Friday, July 27, 2018

ஈரான் தபாஸில் உடல் கருகிச் செத்த அமெரிக்க இராணுவம்...!


Operation Eagle Claw (Tabas Fiasco)

ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று சில மாதங்களில் அமெரிக்க ராஜதந்திரிகள் புரட்சிக்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுபடுவதாக சந்தேகித்த தெஹ்ரான் பல்கலைக்கழக மாணவர்கள் 1979ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி  தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூரகத்தை சுற்றிவளைத்து, 52 ராஜதந்திரிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.

1953ம் ஆண்டு அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முஹம்மத் முசத்தேக்கின் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டிருந்த அனுபவம் அம்மாணவர்களை இவ்வாறு செய்யத்தூண்டியது.

இந்த பணயக்கைதிகளை மீட்பதற்கு ஆபரேஷன் ஈகிள் க்ளோ (Operation Eagle Claw) ராணுவ நடவடிக்கை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் நேரடி கண்காணிப்பில் மிக ரகசியமான முறையில் திட்டமிடப்பட்டது. இதற்கென மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவ குழு ஒன்றுக்கு பல மாதங்கள் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. சாதக பாதகங்கள் அனைத்தும் நுட்பமாக ஆராயப்பட்டு, ஓரணுவும் பிசகாதபடி, மிகவும் கச்சிதமாகத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தப் பணியை இரண்டே இரவுகளுக்குள் செய்து முடிக்கவேண்டும் என்றும் வடிவமைக்கப்பட்டது.


இந்த திட்டத்தின் அடிப்படையில், USS Nimitz என்ற விமானத்தாங்கி யுத்தக்கப்பலில் இருந்து 8 RH-53D Sea Stallion ரக இராணுவ ஹெலிகாப்டர்கள், திட்டமிட்டபடி, 1980 ஏப்ரல் 24ம் திகதி 'தபாஸ்' எனும் பாலைவன பிரதேசம் நோக்கி புறப்பட்டன. அங்கு CIA விசேட செயலாற்று படையணி, இவர்களின் திட்ட செயற்பாட்டில் உதவுவதற்காக ஏற்கனவே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும், அப்பிரதேசத்தை நெருங்குமுன்னரேயே மூன்று ஹெலிகாப்டர்கள் பழுதடைந்தன; ஒரு ஹெலிகாப்டரில் எஞ்சின் கோளாறாரு ஏற்பட்டது, மற்றொன்று மணற்புயலில் சிக்கி சேதமடைந்தது, இன்னுமொன்று சிறகில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இயங்க முடியாது போனது. இறுதியில் ஐந்து ஹெலிகொப்டர்களே இலக்கை சென்றடைந்தன.

இந்த ரகசிய திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்ற விடயம் அமெரிக்க ஜனாதிபதி காட்டருக்கு அறிவிக்கப்பட்டது. திட்டம் வெற்றிபெறும் சாத்தியம் அறவே இல்லையென்பதால் அதனை கைவிடும்படி ஜனாதிபதி காட்டர் பணித்தார். பணயக்கைதிகள் மீட்புத் திட்டம் கைவிடப்பட்டது.

திட்டம் கைவிடப்பட்டு திரும்புவதற்காக ஒரு ஹெலிகாப்டரை இயக்குகையில், அங்கிருந்த மற்றொன்றுடன் மோதி, இரண்டும் வெடித்துச் சிதறின. அவற்றிலிருந்து 8 விமானிகளும் கருகி மாண்டனர்.

மறுநாள் காலை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர் தமது திட்டம் தோல்வியில் முடிந்ததை ஒப்புக்கொண்டார். இது உலகின் முன் அமெரிக்காவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. அடுத்துவந்த ஜனாதிபதி தேர்தலில் காட்டர் தோல்வியடைய இதுவே முக்கிய காரணமாய் அமைந்தது.
"அமேரிக்கா தனது வல்லமையைக்காட்டி, சாகசம் புரிய ஈரானுக்குள் 8 யுத்த ஹெலிகாப்டர்களை அனுப்பியது. ஒரு ஹெலிகாப்டர் எஞ்சின் கோளாறாரு ஏற்பட்டடு செயலிழந்தது, மற்றொன்று மணற்புயலில் சிக்கி சேதமடைந்தது, இன்னுமொன்று சிறகில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இயங்க முடியாது போனது. இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறின. 8 பேர் கருகி மாண்டனர். 3 ஹெலிகாப்டர்களை ஈரானிலேயே விட்டுவிட்டு ஓடினர்."
இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக அமேரிக்கா அறிவிக்கும் வரை ஈரானிய அதிகாரிகள் அறிந்திருக்க வில்லை.

இந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலகட்டத்தில் ஈரானில் புரட்சி வெற்றிபெற்று ஒன்பதே மாதங்கள்; நாடு இன்னும் ஸ்திரத்தன்மையை அடைந்திருக்கவில்லை. MKO பயங்கரவாதிகள் பல குண்டுவெடிப்புகளை நடத்திக்கொண்டிருந்த காலமது. அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகள் பலர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்; அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களோ அனுபவமற்ற புதியவர்கள். அதுமட்டுமல்ல அப்போது ஜனாதிபதியாக இருந்த பனீஸத்ர், ஒரு CIA உளவாளி என்பதும் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களில் இருந்து பிறகு அறியவந்தது.

அமெரிக்காவின் இந்தத்தோல்வி இறைவனின் செயலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்...?

தாஹா முஸம்மில் 

3 comments:

  1. அல்லாஹ்வை அஞ்சுவோர் அவனால் ஒரு போதும் கைவிடப்படமாட்டார்.

    ReplyDelete
  2. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar.....

    ReplyDelete
  3. Jaa al Haq......

    ReplyDelete