Friday, January 5, 2024

இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட உண்மையான இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம்

 Experts contend that the actual death toll is three times higher than what the occupying army officially declares

ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் செய்யத் ஹசன் நஸ்ரல்லாஹ் இன்று (05/01/2024) வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்:

"100 கிலோமீட்டருக்கு மேல் நீண்டு, 90 நாட்களைக் கடந்தும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு எங்கள் பதில், அனைத்து இஸ்ரேலிய எல்லைத் தளங்கள் மட்டுமல்லாது, பின்புற தளங்கள் மற்றும் திட்டமிட்ட பலவந்த குடியிருப்புகள் மீதான துல்லியமான இலக்குகளை உள்ளடக்கியது" என்று ஹிஸ்புல்லாஹ் தலைவர் மேலும் எச்சரித்தார்.

"தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொரு எதிரி தளமும் முறையாக இலக்கு வைக்கப்பட்டது, . ஒவ்வொன்றும் பல சுற்று துல்லியமான தாக்குதல்களுக்கு உள்ளானதால், எந்த எல்லைக் காவல் நிலையமும் தீண்டப்படாமல் விடப்படவில்லை, போராட்ட அணியினால் இலக்காகக் கொண்ட தொழில்நுட்ப உபகரணங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்,

"இரண்டாம் கட்டத்தின் போது, போராட்ட பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்த அச்சம் காரணமாக வெளியேற்றப்பட்ட குடியிருப்புகள் மற்றும் பல்வேறு தளங்களுக்கு அருகில் எதிரிகள் தஞ்சம் புகுந்தனர். மேலும் "இஸ்ரேலிய நிலைகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளுடன் நம்பகமான மற்றும் துல்லியமான தகவல்களை நாங்கள் பெறுகிறோம். மற்றும் குறிப்பிட்ட இடங்களில் அவர்கள் எமது இலக்காகினர்." நஸ்ரல்லா தொடர்ந்தார், "இஸ்ரேலிய நிலைகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காட்சிகளுடன் நம்பகமான மற்றும் துல்லியமான தகவல்களை நாங்கள் பெறுகிறோம்."

"தங்கள் தொழில்நுட்ப இழப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய எதிரிகள் ட்ரோன்கள் மற்றும் உளவு விமானங்களை நிலைநிறுத்துவதன் மூலம் ஈடுசெய்ய முயன்றனர், என்றாலும் இஸ்ரேலிய நிபுணர்கள் உண்மையான இறப்பு எண்ணிக்கை இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட மூன்று மடங்கு அதிகம் என்று வாதிடுகின்றனர்."என்று நஸ்ருல்லாஹ் கூறினார்,

"குடியேற்றப்பட்டவர்களின் இந்த பரவலான இடப்பெயர்வு இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று நஸ்ருல்லாஹ் மேலும் கூறினார்.

"லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யமனில் உள்ள முன்னணியின் நோக்கம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதும், அதன் வளங்களைக் குறைப்பதும், காஸாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்த நிர்பந்திக்க மூலோபாய பின்னடைவுகளை ஏற்படுத்துவதும் ஆகும்," என்று அவர் மேலும் விளக்கினார், "தெற்கு லெபனான் முன்னணியின் இரண்டாவது நோக்கம் காஸாவில் தற்போதைய நிலைமை மீதான அழுத்தத்தை தணிப்பதாகும்."

நஸ்ரல்லாவின் கூற்றுப்படி, 1948 முதல், "இஸ்ரேல்" தொடர்ந்து தெற்கு லெபனான் மீது தாக்குதல்களை நடத்திவருகிறது, உள்ளூர் மக்களையும் லெபனான் இராணுவத்தையும் குறிவைத்து படுகொலைகளை செய்துவருகிறது. தெற்கில் உள்ள மக்கள் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளை அனுபவித்து வருகின்றனர், எனினும் இன்று நிகைமை வேறு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் இடப்பெயர்ச்சியை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"நெதன்யாகு பெருமையாகக் கூறும் கூடாரத்தின் சகாப்தம் இப்போது கடந்த காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது, ஏனெனில் இன்று நாம் ஒரு உறுதியான மற்றும் கணிசமான போரில் ஈடுபட்டுள்ளோம்," என்று ஹெஸ்பொல்லா தலைவர் தொடர்ந்தார்.

"முந்தைய காலங்களில், ஒரு நடவடிக்கையானது தெற்கு லெபனான் முழுவதும் விரிவான அழிவை ஏற்படுத்தும்.ஆனால் இன்று எங்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழுமையாக விடுவிப்பதற்கும், நமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரு சமன்பாட்டை நிறுவுவதற்கும் லெபனான் முன்னணியின் ஆசீர்வாதத்தால் தொடங்கப்பட்ட ஒரு வாய்ப்பை நாங்கள் ஒரு வரலாற்றுத் தருணமாக காண்கிறோம்," என்று நஸ்ரல்லா தொடர்ந்து குறிப்பிட்டார்.

"ஷேக் சலே அல்-அரூரியின் கொலை சந்தேகத்திற்கு இடமின்றி பதிலளிக்கப்படாமலோ அல்லது தண்டிக்கப்படாமலோ போகாது, முடிவு களத்தின் கைகளில் உள்ளது, அது சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தப்படும்," என்று ஹமாஸ் துணைத் தலைவரின் படுகொலை பற்றி அவர் மேலும் கூறினார்.

\"லெபனானுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற கடுமையான மீறலுக்கு முன்னால் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஈராக்கிய எதிர்ப்பு அணியின் இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, "காஸாவுக்கான ஆதரவுதான் அடிப்படை நோக்கம், மேலும் உக்ரேனில் ஒரு இக்கட்டான நிலையில் உள்ள அமெரிக்க நிர்வாகம் ஈராக்கிய எதிர்ப்பு அணியின் இராணுவ நடவடிக்கைகளைப் அச்சம் கொண்டுள்ளது," என்று நஸ்ரல்லா தெரிவித்தார்.

"ஈராக்கில் இஸ்லாமிய போராளிகள் பெறும் சாதகமான விளைவு, காஸாவுக்கு ஆதரவாக ஒரு முன்னணியைத் திறப்பதன் சாதகமான விளைவு, அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து ஈராக் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான உண்மையான வாய்ப்பாகும்" என்று ஹெஸ்புல்லா தலைவர் தொடர்ந்தார்.

"இன்று, ஈராக்கியர்கள், ஈரானியர்கள் மற்றும் பிராந்திய மக்களின் இரத்தக்களரிக்குக் காரணமான ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும்  மற்றும் வன்முறையாளர்களிடமிருந்தும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள ஈராக் அரசாங்கம், பிரதிநிதிகள் சபை மற்றும் ஈராக்கிய மக்களுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. "அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து துரத்தி விடுங்கள்" என்று ஈராக்கியர்களை நஸ்ரல்லா தொடர்ந்து வலியுறுத்தினார்.

நஸ்ரல்லா மேலும் கூறுகையில், "ஐ.எஸ்.ஐ.எல்-ஐ எதிர்த்துப் போராட ஈராக்கிற்கு அமெரிக்கப் படைகள் தேவையில்லை. தற்போது, சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எல் உடன் தொடர்புடைய சில சக்திகள் அமெரிக்கப் படைகளிடமிருந்து தஞ்சம் கோரியுள்ளன அல்லது ஆதரவை நாடியதற்கான அறிகுறிகள் உள்ளன.

"அல்-கய்தா அமைப்பு காஸா விடுதலை போராட்டத்தில் ஒன்றிணைந்து போராடும் அனைத்து போராட்டக் குழுக்களின் முயற்சிகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் மதிப்பிழக்கச் செய்வதற்கும் தீவிரமாக முயன்றது, இதன் மூலம் அவர்களின் சொந்த தோல்விகளை மறைக்க முயற்சிக்கிறது," என்றும் நஸ்ரல்லா எடுத்துரைத்தார்.

"இன்று போராட்ட அச்சின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுபவர்கள் காஸா மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து எதையும் பங்களிக்கத் தவறிய தனிநபர்கள் தான்," என்று அவர் மேலும் கூறினார்.

"ஜிகாத்தில் ஈடுபடுவது மரியாதையைத் தருகிறது, அதே நேரத்தில் அதைத் தவிர்ப்பது அவமானத்திற்கு வழிவகுக்கிறது; செங்கடலில் யேமனியர்களின் எதிர்பாராத நடவடிக்கைகளால் அலட்சியமான (அறபு) ஆட்சியாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளனர்," என்றும் ஹிஸ்புல்லா தலைவர் குறிப்பிட்டார்.

"ஒரு குறிப்பிடத்தக்க தேசிய சாதனை என்னவென்றால், அன்ஸாருல்லாஹ் ஒரு உள் பிரிவாக இருந்து சர்வதேச சமன்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக பரிணமித்துள்ளது, அதை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும் அதன் முக்கியத்துவம் கணக்கில் எடுக்கபட வேண்டிய ஒன்றாக உலகத்தை கட்டாயப்படுத்தியுள்ளது" என்று உரைத்த நஸ்ரல்லா பாலஸ்தீனத்திற்கான யேமனின் ஆதரவை வெகுவாகப் பாராட்டினார்.

https://en.mehrnews.com/news/210354/Hamas-official-assassination-not-to-definitely-go-unanswered

தமிழில்: தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment