Wednesday, February 21, 2024

ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இஸ்ரேல் இழைத்துவரும் கொடூரமான போர் குற்றம்

Israel's heinous crime against media freedom


By Mohsen Pakaein

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 126 ஊடகவியலாளர்கள் காஸா போரின்போது திகொல்லப்பட்டுள்ளனர். இது சியோனிச ஆட்சி செய்தி ஊடகத்தை இலக்கு கொள்ளவும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தையும் சீர்குலைக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில், மீட்பு உதவி ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பல வகை மக்கள் போர்க்காலத்தில் விதிவிலகு கொண்டவர்கள், மேலும் மோதலில் ஈடுபட்டுள்ள எந்த தரப்பினராலும் தாக்கப்படவோ அல்லது தீங்கு விளைவிக்கப்படவோ கூடாது, மேலும் அவர்களின் கடமையை செய்வதிலிருந்து தடுக்கப்படக்கூடாது.

மறுபுறம், ஊடகவியலாளர்களை வேண்டுமென்றே கொலை செய்வது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது, மேலும் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அத்தகைய போர்க்குற்றங்களை விசாரித்து அவற்றின் மீது தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது, மேலும் இந்த தீர்ப்பு அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த வழக்குகள் அனைத்தும் ஊடகவியலாளர்கள் களத்தின் யதார்த்தங்களை பிரதிபலிப்பதற்கும், காஸா போர் பிரச்சினை உள்ளிட்ட நிகழ்வுகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கும், களத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு நேரடியாகத் தெரிவிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளனர் என்பதே காரணம்.

முதலாவது விடயம் பல காரணங்களுக்காக, சியோனிச ஆட்சி காஸா போரின் போது நடந்த நிகழ்வுகளைப் பற்றி உலக மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. இந்த ஆட்சி அதன் குற்றங்களை இரகசியமாக வைத்திருக்க விரும்புகிறது. உதாரணமாக, பொதுமக்களை கொல்வது மற்றும் மருத்துவமனைகளைத் தாக்குவது, குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வது, அவர்கள் செய்துவரும் போர்க்குற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும், சியோனிச ஆட்சி இவ்வாறான குற்றங்களை ஏராளமாக செய்துள்ளது, அத்தகைய குற்றங்கள், ஊடகவியலாளர்களால் பிரதிபலிக்கப்படுவதையும், அவற்றைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்கப்படுவதையும் இஸ்ரேல் விரும்பவில்லை.


இரண்டாவது விடயம் என்னவென்றால், சியோனிச ஆட்சி தமது தரப்பில் ஏற்படும் உயிரிழப்புகள் ஏனையோரால் அறியப்படுவதை விரும்பவில்லை, உண்மையில் அங்கே பரந்த அளவிலான மற்றும் மிகவும் கடுமையான தணிக்கையை விதித்துள்ளது. இஸ்ரேல் சந்தித்து வரும் சேதங்களின் அளவையும் இறப்பு எண்ணிக்கையையும் உலகும் அவர்களின் ஆதரவாளர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களும் அறியக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்து வருகிறது.

தளங்களை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவது இஸ்ரேலிய ஆட்சியின் மற்றொரு இலக்காகும். எடுத்துக்காட்டாக, யாராவது "இஸ்ரேலிய இறப்பு விகிதம்" என்ற வார்த்தையை கூகிள் செய்தால், அவர்கள் இது தொடர்பாக எந்த தரவையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள், அதற்கு பதிலாக, வெவ்வேறு மொழிகளில் கூகிள் வழங்கிய தரவு காஸா மக்களின் உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளே அங்கு பதியப்பட்டிருக்கும், இதன்மூலம் இந்த Google தேடுபொறி சியோனிச ஆட்சியின் செல்வாக்கின் கீழ் உள்ளது என்பது மிகவும் தெளிவாகிறது. இஸ்ரேலிய தரப்பினரின் சேதங்கள், உயிரிழப்புகள் மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை அறிக்கையிடும் வலைத்தளங்களைப் பார்க்கக் கூட அது அனுமதிப்பதில்லை.

மற்றொரு பிரச்சினை என்னவென்றால், போரின் தொடக்கத்தில், இஸ்ரேல் என்பது வெல்ல முடியாத ஒரு சக்தி என்ற ஒரு மாயையை உருவாக்க ஓர் உளவியல் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அதன் செய்திகளை தணிக்கை செய்ய முயன்றது.  ஆனால் காலப்போக்கில், சியோனிச ஆட்சியின் தோல்விகளை எந்த வகையிலும் மறுக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலையில், சியோனிச ஆட்சி தாமே அநியாயமிழைக்கப்பட்டோராக காட்டி ஊடகங்கள்  மூலம் ஹமாஸை குற்றவாளியாக்கவும் முயன்றது. அதற்காக குழந்தைகளின் கை, கால்களை வெட்டுவது, பெண்களை ஹமாஸ் அவமானப்படுத்துவது போன்ற சில பொய்களை ஊடகங்களில் பரப்பியது.  எவ்வாறாயினும், சுயாதீன ஊடகங்கள் இஸ்ரேலின் சூழ்ச்சி வலையில் விலாததாலும், போரின் யதார்த்தங்களை உள்ளபடி பிரதிபலித்ததாலும் அத்தகைய தந்திரம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக பத்திரிகையாளர்களை மிரட்ட முடிவு செய்த இஸ்ரேல், காஸாவில் உள்ள ஊடகவியலாளர்களை குறிவைத்து அவர்களை கொலை செய்யத் தொடங்கியது.

இந்த நடவடிக்கைகள், சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால் பல்வேறு சர்வதேச அமைப்புகளை எதிர்வினையாற்றவும் கட்டாயப்படுத்தியது. குறிப்பாக, காஸா போரில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை நடந்த அனைத்து போர்களை விடவும் அதிகம் என்று எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு (Reporters Without Borders) ஒரு ஒப்பீட்டில் அறிவித்தது. எனவே, இந்த வழக்கில் தலையிட்டு போர்க்குற்றமாக விசாரிக்க வேண்டும் என்று ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.

தற்போதைய நிலையில், தகவல் துறை தொடர்பான அனைத்து சர்வதேச நிறுவனங்களும் சர்வதேச நீதிமன்றத்தில் புகார் செய்தல் அவசியம் என்று கருதுகின்றன. ஆகவே, காஸா விடயத்தில் முக்கிய கவனம் எடுத்து செயல்படும் இஸ்லாமிய அரசுகள் மற்றும் எதிர்ப்பின் அச்சு உட்பட பல்வேறு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு, இந்த ஒடுக்கப்பட்ட தகவலறிந்த ஊடகவியலாளர்களின் குரலை வலுவான ராஜதந்திரத்துடன் உலகுக்கு தெரியப்படுத்தவும், ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதில் கவனம் செலுத்தவும் வலியுறுத்தப்படுகின்றன.

https://en.irna.ir/news/85389207/A-terrible-crime-against-media-freedom

No comments:

Post a Comment