Tuesday, September 8, 2020

நபி (ஸல்) அவர்களை அவமதித்ததற்கு சியோனிசவாதிகளின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கைகள் முக்கிய காரணம்

 Zionists' anti-Islamic policies the main reason behind insulting Prophet (pbuh)

இறை தூதருக்கு எதிராக ஒரு பிரெஞ்சு வார இதழ் (சார்லி ஹெப்டோ) கூறிய அசிங்கமான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்லாமிய புரட்சியின் உச்ச தலைவரான ஆயதுல்லா கமேனி 2020 செப்டம்பர் 8 அன்று வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால்...

இறை தூதரின் ஒளிரும் புனித ஆளுமையை ஒரு பிரெஞ்சு வார இதழ் அவமதித்த செயலானது அது செய்த கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கில் அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகளால் தொடர்ச்சியாக பாராட்டப்படும் விரோதம் மற்றும் தீங்கிழைக்கும் வெறுப்பை இந்த வார (சார்லி ஹெப்டோ) இதழ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தை கண்டிக்கக்கூடாது என்பதற்காக சில பிரெஞ்சு அரசியல்வாதிகள் ‘கருத்து சுதந்திரம்’ என்று சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளவே முடியாத, தவறான மற்றும் கீழ்த்தரமான செயலாகும். சியோனிஸ்டுகள் மற்றும் திமிர்பிடித்த சக்திகளின் ஆழ்ந்த இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கைகள்தான் இந்த விரோத நகர்வுகளுக்குப் பின்னால் உள்ளன.

இந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மற்றொரு நோக்கத்திற்கும் உதவக்கூடும்: அமெரிக்க மற்றும் சியோனிச ஆட்சி இப்பகுதியில் நடைமுறைப்படுத்தியுள்ள தீய திட்டங்களிலிருந்து  மேற்கு ஆசியாவில் உள்ள மக்கள் மற்றும் அரசாங்கங்களின் கவனத்தை திசை திருப்பும் செயலே அதுவாகும்.

இந்த முக்கியமான பிராந்தியத்தின் பிரச்சினைகள் குறித்து விழிப்புடன் இருக்கும் அதேவேளை, முஸ்லிம் நாடுகள் - குறிப்பாக மேற்கு ஆசிய நாடுகளில் - இஸ்லாமிய மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கத்திய அரசியல்வாதிகளினதும் மற்றும் தலைவர்களினதும் விரோதப் போக்கை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

"...அல்லாஹ் தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவனாக இருக்கிறான்...". [புனித குர்ஆன், 12: 21].

சையித் அலி கமேனி

https://english.khamenei.ir/news/7913/Zionists-anti-Islamic-policies-the-main-reason-behind-insulting

No comments:

Post a Comment