Saturday, June 8, 2024

'ஹிஸ்புல்லாவை, ஹமாஸை இஸ்ரேலால் வெல்ல முடியாது': இஸ்ரேலிய ஜெனரல்

 'Israel cannot win against Hezbollah or Hamas': Israeli general

ByAl Mayadeen English

Source: Israeli media

இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் யிட்சாக் பிரிக் கூறுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்ந்து வரும் அதன் பலவீனத்தால் ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸிடம் தோல்வியடையும் என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஹமாஸுடனான போரில் தோல்வியைச் சந்திக்க நேரிடும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரிலும் அவர்கள் நிச்சயமாக அதே விதியையே சந்திப்பார்கள் என்று இஸ்ரேலிய ரிசர்வ் மேஜர் ஜெனரலும் இராணுவ ஆய்வாளருமான யிட்சாக் பிரிக் வெள்ளிக்கிழமை ஜெருசலேம் போஸ்டுக்கான ஒரு பதிப்பில் தெரிவித்தார்.

IOF (இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை) இனால் இரண்டு எதிர்ப்புப் பிரிவினரையும் தோற்கடிக்க முடியாது என்று பிரிக் வலியுறுத்தி கூறினார், இது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை வெற்றியைத் நாடாததால் அல்ல, "சிறிய மற்றும் பலவீனமான" இராணுவத்தை மேற்கோள் காட்டி, அதனிடம் "உபரி சக்திகள் இல்லை" என்பதால் அவர்களால் வெற்றிபெற முடியாது என்றார்.

"போர் தொடரும் ஒவ்வொரு நாளும் எங்கள் நிலைமை மோசமடைகிறது," என்று அவர் கூறினார், IOF மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் இரண்டும் உள்நாட்டில் சரிவையே நோக்கி செல்கிறது.

போர் அமைச்சரவை இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்

அத்தகைய இக்கட்டான நேரங்களில் இஸ்ரேலிய அமைப்பின் நிர்வாகத்திற்கு போர் அமைச்சரவை தான் பொறுப்பு. எனினும், அதன் உறுப்பினர்களின் "ஒரே ஒரு தினசரி குறிக்கோள்" போரை தொடர வேண்டும் என்பதாகும், அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை பாதுகாக்கும் வகையிலேயே முடிவுகள் எடுக்கின்றனர். போரினால் ஏற்படும் விளைவை அவர்கள் சிந்திப்பதில்லை.

"அவர்களின் இவ்வாறான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அவர்கள் ஆடுகளைப்போல இஸ்ரேல் மக்களை பலிபீடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்," என்று அவர் கூறினார், அவர்கள் இஸ்ரேலிய மக்களை பற்றி கவலைப்படவில்லை, மாறாக தங்கள் சொந்த நிலை பற்றியே கவலைப்படுகின்றனர் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

"இஸ்ரேல்" "எகிப்துடனான அவர்களின் உறவுகள் உட்பட உலக நாடுகளின் மீது தமக்கு இருந்த செல்வாக்கை இழந்து வருகிறது" இவை அனைத்தையும் ரஃபாவின் படையெடுப்பு நடப்பதற்கு முன்பே அவர் கற்பனை செய்ததாக இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இஸ்ரேலிய மக்கள் "அழிவை நிறுத்த வேண்டும் மற்றும் நம்மை வழிதவறிச் செலுத்தும் இந்த போர்வெறியர்களிடமிருந்து உடனடியாக விலகி இருக்க வேண்டும்."

பிரிக்கின் கூற்றுப்படி, இஸ்ரேலிய அரசாங்கம் குடியேறியவர்களை படுகுழிக்கு இட்டுச் செல்கிறது, இஸ்ரேலிய ஆட்சியின் தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக குடியேறிய காலனித்துவ திட்டத்தை தியாகம் செய்கிறார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

வன்முறை மூலம் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்டெடுக்க முடியாது என்பதையும் இந்த நேரத்தில் ஒரே தீர்வு அமைச்சரவை போர்நிறுத்தத்தை அறிவிப்பது மட்டுமே என்பதையும் உணர்ந்துகொள்வது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ரஃபா முற்றுகை ஒரு 'பெரும் தவறு'

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகருக்குள் நுழைவது "இஸ்ரேலுக்கு" பலனளிக்க போவதில்லை என்று பிரிக் முன்பு மாரிவ் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ரஃபாவிற்குள் நுழைவது ஒரு "பெரும் தவறு"  இது "இஸ்ரேலை" உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்துவைத்து மட்டுமல்லாது எகிப்துடன் சமாதானத்தை பணயம் வைக்கும் என்று பிரிக் கருதினார், இந்த நடவடிக்கையானது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுவனம் காசாவில் பாலஸ்தீனிய ஏதிர்ப்பணியால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதை நிரந்தரமாகவே தடுக்கும் என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனது சந்திப்புகளை குறிப்பிட்டு காட்டிய இஸ்ரேலிய ரிசர்வ் பிரிகேடியர் ஜெனரல், ரஃபாவிற்குள் நுழைவது ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை பிரதமரிடம் பலமுறை விளக்கியதாகக் கூறினார்.

நான் கூறிய காரணங்களை நம்பியது போல் காட்டிய நெதன்யாகு தன்னை ஏமாற்றியதாக அவர் வெளிப்படுத்தினார். ஆனால் எமது சந்திப்பு முடிவடைந்தவுடன், நெதன்யாகு "இஸ்ரேலின்" நலன்களை விட தனது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்தார்.

இஸ்ரேலிய இராணுவம் "மாயைகளைப் பரப்புகிறது, இஸ்ரேலியர்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறது, உண்மையைச் சொல்லவில்லை" என்று பிரிக் இஸ்ரேலிய பொது வானொலியிடம் கூறினார்.

சண்டையை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய பிரிக், இஸ்ரேலிடம் "ஹமாஸைத் தோற்கடிக்க முடியாத ஒரு சிறிய இராணுவமே உள்ளது" அது முழு அளவிலான போரைத் தொடங்கினால் இந்த இராணுவம் நிச்சயமாக சிக்கலைச் சந்திக்கும் என்றும் ஒப்புக்கொண்டார்.

https://english.almayadeen.net/news/politics/-israel-cannot-win-against-hezbollah-or-hamas---israeli-gene 

வெற்றிக்கு பதிலாக அவமானம் 

Yisrael Beiteinu கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், எட்டு மாதப் போருக்குப் பிறகு, "நாங்கள் ["இஸ்ரேல்"] மொத்த வெற்றிக்குப் பதிலாக மொத்த அவமானத்தைப் பெற்றுள்ளோம்" என்று வலியுறுத்தினார்.

போர் முழுவதும் அரசாங்க நடத்தையை விமர்சிக்கும் ஒரு அறிக்கையில், லிபர்மேன் "இஸ்ரேலிய அரசாங்கம் வடக்கை இழந்தது, மேலும் ஹிப்புல்லாஹ்விற்கு தொடர்ந்து அடிபணிகிறது, அது (ஹிப்புல்லாஹ்) விரும்பியதைச் செய்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

போர் தொடங்கி எட்டு மாதமாகியும், அரசாங்கம் ஹமாஸை அகற்றவும் இல்லை, காஸாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்கவும் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

https://english.almayadeen.net/news/politics/-israel--achieved-total-shame-instead-of-total-victory--lieb 

No comments:

Post a Comment