக்களின் கைகளில் ஆயிரக்கணக்கான ஈரானிய பெண்கள்
மற்றும் குழந்தைகளைக் கொன்றதன் மூலம் இரத்தத்தால் கறைபட்டுள்ளன. ஒஸ்லோவில் உள்ள ஈரானிய
தூதரகம் முன் குர்திஸ்தான் கோம்லே கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நோர்வே காவல்துறையினருக்கும்
இடையே ஒரு மோதல் ஏற்பட்டது, இது பலர் கைது
செய்ய வழிவகுத்தது, மேலும் புரட்சிக்கு
எதிரான குழுக்களுக்கும் ஆங்கில மற்றும் பிரெஞ்சு காவல்துறையினருக்கும் இடையே மோதல்
ஏற்பட்டது. இதனால் பலருக்கு காயமும் ஏற்பட்டது.
"பெண், வாழ்க்கை, சுதந்திரம்" என்பன மரியாதைக்குரிய வார்த்தைகள், ஆனால் அவை பல சமயங்களில் துஷ்பிரயோகிக்கப்படுகின்றன. ஈரானில்
இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெறுவதற்கு பெண்களின் பங்களிப்பு மகத்தானது; ஏனெனில், புரட்சிக்கு
முந்தைய ஆட்சி பெண்களை பாலியல் கருவியாகவும் பெண்களின் சுதந்திரம் என்ற போலிக்காரணத்தை
கூறி,
பெண் என்ற பெருமைக்குரிய சொல்லை தமது தேவையை நிறைவேற்றிக்கொள்ள
ஷாவின் அரசு தம்மை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதை உணர்ந்தததும் அவர்கள் புரட்சியில்
பங்கேற்ற முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
ஈரான் மக்கள் "குழப்பம்" மற்றும் "தார்மீக எல்லைகளைத்
தாண்டுதல்" மற்றும் "மனித விழுமியங்களை அவமதித்தல்" ஆகியவற்றை சுதந்திரத்தின்
எடுத்துக்காட்டுகளாகக் கருதவில்லை, அதை அவர்களின் சிவப்புக் கோடாகக் கருதுகின்றனர்.
"பெண்கள் சுதந்திரம்" என்ற சொல்லுக்கு இஸ்லாமியக்
குடியரசு வழங்கும் அர்த்தம், சமூக வாழ்க்கையில்
அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாத்து, சமூகத்தை அவர்களுக்கு பாதுகாப்பான
இடமாக மாற்றுவதாகும். இஸ்லாத்தில் பெண்களின் நிலையும் மதிப்பும் மேற்கத்திய சமூகங்களில்
வழங்கப்படும் அதன் மதிப்பிலிருந்து வேறுபட்டது.
குர்திஸ்தான் மற்றும் ஸஹிதான் போன்ற மாகாணங்களில் "ஈரானை
பிளவுபடுத்தும்" நோக்கத்துடன் மேற்குலகம் மற்றும் சியோனிச ஆட்சியால் ஆதரிக்கப்படும்
ஈரான் எதிர்ப்பு ஊடகங்கள் தொடர்ச்சியான துர்பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டன.
இதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவால் போஷிக்கப்படும் பாகிஸ்தானின் பழங்குடி மற்றும்
பாலைவனப் பகுதிகளில் இயங்கிவரும் "ஜெய்ஷ் அல்-அட்ல்" என்ற பயங்கரவாதக் குழு, ஸஹிதானில் வசிக்கும் சிலருக்கு ஆயுதங்களை விநியோகித்து, காவல் நிலையங்கள் மீது தாக்குதல்களை ஏற்பாடு
செய்தது. "ஜெய்ஷ்
அல்-அட்ல்" குழு, ஸஹிதானில் சமீபத்திய
எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது என்பது ஒரு முக்கியமான
விஷயம்.
அமெரிக்கா, சியோனிச ஆட்சி மற்றும் அவற்றின் நாடுகளான ஐரோப்பிய மற்றும் பிராந்திய நாடுகள் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல் அழுத்தங்களுக்கு எதிராக ஈரான் இஸ்லாமிய குடியரசு பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத அவை மக்களைப் பழிவாங்கும் நோக்கில் இஸ்லாமிய ஈரானில் குழப்பத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் முக்கிய கருவிகளில் ஒன்று ஊடகமாகும்.
மேற்கத்திய மற்றும் எதிரி ஊடகங்களின் உள்ளார்ந்த மற்றும் மோதல் அணுகுமுறை தொடர்பாக பரிச்சயம் கொண்ட, போதிய ஊடக கல்வியறிவு உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகைய தந்திரோபாயங்களின் ஏமாற்றத்திற்கு ஆளாகவில்லை. என்றாலும், குறைந்த அனுபவமுள்ள சிலர் இந்த தூண்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலைக்குரியது.
No comments:
Post a Comment