Monday, January 31, 2022

முஸ்லிம் உலக வளங்கள் எவ்வாறு வீணடிக்கப்படுகின்றன

How the resources of the Muslim world are being wasted

முஸ்லிம் நாடுகளை இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக மேற்குலக நாடுகள் மற்றும் சியோனிச சக்திகள் ஒன்றிணைந்து குத்திக் குதறி துவம்சம் செய்துள்ள நிலையை நாம் பாலஸ்தீனில், ஆஃகானிஸ்தானில், ஈராக்கில், லிபியாவில், சிரியாவில் கண்டுகொண்டு இருக்கின்றோம்.


இவ்வாறான ஒரு நிலையில், ஒன்றுபட்டு செயல்படவேண்டிய முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் நாடுகள் அற்ப விடயங்களை காரணம் காட்டி, தமக்குள்s சண்டையிட்டுக்கொண்டு, தமது செல்வம் மற்றும் வளம் அனைத்தையும் வீணடித்துக்கொண்டு இருப்பதை காண மிகவும் கவலையாய் இருக்கிறது.

ஒரு சகோதர நாட்டை அழித்தொழிப்பதில் சவூதி அரேபிய பல பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது; இதுவரை பல்லாயிரம் அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். செலவு செய்த இந்தப் பணத்தின் பாதியளவு பணத்தை வறுமையில் வாடிய யெமனின் அபிவிருத்திக்காக செலவு செய்திருப்பின் அந்த நாட்டு மக்கள் என்றென்றும் சவுதிக்கு நன்றிக்கடன் பட்டவர்களாய் இருந்திருப்பர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு எப்போதும் பிராந்தியத்தில் சமாதானத்தையே வலியுறுத்தி வருகிறது. இதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் அந்நாடு செய்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

யெமன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வை வரவேற்கிறோம்,

இந்த வறிய அரபு நாட்டின் மீது சவுதி திணித்துள்ள ஏழு ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய எந்த முயற்சியையும் தெஹ்ரான் வரவேற்கிறது.

"முற்றுகையிட்டு, பொருளாதார தடைகளை விதித்து மற்றும் இராணுவத் தாக்குதல் மேற்கொண்டு யெமன் நெருக்கடியைத் தீர்க்க முடியாது, மாறாக அவ்வாறான வன்முறை செயல்கள் பிராந்தியத்தில் பதட்டத்தையே விரிவுபடுத்தும்" என்று அண்மையில் ஒரு வைபவத்தில் உரையாற்றும் போது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே குறிப்பிட்டார். யெமனின் உள்நாட்டு விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஈரான் எப்போதும் ஆதரவளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சவூதி அரேபியா அதனது 29 நட்பு நாடுகளை இணைத்துக்கொண்டு, 2015 மார்ச்சில் அரபு உலகின் மிகவும் வறிய நிலையில் இருந்த யெமன் தேசத்தின் மீது நியாயமற்ற போரைத் தொடங்கியது, சவுதியினதும் அமெரிக்காவினதும் நேசரான அப்தர் ரப்பு மன்சூர் ஹாதியை ஆட்சியில் மீண்டும் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வேண்டாத போரை அந்த நாட்டின் மீது திணித்தது.

சவுதியின் இந்தச் செயல் பல்லாயிரக்கணக்கான அப்பாவி யெமன் மக்களைக் கொன்று, முழு நாட்டையும் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் காட்சியாக மாற்றியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் போரின் நோக்கத்தை அடைந்து விடுவோம் என்று கூறி ஆரம்பித்த போர் ஏழாண்டுகளாக தொடர்கிறது;. சவுதியினால் இலக்கை அடைய முடியவில்லை.

இந்த ஆக்கிரமிப்பு கூட்டணி யெமன் மீது முழுமையான முற்றுகையைச் செயல்படுத்தி வருகிறது, நாட்டின் உயிர்நாடியான ஹுதைதா துறைமுகத்தை, மிகவும் அடிப்படைத் தேவை சரக்கு கப்பல்களைக் கூட நுழைய விடாது சகோதர மக்களை திணறடித்துக்கொண்டு இருக்கிறது.இதன் காரணமாக யெமனின் இன்றைய நிலை உலகின் பேரவலமாக மாறியுள்ளது.

"பிராந்தியத்தின் நெருக்கடிகள் எதற்கும் தீர்வு போர் மற்றும் வன்முறையை நாடுவதால் பெற்றுக்கொள்ள முடியாது" என்று கதீப்சாதே கூறினார், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அமைதியை நிறுவுவதன் மூலமும் பதற்றத்தைத் தவிர்ப்பதன் மூலமும் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

இது இவ்வாறிருக்க

யெமன் இப்போது 1,600 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய வல்லமையைப் பெற்றுள்ளது

கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபி மீதான யெமனின் பதிலடி தாக்குதல், சமீப ஆண்டுகளில் யெமன் படைகள் ராணுவ ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றங்களை வெளிப்படுத்தியது, இது மூர்க்கமான சவூதி தலைமையிலான போரை எதிர்கொள்வதில் அவர்களின் இராணுவ முன்னேற்றத்தின் மிகவும் வெளிப்படையான காட்சியாகும் என்று the Wall Street Journal கூறுகிறது.

தமது நாட்டுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை அடுத்து அன்ஸாருல்லாஹ் போராளிகள் அபுதாபி மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளை குறிவைத்து பதிலடித் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

யெமன் படைகள் "இதற்கு முன்னரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தாக்கியுள்ளன, ஆனால் எமிராட்டிகள் அதை ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை" என்று அமெரிக்க நாளிதழ் The Wall Street Journal குறிப்பிட்டுள்ளது

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி உறுப்பினரின் தாக்குதலில் தொடங்கிய பல வருட யுத்தத்தில் இருந்து யெமன் படைகள் ராணுவ ரீதியாக எந்த அளவு வலுப்பெற்றுள்ளன என்பதை குறிப்பிட்ட பதில் தாக்குதல்கள் காட்டுகின்றன என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் மேலும் கூறியது.

அபுதாபி விமான நிலையம் மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் ஆலை மீது அதன் தாக்குதல்கள் மூலம், யெமன் உள்நாட்டுப் போரில் சவூதி தலைமையிலான கூட்டணியில் தீவிரம் காட்டிய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பங்களிப்புக்கு யெமனியர்கள் வெளிப்படையாக பதிலடி கொடுத்துள்ளனர்.

யெமனின் எதிர் தாக்குதல்கள் "ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்னர் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை நம்பியிருந்த" படைகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ முன்னேற்றங்களின் காட்சியாக இருந்தது.

இப்போது, அவர்கள் தங்கள் மலைபாங்கான பிரதேசங்களில் இருந்து "1,000 மைல்கள் (1,600 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க முடியும்" என்று அந்த செய்தித்தாள் மேலும் கூறியது.

சவூதி மற்றும் அமெரிக்க நண்பரான அதன் முன்னாள் தலைவர் மன்சூர் ஹாதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சவூதி மற்றும் அதனுடன் இணைந்துள்ள நாடுகள் மேற்கொண்ட ராணுவ தாக்குதல்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த முடிந்ததே அன்றி அவர்கள் போரினால் ஏற்படுத்த நினைத்த ஆட்சி மாற்றத்தை செய்ய முடியவில்லை.

போரின் தொடக்கத்தில், ராக்கெட் மற்றும் கிரெனேட் லாஞ்சர்கள் போன்ற இலகுரக ரக ஆயுதங்களை மட்டுமே கொண்டிடிருந்த யெமன் படைகள் உள்நாட்டில் பெற்றுக்கொள்ளக்கூடிய இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ட்ரோன்கள், குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களை உருவாக்கும் திறனை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய அறிக்கையின் அடிப்படையில் தி ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வார எதிர்த்தாக்குதலை மேலும் விரிவாக விவரித்த தி ஜர்னல், பூர்வாங்க எமிராட்டி விசாரணையை மேற்கோள் காட்டி, குறிப்பிட்ட தாக்குதலில் "ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள்" சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறியது.

சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை எந்த அளவு அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதேநேரம் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களது நவீன ஆயுதங்களை பரீட்சிக்கும் இடமாகவும் இப்பிராந்தியத்தை ஆக்கியுள்ளது.

- தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment