Friday, September 16, 2022

வேகமாக நெருங்கி வரும் அதன் முடிவையிட்டு இஸ்ரேல் கலக்கம்...!

 Iran to definitely respond to any Israel intimidating actions


இஸ்ரேலிய ஆட்சியினதோ, அதன் கூலிப்படையினதோ அல்லது அதற்கு உதவி செய்யும் ஆட்சிகளினதோ எந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கும் ஈரானின் பதில் தீர்க்கமானதாக இருக்கும் என்று IRGC யின் காத்தமுல்-அன்பியா தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷித் கடந்த வாரம் தெரிவித்தார்.

எக்ததார் (வலிமை) 1401 பயிற்சியின் ஓரங்கமாக ஈரானிய இராணுவ தரைப்படைத் தளபதிகள் குழுவிடம் பேசிய மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷித்எமக்கு எதிரான தொடர் சதிகளை சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் கிரிமினல் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஏற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஈரானிய அணுசக்தி நிலையங்கள், ஈரானின் ஏனைய நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல் பற்றியும் அலி ரஷித் குறிப்பிட்டார், "ஹஸ்ரத் காத்தமுல்-அன்பியா (ஸல்) தலைமையகத்தின் கருத்துப்படி, சியோனிச ஆட்சியின் தேசிய பாதுகாப்புக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு முதன்மையான அச்சுறுத்தலாக உள்ளது" என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

"இந்த தலைமையகத்தின் படி, ஈரானின் நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கிரிமினல் சியோனிச ஆட்சியின் எந்தவொரு அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் அமெரிக்காவின் தகவல், ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவைக் கொண்டதாகவே இருக்கும். [ஈரானிய] ஆயுதப்படைகளின் பதில் அவற்றின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும். அதே மட்டத்தில் தீர்க்கமானதாகவும் இருக்கும்," என்று ஈரானிய ஜெனரல் மேலும் கூறினார்.

"ஈரான் இஸ்லாமிய குடியரசின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சியோனிச ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து கூலிப்படைகளும் குழுக்களும் ஆட்சிகளும் அந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.

இராணுவ தரைப்படையின் எக்ததார் (வலிமை) 1401 இராணுவப் பயிற்சியை ஜெனரல் ரஷீத் மேலும் சுட்டிக்காட்டினார், "இராணுவ தரைப்படை சூட்சுமம் எதிர்கால போர்கள் மற்றும் கணிக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு ஏற்பவே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டன."

மத்திய ஈரானில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஈரானிய இராணுவத்தின் தரைப்படையின் வலிமைக்காண் பயிற்சி "புதிய அச்சுறுத்தல்களை" எதிர்கொள்ளும் வகையில் தரைப்படைகளின் வலிமையை மதிப்பிடும் நோக்கத்துடன் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்தார்.

இந்தப்பயிற்சியானது இராணுவ தரைப்படை UAVகள், T72S டாங்கிகளின், மற்றும் பல்வகை ஆயுதங்கள், வான் ஏவுகணை உட்பட பல்வேறு இராணுவ உபகரணங்களையும் கொண்டு நடத்தப்படுகிறது.

https://en.mehrnews.com/news/191158/Iran-to-definitely-respond-to-any-Israel-intimidating-actions


Israel Terrified at Its Fast-Approaching End

இது இவாறிருக்க, வேகமாக நெருங்கி வரும் அதன் முடிவையிட்டு இஸ்ரேல் கலக்கமடைந்துள்ளது...! என்பதை அதன் அண்மைய அச்சுறுத்தல்களில் இருந்து உணரக்கூடியதாக உள்ளது.

அலெப்போ விமான நிலைய ஓடுபாதையில் குண்டு வீசிய இஸ்ரேல் எனப்படும் பயங்கரவாத / இனவெறி அமைப்பால் சிரிய குடிமக்கள் வசதி மீது மற்றொரு தூண்டுதலற்ற தாக்குதலின் விளைவாக அலெப்போ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த சீண்டல் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளின் சில ஆட்சியாளர்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சியோனிஸ்டுகளை பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில், ஐ.நா வழக்கம் போல், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை விரும்பாததால், கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.

வலுவான, அரசியல் ஸ்திரமான மற்றும் தொழில்ரீதியாக சக்திவாய்ந்த நாடாக சிரியா ஆகிவிடுமாயின் அது ஒரு துடிப்பான பொருளாதாரத்துடன் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக காத்திருக்கும் போராளிகளின் பிரச்சாரத்தை வழிநடத்தும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை. மற்றும் அலெப்போ விமான நிலையம், மற்ற எதிரிகளால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப்போல், வலுவான பாதுகாப்பு வழிமுறைகளுடன் மீண்டும் கட்டமைக்கப்படும், இதன் மூலம் சிரியாவை பலவீனப்படுத்துவதில் தோல்வியுறும் சியோனிஸ்டுகளின் விரக்தி இன்னும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

தன்னை பெரும் புத்திசாலியாகவும் பலசாலியாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல் அதன் முடிவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதன் கொடூரமான கொலைகார ஏஜெண்டுகளான தக்ஃபிரி பயங்கரவாதிகள் மற்றும் சிரிய பிரதேசத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, Dayr az-Zore எண்ணெய் வயல்களை சூறையாடுவதில் மும்முரமாக இருக்கும் அதன் தோழர்களான CENTCOM பயங்கரவாதிகளின் இயலாமையால், இஸ்ரேல் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

இவ்வாறு, சிரிய ஜனாதிபதி ஆசாத்தை அச்சுறுத்தும் ஒரு வீண் முயற்சியில், சியோனிஸ்டுகள் ஈடுபட்டு உள்ளனர். சிரிய உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளில் அவசர அவசரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், எந்த சாக்குப்போக்கை கூறியாவது முழு அளவிலான போர் ஒன்றுக்கு செல்வதவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இஸ்ரேல் அதன் சட்டமன்றத்துக்கான தேர்தலை எதிர்வரும் நவம்பரில் சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய போரொன்று அவர்களுக்கு அவசியமாகும். 

இஸ்ரேலின் சூழ்ச்சியை டமாஸ்கஸ் நன்றாகவே அறியும்; ஒரு அகால மோதல் ஒன்றுக்கு இழுக்கப்படுவதற்கு எதிராக சிரியா உறுதியாக உள்ளது, ஆனால் அதே நேரத்தில், சியோனிச கொசு கடித்தால், சிரியா தன்னை தற்காத்துக் கொள்ள தயாராக உள்ளது.

மேலும், கொசு மட்டுமல்ல கொடிய தேள் மற்றும் பாம்பு கடிகளை எதிர்கொள்வதற்கும் சிரியாவில் நோய் எதிர்ப்பு மருந்துகள் (அதிநவீன ஆயுதங்கள்) உள்ளன.

சிரியா 1948 முதல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள விஷ ஜந்துக்களை, இப்பகுதியில் இருந்து அழிக்க வேண்டிய நன்நாளை எதிர்பார்த்த வண்ணமும் இருக்கிறதது; ஒரு நாள் அது அளிக்கப்பட்டே தீரும் என்பதிலும் உறுதியாய் இருக்கிறது.

மேலும், சிரியாவை தக்ஃபிரிஸ்தானாக மாற்றும் பயங்கரவாத முயற்சியின் போது டமாஸ்கஸில் உள்ள சட்டப்பூர்வ அதிகாரிகளுடன் உறுதியாக நிற்கும் நண்பர்கள், எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கும் எதிராக அணிதிரள்வார்கள் என்பது உறுதி.

இம்முறை போராட்டம் சிரிய மண்ணிற்கு மட்டும் மட்டுப்பட்டதாக இருக்கப்போவதில்லை. முழு எதிர்ப்பு முன்னணியின் அணிதிரட்டலுடன், அது எதிரி முகாமுக்ககுள்ளேயே கொண்டு செல்லப்படும். 

அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய ஆட்சிகள் மற்றும் பாரசீக வளைகுடாவின் தேசத்துரோக அரபு நாடுகளின் இஸ்லாம் விரோத ஆட்சியாளர்களான இஸ்ரேலின் கூட்டாளிகள், அவர்கள் செய்யும் அரச பயங்கரவாதத்தை வழக்கம் போல் கண்களை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும்  பக்கச்சார்பான ஐ.நா. டமாஸ்கஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளை எவ்வளவு கடுமையாக கண்டிக்க முயற்சித்தாலும் பரவாயில்லை தொடரவிருக்கும் போராட்டத்தை அவற்றால் ஒருபோதும் தடுக்க முடியாது.

இஸ்லாமிய குடியரசு மற்றும் அதன் அமைதியான அணுசக்தி நிறுவல்களுக்கு எதிரான கிரிமினல் சியோனிச அமைப்பு அதன் அச்சுறுத்தல்களை ஏன் அதிகரித்தது என்பது இப்போது தெளிவாகிறது. இதுவே சிரியா தனது பதிலடி கொடுக்கும் உரிமையைப் பயன்படுத்தியிருந்தால், ஐ.நா. என்று அழைக்கப்படும் செவிட்டு அமைப்பு பெரும் கூச்சலுடன் துள்ளிக்குதித்திருக்கும்.

எவ்வாறாயினும், ஆக்கிரமிப்பு செய்தால் டமாஸ்கஸின் உதவிக்கு ஈரான் வருவதைத் தடுக்கும் ஒரு பயனற்ற முயற்சியே இதுவாகும்; இது ஓர் உளவியல் போரைத் தவிர வேறில்லை, மேலும் ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியபடி, இஸ்ரேலின் ஒரு தவறான நடவடிக்கை (அமெரிக்க ஆதரவுடனோ அல்லது இல்லாமலோ), அதன் அழிவுக்கே வழிவகுக்கும் என்பது திண்ணம்.

https://kayhan.ir/en/news/106682/israel-terrified-at-its-fast-approaching-end

No comments:

Post a Comment