Contributors

Wednesday, March 10, 2021

மனிதகுலத்தின் விதியை மாற்றிய நாள் "மப்'அத்"

 "Mab’ath”, The Day that Changed Mankind’s Destiny

By: Seyyed Ali Shahbaz

-    சையத் அலி ஷஹ்பாஸ்


(எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர். 7:157.

மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய நாட்களில் ஒன்றை அண்மித்தவர்களாக நாம் இருக்கிறோம். சர்வவல்லமையுள்ள இறைவன் தனது கடைசி மற்றும் மகோன்னத தூதருக்கு இஸ்லாத்தின் உலகளாவிய செய்தியை முறையாக ஒப்படைத்த நாள் இது.

இந்த நாளுக்கு "மப்'த்" என்று பெயர், இதற்கு மீட்சி என்று பொருள். இது ரஜாப் மாதத்தின் 27 ஆம் தேதி அதிகாலை மக்காவிற்கு வெளியே நூர் மலையில் உள்ள ஹிரா குகையில் நடந்தது, வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தெய்வீகத்தின் முதல் கதிர்களுடன் இறங்கியபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலி வ ஸல்லம்  அவர்களுக்கு வயது 40.

அனைத்து மனிதர்களின் வழிகாட்டுதலுக்கும் இரட்சிப்பிற்கும் இறுதியானதும் மற்றும் மிக விரிவான இறை வேதமுமாகிய புனித குர்ஆனின் ஆரம்ப வசனங்கள் சூரா அலக்கின் 1 முதல் 7 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. அடுத்த 23 ஆண்டுகளில் முழுமை பெற்றது:

ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்; அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்! 96:1-7

கடந்த காலத்தின் அனைத்து தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்தபடி, முழு பிரபஞ்சத்தையும் படைத்த ஒரே ஒரு இறைவன், ஏகத்துவத்தின் உலகளாவிய பணியை இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய சந்ததியான முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தான், சமாதானம், நல்லொழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை சர்வவல்லமையுள்ள இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாமை, ஆகியவற்றின்பால் அழைக்கும் பணியை ஒப்படைத்தான். இந்த தூதுக்கு அரபியில் "இஸ்லாம்" என்று பொருள்.

பல்வேறு காலங்களிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் அல்லாஹ் தூதர்களை அனுப்பிவைத்தான்; ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை), நூஹ் (அலை) மற்றும் எண்ணற்ற தூதர்களை, சமூக நீதியை ஊக்குவிப்பதற்கும், மறுக்கப்படும் அனைத்து மனிதாபிமான விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவ வழிபாடு, நாத்திகம், அடக்குமுறை, தீமைகள் மற்றும் மற்ற எல்லா பாவங்களிலும் ஈடுபடுவதிலிருந்து மக்களை தடுப்பதற்காகவே நியமித்தான்.

ஆயினும் கடந்த கால தீர்க்கதரிசிகளின் நியமனம் போலல்லாமல், சர்வவல்லமையுள்ள இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முறையான நியமனம் வழங்கி இவ்வாறு கூறுகிறான்: "(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை." (புனித குர்ஆன் 21: 107).

றஸூலுல்லாஹ்வின் வருகைப்பற்றி முன்வந்த அனைத்து மதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்த வேத நூல்களை இடைத்தரகர்கள் சேதப்படுத்திய போதிலும், இந்த மத நூல்களில் றஸூலுல்லாஹ்வின் வருகை தொடர்பான இந்த பத்திகள்  இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளதானது  இஸ்லாத்தின் உண்மைத்தன்மையையும், நபிகள் நாயகத்தின் (SAWA) ஒப்பற்ற ஆளுமையையும் உறுதிப்படுத்துகிறது என்பது சுவாரஸ்யமானது. இறைவன் இவரைப்பற்றி கூறுகையில்:

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். (புனித குர்ஆன் 33:21)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தின் முழுமையான அர்த்தத்திலும் ஓர் உன்னதமான சிறந்த எடுத்துக்காட்டு. அவர் நல்லொழுக்கத்தின் சிகரம் மற்றும் மனித இனத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.

அடக்கம், உண்மைத்தன்மை, கருணை, பொறுமை, விசுவாசம், நேர்மை, தைரியம், துணிச்சல், தாராளம், பெருந்தன்மை, ஞானம் போன்ற சிறந்த குணங்களை தன்னுடைய உயர்ந்த ஆளுமையில் வெளிப்படுத்தியதன் மூலம் சர்வவல்லமையுள்ள இறைவன்  அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டினான்.

அவரது உயர்ந்த பண்புகள் மற்றும் அவரது குடும்பத்தினர், தோழர்கள், மனைவிகள் மற்றும் பிறருடன் அவர் வழிநடத்திய அதிசயமான எளிமையான வாழ்க்கையைப் படிப்பதன் மூலம், அவருடைய நடத்தையிலிருந்து மதிப்புமிக்க படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடிகிறது, அதன்படி நமது சொந்த வாழ்க்கை முறையை நாம் வடிவமைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் இறுதி தூதரின் காலடி சுவட்டை பின்பற்றி, அவருடைய போதனைகளுக்கு செவிசாய்த்து, அவருடைய உன்னத தோழர்களைப் போலவே அவருடைய நடைமுறையையும் வாழக்கை உதாரணங்களையும்  (சுன்னா மற்றும் சீரா) பின்பற்றினால் ஒழிய நமது சமூகம் ஒருபோதும் இஸ்லாமிய சமூகமாக இருக்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால், அவர் தடைசெய்தவற்றிலிருந்து விலகி, அவர் நமக்குக் போதித்த வற்றுக்கு கீழ்ப்படிந்து நடத்தலாகும்.

கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், "மப்'அஸ்" நிகழ்வு ஒரு சாட்சியின் முன்னிலையில் நடந்தது, அவர் தனது சொற்பொழிவு ஒன்றில் மிகத் துல்லியமாக அதை மிகச் சரியான முறையில் தொடர்புபடுத்தியுள்ளார், அந்த சொற்பொழிவு சாத்தானின் உரத்த புலம்பல் பற்றியும் நமக்குத் தெரிவிக்கிறது. தனது வஞ்சகத்தின் தோல்வி பற்றி திகைத்த சாத்தானின் புலம்பல் அது.

அந்த சொற்பொழிவை நிகழ்த்திய அவர் வேறு யாருமல்ல, விசுவாசிகளின் தளபதி இமாம் அலி இப்னு அபி தாலிப்  (அலை) அவர்களே ஆகும், அவர்  10 வயது சிறுவனாக நூர் மலையில் ஹிரா குகையில் இறை தியானத்தில் இருந்த தனது 40 வயது உறவினருக்கு உணவு மற்றும் ஆடைகளை எடுத்துச் செல்வார்.


இறைவனின் வெளிப்படையான கட்டளைப்படி நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரி 10ஆம் வருடம் துல்ஹஜ் மாதம் 18 ஆம் தேதி மப்'ஆதுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு, கதீர்-கும் சமவெளியில் அவரை தனது கலீபாவாக அறிவித்தார், பின்வருவது நஹ்ஜ் அல்-பாலாகாவின் 191 பிரசங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

"நான் ஒரு குழந்தையாக இருந்தபோது அவர் என்னைப் பொறுப்பேற்றார் ... தாயின் கால்தடங்களில் பிடிபற்றிச் செல்லும் ஒரு இளம் ஒட்டகத்தைப் போல நான் அவரைப் பின்தொடர்ந்தேன். ஒவ்வொரு நாளும் அவர் தனது சில உயர்ந்த பண்புகளை எனக்குக் காண்பிப்பார், அதைப் பின்பற்றும்படி எனக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் அவர் ஹிரா மலை குகைக்கு தனிமையில் செல்வார், அங்கு நான் அவரைப் பார்த்தேன், ஆனால் வேறு யாரும் அவரைப் பார்க்கவில்லை ... தெய்வீக வெளிப்பாடு மற்றும் இறை செய்தி அருளப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், நபித்துவத்தின் நறுமணத்தையும்  சுவாசித்தேன்.

"அல்லாஹ்வின் நபி மீது இறை வெளிப்பாடு இறங்கியபோது, சாத்தானின் புலம்பலைக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதரே இது என்ன புலம்பல்? என்று நான் வினவினேன்: அதற்கு அவர் 'தான் வணங்கப்படுவேன் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தானின் புலம்பல் அது' என்று அவர் பதிலளித்தார்: ஓ அலி! நான் காணும் அனைத்தையும் நீங்கள் காண்கிறீர்கள், நான் கேட்கும் அனைத்தையும் நீங்கள் கேட்கிறீர்கள், எனினும் நீங்கள் ஒரு பிரதிநிதியே அன்றி ஒரு நபி அல்ல", என்றார்கள்.

http://kayhan.ir/en/news/88432/the-day-that-changed-mankind%E2%80%99s-destiny

Tuesday, February 23, 2021

 Uma Oya Project in Sri Lanka by I.R.Iran

உமா ஓயாத் திட்டம்

(இலங்கையில் ஈரானியப் பொறியியலின் பெருமை)


திட்டத்தின் பின்னணி

உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டமானது மார்ச், 2010 இல் உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.  இதன் ஆரம்ப செலவு 514 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ஒப்பந்தக்காரருக்கு குறிப்பிட முடியாமல்போன காரணங்களுக்காக இத்திட்டத்தில் ஏற்பட்ட தாமதங்களினால் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலத்தை தொழில்நிறுவனத்தார் நீடித்துத் தந்துள்ளனர். இந்த ஆண்டு இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் நோக்கங்களும் தனிக்கூறுகளும்

நீரின் கீழ்நிலைத் தேவையைப் பாதிக்காமல் அதிகப்படியான நீரை உமா ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகளிலிருந்து தென்கிழக்கு வறண்ட மண்டலத்தில் உள்ள கிரிந்தி ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதனால், இப்பகுதியில் நீரின் தேவை உகந்த முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றது. இச்செயற்பாட்டின்போது, நீரூற்றுக்களின் இருப்பிடங்களுக்கும், அது தேவைப்படும் இடத்திற்கும் இடையிலான உயரத்தில் கணிசமான வேறுபாடு காணப்படுவதால், பொருத்தமான நீர் மின்சக்தியை உருவாக்குவது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இதனால், நீர்மின் உற்பத்திக்கு இதனை திறம்பட பயன்படுத்த முடியும்.


தேவையான நீரானது, ஒரு ரோலர் பொதிந்து கான்கிரீட் ஈர்ப்பு மாதிரி (ஆர்.சி.சி)  ஆக இருக்கக்கூடிய முதலாவது அணையான புஹுல்பொல அணைக்குப் பின்னால் சேமிப்பதனால் பெறப்படுகிறது. இது 35 மீ உயரமும், 634,8263 மொத்த கொள்ளளவும் கொண்ட உமா ஓயா ஆற்றை மையப்படுத்தியுள்ளது. மேலும், இந்நீர் தைராபா பகுதியிலுள்ள 50 மீட்டர் உயரமும், 970,135 M3 மொத்த கொள்ளளவும் கொண்ட மஹாதொதில்ல ஓயா ஆற்றை மையப்படுத்தி கட்டப்பட்டுள்ள மற்றொரு அணையினை உடைய நீர்தேக்கத்தினூடாக அமைந்துள்ள சுமார் 3.75 கி.மீ தூர ((D~4.6m) சுரங்கப்பாதை வழியாக இணைக்கப்பட்டு, 618 மீட்டர் (D~2.2m) செங்குத்து தண்டியோடு (vertical shaft)) சுமார் 15.5 கி.மீ (னு ஷ 3.6அ) தூரம்கொண்ட மற்றொரு சுரங்கப்பாதை வழியாக நிலத்தடி மின்நிலையத்திற்கு தண்ணீர் அனுப்படும். மின்சக்தி நிலையத்திலிருந்தான வெளியேற்றம் சுமார் 3.6 கி.மீ (vertical shaft))  தூரங்கொண்ட டெயில்ரேஸ் சுரங்கப்பாதை வழியாக கிரிந்தி ஆற்றின் கிளை நதியான அலிகொட எர ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.

ரண்தெனிய சுவிட்ச் யார்டு 132 KV சாதாரண மின்னழுத்தம் (voltage) கொண்ட பவர்ஹவுஸின் மேல் அமைந்துள்ளது. 23 கி.மீ இரட்டை சுற்று 132 KV டிரான்ஸ்மிஷன் லைன் உமா ஓயா சுவிட்ச் யார்டை பதுளை சுவிட்ச் யார்டுடன் இணைக்கின்றது. இந்த டிரான்ஸ்மிஷன் லைன் 85க்கும் மேற்பட்ட டவர்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.


உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டம் (UOMDP)  இலங்கையின் தென்கிழக்கு உலர் மண்டலத்திலிருந்து 5,000 ஹெக்டயர் புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு 23 கி.மீ சுரங்கப்பாதை வழியாக உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயா வரை 145 எம்.சி.எம் தண்ணீரை திருப்புவதற்கு உதவுகின்றது. அவ்வாறே, இத்திட்டத்தின் ஊடாக அனைத்து இலங்கையருக்கும் பயனளிக்கும் வகையில் தேசிய மட்டத்தில் சுமார் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஒரு ஹைட்ரோ எலக்ட்ரிக் ஆலையை அமைப்பதும் நோக்கமாகும்.

எனவே, உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தில் உமா ஓயா புஹுல்பொல ஆர்.சி.சி அணைக்கட்டு, மஹாதொதில்ல ஓயா ஆற்றின் தைராபா ஆர்.சி.சி அணைக்கட்டு, புஹுல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து தைராபா நீர்த்தேக்கத்திற்கு ஒரு இணைப்பு சுரங்கப்பாதை, தைராபா நீர்த்தேக்கத்திலிருந்து பவர்ஹவுஸ் நோக்கி ஒரு ஹெட்ரேஸ் சுரங்கம், இருமபு புறணி (steel lining)) கொண்ட செங்குத்து அழுத்த தண்டு ((shaft)), செங்குத்து தண்டுக்கு மேல் ஒரு எழுச்சித் தொட்டி ((surge tank), ஒரு நிலத்தடி பவர்ஹவுஸ் மற்றும் அதன் டெயில்ரேஸ் சுரங்கம், ரண்தெனிய சுவிட்ச்யார்டு, 23 கி.மீ டிரான்ஸ்மிஷன் லைன் மற்றும் பதுளை சுவிட்ச் யார்டு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய முன்னேற்றம்

திட்டத்தின் தனிக்கூறுகள் விரிவான பரப்பளவில் பரந்து காணப்படுவதோடு, ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுதொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  எனவே, ஐரோப்பா மற்றும் ஈரானைச் சேர்ந்த நன்குதேர்ச்சிபெற்ற ஆலோசனைப் பொறியியலாளர்கள் விசாரணை, ஆய்வு மற்றும் மேற்பார்வைக்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதன் இறுதி அறிக்கைக்கு தொழில் நிறுவனத்தார் ஒப்புதலளித்தனர். இதனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, ஈரான், இலங்கை மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த துணை ஒப்பந்தக்காரர்கள் வேலைத் தளத்திலிருந்து இலங்கை, ஈரான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் வெவ்வேறு பணி முனைகளில் படுபட்டிருந்தனர். இதனால், தற்போது இத்திட்டத்தின் 96.35 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இத்திட்டத்தின் அணுகூலங்கள் பற்றிய சிறுபட்டியல் கீழே தரப்படுகின்றது:

 த்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 231 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தேசிய மின்தொகுப்புக்கு 120 மெகாவாட் மின்சாரத்தை மேலதிகமாக சேர்க்கப்படுகிறது. இது தற்போதுள்ள மின்சக்தி கொள்ளளவில் சுமார் 5 வீதத்திற்குச் சமமானதாகும். இது நாட்டின் முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கிய படியாகும். இது பலரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

·         இதனால் தென்கிழக்கு உலர் மண்டலத்தில் விவசாய நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை மற்றும் அண்டை மாவட்டங்களில் இதனைக் குறிப்பிட முடியும். இது உணவு உற்பத்தி நடவடிக்கையின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு, நாட்டின் வேலையில்லாப் பிரச்சினையை குறிப்பிட்ட அளவுக்கு குறைக்கும்.

·    இத்திட்டத்தில் அமையப்பெறும் இரண்டு அணைக்கட்டுகளுடன் நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிக்க முடிகின்றது. இது வறண்ட காலங்களுக்கு நீர் விநியோகத்தை சேமிக்க உதவுவதோடு, வெள்ள நீரை பொது மக்களின் நலனுக்காக பயன்படுத்த வழிசெய்கின்றது.

· இதன் மூலம் பண்டாரவலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றுக்கு தொழில்துறையையும், குடிநீர் வசதியையும் வழங்குவதானது, பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவக்கூடியதாக அமைகின்றது.

 வாழ்க்கைத் தரத்தில் பொதுவான முன்னேற்றமும், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும், மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும் பயனுள்ள அதிகரிப்பும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Thursday, January 21, 2021

ஒரு கொடுங்கோலரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது

The era of a tyrant is over


டிரம்பை ஒரு 'கொடுங்கோலன்' என்று குறிப்பிட்ட ஈரான் ஜனாதிபதி ரூஹானி ஒபாமா கால அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பைடன் திரும்புவார் என்று பண்பிக்கை தெரிவித்தார்.

புதன்கிழமை தொலைக்காட்சி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரூஹானி, பந்து "இப்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனின் கையில் உள்ளது" என்றார்.

"ஒரு கொடுங்கோலரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது, இன்று அவரது அச்சுறுத்தும் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன் திரும்பினால், ஒப்பந்தத்தின் கீழ் எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்," என்று அவர் கூறினார்,"

கடந்த ஜனவரியில் ஈரானிய ஜெனரல் காசெம் சோலைமானியை அமெரிக்கா படுகொலை செய்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் ட்ரம்ப் பதவியில் இருந்த காலத்தில் உச்சம்தொட்டு ஏறக்குறைய யுத்தமொன்றை நெருங்கியது எனலாம்.

டிரம்ப் நிர்வாகம் அதன் இறுதி நாட்களில் ஒரு மோதலைத் தூண்ட முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், சமீபத்திய வாரங்கள் ஒரு புதிய சுற்று கப்பலைக் கண்டன.

ஒபாமா நிர்வாகத்தில் உறுப்பினராக இருந்த ஜோ பைடன் - 2015ம் ஆண்டில் ஐந்து நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் மேற்கொண்ட அசல் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய நபர்களில் ஒருவர் - வியாழக்கிழமை ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றிருப்பது இரு நாடுகளுக்குமிடையிலான  நல்லுறவை வளர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.

ட்ரம்ப் தனது நான்கு ஆண்டு பதவி காலத்தில் "அநீதி மற்றும் ஊழலைத் தவிர வேறு பலனைத் தரவில்லை, மேலும் தனது சொந்த மக்களுக்கும் உலகத்துக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தினார்" புதன்கிழமை கூட்டத்தில், ரூஹானி என்று கூறினார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் என்ன இருந்தது?

உத்தியோகபூர்வமாக கூட்டு விரிவான செயல் திட்டம் அல்லது ஜே.சி.பி.ஓ.ஏ என்ற தலைப்பில், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஈரானின் சிவில் அணுசக்தி திட்டத்தை நாடு எப்போதும் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.

ஒபாமா நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட இரண்டு ஆண்டுகால தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வியன்னாவில் தாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் ஈரானும் மற்ற ஆறு நாடுகளும் 2015 இல் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரானிய அரசாங்கம் மூன்று முக்கிய விஷயங்களுக்கு ஒப்புக் கொண்டது: நாட்டில் யுரேனிய மையவிலக்குகளின் எண்ணிக்கையை மூன்றில் இரண்டு பங்கு குறைத்தல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்புக்களைக் குறைத்தல், மற்றும் தொடர்ந்து செறிவூட்டல் 3.67% ஆகக் குறைத்தல், இது மின்னுற்பத்தி வழங்கலுக்கு போதுமானது ஆனால் ஒரு அணு குண்டு தயாரிப்பதற்கு போதுமானதாக இல்லை.

 மேலும், யுரேனியம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மட்டுப்படுத்த சர்வதேச அணுசக்தி அமைப்பின் (ஐ.ஏ.இ.ஏ) ஆய்வாளர்களுக்கு அதன் அணுசக்தி நிலையங்களுக்கு அணுகலை அனுமதிக்கவும்  ஈரான் இணங்கியது.

அதன் இணக்கத்திற்கு ஈடாக, ஈரான் மீதான அணுசக்தி தொடர்பான அனைத்து பொருளாதாரத் தடைகளும் 2016 ஜனவரியில் நீக்கப்பட்டன, நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச சந்தைகளுடன் மீண்டும் இணைத்தன.

ஈரான், பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இப்போதும் உடன்படிக்கை தொடர்ந்தாலும், 2018 ல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் தன்னிச்சையாக வெளியேறியது மட்டுமல்லாமல் ஈரான் மீது கடுமையான பொருளாதத தடைகளையும் விதித்தார்.

எவ்வாறாயினும், வாஷிங்டன் விலகிச் சென்றதிலிருந்து, ஈரான் இந்த ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் யுரேனியம் செறிவூட்டலை 20% க்கு அதிகரித்துள்ளது, எதிர்காலத்தில் தெஹ்ரான் அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர முடியுமா என்ற கவலையையும் உலக நாடுகளை மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 

பைடனின் விருப்பம்

2015 ஆம் ஆண்டு உடன்படிக்கைக்குத் திரும்புவதற்கான விருப்பத்தை பிடென் தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளார், கடந்த ஆண்டு சிஎன்என் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில் "அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக்க செயல்படும் ஒரு கொள்கையை ட்ரம்ப் பொறுப்பற்ற முறையில் தூக்கி எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அச்சுறுத்தலை மோசமாக்கினார்" என்று கூறினார்.


"நான் தெஹ்ரானுக்கு இராஜதந்திரத்திற்கு நம்பகமான பாதையை வழங்குவேன்" என்று அப்போதைய வேட்பாளர் செப்டம்பரில் பைடன் குறிப்பிட்டிருந்தார். "ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துடன் பூரண இணக்கத்திற்கு திரும்பினால், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான தொடக்க புள்ளியாக மீண்டும் ஒப்பந்தத்தில் சேரும்." என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருந்த போதிலும், டிரம்ப் நிர்வாகத்தின் இறுதி மாதங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பிடனின் கைகளை பிணைக்கக்கூடும் என்று சிலர் அஞ்சுகின்றனர், ஏனெனில் இஸ்ரேல் தொடர்பான ஈரானின் கொள்கை கொஞ்சமும் நெகிச்சையற்றது என்பதால் அமெரிக்க ஈரான் சுமுகமான இராஜதந்திர உறவு இப்போதைக்கு சாத்தியமற்றது என்பதுவே பலரின் கருத்தாகும்.

கடந்த நவம்பர் மாதம், தெஹ்ரானுக்கு அருகே ஒரு உயர்மட்ட ஈரானிய அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டார், ஈரானிய அரசாங்கம் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் டிசம்பரின் பிற்பகுதியில், அமெரிக்க அணுசக்தி திறன் கொண்ட பி -52 குண்டு விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பறக்கவிடப்பட்டனர். ஜெனெரல் சுலைமானி படுகொலை செய்யப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஈரான் சில நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அமேரிக்கா அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்திருந்தது,

ஈரான் இந்த மாதத்தில் யுரேனியத்தை 20% தூய்மைக்கு வளப்படுத்தத் தொடங்கியதாக அறிவித்ததோடு, பாரசீக வளைகுடாவில் தென் கொரியக் கொடியுடான் சென்ற ரசாயன டேங்கரைக் ஈரான் கைப்பற்றியது, எனினும் சுலைமானியின் ஒருவருட நிறைவு அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையில் எந்த சம்பவமும் இல்லாமல் கடந்தது , இராஜதந்திர நடவடிக்கைக்கான கதவைத் திறந்ததுள்ளது எனலாம்.

புதியஅமெரிக்க நிர்வாகம் சர்வதேச விதிமுறைகள் மற்றும் 2015 இல் ஜே.சி.பி.ஓ.ஏவுக்கு ஒப்புதல் அளித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231 உள்ளிட்ட தீர்மானங்களுக்கு திரும்ப வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி ரூஹானி கேட்டுக்கொண்டார்.

அவர்கள் (பைடன் நிர்வாகம்) உண்மையிலேயே சட்டத்திற்குத் திரும்பினால், இயல்பாகவே நாங்கள் எங்கள் கடமைகளுக்குத் திரும்புவோம். ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தம் மற்றும் பொருளாதார பயங்கரவாதக் கொள்கை 100% தோல்வியடைந்துள்ளது என்பது உலகத்துக்கும் நமது தேசத்துக்கும் தெளிவாகத் தெரிந்தது, ”என்று ரூஹானி கூறினார்.

- தாஹா முஸம்மில்