Friday, March 25, 2022

அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி செல்வதே வளர்ச்சியை அடைய ஒரே வழி - புரட்சித் தலைவர் காமனெய்

 Today is one of the most openly disgraceful periods in terms of oppression - Imam Khmane'i

பிறந்துள்ள பாரசீக புத்தாண்டில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசிய உற்பத்தியின் முக்கியத்துவம் அறிந்து முன்னோக்கி செலவதாகும் என்று புரட்சித் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் குறிப்பிட்டார் மேலும் அவர் சமகாலத்தை "நடப்பு வரலாற்றில் ஒடுக்குமுறையின் மிகவும் வெளிப்படையான அவமானகரமான காலகட்டங்களில் ஒன்று" என்று விவரித்தார்.

பாரசீக நவ்ருஸ் அல்லது புத்தாண்டை ஆன்மீக விஷயங்களுடன் கலப்பது ஈரானிய புத்தாண்டின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும் என்றும் "வசந்தம் என்பது நம்பிக்கையின் வெளிப்பாடு, மேலும் இது புத்துணர்ச்சி மற்றும் புதிய வளர்ச்சியின் செய்தியைக் கொண்டுவருகிறது என்றும் அவர் கூறினார், இது மனிதகுல வரலாற்றில் நம்பிக்கையின் மிகப்பெரிய ஆதாரமான இமாமின் பிறந்த நாளான ஷா'பான் 15 ஆம் தேதியுடன் இவ்வாண்டு ஒத்துப் போவதால் அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகியுள்ளது.

மக்களுக்காக குரல் எழுப்புபவர்கள் மற்றும் எழுதுபவர்கள் அல்லது வாழ்த்து செய்திகளை அனுப்புபவர்கள், மக்களின் நம்பிக்கையை தங்களால் இயன்றவரை அதிகரிக்க வேண்டும், ஏனெனில் நம்பிக்கை முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தசாப்தத்திலும் மற்றும் 1401 ஹிஜ்ரி சூரிய ஆண்டிலும் பொருளாதார முழக்கங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைப் பற்றி பேசுகையில், "இந்த ஆண்டுக்கான பொருளாதார தலைப்பு மற்றும் முழக்கம் "நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசிய உற்பத்தியின் முக்கியத்துவம்" என்று தெரிவுசெய்யப்பட்டதற்கான காரணம், பொருளாதார பிரச்சினையின் முக்கியத்துவம் மற்றும் 1390களில் எதிர்கொண்ட பொருளாதார  சவால்களாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்குத் திட்டமிடுதல், செயல்படுதல் மற்றும் சரியான திசையில் நகர்த்துதல் ஆகியவை முக்கியமானவையாகும்.

நிர்வாகக் கிளையில் உள்ள அதிகாரிகளுக்கும், நாட்டை நடத்துவதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொருளாதாரம்தான் முக்கியப் பிரச்சினை என்று அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “நிச்சயமாக, புதிய அணுகுமுறைகள் மக்களால் பயன்படுத்தப்படுவதை நாம் இப்போதே காணலாம். இந்த அணுகுமுறைகள் சரியாக தொடர்ந்தால், ஊக்கமளிப்பதாய் இருக்கும்.

அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி செல்வதே பொருளாதார வளர்ச்சியை அடைய ஒரே வழி என்று இமாம் கமேனி வலியுறுத்தினார்.  “அறிவு அடிப்படையிலான பொருளாதாரம் என்பதன் மூலம், எல்லாத் துறைகளிலும் அறிவியல், தொழில்நுட்ப அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதன் விளைவாக, உற்பத்திச் செலவு குறைதல், செயல்திறன் அதிகரிப்பு, பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் தரம் மேம்படுவது, உலகச் சந்தைகளில் போட்டித்தன்மையுடையதாக மாறுவது மற்றும் நாட்டிற்குள் பொருட்களின் விலையில் குறைப்பு ஆகியவை நிகழும்.”

பொருளாதாரத்தில் நியாயமான முன்னேற்றத்தை அடைவதற்கும்  வறுமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் அறிவு சார்ந்த உற்பத்தியை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில் "அறிவு சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், இதை செய்ய முடியும் மற்றும் எம்மால் சாத்தியமான ஒன்று" என்றார்.

நாட்டில் 6,700 அறிவு சார்ந்த நிறுவனங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “புத்தாண்டில், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிவு சார்ந்த நிறுவனங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். ஆனால் இது இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தும் நிறுவனங்களை சிலர் நிறுவுவதற்கு காரணமாக இருக்கக்கூடாது.

இமாம் காமனெய் அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள பல உலகளாவிய முன்னேற்றங்களைக் குறிப்பிட்டு, "உலகின் தற்போதைய முன்னேற்றங்களை ஒருவர் பார்க்கும்போது, ஈரானிய தேசத்தின் உரிமை மற்றும் சரியான தன்மை முன்னெப்போதையும் விட தெளிவாகிறது," என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பும், சரணடைய மறுப்பதும் மற்றும் அநீதி சாராது இருப்பதும், ஆணவத்தின் முன்னணியை எதிர்கொள்வதில் ஈரான் தேசம் கொண்டுள்ள உறுதியாகும். மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் இஸ்லாமிய குடியரசையும் நாட்டையும் உள்நாட்டில் வலுப்படுத்துவதும் எமது தீர்மானமாகும்; "இந்த முடிவுகள் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சரியான மற்றும் உறுதியான தீர்மானங்களாகும்" என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் விளக்கினார்.

ஒடுக்கப்பட்ட, முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையையும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டை விட்டு அமெரிக்கர்கள் வெளியேறிய விதத்தையும் அவர் குறிப்பிட்டார்.  “உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றொரு உதாரணம். மேற்கத்திய நாடுகளால் அமர்த்தப்பட்ட அந்நாட்டின் ஜனாதிபதி, மேற்குலகின் போக்கை விமர்சிக்கையில் கடுமையான தொனியைப் பயன்படுத்துகிறார் என்றும் தலைவர் கூறினார்,

யெமன் பிரச்சினை குறித்தும், அந்நாட்டு மக்கள் மீது தினமும் நடக்கும் குண்டுவெடிப்பு குறித்தும் இமாம் காமனெய் கண்டித்தார். சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 80 இளைஞர்கள் மற்றும் வாலிபர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் பேசிய அவர், “இந்தப் பிரச்னைகள் அனைத்தும் உலகையே சூழ்ந்திருக்கும் இருளைக் காட்டுவதாகவும், உலகையே தங்கள் கைகளில் வைத்திருக்கும் இரத்தவெறி கொண்ட ஓநாய்களின் உண்மை நிறத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன” என்றும் அவர் கூறினார்.

உக்ரைனின் நிகழ்வுகள் மேற்கில் இனவெறி இன்னும் இருப்பதைக் காட்டுவதாக இமாம் காமனெய் குறிப்பிட்டார். "வெள்ளையர்களிடமிருந்து கறுப்பர்களை பிரித்து அவர்களை ரயில்களில் இருந்து (அகதிகள்) இறக்கிவிடுவது அல்லது மத்திய கிழக்கில் செய்யும் அநியாயங்களை மறைத்து அதற்கு பதிலாக ஐரோப்பாவில் போர் நடக்கிறது என்று தங்கள் ஊடகங்களில் வருத்தம் தெரிவிப்பது மேற்குலகின் வெளிப்படையான இனவெறிக்கு எடுத்துக்காட்டுகள்," என்றும் அவர் கூறினார்,

பல்வேறு நாடுகளில் அடக்குமுறையைக் கையாள்வதில் மேற்கத்திய நாடுகளின் இரட்டைத்தன்மையையும் சுட்டிக்காட்டினார், “அவர்களுக்குக் கீழ்ப்படியும் நாடுகளில் அடக்குமுறைகள் நடந்தால், அவை எந்த எதிர்வினையும் காட்டாது. இத்தனை கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகள் இருந்தபோதிலும், அவர்களை மனித உரிமைகளின் காவலர்கள் என்று கூறுகின்றனர். இந்த பொய்யான கூற்றைப் பயன்படுத்தி, சுதந்திர நாடுகளை மிரட்டுகிறார்கள், என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அடக்குமுறை மற்றும் ஆணவத்தின் அடிப்படையில் சமகால வரலாற்றில் மிகவும் வெளிப்படையான அவமானகரமான காலகட்டங்களில் ஒன்று இன்றாகும். உலக மக்கள் இந்த அடக்குமுறை மற்றும் இரட்டை வேடத்தின் செயல்களை நேரடியாகக் காண்கிறார்கள் என்றும் தலைவர் குறிப்பிட்டார்,

கடந்த ஆண்டு தனது உரையில், நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுடன் பிணைக்கக் கூடாது என்று இமாம் கமேனி வலியுறுத்தியிருந்தார். இந்த நிலைப்பாட்டை தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், “அதிர்ஷ்டவசமாக, நாட்டின் புதிய கொள்கைகள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், ஒருவர் முன்னேறலாம், வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கலாம், எண்ணெய் மற்றும் புதிய பிராந்திய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் மற்றும் பிற விஷயங்களில் முன்னேற்றம் காணலாம் என்பதைக் காட்டுகின்றன," என்றும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் வலியுறுத்தினார்.

https://english.khamenei.ir/news/8915/Today-is-one-of-the-most-openly-disgraceful-periods-in-terms

No comments:

Post a Comment