Thursday, June 6, 2024

புதிய உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்கும் நீண்ட பயணத்தில் உயிர் நீத்த தியாகிகள்

Martyrs who lost their lives in the long journey to create 

a New World Order

கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒரு நாட்டின் நிலை என்னவாக இருக்கும் என்பதை சொல்லித்தான் புரியவேண்டும் என்பதில்லை. இவற்றுக்கு மேலாக போர் அச்சுறுத்தல், உள்நாட்டு கலவரங்கள், எதிரிகளின் சூழ்ச்சிகள் போன்ற இன்னோரன்ன சவால்கள் அனைத்தையும் சமாளித்து மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றாமல் ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது இலேசான காரியமல்ல. டாக்டர் ரயீஸியின் அரசாங்க இதை திறம்பட செய்தது என்பதற்கு அவரின் அரசாங்கம் பெரும் மக்கள் அபிமானத்தை பெற்றிருந்தது என்பதே போதிய சான்றாகும்.

புதிய உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்கும் நீண்ட பயணத்தில் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி டாக்டர் இப்ராஹிம் ரயீஸி மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹொசைன் அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தொன்றின் காரணமாக உயிர் தியாகிகளாகினர் என்பதை நாம் அறிவோம்.

பலஸ்தீன் விவகாரம் உலகின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இவர்களது இழப்பானது ஈரானுக்கு மட்டுமல்ல முழு இஸ்லாமிய உலகுக்கும் பேரிழப்பாகும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

டாக்டர் ரயீஸியின் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே வெளியுறவு கொள்கையில் ஒரு வித்தியாசமான கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. வேறுபட்ட உலக ஒழுங்கை உருவாக்க தங்கள் வெளியுறவுக் கொள்கையில் தீவிர இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்தது. ஈரானை பகைமை உணர்வுடன் நோக்கிவந்த பல பிராந்திய நாடுகளுடன் நேச உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளித்து அதில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் கண்டது.

டாக்டர் ரைசியின் அரசாங்கம் நவீன காலனித்துவத்தின் கையகப்படுத்தலுக்கு எதிரான எதிர்ப்பு முன்னணியின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய பரவலை ஊக்குவித்தது மற்றும் ஈரான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே முறிவடைந்திருந்த உறவுகளை இராஜதந்திரத்தின் மூலம் மீண்டும் நிறுவுவது உட்பட தடுக்கப்பட்ட சர்வதேச உறவுகளை மீண்டும் தொடங்கியது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிர்வாக கொள்கைவகுப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் ஓர் ஆவணம் உண்டு; அதுதான் இமாம் அலீ (அலை) அவர்கள் மாலிக் அல்-அஸ்தருக்கு நிர்வாகம் தொடர்பாக எழுதிய கடிதமாகும். அதில் இமாம் அலீ (அலை) அவர்கள் அரச நிர்வாகத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தலையீட்டை அகற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஏனெனில் இது பெரும்பாலும் ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த அறிவுரையை பின்பற்றுவதன் மூலம், ஊழலை திறம்பட ஒழிக்க முடியும் என்று டாக்டர் ரயீஸி பூரணமாக நம்பினார். தமது நிர்வாகத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் அண்டவிடவில்லை.

இமாம் அலீ (அலை) அவர்களின் அறிவுறுத்தல்: "நிர்வாகத்தில் நீதியைப் பேணுங்கள், அதை உங்கள் மீது கடமையாக்கிக்கொள்ளுங்கள், மக்களின் ஒப்புதலைப் பெறுங்கள், சலுகை பெற்ற சிலர் கடினமான தருணங்களில் உங்களுடன் இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: அவர்கள் நீதியைப் புறக்கணிக்க முயற்சிப்பார்கள், அவர்கள் தங்களுக்குத் தகுதியானதை விட அதிகமாகக் எதிர்பார்ப்பார்கள், அவர்களுக்குச் செய்த உதவிகளுக்கு நன்றி காட்ட மாட்டார்கள்."

விசுவாசிகளின் தளபதி அலீ (அலை) அவர்களின் கூற்றுப்படி, பொருளாதார மற்றும் சமூக கொள்கை வகுக்கையில் தனிநபர்களின் திருப்தியை விட பொது மக்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது. இந்த கொள்கை ஜனாதிபதி ரயீஸியின் ஆட்சியில் கடுமையாக பின்பற்றப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

பொதுவாக இப்ராஹிம் ரயீஸி என்று அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் இப்ராஹிம் ரைஸுல்சாத்தி என்பதாகும். 1960 டிசம்பர் 14 அன்று பிறந்த இவர் ஓர் ஆலிமும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 2021 முதல் ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக பணியாற்றினார், 2024 இல் ஹெலிகாப்டர் விபத்தில் இறக்கும் வரை பதவிவகித்தார்.

இப்ராஹிம் ரயீஸி 1960 டிசம்பர் 14 அன்று மஷாத்தின் நோகன் மாவட்டத்தில் சன்மார்க்க குடும்பமொன்றில் பிறந்தார். அவருக்கு 5 வயதாக இருந்தபோது இவரது தந்தை செயத் ஹாஜி, மரணமடைந்தார்.

ரயீஸி தனது 15வது வயதில் கோம் சன்மார்க்கப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் ஆயத்துல்லாஹ் சையத் முஹம்மது மூசவி நெஜாத் பள்ளியில் கற்றுக்கொண்டிருக்கம் அதேவேளை அங்கு அவர் மற்ற மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்டார். 1976 இல், அவர் ஆயத்துல்லாஹ் புரூஜெர்த்தி பள்ளியில் தனது படிப்பைத் தொடர கோம் சென்றார்.

அவர் தலைசிறந்த ஆலிம்களான செய்யத் ஹொசைன் புருஜெர்தி, முர்தஸா முதஹ்ஹரி, அபுல்காசிம் கஸ்ஸாலி, ஹொசைன் நூரி ஹமதானி, அலி மேஷ்கினி மற்றும் முர்தஸா பசந்திதே ஆகியோரின் மாணவர் ஆவார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், ரயீஸி ஈரானின் நீதித்துறை அமைப்பில் பல பதவிகளில் பணியாற்றினார், துணைத் தலைமை நீதிபதி (2004-2014), அட்டர்னி ஜெனரல் (2014-2016), மற்றும் தலைமை நீதிபதி (2019-2021) பதவிகளை வகித்த ரயீஸி, 2006 தேர்தலில் முதல் முறையாக, தெற்கு கொராசன் மாகாணத்தில் இருந்து நிபுணர்கள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மக்களின் 63% வாக்குகளுடன் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

ஈரானிய அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியின் மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும். அதுவரை முதல் துணை ஜனாதிபதி பொறுப்பேற்பார்.

 

ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்

ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (23 ஏப்ரல் 1964 - 19 மே 2024) ஒரு முற்போக்கான அரசியல்வாதியும் மற்றும் சிறந்த இராஜதந்திரியும் ஆவார், அவர் ரயீஸியின் அரசாங்கத்தில் 2021 முதல் 2024 இல் இறக்கும் வரை ஈரானின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். 2011 மற்றும் 2016 க்கு இடையில் அவர் அரபு மற்றும் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சராக இருந்தார்.

அமீர்-அப்துல்லாஹியன் ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலி லரிஜானியின் சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆலோசகராக இருந்தார்.

அவர் வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச உறவுகள் கலாசாலையில் பேராசிரியராக இருந்தார்.

அமீர்-அப்துல்லாஹியன் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் பீடத்தில் சர்வதேச உறவுகளில் முதுமாணி பட்டம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.


லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இணைந்த எதிர்ப்பு முன்னணி மற்றும் பலஸ்தீன விடுதலை போராட்டத்தில் இஸ்ரேலுடன் மோதலில் இருக்கும் இணைந்த பிற நீரோட்டங்களை அமீர்-அப்துல்லாஹியன் ஆதரித்தார்.

- தாஹா முஸம்மில் 




No comments:

Post a Comment