Wednesday, January 1, 2025

இஸ்லாமிய உலகை துண்டாடும் சதியை முறியடித்தவர் ஜெனரல் சுலைமானி

General Soleimani foiled the plot to divide the Islamic world

-          தாஹா முஸம்மில்

ஜெனரல் காஸிம் சுலைமானி பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகில் 2020, ஜனவரி 3, வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் அமெரிக்க ட்ரான் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். இவருடன் இன்னும் 6 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.

ஜெனரல் சுலைமானி குறிப்பிட்ட தினத்தன்று தம் நாட்டுத் தலைவரின் செய்தி ஒன்றை சுமந்தவராக ஈராக் சென்றிருந்த வேளை கொல்லப்பட்டார். இவ்வாறு தூதுவனாகச் செல்லும் ஒருவரை கொலைசெய்வது மிகவும் இழிவான செயலாகும். “அந்த படுகொலையைச் செய்யும்படி நானே உத்தரவிட்டேன்” என்று ட்ரம்ப் பெருமையடித்தது, அதைவிட கேவலமானது. பிற நாடொன்றுக்கு சமானத் தூதராக செல்லும் ஒருவரைக் கொல்லும் ட்ரம்பின் முட்டாள்தனமான மற்றும் கீழ்த்தரமான செயலின் விளைவுகளில் ஒன்று, நீதி நியாயத்தில் நம்பிக்கைக்கொண்ட மக்கள் மனதில் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் அமெரிக்க நிர்வாகம் கெடுத்துக் கொண்டது எனலாம்.

நீதி, நியாயம், சர்வதேச சட்டங்கள் ஐ.நா.தீர்மானங்கள் எதையும் தாம் மதிக்கப்போவதில்லை, இஸ்ரேலின் எந்த அநியாயத்தையும் அது நியாயப்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்த்திவருகிறது என்பதை பலஸ்தீ.காஸா விவகாரத்தில் நாம் கண்டு வருகிறோம்.

எண்ணெய் வளம் நிறைந்த சிரியாவையும் ஈராக்கையும் துண்டாடும் நோக்கத்துடன் அமெரிக்க சியோனிச கூட்டணியால் உருவாக்கப்பட்டதே ISIS/ISIL எனும் பயங்கரவாத அமைப்பு என்பதை ஆரம்பத்தில் பலர் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று அங்கு இடம்பெற்று வரும் சம்பவங்கள் அவர்களது நோக்கத்தை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.

சிரியாவின் இப்போதைய நிலை என்ன?

ஏகாதிபத்தியவாதிகளால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட குழுக்களுக்கு அவர்களே ஆயுத உதவிகள் வழங்கி பூரண இறைமைக்கொண்ட சுதந்திர நாடொன்றை ஆக்கிரமித்து சிரியாவை விடுவித்துவிட்டோம் என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

இஸ்லாமிய கிலாஃபா ஒன்றை ஸ்தாபிப்பதற்கான ஒரு போராட்டக் குழுவாகவே பலரும் ISIS  ஆரம்பத்தில் நினைத்திருந்தனர். காலப்போக்கில் அதனது பயங்கவாத நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக துளங்கத் தொடங்கின. எனினும், அதன் உண்மை சொரூபம் தெரிய வரும் போது காலம் கடந்திருந்தது. ஆனால் ஈரான் இஸ்லாமிய குடியரசு ISIS இன் இயல்தன்மையை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டது.

திடீரென தோன்றிய ஒரு போராட்டக்குழு, அதி நவீன ஆயுதங்களுடன், ராணுவரீதியாக பலம் பலம்பொருந்திய சிரியா நாட்டை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி அமைப்பதானது, அமேரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய பிற்போக்கு சக்திகளின் துணையின்றி நடப்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும்.

சர்வதேச ஊடக பிரச்சாரத்தால் ஆட்கொள்ளப்பட்டு, இதை பெருவெற்றி என்று எண்ணி பூரிப்படையும் intellectuals களும்  எம்மத்தியில் உள்ளனர் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

சிரியாவில் இன்று நடந்துள்ள சம்பவம் 15 மாதங்களாக பலஸ்தீனில் குறிப்பாக காஸாவில் நடந்துவரும் இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைப் படலத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டுள்ளது. இங்கே, நாமும் கூட, காஸாவைப்பற்றி பேசுவதற்கு பதிலாக சிரியாவைப் பற்றி பேசும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

இப்போது சிரிய மக்களுக்கு இருந்த சுதந்திரமும் இல்லாது போய், அன்றாடம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் குண்டுகளுக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அகண்ட இஸ்ரேல் கனவுக்கான கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. சில பிராந்திய நாடுகள் இதற்கு துணை போயுள்ளன என்பதை நினைக்க வேதனையை உள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சுலைமானியின் பங்களிப்பு

ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர குத்ஸ் காவல்படை படையின் (IRGC) (பைத்துல் முகத்தஸை மீட்பதற்காக இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவு) தலைவராக செயல்பட்டார்.

புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுக் குழுவின் தலைவராகவும், சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற்போக்குவாத அரபு நாடுகள் இணைந்து உருவாக்கிய ISIS ஐ துவம்சம் செய்தவர் சுலைமானி. ISIS பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக போராடுவதில் அவர் வகித்த முக்கிய பங்கிற்காகவும் சுலைமானி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலமடைந்தார்.

சுலைமானியின் தலைமையின் கீழ், குத்ஸ் படை அதன் திறன்களை பெரிதும் விரிவுபடுத்தியது, ஈரானின் எல்லைகளுக்கு அப்பால் உளவுத்துறை, நிதி மற்றும் அரசியல் துறைகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடிய ஒன்றாக பரிணமித்தது.

அரபு நாடுகள் உட்பட மத்திய கிழக்கில் ஈரானிய செல்வாக்கு பரவுவதில் சுலைமானி முக்கிய பங்கு வகித்தார். இது பிற்போக்குவாத அரபிகளை அச்சம் கொள்ளச் செய்தது. அமெரிக்காவும் இஸ்லாமிய புரட்சியின்  பிராந்திய எதிரிகளும் இஸ்ரேலும் இணைந்து இவரை கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் மேற்கத்திய, இஸ்ரேலிய மற்றும் அரபு அமைப்புகளால் அவருக்கு எதிராக செய்யப்பட்ட பல படுகொலை முயற்சிகளில் இருந்தும் அவர் தப்பினார்.

சிரியாவை பிளவுபடுத்தி அமெரிக்க, சியோனிஸ செல்வாக்குக்கு உட்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கைக்கு தடையாக காசிம் சுலைமானியின் குத்ஸ் படை முக்கிய அரணாக இருந்து சிரியாவை காத்தது. மேலும் ஈராக்கை துண்டாடுவதற்கும் இஸ்லாமிய குடியரசை தோற்கடிக்கவும் மேற்படி சக்திகளால் உருவாக்கப்பட்ட  ஐ.எஸ்.ஐ.எல்., ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் பயங்கரவாத குழுக்களை முற்றாக ஒழிப்பதில் IRGC முக்கிய பங்கு வகித்தது.

சுலைமானி 1998 இல் குத்ஸ் மீட்பு படையின் தலைவரானார்லெபனானில் ஹிஸ்புல்லாஹ்க்களுடனும் மற்றும் இரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் பாலஸ்தீனிய குழுக்களுடனும் ஈரானின் இருந்த உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.

அவர் ஷஹீதாக்கப்படுவதற்கு முன் ஈரானின் உச்ச மட்ட தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேயி மற்றும் பிற தலைவர்களின் நம்பிக்கையையும் வென்றார்.

வடமேற்கு ஈரானில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தின்போதும் மற்றும்  டமாஸ்கஸில் 2012 குண்டுவெடிப்பைத் தொடர்ந்தும் சுலைமானி இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. அதுபோல் 2015 யிலும் பயங்கரவாதிகளிடம் இருந்து சிரியாவின் அலெப்போ மீட்பு சண்டையிட்டபோதும், சுலைமணி கொல்லப்பட்டார் அல்லது பலத்த காயமடைந்தார் என்று வதந்திகள் பரவின.

சிரியாவில் அமைந்துள்ள குத்ஸ் மீட்பு படை தளங்கள் மீது மீண்டும் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுது. சுலைமானியை கொள்வதற்கு இஸ்ரேல் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் வெளியுறவு மந்திரி காட்ஸ் அப்போது கூறினார் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

காசிம் ஸுலைமானியின் பின்னணி

தென்கிழக்கு ஈரானின் கெர்மான் மாகாணத்தில் 1957ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த சுலைமானி ஒரு தாழ்மையான பின்னணியைக் கொண்டவராகும்.

அவர் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக 13 வயதிலேயே பணியாற்றத் தொடங்கினார். தனது ஓய்வு நேரத்தை பாரம்தூக்கும் பயிற்சியிலும் மற்றும் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களது சன்மார்க்க பிரசங்கங்களிலும் கலந்து கொண்டார்.

1979ல் இஸ்லாமிய புரட்சியின் போது ஒரு இளைஞனாக சுலைமானி ஈரானிய இராணுவத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியத்தின் மூலம் படிப்படியாக உயர்ந்தார்.

ஈரான்-ஈராக் போரின்போது சுலைமானி  ஈராக்கின் எல்லையைத் தாண்டி நடத்திய துணிகர செயற்பாட்டின் காரணமாக ஒரு தேசிய வீரராக கருதப்பட்டார்.

தெஹ்ரான் பல்கலைக்கழக பேராசிரியர் முஹம்மத் மராந்தி சுலைமானி பற்றி குறிப்பிடுகையில், "ISIS  பயங்கரவாதிகளை ஒழிப்பதில் அவர் அளித்த பங்களிப்பு, அவரை ஒரு தேசிய வீரனாக்கியது. ஏனைய மத்தியகிழக்கு நாடுகளிலும் அவரின் புகழ் ஓங்கியது. இவரைப் போன்ற துணிச்சல் மிக்க வீரர்கள் இல்லாதிருந்திருக்கும் பட்சத்தில், இந்த பிராந்தியம் முழுவதும் கறுப்புக் கொடிகள் பறப்பதையே கண்டிருப்பீர்கள்," என்று கூறினார்.

ISIS பயங்கரவாத தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே ஈராக் மற்றும் சிரிய அரசாங்கங்கள் ஈரானின் உதவியை நாடின. இவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நன்கு உணர்ந்திருந்த ஈரானும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியது. இதற்கு ஜெனரல் காஸெம் சுலைமானி மிகைத் திறமையாக தலைமை வகித்து, இப்பிராந்தியத்தில் ISIS தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா சையத் அலி காமனேயி, குத்ஸ் படைத் தளபதி மேஜர் ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானியை படுகொலை செய்தவர்கள் கடுமையான பழிவாங்கலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆயதுல்லா காமனேயி அப்போது விடுத்த ஒரு அறிக்கையில் "பூமியின் குழப்பம் விளைவிக்கும் மிக மோசமானவர்கள் (அமெரிக்கா) உலகின் தீமைகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் எதிராக தைரியமாக, பல ஆண்டுகளாக போராடிய கெளரவமான தளபதியை படுகொலை செய்துள்ளனர்" சுலைமானியின் மறைவு அவரது கொள்கை போராட்டப்  பணியை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிடாது. ஆனால் ஜெனரல் சுலைமாயுடன்  தாக்குதலில் கொல்லப்பட்ட மற்ற தியாகிகளின் இரத்தக்கறை கொண்ட குற்றவாளிகள் கடுமையான பழிவாங்கலுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"தியாகி சுலைமானி அவர்களை முன்னுதாரணமாகக் கொண்ட அனைத்து போராளிகளும் இப்போது பழிவாங்குவதற்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்" என்றும் ஆயதுல்லா கமேனி குறிப்பிட்டார்.

"தீமையை எதிர்க்கும் பணி ஜிஹாத்தின் பாதையில் இரட்டை உந்துதலுடன் தொடரும் என்பதை நண்பர்கள் மட்டுமல்ல அனைத்து எதிரிகளும் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் இந்த புனிதமான பாதையில் போராடுவோருக்கு ஒரு திட்டவட்டமான வெற்றி காத்திருக்கிறது" என்று தலைவர் கூறினார்.

"எங்கள் அன்புக்குரிய, தன்னலமற்ற ஜெனரலின் மறைவு கசப்பானது தான், ஆனாலும் நிச்சயமாக இறுதி வெற்றிக்கான தொடர்ச்சியான போராட்டமும் சாதனைகளும் கொலைகாரர்களினதும் குற்றவாளிகளினதும் வாழ்க்கையை கசப்பானதாக மாற்றும்" என்று அவர் மேலும் கூறினார்.

பிராந்தியத்தில் இவ்வாறான குழப்பங்கள், போர் சூழல் மற்றும் பாதுகாப்பின்மையால் பயனடைபவர்கள் முதலில் சியோனிஸ்டுகள் பின்னர் அமெரிக்கர்கள் மட்டுமே; ஈராக், சிரியா, லெபனான், யெமன் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பாதுகாப்பற்ற சூழல் தொடருமாயின் பிராந்தியத்தில் உள்ள எவரும் அதனால் பயனடைய மாட்டார்கள்.

சுலைமானி விவேகமுடைய சிறந்த தளபதி

தியாகி சுலைமானி ஒரு தனித்துவமானவர், துணிச்சலான தளபதி என்று சிலர் நினைக்கிறார்கள், அது உண்மைதான், ஆனால் அவர் மக்களின் உள்ளங்களில் நிலைத்திருக்க அது மட்டும் காரணமல்ல, எல்லா சூழலிலும் அவருடைய விவேகம் முக்கியமானது.

விஷயங்களைப் பகுப்பாய்வு செய்து அதன் உண்மைத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்வதில் விற்பன்னர்அவர் பிராந்தியத்தின் மற்றும் உலக அரசியலை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்மேலும் அவர் தீவிர போக்கை கடைபிடித்த ஒருவரல்லவலது அல்லது இடது சாய்வு அவரிடம் இருக்கவில்லை.

எந்தப்பிரிவினரும் தியாகி சுலைமானியை சொந்தம் கொண்டாட முடியாதுதியாகி சுலைமானி ஒரு தேசிய ஹீரோ மற்றும் முழு ஈரானிய தேசத்திற்கும்பிராந்திய நாடுகளுக்கும்புரட்சிகர முஸ்லிம்களுக்கும் ஒரு கௌரவ சின்னம். எதிரிகள் இந்த மனிதரை எம்மிடம் இருந்து பிரித்துவிட்டால் தமது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இருக்கும் தடை நீங்கிவிடும் என்று தப்புக்கணக்குப் போட்டனர்.  ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாற்றமாக இந்த தேசிய நாயகன் ஒரு நித்திய நாயகனாக மாறினார்ஈரானிய வரலாற்றில் தியாகி சுலைமானி சிறந்த வரலாற்று நாயகர்களில் ஒருவராக மாறிவிட்டார். பிராந்தியத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்ட பெரும் முயற்சிகளை மேற்கொண்ட ஒருவர் என்பதால் முழு பிராந்திய மக்களும் தியாகி சுலைமானிக்கு நிறைய கடமைப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment