Importance of Unity in Islam
வாழ்க்கையை மாற்ற ஒற்றுமையின்
சக்தியைப் பயன்படுத்துவோம்
பரஸ்பர அன்பினால் நாம் ஒன்றிணைவதன்
மூலம் நிறைய பெறுபேறுகளை அடைய முடியும். எங்கள் நபி (ஸல்) ஒற்றுமையை எங்கும் எப்போதும் வலியுறுத்தினார். அவர் சென்ற இடமெல்லாம்
அன்பையும் தயவையும் பரப்புவதை உறுதி செய்தார், அவரின் இந்த நற்பண்பு, மில்லியன் கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்தது;
அவர்களை ஏகத்துவ மார்க்கத்தில்
இணைக்க வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
ஒற்றுமையின் சக்தி அளப்பரியது,
ஒன்றிணைவதன் மூலம் நாம் எமது
நிலையை மட்டுமல்லாது எம் சமூக வாழ்க்கையையம் மாற்றியமைக்க முடியும். மனச்சோர்வடைந்து
காணப்படும் சமூகத்திற்கு உட்சாகம் ஊட்டமுடியும், வீழ்ந்துகிடக்கும் சமூகத்தை தூக்கி நிமிர்த்த முடியும்,
மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள்
மற்றும் தனிமையை உணர்கிறவர்களுக்கு நாம் அவர்களுடன் இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்த
முடியும்.
சமுகத்தை மேம்படுத்துவதற்கும்
மற்றவர்களுடனான நமது தொடர்புகளை வளர்ப்பதற்கும் மூல கூரான ஒற்றுமையை நாம் எவ்வாறு அடைய
முடியும் என்பதற்கான சில வழிகளை இங்கே ஆராய்வோம்.
ஒற்றுமை நமக்கு பொதுநலத்தை கற்றுக்கொடுக்கிறது
"தான் நேசிப்பதை அவன் தன் சகோதரனுக்கும்
நேசிக்காத வரை ஒருவர் நம்பிக்கை கொண்டவராக ஆக்கமாட்டார்" [அல்-புகாரி]
இந்த ஹதீஸில் சகோதரத்துவத்தை
பேணுவது தொடர்பாக எவ்வளவு அழகாக சொல்லப்பட்டுள்ளது என்பதை அவதானியுங்கள். முஸ்லிம்கள்
மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவரையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது. இமாம் அன்-நவவி
(ரஹ்) இங்கு, நம்முடைய உத்தம நபி (ஸல்) அவர்கள்
சத்தியத் தூதை எவ்வாறு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது பற்றி நமக்கு
வழிகாட்டுகிறார் என்றும், ஒரு விசுவாசி எப்படி ஒரு இஸ்லாமியரை எப்படி நேசிக்கிறாரோ அவ்வாறான நேசத்துடன் மற்றவரை
நேசிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் அவர் “இந்த காரணத்திற்காக, அவர் ஹிதாயத் எனும் நேர்வழியை
அடைய பிரார்த்தனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, இந்த வகையான அன்பு மிகவும் அலாதியானது. ஒரு நண்பரை நீங்கள்
விரும்புவதன் காரணமாக அவரை வீட்டிற்கு அழைத்து உங்கள் வசதிக்கு ஏற்றவாறு, எவ்வாறு உபசரிப்பீர்களோ அவ்வாறே, அதே மனநிலையுடன், நாம் அவர்களுக்கு நல்லதை விரும்புவதன்
காரணமாக அன்பை வெளிப்படுத்துகிறோம் என்பதற்கு அது ஓர் எடடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.
இதுவே ஒற்றுமையின் சாராம்சம், அன்பும் மரியாதையும் மக்கள் மனங்களை பிணைக்கிறது.
நாம் ஒரு அமைப்பு போன்றவர்கள்
என்பதை அறிதல்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,
"உண்மையாக, விசுவாசிகள் ஒரு கட்டமைப்பைப்
போன்றவர்கள், ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றை வலுப்படுத்துகிறது" என்று சொல்லிவிட்டு தனது
விரல்களை ஒன்றாகக் இணைத்துக் காட்டினார்கள் . [அல்-புகாரி]
இந்த ஹதீஸ் அவசியமான நேரங்களில்
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், நேர்மையாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒருவருக்கொருவர்
உதவும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இறைவன்
அருளிய வாய்ப்பாகவும் அதை பார்ப்பது இதில் அடங்கும்.
இது மக்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும்
செயலாகும். நீங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு நாட்டில், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத, எதோ ஒரு வகையில் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டு
இருக்கும் ஒருவருக்கு உதவி செய்தாலும், அவர் உள்ளத்தளவில் இயல்பாகவே ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வார்;
அவர் உங்களுக்காக, உங்கள் உடல் நலத்துக்காக,
அமைதிக்காக துஆ செய்பவராக இருப்பார்
என்பது நிச்சயம்.
எனவே ஒற்றுமையை அடையும் செயல்பாடு
மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மேலும், ஒரு கட்டமைப்பை உருவாக்க
ஒன்றாக இணைந்திருக்கும் செங்கற்களாக விசுவாசிகளைப் பார்ப்பதன் மூலம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் நிலைமைகளை
அறிந்து கொள்வதன் மூலம் எவ்வளவு நன்மைகள் அடைய முடியும் என்பதை புரிந்துகொள்ளவும்.
உறவுகளை உருவாக்குவதன் மூலம்
ஒன்றிணைத்தல்
ஒற்றுமை முக்கியம், ஆனால் அது ஒவ்வொரு நபரின் முயற்சியையும்
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். புனித
குர்ஆனில் அல்லாஹ் சுபுஹானஹு தஆலா குறிப்பிப்பிடுவதை பாருங்கள்
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின்
கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த
நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை
அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின்
கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ்
இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். 3:103.
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில்
வாழ்வதற்கு நமது நபி (ஸல்) அவர்களே உண்மையான உதாரணமாகும். தலைமைப் பதவியில் இருந்த
போதிலும் அவர் மீது கற்கள் வீசப்பட்டன,, அழுக்குகளும் வீசப்பட்டன மேலும் அவரது உயிருக்கு கூட பல முறை
ஆபத்து ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பெரும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். ஆயினும், நம் நபி (ஸல்) தனது எதிரிகளுக்கு
தயவையும் மரியாதையையும் தவிர வேறு எதையும் காட்டவில்லை. அவர் உலகை மாற்றவும், இன்றும் நம்முடன் வாழும் மரபுகளை உருவாக்கவும் தயவைப் பயன்படுத்தினார்.
புனித குர்ஆன் வசனமும் றஸூலுல்லாஹ்வின் கருணை கொண்ட பார்வையுமே மோசமான எதிரிகளில் ஒருவராக
இருந்த உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது; றஸூலுல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறினார்.
கருணையின் சக்தி அத்தகையது, மேலும் அதன் மூலம் அன்பை வெகுதூரம் பரப்பலாம் என்பதை ரசூலுல்லாஹ் தனது வாழ்க்கையின்
மூலம் காட்டித் தந்தார்..
தான தர்மத்தின் மூலம் ஒற்றுமை
ஒரு முஸ்லிம் தனது இதயத்தில்
வைத்திருக்கும் அன்பு மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும், அது அவரை கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வைக்கிறது. அவர் மற்றொரு நபரின்
வலியை உணர்கிறார், மேலும் அவர் அன்பான விதத்தில்
எதிர்வினையாற்றுகிறார். இது இயற்கையாகவே மற்றவர்களிடம் பாசத்தையும், பரிவையும்,
கருணையையும் உருவாக்குகிறது.
மோதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் கஷ்டத்தை
அனுபவித்துக்கொண்டும் தடைகளை எதிர் கொண்டிருக்கும் ஒரு கடினமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும்
தேவையுடையவர்களுக்கு உதவுமாறு அல்லாஹ் எங்களுக்கு கட்டளையிடுகின்றான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம்
ஒன்றிணைந்து, வீழ்ந்துகிடப்போரை உயர்த்தி, உலகிற்கு நல்ல செய்தியை வழங்க முடியும். நன்மையில்
ஒன்றிணைவதற்கு அன்பைப் பரப்புவது மிக முக்கியமாகும்.
நாம் ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியும்.
ஒற்றுமையின் மூலம் நிறைய சாதிக்க முடியும். ஒற்றுமை மக்களை ஒன்றிணைக்கிறது,
அவர்களுக்கு இடையே அன்பு,
நல்லிணக்கம் மற்றும் தாராள மனப்பான்மையை
உருவாக்குகிறது.
விசுவாசிகளாகிய நாம் ஒற்றுமையைப்
பயன்படுத்தி மற்றவர்களிடம் கருணையைப் பரப்புவோம், அத்துடன் நமது ஆன்மீக
வளர்ச்சியை அல்லாஹ்வுடன் நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பாகவும் இதனை பயன்படுத்தலாம்.
எனவே, ஒற்றுமையின் நற்பண்புகளைப் பற்றி சிந்திப்போம், நம் குடும்பம், நண்பர்கள், மற்றும் நாம் வாழும் அபாயகரமான உலகத்திற்கு நேர்மையான தயவை, உண்மையான மனிதநேயத்தை பரப்புவோம். நாம் இதைச் செய்யக்கூடிய ஒரு
வழி, பாதிப்புக்குள்ளான மக்களை, இன, மத பேதமின்றி வறுமையில் வாடுபவர்களையும்
காப்பாற்ற,
வாழ்வாதாரத்தை மேம்படுத்த
உதவும் சிறந்த மனிதாபிமான திட்டங்களுக்கு எம்மால் முடிந்தளவு உதவுவோம்.
இஸ்லாமிய பண்புகளான நன்மை,
அன்பு மற்றும் தாராள மனப்பான்மையின்
பால் ஒன்று சேர அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
- - தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment