Friday, February 2, 2024

46வது ஆண்டில் பெருமையுடன் காலடி எடுத்துவைக்கும் இஸ்லாமிய புரட்சி

Islamic Revolution enters the 46th year

45 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வருட நாடுகடத்தலில் இருந்து இஸ்லாமிய புரட்சியின் தந்தை நாடு திரும்பியவுடன், பிப்ரவரி 11 அன்று பிரிட்டிஷ் நிறுவிய மற்றும் அமெரிக்க ஆதரவிலான பஹ்லவி ஆட்சியின் நுகத்தடியிலிருந்து நாட்டை விடுவித்து, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக பத்து நாள் விடியலைத் தொடங்கிய ஈரானின் வரலாற்றில் இன்று பிப்ரவரி 1 ஒரு சிவப்பு எழுத்து நாள்.

இன்று இந்த சுப்பர்னோர்வா நாடு, உள்நாட்டு கொடுங்கோன்மை மற்றும் அந்நிய மேலாதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்து, தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்த அண்டை நாடுகளிலும் அதற்கு அப்பாலும் உள்ள நாடுகளின் பாதையை ஒளிரச் செய்கிறது என்பது மட்டுமல்லாமல், அதன் பிரகாசமான கதிர்களான இஸ்லாமும் ஈரானும் மனிதகுல எதிரிகளின் கண்களைக் குருடாக்கியுள்ளன.

கடந்த நான்கரை தசாப்தங்களில் ஈரானின் முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் பிரமிக்கத்தக்கதாக உள்ளது, இது வான்வெளி, அணுசக்தி, கனரக தொழில்கள், மருத்துவம், விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, கல்வி, கலாச்சாரம், திரைப்படக் கலைகள், விளையாட்டு, பெண்கள் உரிமைகள் மற்றும் முக்கியமானக பாதுகாப்புத் துறையில் அதன் வெற்றியிலிருந்து தெளிவாகிறது.

சில நாட்களுக்கு முன்பு, இஸ்லாமிய புரட்சியின் தற்போதைய தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி கமனேயி, பல்வேறு துறைகளில் நாட்டின் தொழில்துறை மாதிரிகளைப் பார்வையிட்ட போது, முழுமையான சுதந்திரத்தை உறுதி செய்வதில் ஈரானிய மக்களின் திறமைகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, அணிசேரா இயக்கம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, யூரேசிய பொருளாதார ஒன்றியம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (ECO) போன்ற பெரும்பாலான சர்வதேச அமைப்புகளில் இன்று ஊக்கத்துடன் செயல்படும் ஈரான் அமெரிக்காவால் சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு இந்த வெற்றிகள் அனைத்தையும் அடைந்தது.

ஆயதுல்லா கமனேயி சுட்டிக்காட்டியதைப் போல, ஈரானுக்கு எதிரான அதன் வெளிப்படையான எதிரிகளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் தீவிரம் மற்றும் பன்முகத்தன்மை உண்மையில் இஸ்லாமிய அமைப்பின் சக்தியையும், இந்த சிக்கலான சதித்திட்டங்களை ஈரான் எவ்வாறு தோற்கடித்துள்ளது என்பதையும் காட்டுகிறது.

இமாம் கொமைனி (ரஹ்) அவர்களது ஞாபகார்த்தத்தை இன்று நாம் புதுப்பித்துக் கொள்கிறோம். அவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் தெஹ்ரானுக்கு வந்தவுடன், மில்லியன் கணக்கான மக்களால் வாஞ்சையுடன் வரவேற்கப்பட்டார். பஹ்லவி ஆட்சி அமெரிக்காவில் உள்ள அதன் எஜமானர்களின் உத்தரவின் பேரில் அதன் கொலைவெறியைத் தொடர்ந்த நிலையில் உயிர் நீத்த  இறைவிசுவாச போராளிகளின் புதிய கல்லறைகளால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பெஹெஷ்ட்-இ ஸஹ்ரா அடக்கஸ்தலத்திற்கு நேராக சென்றார்.

மனசாட்சிகள் நீண்ட காலமாக உறைந்து போயிருந்தாலும், உயிரற்றதாகிவிட்டிருந்த போதிலும், உலகெங்கிலும் இறைவனின் பாதையில் மரணித்தோர் உயிருடன் இருக்கின்றனர் என்ற குர் ஆனிய வசனத்திற்கு அமைய, முஜாஹிதுகளின் ஓய்விடத்தை முதல் உரையாற்றுவதற்காக அவர் தேர்ந்தெடுத்தார்.

அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பதிவு செய்யப்பட்டு, இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சரியான நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறது, மற்றும் இஸ்லாமிய குடியரசு அரசாங்க முறையை நிறுவுவதற்கான அவரது வலியுறுத்தல், அமெரிக்காவை "பெரிய சாத்தான்" என்று பெயரிட்டது மற்றும் பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் அளித்த வாக்குறுதி புதுப்பிக்கப்படுகின்றன.

கம்யூனிசத்தின் முடிவை அவர் கணித்தார், அது இனி இல்லை. முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை அவர் முன்னறிவித்தார், அது மேற்கில் அதன் கடைசி கால்களில் உள்ளது. இஸ்ரேல் என்று அழைக்கப்படும் புற்றுநோய் கட்டி களையெடுக்கப்படும் என்று அவர் தீர்க்கதரிசனம் கூறினார் மற்றும் அதன் உயிர்வாழ்வை நீட்டிக்க அமெரிக்காவின் பெரும்பிரயத்தனம் இருந்தபோதிலும் அதன் மரண ஓலங்கள் அனைவருக்கும் தெளிவாக உள்ளன.

புனித குர்ஆனின் போதனைகளை உறுதியாக பின்பற்றுபவராக இருந்த இமாம் கொமைனி (ரஹ்) ஈரானிய மக்களின் அடிமட்ட இயக்கத்தை வெற்றியை நோக்கி வழிநடத்தவும், இஸ்லாமிய குடியரசை நிறுவவும் இறைவனின் தீர்க்கதரிசிகளின் பாதையைப் பின்பற்றினார்.

ஈரானை வலிமைமிக்க மாபெரும் சக்தியாக மாற்றிய அந்த ஞானியை அல்லாஹ் அங்கீகரித்து அருள்பாலிக்கட்டும், இமாம் கொமைனி என்ற அந்த மனிதரின் பெயரே உலக ஆணவத்தை அதன் அஸ்திவாரங்களில் தொடர்ந்து உலுக்கி வருகிறது.

https://kayhan.ir/en/news/124288/islamic-revolution-enters-the-46th-year


No comments:

Post a Comment