Friday, February 10, 2023

44 வது ஆண்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் இஸ்லாமிய புரட்சி

Islamic revolution successfully completes 44th year

சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் பெயரால்

- தாஹா முஸம்மில்

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் மகத்தான வெற்றியின் 44 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உள்நாட்டு சர்வாதிகாரம் மற்றும் வெளிநாட்டு மேலாதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்ட ஈரானின் முஸ்லிம் மக்களின் அடிமட்ட இயக்கத்தின் 45 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

புரட்சி இயக்கத்தை அமோக வெற்றிக்கு வழி நடத்திய இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் ஒரு புகழ் பெற்ற அறிஞர். அவர் ஒரு எல்லாம்வல்ல இறைவனில் பரிபூரண நம்பிக்கைக் கொண்டவர், தொலைநோக்கு கொண்ட ஞானி ஆகும்.

8 ஆண்டுகால நாடுகடத்தலுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான மக்காவிற்குள் வெற்றிகரமாக நுழைந்த சர்வவல்ல அல்லாஹ்வின் கடைசி தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்.

றஸூலுல்லாஹ்வின் வெற்றிகரமான நுழைவு, இஸ்லாம் எனும் இறைவனால் விதிக்கப்பட்ட நம்பிக்கையினை அமைதியான முறையில் ஒப்புக்கொண்டு அவரை வரவேற்ற ஆயிரக்கணக்கான மக்கா வாசிகளில் மனநிலையை விவரிக்க கீழ்காணும் சூராவை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.

 

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

 

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (சூராஹ் அன்-நஸ்ர்)

அதுபோல் ஆயத்துல்லாஹ் செய்யத் ரூஹுல்லாஹ் மூசவி கொமெய்னி (ரஹ்), அவருக்கு நன்றியுள்ள தேச மக்கள் "இமாம்" (உச்ச தலைவர்) என்ற பட்டத்தை வழங்கினர் - (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சந்ததியினரின் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பன்னிரண்டு இமாம்களுடன் இவரை குழப்பிக்கொள்ள வேண்டாம்.)

இஸ்லாமியப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் உண்மையில் றஸூலுல்லாஹ்வின் அர்ப்பணிப்புள்ள ஓர் ஊழியர் மற்றும் அவரது ஆசீர்வதிக்கப்பட்ட தூய குடும்பத்தின் (அஹ்ல் அல்-பைத்) 12 இமாம்கள் ஆகியோர் மீது அளவிலா அன்பும் மரியாதையும் மற்றும் கீழ்ப்படிதலையும் கொள்கையாகக் கொண்டவராகும்.

15 ஆண்டுகால அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு இமாம் அவர்கள் 1979 பிப்ரவரி 1 அன்று ஈரானுக்குத் திரும்பியபோது, மில்லியன் கணக்கான ஈரானியர்கள் தெஹ்ரான் விமான நிலையத்தில் அவரை வரவேற்றதில் ஆச்சரியமில்லை. அன்றிலிருந்து 10 நாட்களுக்குள் ஈரானில் பல அரசியல் மாற்றங்கள் இமாமினால் செய்யப்பட்டன. அந்த பத்து நாட்களும் விடியலுக்கான நாட்கள் என்று இன்றளவிலும் கொண்டாடப்படுகின்றன.

 

இந்த நிகழ்வானது உலகளாவிய சமன்பாடுகளை மாற்றியது மற்றும் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை நிறைவேற்ற ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமிய ஈரான் இங்கே வழிகாட்டும் என்ற செய்தியை வழங்கியது.

அரசியல் இஸ்லாத்திற்கு புத்துயிர் அளித்து, அதை தூய முகம்மதிய இஸ்லாம் என்று அழைத்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள், அரசியலுக்கும் மார்க்கத்துக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தை சமூகம் மற்றும் அரசியலின் இதயத்திற்கு மீண்டும் கொண்டு வந்தார். இதன் விளைவாக, தியாகம், இறைவனுக்கான போராட்டம், தீமை எதிர்ப்பு மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம் போன்ற கைவிடப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரத்தை, ஒதுக்கப்பட்டிருந்த இலக்கியத்தை அவர் மீண்டும் உயிர்ப்பித்தார். ஈரான் இஸ்லாமியப் புரட்சி நவீன உலகில் ஒரு வியத்தகு நிகழ்வு ஆகும், இது இஸ்லாமிய உலகில் இஸ்லாத்தின் கண்ணியத்தை புதுப்பிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ரொஜர் கரூடிஒரு பிரபலமான பிரெஞ்சு முஸ்லிம் அறிஞர்ஈரான் இஸ்லாமியப் புரட்சியை பின்வருமாறு விவரிக்கிறார்:

நிச்சயமாகஇமாம் கொமெய்னி (ரஹ்) தலைமையிலான இஸ்லாமிய புரட்சி கடந்த காலத்தில் எந்த முன்னுதாரணத்தையும் கொண்டிருக்கவில்லை. கடந்த காலப் போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பல்வேறு சமூகப் புரட்சிகள் சில குறிப்பிட்ட அரசியல் அமைப்புகளை மட்டுமே மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. அந்த புரட்சிகளில் பெரும்பாலானவை வறுமை மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவானவைதேசிய புரட்சிகள் பெரும்பாலும் சுரண்டல்வாதிகள் மற்றும் கொள்ளையர்களிடமிருந்து நாட்டை காக்க மக்களின் கோபத்தால் தூண்டப்பட்டவை ஆகும். ஆனால் ஈரானின் இஸ்லாமியப் புரட்சி இந்த அனைத்து காரணங்களையும் உள்ளடக்கி இருந்ததாயினும்  அது புதிய கருத்துகளையும் அர்த்தங்களையும் கொண்டிருந்தது. இந்த புதிய கருத்துக்கள் சுரண்டுபவர்களின் அரசாங்கத்தை தூக்கி எரிந்தது மட்டுமல்லாமல்ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டத்தை முன்வைத்துமதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான மோதல் கோட்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது”.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் முஸ்லிம்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள். "முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் அவர்களுக்கு ஒரு சுதந்திரமான கலாச்சாரம் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுரண்டுபவர்கள் நமக்கென்று ஒரு கலாச்சாரத்தை வளர்த்தெடுத்துள்ளனர், அதனால் நம்மை நாமே அறியாமல் இருக்கிறோம். இது நமது உடைமைகளை கொள்ளையடிக்கவும், நமது ஆளுமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பளித்தது.”

 ஒரு தசாப்தமாக, இமாம் கொமேனி ஈரானிய தேசத்தை அமெரிக்க மற்றும் சியோனிச சதித்திட்டங்களுக்கு முகம்கொடுத்து வழிநடத்தினார், இதில் சதாமின் அடக்குமுறை பாத் சிறுபான்மை ஆட்சியின் திணிக்கப்பட்ட 8 ஆண்டுகால யுத்தமும் அடங்கும். பின்னர் இமாம் அவர்கள் 1989 ஜூன் மாதம் 3 ஆம் திகதி இறைவன்பால் புறப்பட்டார்.

அதன் பிறகு ஆயத்துல்லாஹ் செயத் அலி காமனெய், ஈரானியர்கள் மற்றும் உலக மக்களின் நலனுக்காக நபி (ஸல்) அவர்கள் மற்றும் மற்றும் தூய இமாம்களின் பாதையில் புரட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று மிகவும் சிறப்பான முறையில் காரியமாற்றி வருகின்றார்.

இஸ்லாமிய ஈரான் அன்றிலிருந்து வளர்ச்சிப்பாதையில் வெகுதூரம் வந்துவிட்டது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது, மருத்துவத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளி ஆய்வு போன்ற முக்கியத் துறைகளில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவருடைய பாரசீக தோழர் சல்மான் அல் ஃபார்ஸியை குறிப்பிட்டு சொல்லும் போது "கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தில் (the Pleiades) அறிவைக் காண வேண்டுமென்றாலும், அவருடைய மக்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள்"  என்று கூறிய விடயம் இன்று உண்மையாக ஆகி உள்ளது.


ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு விஜயம் செய்யும் எவரும் அந்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போவர். ஓர் அபிவிருத்தி அடைந்த நாடு எவ்வாறு இருக்குமோ, அந்த அங்கலட்சணங்கள் அனைத்தையும் அங்கு காணக்கூடியதாக இருக்கிறது.

இன்று, ஈரான் இஸ்லாமிய குடியரசு நபிகள் நாயகத்தின் அஹ்ல் அல்-பைத்தின் போதனைகளை செயல் ரீதியாக உலகம் முழுவதும் பரப்பி வருகிறது. உலகளாவிய ஆணவத்தின் சதிகளை முறியடித்தது, பிராந்தியத்திலும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள மக்களை அவர்களின் உரிமைகளுக்காக எழுவதற்கு தூண்டி வருகிறது, அமைதியான நோக்கத்திற்காக அணு ஆய்வு, மற்றும் புதுமையான முன்னேற்றங்களை கண்டு வருகிறது மற்றும் மருத்துவத்தில் ஸ்டெம் செல் (stem cell) தொழில்நுட்பத்திலும் பிராந்தியத்தில் முன்னிலை வகித்து வருகிறது. மருத்துவத்துறையில் ஈரான் வியக்கத்தக்க பல சாதனைகளையும் செய்து வருகிறது. பல நாட்டவர்களும் மருத்துவத்துக்காக இப்போது ஈரானை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைதியின் முன்னேற்றத்திற்கான இந்த மாபெரும் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் சியோனிஸ்டுகள் மற்றும் தக்ஃபீரிகள் உட்பட அவர்களின் கைக்கூலிகளுக்கும் பிடிக்காமல் போகலாம், ஆனால் 1979 இல் இமாம் கொமேனி அவர்களால் வழிநடத்தப்பட்ட புரட்சியின் ஓங்கியெழும் இஸ்லாமியப் அலையை நிறுத்த அமெரிக்காவாலும் பிற்போக்குத்தனமான ஆட்சிகளாலும் எதுவும் செய்ய முடியாது என்பது இப்போது நிதர்சனமாகத் தெரியும் உண்மை. இதன் பொருள் ஈரான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் இஸ்லாமியப் புரட்சி ஆகியவை, அவற்றின் வழியில் எறியப்பட்ட தடைகள் இருந்தபோதிலும், முன்னேறுவதில் உறுதியாக உள்ளன.

மனித குலத்தின் வாக்களிக்கப்பட்ட, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கடைசி மற்றும் பன்னிரண்டாவது வாரிசு, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் உலகில் இருந்து ஊழல் மற்றும் ஒடுக்குமுறையை களைய, நபி ஈஸா (அலை) உடன் மீண்டும் தோன்றி அமைதி, செழிப்பு மற்றும் நீதிக்கான உலகளாவிய அரசாங்கத்தை நிறுவுவார்கள் என்பது திண்ணம்.

ஈரானிய மக்களின் அடிமட்ட இஸ்லாமிய இயக்கத்தின் வெற்றியை "எங்கள் புரட்சி ஒளியின் வெடிப்பு" என்று வர்ணித்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள், "அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாது" என்றும் கூறியிருந்தார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் கொள்கைகள் மற்றும் இஸ்லாமியப் புரட்சி இலக்குகளை நிறைவேற்றியதற்காக அல்லாஹ்வின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், 2023 பிப்ரவரி 11, சனிக்கிழமை அன்று தெஹ்ரானிலும் ஈரான் முழுவதிலும் மில்லியன் கணக்கான ஈரானிய மக்கள் பலம் வாய்ந்த பேரணிகளை நடத்தத் தயாராக உள்ளனர், சந்தேகம் கொண்டவர்கள் தங்கள் கண்களை அகலத் திறந்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆட்சி மாற்றம்யுத்தம்பொருளாதார பயங்கரவாதம் போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத தலைமைத்துவமும்அந்த தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் மக்கள் கூட்டமும் இருக்கும்வரை எந்த உலக சக்தியாலும் இஸ்லாமிய அரசை அசைக்க முடியாது.

 

يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ‏

 

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (புனித குர் ஆன் 61:8)

No comments:

Post a Comment