Contributors

Friday, February 3, 2023

ஈரான் இஸ்லாமிய புரட்சி உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை

The Iranian Islamic Revolution was a major turning point in world history


தொகுப்பு - முகமது ஜவாத் கோர்பி

ஒரு சம்பவம் நடந்து சுமார் அரை நூற்றாண்டை நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்றளவிலும் ஆராயப்பட்டுக்கொண்டு இருக்குமாயின் நிச்சயமாக அது ஈரான் இஸ்லாமிய புரட்சியாகும்.

நவீன உலகில் இதுபோன்ற ஒரு புரட்சி, அதுவும் ஒரு மதத்தை முன்னிலைப் படுத்தி, ஆயுதம் ஏந்தா மாக்களால், ஒரு தலைமைத்துவத்தால் வழிநடத்தப்பட்டு, வெற்றிபெற்ற ஒரு புரட்சி இதுவாகவே இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

1978 இல், இமாம் கொமெய்னி தலைமையிலான ஈரானிய மக்களின் இஸ்லாமிய இயக்கம் உச்சக்கட்டத்தை எட்டியபோது, இமாம் கொமெய்னி யுடன் சமரசம் செய்துகொள்வதில் ஏமாற்றமடைந்த ஷாவின் ஆட்சி, அவரது நடவடிக்கைகளை மட்டுப்படுத்த அல்லது தஞ்சமடைந்திருந்த அவரை ஈராக்கிலிருந்து நாடு கடத்த சில அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நியூயார்க்கில் நடந்த ஈரான் மற்றும் ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இமாம் கொமெய்னியை ஈராக்கில் இருந்து நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. 24 செப்டம்பர் 1978 அன்று, ஈராக் துருப்புக்கள் நஜாப்பில் உள்ள இமாம் கொமெய்னியின் வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகை பற்றிய செய்தி ஈரான், ஈராக் மற்றும் பிற நாடுகளில் உள்ள முஸ்லிம்களை கோபப்படுத்தியது. இமாம் கொமெய்னி  அவர்களை சந்தித்த ஈராக் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான தலைவர், இமாம் ஈராக்கில் தங்க விரும்பினால் அவர் ஷாவுக்கு எதிரான தனது செயற்பாடுகளையும் அரசியலையும் கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு இமாம் அவர்கள், முஸ்லிம் உம்மா மீது அவருக்கு இருந்த பொறுப்பு காரணமாக, அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அமைதியாக இருக்க அல்லது ஷாவுடன் சமரசம் செய்ய ஒருபோதும் அவர் தயாராக இருக்கவில்லை.

இமாம் கொமெய்னி, எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிட தயாராய் இருக்கவில்லை, போராட்டத்தைத் தொடர தீர்மானித்தார், ஈராக்கை விட்டு சிரியாவுக்குச் செல்ல முடிவு செய்தார், ஆனால் ஈராக்-சிரிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால் விமான சேவைகள் இடம்பெறவில்லை. ஆகவே அவர் குவைத் ஊடாக சிரியா செல்ல முடிவு செய்தார். அவர் குவைத்துக்கு வருவதற்கு விசா வழங்கப்பட்ட நிலையில் கூட, குவைத் அதிகாரிகள் அவர் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பித்தனர்.

அன்றிரவு இரவு இமாம் பாஸ்ராவில் தங்கி  (ஈரானியர்கள் விசா இன்றி பிரான்ஸ் செல்லக்கூடிய ஏற்பாடு அப்போது நடைமுறையில் இருந்ததால்) பாரிஸுக்கு பறக்க முடிவு செய்தார். ஈரான் நாட்டு மக்களுக்கு அப்போது அவர் அனுப்பிய செய்தியில், தான் பிரான்ஸ் செல்வதற்கான காரணங்களை குறிப்பிட்டார். “இப்போது நான் இமாம் அலியின் (அலை) அருகாமையை  விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், மேலும் வெளிநாட்டவர்களாலும் அவர்களுடன் தொடர்புடையவர்களாலும் தாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களாகிய உங்களுக்கு சேவை செய்ய இஸ்லாமிய பிரதேசங்களில் எனக்கு சுதந்திரம் இல்லை. மேலும் எனக்கு விசா வழங்கப்பட்டிருந்தும் கூட குவைத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நான் பிரான்ஸ் செல்கிறேன், நான் எங்கிருந்தாலும், எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனது தெய்வீக கடமை மற்றும் இஸ்லாம் அதனூடாக முஸ்லிம்களின் உயர் நலன்களை நிறைவேற்றுவதுதான். இப்போது இஸ்லாமிய இயக்கம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதால் நீங்களும் நானும் பெரும் பொறுப்பொன்றை சுமந்தவர்களாக இருக்கின்றோம்; நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது”, என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இமாமும் அவரது தோழர்கள் சிலரும் அக்டோபர் 6, 1978 இல் பாக்தாத்துக்குச் சென்று, அடுத்த நாள் அவர் பிரான்ஸுக்கான பயணத்தைத் தொடங்கினார், அதன் பிறகு சிறிது காலம் தலைநகர் பாரிஸில் தங்கிய அவர் Neauphle-le-Château எனும் கிராமத்திற்கு தனது இருப்பிடத்தை மாற்றினார்.

'இமாம் அரசியலில் ஈடுபடக்கூடாது' என்ற பிரெஞ்சு ஜனாதிபதியின் கருத்தை எலிசி மாளிகை அதிகாரிகள் இமாமிடம் தெரிவித்தனர். அதற்கு இமாமின் கூர்மையான எதிர்வினை மற்றும் பதில் என்னவென்றால், அத்தகைய வரம்பு ஜனநாயகத்திற்கான பிரான்சின் கொள்கைக்கு முரணானது, மேலும் அவர் தனது நோக்கத்தை விட்டுக்கொடுப்பதை விட விமான நிலையங்களுக்கு இடையில், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சஞ்சரிப்பதை விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஷாவின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக, பாரிஸில் இமாம் தங்கியிருப்பது புரட்சியின் வேகத்தை துரிதப்படுத்தியது மற்றும் பல நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு நாளும் இமாமின் இருப்பிடத்திற்குப் படையெடுத்தனர், மேலும் அந்த சிறிய கிராமம் உலக செய்திகளின் மையமாக மாறியது. அந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இமாம் நாடுதிரும்ப விரும்பினார். இமாம் நாட்டுக்குத் திரும்புவதை அப்போதைய ஈரானிய அரசு தடைசெய்திருந்த நிலையில் பல விமான நிறுவனங்கள் அவரை ஏற்றிவர தயக்கம் காட்டின. இமாம் கொமெய்னி நாட்டில் இருந்து வெளியேறினால் போதும் என்ற நிலையில் இருந்த பிரான்ஸ் அரசு அவரின் பயணத்துக்காக விமானம் ஒன்றை வழங்கியது. பல்லாண்டுகால அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு இமாம் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தெஹ்ரானை வந்தடைந்தார்.

அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த கிஸ்கார்ட் டி எஸ்டாயிங், இமாமை பிரான்சில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவு பிறப்பித்ததாக தனது நினைவுக் குறிப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில், அந்த நாட்களில் நம்பிக்கையிழந்திருந்த ஷாவின் இராஜதந்திர பிரதிநிதிகள், மக்களின் ஒரு தீவிரமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத எதிர்வினை ஆபத்தை Giscard d'Estaing க்கு அறிவுறுத்தினர், ஐரோப்பாவிலும் ஈரானிலும் ஏற்படக்கூடிய இத்தகைய எதிர்வினையின் பின்விளைவுகளில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டதாக அறிவித்தனர். பி

ரான்ஸில் இமாம் கொமெய்னி  நான்கு மாதங்கள் தங்கியிருந்த போது, Neauphle-le-Château உலகின் மிக முக்கியமான செய்தி மையமாக மாறி இருந்தது. இமாம் கொமெய்னி யின் பல்வேறு நேர்காணல்கள் இஸ்லாமிய அரசாங்கம் பற்றிய அவரது கருத்துக்கள் மற்றும் அவரது இயக்கத்தின் எதிர்கால நோக்கங்கள் அவரது குறிக்கோளை உலகிற்கு வெளிப்படுத்தியது.

இவற்றினூடாக பெரும் எண்ணிக்கையிலான உலக மக்கள் இமாமின் சிந்தனை மற்றும் அவரது எழுச்சியைப் பற்றி நன்கு அறிந்துக்கொண்டனர், மேலும் இந்த நிலையத்திலிருந்துதான் அவர் ஈரானில் இஸ்லாமிய புரட்சி இயக்கத்தின் மிக முக்கியமான காலகட்டத்தை வழிநடத்தினார்.

ஷாவினால் நியமிக்கப்பட்ட ஷெரீப்-இமாமியின் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. அதன் பிறகு ஷா ராணுவ அதிகாரியான அஸாரியாவை பிரதமராக நியமித்து ராணுவ சட்டத்தை பிறப்பித்தார்.

இந்த நடவடிக்கைகள் மூலமாக மக்கள் எழுச்சியைப் கட்டுப்படுத்த முடியவில்லை, ராணுவத்தால் கொலைகள் அதிகரித்தன. விரக்தியடைந்த ஷா அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்களின் உதவியை நாடினர், ஆனால் அவர்களின் திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை.

"ஷாவின் முடியாட்சிக்கு எதிரான மக்களின் முறைசாரா வாக்கெடுப்பு" என்று அழைக்கப்படும் ஷா-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மில்லியன் கணக்கானவர்களின் பங்கேற்றனர், தாஸுஆ மற்றும் அஷுரா (மொஹரம் 9 மற்றும் 10) நிகழ்வுகளில் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஷாபுர் பக்தியார், தேசிய முன்னணியின் முக்கிய நபர், அமெரிக்காவின் கடைசி பகடை, பிரதமராக ஷாவினால்   அறிமுகப்படுத்தப்பட்டார். குவாடலூப்பில் நகரில் நான்கு தொழில்துறை நாடுகளின் தலைவர்கள் பக்தியாருக்கு ஆதரவாக தங்கள் கூட்டுக் கருத்துக்களை தெரிவித்தனர்.

இவ்வாறு நடந்துகொண்டிருந்ததைத் தொடர்ந்து, நேட்டோவின் துணைத் தளபதியான ஜெனரல் ஹுய்சர் ஈரானுக்கு ஓர் இரண்டு மாத இரகசிய பயணத்தை மேற்கொண்டார். 1953 இல் முஹம்மத் முசத்தேக் ஆட்சியைக் கலைத்து, ஷாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது போலவே, இந்த அரசாங்கத்தை ஒழுங்கமைக்கவும், வேலைநிறுத்தங்களை முறியடிக்கவும், ஷாவை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சதித்திட்டத்தை நிறைவேற்றம் செய்யவும், பக்தியருக்கு இராணுவப் படைகளின் ஆதரவைப் பெறுவதே தனது நோக்கம் என்பதை அவர் பின்னர் தனது கருத்துக்களில் வெளிப்படுத்தினார். ஆனால், போராட்டங்களைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இமாம் கொமெய்னியின் செய்திகள், ஹுய்சரின் அனைத்துத் திட்டங்களையும் சிதறடித்தன.

டிசம்பர் 1978 இல், இமாம் கொமெய்னி  தாம் அஞ்ஞாதவாசத்தில் இருக்கும் நிலையிலேயே புரட்சிகர சபையை நிறுவினார். ஷா ஜனவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறினார், இரண்டு நாட்களுக்குப் பிறகு, பக்தியாரின் அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாட்சி கவுன்சில் கூடியது. ஷா நாட்டை விட்டு வெளியேறிய செய்தி தெஹ்ரானில் உள்ள மக்களை மகிழ்வித்தது, பின்னர் நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் குவிந்து, அவர் வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடினர். அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஷாவின் இராணுவத்தின் ஜெனரல்களுடன் ஹூய்சரின் வழக்கமான சந்திப்புகளால் வேலைநிறுத்தங்களை அடக்குவதற்கும் மக்களின் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பக்தியாருக்கு உதவ முடியவில்லை.

இஸ்லாமிய புரட்சி மகத்தான வெற்றி பெற்றது. "கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இஸ்லாம் ஒன்றே எமக்கு வேண்டும்" என்பதே போராட்டத்தின் அடிநாதமாக இருந்தது. இமாம் கொமெய்னி நாடு திரும்பி பத்து நாட்களில் அதாவது, 1979 பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இஸ்லாமிய அரசொன்றை நிறுவினார்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இஸ்லாமிய அரசை எவ்விதத்திலாவது வீழ்த்தியே ஆகவேண்டும் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தது. புரட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் ஈராக்கின் சதாம் ஹுசைனை அமெரிக்கா தூண்டியது மட்டுமல்லாமல் தீவிரமாக ஆதரித்தது. ஆனால் எட்டு வருட போருக்குப் பிறகு, சதாம் போர்நிறுத்தத்தை ஏற்க வேண்டியிருந்தது மற்றும் சதாம் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கீழ் அமெரிக்க வெளியுறவு செயலாளராகவும், ஜனாதிபதிகள் ரிச்சர்ட் நிக்சனின் கீழ் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகவும் இருந்த Alexander Meigs Haig Jr இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

ஜனாதிபதி கார்ட்டர் ஈரானுக்கு எதிரான போரை ஃபஹ்த் மூலம் தொடங்க ஈராக்கியர்களுக்கு பச்சை விளக்கு காட்டினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹெய்க்கின் தகவலின்படி, சவூதி இளவரசர் ஃபஹ்த் (பின்னர் மன்னர் ஃபஹ்த்) மத்திய கிழக்கில் அமெரிக்க கையை வலுப்படுத்த வேண்டும் என்று நம்புவதாகவும், தடைப்பட்ட பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு, சதாமின் படையெடுப்பிற்கு அனுமதி வழங்கினார். உண்மை என்னவென்றால், ஜிம்மி கார்ட்டர், சமாதானம் செய்பவர் போல் காட்டிக்கொண்டு போரை ஊக்குவித்தார்.

59வது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அலெக்சாண்டர் ஹெய்க் வெளியிட்டுள்ள அறிக்கை, ஈரான் மீது படையெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டர் சதாம் ஹுசைனுக்கு பச்சை சமிக்ஞை கொடுத்ததைக் குறிக்கிறது.

http://echoofislam.itfjournals.com/article_1738_0.html

 

Monday, January 30, 2023

புதிய உலக ஒழுங்கொன்றை உருவாக்கும் நோக்கில் ஈரானும் ரஷ்யாவும்

 Iran, Russia looking for new world order


-          சொலைஹா ஸர்பாம்

ரஷ்ய அரசின் அதிகார மையமான டுமாவின் தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடின் கடந்த வாரம் தெஹ்ரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 25 ஆண்டு கால கூட்டாண்மை பற்றிய விடயம் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெற்றிருந்தது.

உலகம் முகம்கொடுத்துள்ள ஒரு இக்கட்டான மற்றும் முக்கியமான தருணத்தில் வோலோடின் தெஹ்ரானுக்கு விஜயம் செய்துள்ளதானது, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளிலும் பரிசீலனையில் உள்ள 25 ஆண்டு கால கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் தங்கள் உறவுகளை ஒரு மூலோபாய நிலைக்கு மேம்படுத்தும் திசையில் நகர்வது போல் தெரிகிறது.

இந்த கூட்டாண்மை தெளிவாக இருதரப்பு ஒப்பந்தம் என்றாலும், இது உலகின் ஒரு இக்கட்டான தருணத்தின் பின்னணியில் செய்யப்படுகிறது. ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டும் மேற்கு நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகள் இரு நாடுகளுக்கும் இடையே தங்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கும், செயல்பாட்டில் ஒரு புதிய, பல்துருவ உலக ஒழுங்குக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் இடையே ஒரு பொதுவான தளத்தை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது.

இந்த விஜயம் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யாவிற்கான ஈரானிய தூதர் கஸெம் ஜலாலி, மேற்கத்திய மையப்படுத்திய உலக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான மேற்கத்திய உந்துதலின் மத்தியில் தெஹ்ரானுக்கும் மாஸ்கோவிற்கும் இடையில் நெருக்கமான உறவின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Iranian Ambassador to Russia Kazem Jalali

"விரைவான சர்வதேச முன்னேற்றங்களுக்கு மத்தியில் ரஷ்ய ஸ்டேட் டுமாவின் தலைவர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்துகிறது" என்றும் ஜலாலி கூறியுள்ளார்.

"மேற்கத்திய நாடுகளை மையப்படுத்திய உலக ஒழுங்கின் தொடர்ச்சிக்காக மேற்கு நாடுகள் அதன் முழு சக்தியையும் பிரயோகித்து வருகின்றன; புதிய சர்வதேச ஒழுங்கொன்றை அமைப்பதில் முன்னணி வகிக்கும் ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்பானது வளர்ந்து வரும் சக்திகளின் மையத்தை பலப்படுத்துகிறது," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தலைமையில் வோலோடினுக்கு தெஹ்ரானில் விமரிசையான அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு உற்சவத்திற்குப் பிறகு, கலிபாஃப் மற்றும் வோலோடின் ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்புக்கான மூன்றாவது கூட்டு உயர் மட்ட கூட்டத்தை நடத்தினர்.

இரு தரப்பும் உணர்திறன் மற்றும் ஒத்துழைப்பைப் பற்றிய பொதுவான புரிதலை எட்டிய பிறகு, 2023 ஆம் ஆண்டில், அரசியல் மற்றும் பொருளாதார அரங்கிலும், மற்ற மூலோபாய ஒத்துழைப்பிலும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகள் அதிக வேகத்துடன் முன்னோக்கிச் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கலிபாஃப் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இதுபோன்ற ஒப்பந்தங்களுக்குப் பிறகு, வாய்ப்புகள் போல் அச்சுறுத்தல்களும் எழவே செய்யும், மேலும் இரண்டு நாடுகளின்தலைவர்கள், பாராளுமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் நாடுகளின் அதிகாரிகள் வாய்ப்புகளை அதிகப்படுத்தி, அச்சுறுத்தல்களை வாய்ப்புகளாக மாற்றும் வகையில் செயல்பட முடியும். இதைத் தவறவிட்டால், வாய்ப்புகளை இழக்க நேரிடும், மேலும் வாய்ப்புகள் அச்சுறுத்தலாக கூட மாறும், என்றார்.

"இருதரப்பு மற்றும் பல்தரப்பு உறவுகள் மற்றும் தேசிய மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள எங்கள் அதிகாரிகள் நன்கு அறிவார்கள், மேலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள காலம் மிக முக்கியமானது," என்று கலிபாஃப் மேலும் தெரிவித்தார்.

நாம் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் மற்றும் ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மூலோபாய ஒப்பந்தம் விசேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 25 ஆண்டு கால ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

வோலோடின், இங்கு பதிலுக்கு உரையாற்றுகையில், ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வளர்ந்துவரும் உறவுகளை வெகுவாகப் பாராட்டினார், ICANA ஒப்பந்தப்படி. "ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் ஒரு நேர்மறையான வளர்ச்சிப் பாதையைக் கண்டறிந்துள்ளன, மேலும் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான உறவுகளும் நல்ல இருதரப்பு உறவுகளைக் காட்டுகின்றன. ரஷ்ய பாராளுமன்ற மட்டத்தில், கூட்டு உயர் ஆணையத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த எங்களின் அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்துவோம், என்றார்.

இரு நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த கூட்டு உயர் ஆணையத்தின் இலக்குகளை அடைவோம் என நம்புகிறோம். இந்தக் கூட்டு ஆணையத்தில் பல்வேறு பொருளாதார மற்றும் வணிகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்” என்றார்.

"ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் புதிய வழிமுறைகளையும் தேடுகிறோம்" என்றும் வோலோடின் கூறினார்.

ரஷ்ய உயர்மட்ட அதிகாரி ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, “இந்த ஒப்பந்தம் புதிய உறவுகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், உறவுகளின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கும்” என்றார்.

25 வருட ஒப்பந்தம் பற்றி குறிப்பிடுகையில், “எதிர்காலத்தில், இந்த ஒப்பந்தம் வெகு விரைவில் இரு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களால் மதிப்பாய்வு செய்யப்படும் என்று நான் நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் ஒரு மூலோபாய ஒப்பந்தம் மட்டுமல்ல, இது அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டுமானத் தொகுதியாகும், மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்புக்கான புதிய கட்டிடத் தொகுதியாகவும் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

"உலகிற்கு ஒரு புதிய ஒழுங்கை உருவாக்க எங்களின் அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம், இது இரு நாடுகளின் விருப்பத்தைப் பொறுத்தது. ஈரானும் ரஷ்யாவும் நிச்சயமாக உலகளாவிய பல்துருவ ஒழுங்கு என்ற கருத்தை ஆதரிக்கின்றன, என்று வோலோடின் மேலும் கூறினார்,

ஈரானும் ரஷ்யாவும் நீண்ட காலமாக பொருளாதாரத் தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன, மேலும் இந்த அச்சுறுத்தல்கள் எங்கள் உறவுகளின் வளர்ச்சியைத் ஒருபோதும் தடுக்காது. உண்மையில், பொருளாதாரத் தடைகளின் முக்கிய நோக்கம் உலகில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாகும், ஆனால் நாங்கள் எங்கள் தேசிய இறையாண்மையைப் பாதுகாத்து எங்கள் சொந்த விதியை தீர்மானிக்கிறோம். நாங்கள் எங்கள் மரபுகள், கலாச்சாரம், இலக்கியம் மற்றும் மொழியை மதிக்கின்றோம் மற்றும் எல்லா நாடுகளினதும் சுதந்திர அரசியலை ஆதரிக்கிறோம், என்றும் அவர் குறிப்பிட்டார்.

மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது அவர்களது வழக்கமாக மாறியுள்ளது, தங்கள் செல்வத்தை பெருக்கிக்கொள்ள உலகின் அனைத்து வளங்களையும் தம் வசப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். நிச்சயமாக, அமெரிக்கா ஏற்கனவே மோசமடைந்துள்ளது, எனினும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் கொள்கைகளை பின்பற்றுகிறது. ஐரோப்பாவின் தலைவர்கள் தங்களுக்குத் தேவையான எரிசக்தி மற்றும் எரிவாயுவை ரஷியன் அல்லாத சந்தைகளில் இருந்து முன்பை விட அதிக விலையிலும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இது ஐரோப்பிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது என்றும் வோலோடின் குறிப்பிட்டார்.

By Soheila Zarfam

https://en.mehrnews.com/news/196559/Iran-Russia-looking-for-new-world-order

Wednesday, January 25, 2023

மேற்குலகு: உலகில் முஸ்லிம்கள் ஒரு சக்தியாக வளர்வதை எப்படியாவது தடுத்து விட வேண்டும்

West: Muslims must somehow be prevented from growing as a power in the world

உலகின் வல்லாதிக்க சக்திகள் ஏனைய நாடுகளை, குறிப்பாக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு உலகை தனது இஷ்டப்படி ஆட்டிப்படைக்க எத்தனிக்கின்றன; இதில் அவை ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன என்று குறிப்பிடலாம்.

எண்ணெய் வளம் கொண்ட அரபு நாடுகள், ஒரு சிலதைத தவிர, அனைத்தும் வல்லாதிக்க சக்திகளின் சதிவலைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளன என்பது ரகசியமல்ல. என்றாலும் சில நாடுகள் என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை வல்லாதிக்க சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்ற தீர்மானித்தில் உறுதியாக உள்ளன. இதில் ஈரான் முன்னிலை வகிக்கின்றது.

ஈரான் நிலைக்கொண்டுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பூகோள இடமானது, ஈரான் இன்றி தமது நோக்கத்தை முழுமையாக செயற்படுத்த முடியாது எனபதை நன்றாக உணர்ந்துள்ள வல்லாதிக்க சக்திகள் எப்படியாவது அதை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன. பொருளாதாரத் தடை, வங்கிகள் முடக்கம் மற்றும் இன்னோரன்ன நெருக்குதல்கள் அனைத்தும் மேற்குலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே ஆகும்.

ஈரான் மட்டுமல்ல, மேற்குலகின் மிகவும் நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியா கூட தம் நாட்டு விவகாரங்களை சுயமாக சிந்தித்து, சுயமாக தீர்மானங்களை எடுக்கும் நிலை ஏற்பட்டால், தற்போது ஈரான் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றே சவுதியும் எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம். ஏனெனில், உலகில் முஸ்லிம்கள் ஒரு சக்தியாக வளர்வதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதில் வல்லாதிக்க சக்திகள் உறுதியாக இருக்கின்றன.

மேலும், வல்லாதிக்க சக்திகளின் திட்டப்படி, இஸ்லாமிய உலகு ஏதாவது ஒரு விடயத்தில் முரண்பட்டு எப்போதுமே கொந்தளிப்பு நிலையில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த ஷீஆ-சுன்னா விவகாரம் பூதாகார வடிவெடுத்திருப்பது அவர்களின் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். ஏனெனில், இஸ்லாமிய உலக ஒற்றுமையின் விளைவை அவர்கள் நன்கு அறிவார்கள்.

எனினும் அவை எல்லா முஸ்லிம் நாடுகளையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ள மாட்டா. ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா எம் கண் முன்னுள்ள நல்ல உதாரணங்கள். ஒவ்வொன்றாக அணுகுவார்கள். முஸ்லிம் நாடுகள் எப்போதுமே பாதுகாப்பிற்காக அவர்களது தயாவிலேயே தங்கியிருக்க வேண்டும். அதற்காக பிரச்சனைகளை அவர்களே உருவாக்குவார்கள், ஆபத்தில் உதவுவோர் போல் பாசாங்கும் செய்வார்கள். இப்போது அவர்களின் இலக்கு ஈரானை நோக்கியதாக உள்ளது.

மேற்குலக நாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன் IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையினரை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்தன. பதிலுக்கு ஈரான் பாரசீக வளைகுடா நுழைவாயிலான ஹோர்முஸ் நீரிணையை மேற்குலக நாடுகளின் கப்பல்கள் நுழைய முடியாத வாறு தடுத்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம் மேற்குலகின் நெருக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க ஈரான் அணு ஆயுத பரம்பல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோஷமும் வலுப்பெற்று வருகிறது.

இஸ்லாமிய புரட்சி காவலர் படை (IRGC) என்பது ஈரானிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னணிப் படையாகும். IRGCயின் உறுதியான நடவடிக்கைகள் இல்லையென்றால், ISIS தக்ஃபீரி பயங்கரவாதிகள் பிராந்தியம் முழுவதும் பரவி, பேரழிவை ஏற்படுத்தியிருப்பர்.

ISIS தக்ஃபீரி பயங்கரவாதிகள் சியோனிச சக்திகளின் உருவாக்கம் என்பது இப்போது மிகத்தெளிவாகத் துலங்கி வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதில் ஷஹீத் சுலைமானியின் பங்கு அளப்பரியது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதார தடைகளுக்கு முகங்கொடுத்து வரும் ஈரான் சகல துறைகளிலும் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவது, இன்னபிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் மேற்குலக நாடுகளை இப்போது ஆட்டிப்படைக்கிறது. எண்ணெய் வளமிக்க பாரசீக வளைகுடா நாடுகளில் ஒரு சிலவேனும் ஈரானின் வழியைப் பின்பற்றுமாயின், மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் செல்வாக்கு செல்லாக்காசாகி விடும் என்பது நிச்சயம்.

யதார்த்தம் என்னவென்றால், பிராந்திய மற்றும் உலக அளவில் புதிய கலாச்சார அடித்தளங்கள் மற்றும் கொள்கைகளை திட்டமிடுவதன் மூலம் மேற்கு நாடுகளால் மிகவும் சரியானது என்று கருதப்படும் ஆளுகை மாதிரிகளை ஈரான் இஸ்லாமிய குடியரசு சவாலுக்கு உட்படுத்தி, இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்ட ஆட்சி முறையை அமுல்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே ஈரானின் எதிரிகள் இஸ்லாமிய ஆட்சிமுறையையும் அதன் அடிப்படையிலான அரசை நசுக்குவதற்குக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உலக வல்லாதிக்க சக்திகள் அநேகமாக உலகின் எல்லா நாடுகளிலும் தமக்கென, தமது நலம்காக்கவென சில, பல குழுக்களை அமைத்து, போஷித்து வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த பகிரங்க ரகசியம். இவை ஸ்லீப்பிங் செல்களாக, மேலிடத்து உத்தரவு வரும்வரை காத்திருக்கும். இதுபோன்ற குழுக்கள் இஸ்லாமிய ஈரானிலும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு மேற்குலகால் ஈரானுக்கு எதிராக முடுக்கிவிப்பட்டுள்ள பிரசாரங்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசில் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூகப் பாத்திரங்களுடன் பிணைத்து வேண்டுமென்றே உலகெங்கும் பரப்பப்பட்டு வருகின்றன.

சமீபத்திய கலவரங்களின் போது, மஹ்ஸா அமினியின் இறப்பை புறக்கணித்து விட்டு, இஸ்லாமியக் குடியரசு அமைப்புக்கு எதிராக, மேற்குலகின் அதிகாரபூர்வ (அரசியல்) மற்றும் அதிகாரபூர்வமற்ற (ஊடக) நிறுவனங்களால் அனைத்து வகையான பொய்ச் செய்திகளையும் தயாரித்து கட்டவிழ்த்துவிடப்பட்டதை நாங்கள் கண்டோம்.

சத்தியம், சுதந்திரம், நீதி, அமைதி, இரக்கம், நேர்மை, விசுவாசம் மற்றும் அன்பு போன்ற மனித விழுமியங்களைத் தேடிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் தாமே முன்னணியில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது.

பொருளாதார தடைகள் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டு, தனி ஒரு நபரில் கரிசனைக் காட்டும் இவர்களது இந்த இரட்டை நிலைப்பாட்டை ஈரான் இஸ்லாமிய குடிரசு ஆரம்பம் தொட்டே அம்பலப்படுத்தி வருகிறது. பலஸ்தீன் மற்றும் இஸ்லாமிய நாடுகள் தொடர்பாக வல்லாதிக்க சக்திகள் வெளிப்படையாகவே காட்டி வரும் நயவஞ்சகத்தனத்தையும் ஈரான் தன்னால் இயன்ற அளவு உலகறிய செய்து வருகிறது.

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் வெளிநாட்டவர்களின் குறுக்கீடு உலக சமாதானத்திற்கு நாசம் விளைவிப்பதாக உள்ளது. இப்பிராந்திய நாடுகளின் ராணுவத்தால் பாதுகாப்பை வழங்க முடியும். சில அரசுகள் தங்கள் சொந்த தேசத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், வெளிநாட்டு ராணுவத்தின் தலையீட்டையும் பிரசன்னத்தையும் அனுமதிக்கக் கூடாது. அனைத்து பிரச்சினைகளும் சம்பவங்களும் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும், இறுதியில் சத்தியமே வெல்லும் என்ற நிலைப்பாட்டிலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு உறுதியாக இருக்கின்றது.

-          தாஹா முஸம்மில்