Tuesday, May 15, 2018

சர்வதேச நக்பா தினம் - "Nakba Day"


சர்வதேச நக்பா தினம் (என்றால் என்ன)
நக்பா தொடரும் சோகக் கதை, ஒரு யூத தேசத்தின் பிறப்பு

ஒரு சமூகத்தின் தொன்மையான வரலாறுகளும், பாரம்பரிய மரபுகளும் மாத்திரமே அதன் இருப்பை உறுதிசெய்கின்ற விடயங்களாகும்.

நீண்டகாலமாக எமது பாரம்பரிய அடையாளங்களாக இருந்தவற்றை நாம் பேணிப்பாதுகாப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் தனித்துவம்; இல்லாத தனி அடையாளத்துடன் வாழ்வதற்கான நிலையை இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என்பது நவீன வரலாற்று ஆசிரியர்களின் ஆதங்கமாகும்.

அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட முக்கிய மற்றும் துன்பகர நிகழ்வாக அரபு-இஸ்ரேலிய வரலாற்றில் அடைளாப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் மாத்திரம் இன்றி முழு உலகினதும் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வாக இதுபார்க்கப்படுகிறது. இஸ்ரேல் என்ற அரசு 1948ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தினத்தில் இருந்து இந்தப் பிரச்சினை தலை முற்றுப் பெறாத நெருக்கடியாப் பார்க்கப்படுகிறது.


1948ம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது ஏழு லட்சம் பலஸ்தீன் மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த சம்பவம் வரலற்றில் நக்பா என்று அழைக்கப்படுகிறது. நக்பா என்ற அரபுச் சொல் பேரழிவு  என்ற கருத்தை தருகிறது.

க்பா என்ற துக்கரமான சம்பவம் இடம்பெற்றமைக்கான வரலாற்று காரணங்களை நாம் இங்கு ஆராய்வது அவசியமாகும். 

கி.பி 1800ம் ஆண்டுகாலப் பகுதியில் ஐரோப்பாவில் யூத தேசியாவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. கி.பி 1895ம் ஆண்டில் தியட்டர் ஹேர்ஸில் எழுதிய  The State of the Jews    என்ற புத்ததகத்தில் முதல் தடவையாக யூதநாடு ஒன்று முதலில் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஹெர்ஸில் ஹங்கேரி-ஒஸ்திரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒர் அரசியல் செயற்பாட்டளாவார். ஹெர்ஸில் எழுதிய  The State of the Jews   என்ற புத்தகத்தில் அவர் முக்கியமான ஒரு விடயத்தை வலியுறுத்தினார். "உஸ்மானிய கிலாபத்தின் ஆட்சியின் கீழ் இந்த பலஸ்தீனில் ஒவ்வொரு யூதனும் குடியேற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். 



முதலாவது ஸியோனிஸ மாநாடு 1897ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி முதல் 31ம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் பாஸ்ல் நகரில் இடம்பெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 200 யூதப் பிரதநிதிகள் கலந்துகொண்டார்கள். முதல் நாள் கூட்டத்திற்கு  தியட்டர் ஹேர்ஸில் தலைமை தாங்கினார். இதில் யூத அமைப்புக்களைச் சேர்ந்த 17 பெண் பிரதிநிதிகளும் கலந்துகொண்டாரகள். மாநாட்டின் 2வது நாள் அதாவது கி.பி 1897ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி சியோனிஸ இயக்கத்தின் இணை ஸ்தாபகரான மெக்ஸ் நொர்டா  Max Nordau     தலைமையில் இடம்பெற்றது. அன்றைய தினதிதில் பால்ஸ் பிரகடனம் வெளியிடப்பட்டது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பான யூதர்களுக்கான நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. 

முதலாவது ஸியோனிஸ மாநாட்டின் இறுதிநாள் கூட்டத்தில் நான்கு யோசனைகள் முன்வைகப்பட்டதோடு அவை அனைத்தும் எதுவித ஆட்சேபனையும் இன்றி நிறைவேற்றப்பட்டன.


  • யூத இனத்தைச் சேர்ந்த விவசாயிகள், கலைஞர்கள் வர்த்தகர்கள் ஆகியோரை பலஸ்தீனில் குடியமர்த்தல், 
  • நாடுகளின் சட்டங்களுக்கு அமைய யூதர்களுக்கான சம்மேளனத்தை உருவாக்குதல், 
  • யூதர்களின் உணர்வுனை வலுப்படுத்தல், 
  • சியோனிஸ இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உரிய  அரசாங்கங்களை ஊக்குவித்தல்.  
ஆகிய நான்கு பிரேரணைகளும் 1897ம் ஆண்மு ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்தமாநாடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குதவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியது. 

இந்த மாநாடு இடம்பெற்ற போது சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் அவர்கள் உஸ்மானிய கிலாபத்தின் சுல்தானாக. சுல்தானிடம் யூத நாடொன்றை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை சியோனிஸ அமைப்பின் பிரதிநிதிகள் கோரியிருந்தார்கள் ஆனால் அதனை சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 

சியோனிஸ அமைப்பு யூதர்களுக்கான நாடொன்றை அமைக்க மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. யூதர்களை பலஸ்தீனில் குடியமர்த்துவதற்காக அனுமதி கோரி சியோனிஸ அமைப்பின் தலைவர் தியேட்டர் ஹேர்ஸில் 1901ம் ஆண்டு துருக்கி சென்று சுல்தானை சந்தித்தார். பலஸ்தீனில் யூதர்களை குடியமர்த்த 150 மில்லியன் பவுண்களை சுல்தானுக்கு பரிசாகத் தருவதாகக் கூறினார். ஆனால் ஹேர்ஸிலை சந்திக்க சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் மறுப்புத் தெரிவித்தார். அமைச்சரவை கூட்டி சுல்தான் பின்வருமாறு உரையாற்றினார். "பலஸ்தீனை பணம் கொடுத்து வாங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஹெர்ஸிக்கு அறிவிக்கவும். பலஸ்தீனின் ஒரு பிடி மண்ணை கொடுக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன். முஸ்லிம் உம்மத் தனது இரத்தத்தை தண்ணீராக புனித புமியில் தியாகம் செய்திருக்கிறது. யூதர்களின் பணத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். இஸ்லாமிய கிலாபத் ஒழிக்கப்படும் நாளில் பணம் கொடுக்காமலேயே அவர்கள் பலஸ்தீனை பெற்றுக்கொள்ளட்டும். நான் உயிரோடுக்கும் போது பலஸ்தீன் துண்டாடப்படுவதை விட எனது உடல் வாளால் வெட்டப்படுவதையே விரும்புகிறேன்." ஏன்று  கூறி, சியோனிஸ அமைப்பின் பிரதிநிதிகளை நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சுல்தான் அவர்கள் கட்டளையிட்டார்கள். 

ஆனால் இதேகாலத்தில் ஐரோப்பா உட்பட பலநாடுகளில் இருந்த யூத தொழில்சார் வல்லுனர்கள் பலஸ்தீனில் படிப்படியாக குடியேற ஆரம்பித்தார்கள். மறுபக்கத்தில் உஸ்மனிய கிலாபத்தும் சரிவை எதிர்நோக்கியிருந்தது. 1917ம் ஆண்டு அதாவது முதலாம் உலக மகாயுத்தம் இடம்பெற்ற காலத்தில் உஸ்மானிய கிலாபத்தில் கீழ் இருந்த பலஸ்தீன் பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் வந்தது. நவம்பர் 2, 1917 அன்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் பிரிட்டனின் மிகவும் பிரபலமான யூத குடிமகனான பாரோன் லியோனல் வால்டர் ரோத்ஸ்சைல்டுக்கு  பாலஸ்தீனத்தில் யூத தாயகத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கடிதத்தை எழுதுகிறார். (இந்த கடிதம் இறுதியில் பால்ஃபோர் பிரகடனமாக அறியப்படுகிறது.)  பலஸ்தீன் ஆள்புலத்திற்குள் யூத நாடொன்றை உருவாக்க பிரித்தானிய சியோனிஸ அமைப்புக்கு உறுதியளிப்பதாக ஆத்தர் பெல்பர் உறுதியளித்தார். இஸ்ரேல் உருவாக்கத்தின் அடித்தளம் இதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இது முழு முஸ்லிம் உலகத்தையும் ஆத்திரம் ஊட்டியது எனலாம்.  

பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்


No comments:

Post a Comment