Friday, June 21, 2019

உலக தரம் வாய்ந்த உயர் கல்வி - டைம்ஸ் தரவரிசை பட்டியலில் சிறந்த ஈரானிய பல்கலைக்கழகங்கள்

World class Iranian Universities in Times list


இஸ்லாமிய புரட்சி வெற்றியை தொடர்ந்து இஸ்லாமிய குடியரசு அதிக கவனம் செலுத்திய இரண்டு முக்கிய துறைகள்: ஒன்று தேசிய பாதுகாப்பு மற்றது கல்வி. இறைவன் அருளால் இவ்விரு துறைகளிலும் அடுத்தவர் பொறாமைப்படும் அளவு வளர்ந்துள்ளது.

கல்வித்துறையில் அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகும். இன்று, ஈரானிய பல்கலைக்கழகங்கள் உலக தரத்தை எட்டியுள்ளது என்பது இஸ்லாமிய உலகுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

டைம்ஸ் தரவரிசை பட்டியலில் சிறந்த ஈரானிய பல்கலைக்கழகங்கள்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் 2019க்கான டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையின் வெவ்வேறு பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அதன் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இயற்பியல் அறிவியல் துறையில், உலகளவில் 963 பல்கலைக்கழகங்களில் 24 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் மதிப்பீடு செய்யப்பட்ட 903 பல்கலைக்கழகங்களில் ஈரானில் 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

வாழ்வியல் விஞ்ஞான அறிவிவியல் துறை தரவரிசை அட்டவணையில் உள்ள 751 பல்கலைக்கழகங்களில் 11 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன மற்றும் கணினி அறிவியலில் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 684 பல்கலைக்கழகங்களில் 09 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இன்னும், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பிற சுகாதார விடயங்களை உள்ளடக்கிய மருத்துவ, முன் மருத்துவ மற்றும் சுகாதார துறை பல்கலைக்கழக தரவரிசையில் 05 ஈரானிய பல்கலைக்கழகங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
வணிகம் மற்றும் பொருளாதார துறையில் உள்ள 585 பல்கலைக்கழகங்க தரவரிசை அட்டவணையில் தெஹ்ரான் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ஃபாஹான் பல்கலைக்கழகம் உள்ளன. கலை மற்றும் மானுடவியல் கல்வி மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் சிறந்த பல்கலைக்கழகங்களில் தரவரிசைப்படுத்தப்பட்ட ஒரே ஈரானிய பல்கலைக்கழகம் தெஹ்ரான் பல்கலைக்கழகம் ஆகும்.
தரப்படுத்தலுக்கான அடிப்படைகளாக வருமானம், சர்வதேச பார்வை, ஆராய்ச்சி, கற்பித்தல் ஆகியவற்றுடன் முழுநேர சமநிலை (FTE) மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு மாணவர்களின் எண்ணிக்கை, சர்வதேச மாணவர்கள் மற்றும் பெண், ஆண் விகிதம் ஆகியவை ஆகியனவும் கருத்தில் கொள்ளப்பட்டன.

பௌதீகவியல்
பௌதீகவியல் அறிவியலுக்கான தரவரிசை அட்டவணையில் மொத்தம் 24 ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது பௌதீகவியல் மற்றும் வானியல்; வேதியியல் மற்றும் சூழலியல், புவியியல் மற்றும் கடல் அறிவியல் கணிதம் மற்றும் புள்ளிவிவரவியலில் முன்னணி வகிக்கும் பல்கலைக்கழகங்களை எடுத்துக்காட்டுகிறது.

பாபுல் நோஷிர்வானி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காஷான் பல்கலைக்கழகம், அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கிலான் பல்கலைக்கழகம், ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இஸ்ஃபஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகம் ஆகியவை பட்டியலில் அடங்கியுள்ள உள்ளன.

மேலும் ஈரானிய பல்கலைக்கழகங்கள் அஸர்பைஜான் ஷஹீத் மதனி பல்கலைக்கழகம், ஃபெர்தவ்ஸி மஷாத் பல்கலைக்கழகம், மஸந்தரான்  பல்கலைக்கழகம், ஷஹீத் பெஹெஷ்டி பல்கலைக்கழகம், ஷிராஸ் பல்கலைக்கழகம், ஷிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தப்ரிஸ் பல்கலைக்கழகம், சஞ்ஜான் பல்கலைக்கழகம், அல்சஹ்ரா பல்கலைக்கழகம், பிர்ஜாண்ட் பல்கலைக்கழகம், இஸ்ஃபாஹான் பல்கலைக்கழகம், கராஸ்மி பல்கலைக்கழகம், கெர்மன் ஷஹீத் பஹோனார் பல்கலைக்கழகம், ஷாஹ்ரூட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், உர்மியா பல்கலைக்கழகம் மற்றும் யஜ்த் பல்கலைக்கழகம் ஆகியனவும் பட்டியலில் அடங்கியுள்ளன.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப விடயங்களுக்காக 2019 டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை அட்டவணையில் மொத்தம் 21 ஈரானிய பல்கலைக்கழகங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, பல்கலைக்கழகங்கள் பொது பொறியியல், சிவில் பொறியியல், ரசாயன பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் என பல்வேறு துறைகளில் மதிப்பீடு செய்யப்பட்டன. தரவரிசையில் உள்ள ஈரானிய பல்கலைக்கழகங்களில் பாபுல் நோஷிர்வானி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மஸண்தரான் பல்கலைக்கழகம், காஷான் பல்கலைக்கழகம் மற்றும் ஜிலான்  பல்கலைக்கழகம் உள்ளன.

அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ஃபாஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷிராஸ் பல்கலைக்கழகம், ஃபெர்டோவ்ஸி மஷாத் பல்கலைக்கழகம் மற்றும் தப்ரிஸ் பல்கலைக்கழகம், ஷாஹித் பெஹெஷ்டி பல்கலைக்கழகம், சஞ்ஜான் பல்கலைக்கழகம், உர்மியா பல்கலைக்கழகம், ஷாஹ்ரூட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கராஸ்மி பல்கலைக்கழகம், இஸ்ஃபாஹான் பல்கலைக்கழகம் மற்றும் அஸர்பைஜான் ஷஹீத் மதனி பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் கெர்மன் ஷஹீத்  பஹோனார் பல்கலைக்கழகம் மற்றும்  யாஸ்த் பல்கலைக்கழகம் உயர் இடங்களை இடங்களைப் பெற்றுள்ளன.

இந்த உலக தரவரிசை பட்டியலில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதல் முறையாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றை பின்தள்ளி, முன்னிலை வகிக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கணினி அறிவியல்
கணினி அறிவியலில் உலகளவில் சிறந்த ஒன்பது ஈரானிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அற்றில் அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இஸ்ஃபஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஷிராஸ் பல்கலைக்கழகம், தப்ரிஸ் பல்கலைக்கழகம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகம் ஆகியவை தரவரிசையில் அட்டவணையில் உள்ளன.

2004 இல் ஆரம்பிக்கப்பட்ட டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை, உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் திட்டவட்டமான பட்டியலை வழங்குகிறது.

கலை மற்றும் மானுடவியல், வணிகம் மற்றும் பொருளாதாரம், மருத்துவ, முன் மருத்துவ மற்றும் சுகாதாரம், இயற்பியல் அறிவியல், உளவியல் மற்றும் சமூக அறிவியல், கணினி அறிவியல், கல்வி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், வாழ்க்கை அறிவியல், போன்ற விடயங்களை எங்கு படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில், ஒட்டுமொத்த உலக பல்கலைக்கழகங்களில் 1000 பல்கலைக்கழகங்களை தெரிவு செய்து தரவரிசை படுத்தி வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் குறைந்த செலவில், தரமான உயர் கல்விக்காக ஈரானை நோக்கி படையெடுக்கின்றனர்.


இவற்றுடன் இலங்கை, இந்தோனேசியா, பிரிட்டன், லெபனான், நோர்வே, நைஜீரியா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இயங்கிவரும் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் பின்வரும் சர்வதேச அறிவியல் மன்றங்கள் மற்றும் அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றுள்ளது:

Federation of the Universities of the Islamic World (FUIW)
International Association of Universities (IAU)
International Association of University Presidents (IAUP)
Association of Universities of Asia and the Pacific (AUAP)
Union of Islamic World Students (Rohama)


No comments:

Post a Comment