Friday, September 13, 2019

"எதிரி (அமெரிக்கா) ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வரை ஈரானின் எதிர்ப்புக் கொள்கை மாறாது" - ரூஹானி




பாரசீக வளைகுடாவில் பதட்டங்கள் அதிகமாக இருப்பதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்டன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் "போர்க்குணமிக்கவர்களை ஒதுக்கி வைக்க" ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி புதன்கிழமை அமெரிக்காவை வலியுறுத்தினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரூஹானி, ஈரான் மீதான "போர்க்குணமிக்க மற்றும் அதன் அதிகபட்ச அழுத்தக் கொள்கையை கைவிட" வாஷிங்டனை மேலும் வலியுறுத்தினார், மேலும் தேவைப்பட்டால் தெஹ்ரான் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் குறைக்கும் என்றும் கூறினார்.

"
போர்க்குணத்தினால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும், ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தம் என்ற கொள்கையை கைவிட வேண்டும் ... அணுசக்தி ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டிய கடமைகள் ஈரானைப்போல் மற்ற தரப்பயிருக்கும் உண்டு, அவசிமேற்பட்டால் நாங்கள் மேலும் நடவடிக்கைகளை எடுப்போம்" என்றும் அவர் கூறினார்.

அணுசக்தி உற்பத்தி வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்ப பயன்பாடு,  ஒப்பந்தத்திற்கு அப்பால், "மூன்றாம் கட்ட நடவடிக்கையாகும்" என்று ரூஹானி குறிப்பிட்டார்.  "தேவைப்பட்டால், எதிர்காலத்தில் நாங்கள் மற்ற நடவடிக்கைகளை எடுப்போம்" என்றும் அவர் கடந்த புதனன்று கூறினார்.

"
எங்கள் எதிரி (அமெரிக்கா) ஈரானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வரை ஈரானின் எதிர்ப்புக் கொள்கை மாறாது" என்று ரூஹானி கூறினார்.

தனக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்புக்கான வாய்ப்பை ரூஹானி மீண்டும் நிராகரித்தார். ட்ரம்ப்-ரூஹானி சந்திப்பு பற்றி வெள்ளை மாளிகை சமிக்ஞை செய்த பின்னர் ரூஹானியின் இந்த கருத்துக்கள் வெளிவந்தன.

அமெரிக்கத் தலைவர் போல்டனை பதவி நீக்கம் செய்த பின்னர், ட்ரம்பின் உயர்மட்ட உதவியாளர்களில் இருவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானிய ஜனாதிபதியை, எந்த முன்நிபந்தனையுமின்றி  சந்திக்கத் தயாராக உள்ளார் என்று செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் திறைச்சேரி செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் ஆகியோர் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான "அதிகபட்ச அழுத்தம்" என்ற பிரச்சாரத்தை அமெரிக்கா தொடர்ந்து செயற்படுத்தும் என்று தெரிவித்தனர்.

தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் நீக்கி வாஷிங்டன் தனது "பொருளாதார பயங்கரவாதத்தை" முடிவுக்கு கொண்டுவந்தால்தான் ஒரு கூட்டம் நடைபெற முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஈரானின் பிரதிநிதி Takht Ravanchi மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானிய தூதர் எந்தவொரு கூட்டமாயினும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய சக்திகளின் (5+1) குழுவின் கட்டமைப்பிலேயே  நடத்தப்பட வேண்டும் என்றார்.

"
அமெரிக்க அரசாங்கத்தின் பொருளாதார பயங்கரவாதம் மற்றும் இத்தகைய கொடூரமான பொருளாதாரத் தடைகள் ஈரானிய மக்கள் மீது சுமத்தப்படும் வரை, பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை" என்று அவரை மேற்கோள் காட்டி ஈரானின் செய்தி சேவையான IRNA தெரிவித்தது.

ஈரானுக்கு எதிரான போரை நோக்கி ட்ரம்பை தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட போல்டனை நீக்குவதற்கான ட்ரம்பின் முடிவு அமெரிக்கர்களுக்குரிய ஒரு விஷயம் என்று தூதர் கூறினார்.

"
ஜான் போல்டனை நீக்கிய விடயமானது அவர்களது உள் விவகாரம், உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து நாங்கள் எந்த நிலைப்பாட்டை எடுப்பதில்லை" என்று தக்த்-ராவஞ்சி (Takht Ravanchi) கூறினார்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகாலமாக இருந்துவரும் முறுகல்நிலை உறவுகளில் போல்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் தாக்கம் குறித்து கேட்டதற்கு, எந்தவொரு முடிவுக்கு வருவதற்கு "காலம் இன்னும் கனியவில்லை" என்றார்.

"
அமெரிக்காவின் தீவிரவாதக் கொள்கை மாறுமா இல்லையா என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு காரணிகளைப் பொறுத்தது" என்று அவர் ISNA விடம் கூறினார்.

போல்டன் ஒரு சர்ச்சைக்குரிய நபர், 2003 ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் பிற ஆக்கிரமிப்பு தொடர்பான வெளியுறவுக் கொள்கை முடிவுகளுடன் நெருக்கமாக தொடர்புடையவர். ஈரான், வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகியவற்றுக்கான வெள்ளை மாளிகையின் அச்சுறுத்தும் அணுகுமுறையில் அவர் ஒரு முக்கிய உந்து சக்தியாகக் காணப்பட்டார்.

ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை போல்டனை "அமெரிக்காவின் மோசமான கொள்கைகளின் சின்னம் மற்றும் ஈரானுக்கு எதிரான விரோதப் போக்கு கொண்டவர்" என்று அழைத்தார், ஆனால் அவரது பதவி நீக்கம் என்பது அமெரிக்காவின்  உள் பிரச்சினை என்று கூறினார்.

போல்டன், சியோனிச பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் மற்றும் அபுதாபி முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அடங்கிய #B_Team என அழைக்கப்படுவதைப் பற்றி தனது டுவிட்டர் செய்தியில் ஈரானிய வெளியுறவு மந்திரி முஹம்மது ஜவாத் ஸரீப்  மீண்டும் ட்விட்டரைப் பயன்படுத்தி, இந்த டீமில் உள்ளோர் "ஈரானை மேய காத்திருக்கும் கழுகுகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

போல்டன் வெளியேற்றப்பட்ட பின்னர் "உலகம் ஒரு நிம்மதி பெருமூச்சு விடுகிறது" என்று ஸரிஃப் கூறினார். "போர் தாகம் - அதிகபட்ச அழுத்தம் - போர்வெறியருடன் நீங்க வேண்டும்," என்று ஸரிஃப் எழுதினார்.
இருப்பினும், மற்ற அதிகாரிகள் எச்சரிக்கையை வலியுறுத்தினர்.

இஸ்லாமிய புரட்சி காவல்படைப் பிரிவு தளபதியும் அதன் முன்னாள் தலைவருமான ஜெனரல் மொஹ்சென் ரெஸாயீ ஒரு ட்வீட்டர் செய்தியில் கூறியதாவது: "போல்டன் நீக்கப்பட்டதால் நாங்கள் ஏமாற மாட்டோம்."

போல்டன் ஈரானைப் பற்றி நீண்டகாலமாக கடுமையாகப் பேசியவர், அவர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஆதரித்தார் மற்றும் ஈரான் எதிர்ப்பு முஜாஹெடின் கல்க் (எம்.கே.ஓ) என்ற ஒரு மோசமான பயங்கரவாதக் குழுவிலிருந்து பேசுவதற்காக பணம் பெற்றவராகும். ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்பு, 2015 ஆம் ஆண்டில் போல்டன் "ஈரானின் வெடிகுண்டை நிறுத்த, அதன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும்." என்று கூறியிருந்த செய்தி பிரபலமான 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகி இருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில், சியோனிச கட்சித் தலைவர் நாப்தாலி பென்னட், போல்டனின் பதவி நீக்கம் குறித்து மிகவும் கவலைப்படுவதாகக் கூறினார்.

புதன்கிழமை நடந்த மாரிவ்-ஜெருசலேம் போஸ்ட் மாநாட்டில் பேசிய பென்னட் இடம், இந்த சமீபத்திய நிகழ்வுகளால் அவர் எவ்வளவு கவலைப்படுகிறார் என்று கேட்கப்பட்டது. ட்ரம்ப் ஈரானுடன் இணக்கமாக முயல்கிறார் என்றும் அதுபற்றி "மிகவும்" கவலைப்படுவதாக பென்னட் பதிலளித்தார்.

"
நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். டிரம்ப் வெளிப்படையாக இஸ்ரேலின் ஒரு பாரிய நண்பர் தான் என்றாலும் எங்கள் நலன்கள் ஒரே மாதிரியாக இல்லை, அவருக்கு அவரது நலன், எமக்கு எமது நலன்." என்று பென்னட் கூறினார்.




No comments:

Post a Comment