Sunday, July 31, 2022

அடக்குமுறைக்கு எதிரான உச்சமட்ட போராட்டமே முஹர்ரம் புகட்டும் பாடம்

The Immortal Message of Muharram


- மூலம்: செய்யத் அலி ஷாபாஸ்

உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய சோகத்தின் நினைவுகளுடன் முஹர்ரம் மாதம் மீண்டும் ஒருமுறை வந்துவிட்டது. எதிர்காலத்தில் இது போன்ற இதுபோன்ற தியாக சம்பவத்தை காண முடியாது.

6 மாத சிறுவனின் செங் குருதி, கூர் வாள்களை வெற்றி கொண்ட மாதம் இது. ஒவ்வொரு ஆண்டும், மனித மனசாட்சியை உலுக்கி, மதம் மற்றும் சமூகத்தின் மீதான மனிதகுலத்தின் கடமைகளை நினைவூட்டும் மாதம் இது.

முஹர்ரம் முதல் நாள் கொண்டாட்டத்திற்குரிய நாள் அல்ல, ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரனின் மகத்தான தியாகத்தை மறக்கடிக்கும் விதத்தில், துரதிர்ஷ்டவசமாக சில அரபு/முஸ்லிம் நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் எனும் புனிதமான இடம்பெயர்வு முஹர்ரம் தினத்தன்று நிகழ்ந்த ஒன்றல்ல, மாறாக, ஹிஜ்ரத் இடம்பெற்றது ரபி அல்-அவ்வல் மாத ஆரம்பத்தில். புத்தாண்டு என்று அழைக்கப்படுவதைக் காரணம் காட்டி இத்தினத்ததை கொண்டாடுகின்றனர்.

இத்தகைய கொண்டாட்டங்கள் ஜாஹிலிய்யா காலங்களில் இடம்பெற்ற நடைமுறைகளை ஒத்ததே தவிர வேறில்லை. எனவே இத்தகைய அற்பத்தனமான கொண்டாட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும், அஹ்ல் அல்-பைத்துகளின் போதனை மற்றும் புனித இரத்தத்தால் போஷிக்கப்பட்ட இஸ்லாத்தின் சாரத்திலிருந்து முஸ்லிம்களை தூர விலக்குவதற்கான சதிகளே தவிர வேறில்லை.

ஆண் / பெண் கலப்பு நடனம், மது அருந்துதல் போன்ற கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் ஈடுபட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. தக்ஃபிரி பயங்கரவாதிகள் மற்றும் பிற வழிகெட்ட குழுக்கள் செய்வது போல், முஸ்லிம்கள் சக முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்துவதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது ஜாஹிலிய்யத்தாகும்; நிச்சயமாக காருண்ய தூதர் இதை நமக்குக் கற்றுத்தரவில்லை.

முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் நிலை தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலம் ஆகும். இவற்றைப் பற்றி சிந்திக்க சிறந்த வழி, இமாம் ஹுசைன் (அலை) மற்றும் கர்பலா தியாகிகளுக்கான நினைவுச் சடங்குகள் ஆகும், இது உண்மையில் நபியின் “சுன்னா” (நடைமுறை) மற்றும் “சீரா” ( நடத்தை)..

இவ்வாறு, முஹர்ரம் மாதம் நமது கண்களை ஈரமாக்குகிறது, நம் இதயங்களை துக்கத்தில் ஆழ்த்துகிறது மற்றும் நமது சமூகங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது, கர்பலாவின் அழியாத தியாகி இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை யஸீதின் சட்டவிரோத ஆட்சியை நிராகரிக்கிறது. இஸ்லாம் மற்றும் அனைத்து மனிதாபிமான விழுமியங்களையும் பாதுகாப்பதற்காகத் துணிச்சலுடன் போராடிய தனது நண்பர்கள், அவரது சகோதரர்கள், அவரது உறவினர்கள், அவரது மருமகன்கள் ஆகியோர் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தனர். நடப்பது என்னவென்று அறியாது சிரித்து விளையாடிக்கொண்டிருந்த பச்சை பாலகன்களான அலி அக்பர் மற்றும் 6-மாத குழந்தை அலி அஸ்கர் ஆகியோரையும் யஸீதின் படையில் இருந்த பொல்லாத பாவிகள் குறிவைத்துக் கொன்றனர்.

மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தனக்கு எல்லாம் தெரியும் என்று பாசாங்கு செய்யும் ஒருவனில் கைகளில் விட்டுவிட்டு, மேம்போக்கான வழிபாட்டு முறைகளில் மட்டும் ஈடுபடுவது சன்மார்க்கம் எதிர்பார்க்கும் ஒன்றல்ல. அதேபோல், இறை சட்டத்தை புறக்கணிப்பது மற்றும் தவறான ஒருவனின் விசித்திரமான யோசனைகளுக்கு ஆட்சேபனையின்றி கட்டுப்படுவது என்பது தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இவ்வாறான கண்மூடித்தனமாக பின்பற்றுதல் தான் மக்களின் தலைவிதியை சமூக அநீதி நிலைக்கு நழுவ அனுமதிக்கிறது, மேலும் இதுவே யஸீத் போன்ற சண்டாளர்கள் உருவாவதற்கான இடமாக உள்ளது.

இதுவே முஹர்ரம் மாதத்தின் எழுச்சியூட்டும் செய்தியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹர்ரம் தொடக்கத்தில் இமாம் ஹுசைனின் (அலை) இரத்தம் புதியதாக மாறுகிறது, ஈராக்கில் உள்ள கர்பலாவை நோக்கி விசுவாசிகளின் இதயங்கள் திரும்புகின்றன, தியாகிகளின் ஒன்றுகூடலின் போது கொடிய உமையாக்களின் பாசாங்குத்தனம் அவர்களுக்குக் காட்டப்பட்டது. அங்கே அரபிகளின் உண்மையான ஜாஹிலி நிறங்கள் தெளிவாக வெளிப்பட்டன.

இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தைக் கெடுக்க முயற்சிக்கும் பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியை உலுக்கிய மாதமே முஹர்ரம். இஸ்லாத்தின் சமத்துவச் சட்டங்களுடன் இந்த நவ யஸீதிகளுக்கு நடைமுறையில் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் இந்த தக்பீரி ISIS மற்றும் அதுபோன்ற குழுக்களின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் இது தெளிவாகிறது.

இஸ்லாம் என்பது அதன் உயிரோட்டத்துடன் புனித குர்ஆனின் போதனைகளை முற்றுமுழுதாக கடைபிடிப்பது, மேலும் நபி (ஸல்) அவர்களின்  அஹ்ல் அல்-பைத் மீது அன்பு, பாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும் இஸ்லாம் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான எதிர்ப்பையும், இமாம் ஹுசைன் (அலை) கற்பித்தபடி மனிதாபிமான விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகத்திற்குத் தயாராக இருப்பதையும் குறிக்கிறது.

இதுவே இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியாகும். ஒடுக்குமுறை மற்றும் ஊழல் சக்திகளுக்கு எதிராக மனிதகுலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு தகுதியான முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் தனது இன்னுயிரை அர்ப்பணித்தார்.

முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு, சக மனிதர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடும் வ யஸீதுகள், முஹர்ரம் வருகையை பண்டிகைத் தினமாக கொண்டாடி, மனித குலத்தின் பரம விரோதிகளான சட்ட விரோதமான சியோனிச அமைப்பு மற்றும் தற்போதைய உலகின் பிரச்சினைகள் பலவற்றுக்கு காரணமான அமெரிக்க ஆட்சி போன்றவற்றுடன் வெளிப்படையாக உறவுகொண்டுள்ள இவர்களுக்கு கேடுதான்.

உண்மையான அஹ்லுஸ்ஸுன்னா முஸ்லிம்கள் இமாம் ஹுசைன் (அலை) அவர்களுக்கு உயர் கௌரவம் வழங்கும் போது, நமது ஷியா அல்லாத முஸ்லிம் சகோதரர்களின் பல ஆதாரபூர்வமான பதிவுகளைக் கொண்ட  நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது படி, அவர் சிறப்புகளை கொண்டாடி, அவரைக் கொன்றவர்களை சபிக்கும்போது, போலி முல்லாக்கள், ஷைத்தானிய ஃபத்வாக்களால் முஸ்லிம்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள், மொத்தத்தில் அவர்கள் சுன்னிகளாக நடிப்போரே அன்றி வேறில்லை.

இவ்வாறு இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியும் முஹர்ரம் மாத ஞாபகார்த்த சடங்குகளும் மனிதகுலத்தின் பாரம்பரியம் ஆகும். ஆகவே கர்பலாவின் அழியாத உயர் நோக்கத்தின் முக்கியத்துவத்தை மனிதகுலம் உணராத வரை நீதி ஒருபோதும் உணரப்பட மாட்டாது.

https://kayhan.ir/en/news/105251/the-immortal-message-of-muharram

No comments:

Post a Comment