Thursday, December 24, 2020

ஈரானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

 Christmas in Iran

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகையாகும்.

ஈரானில் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்றாகும். அவர்களின் மத விதிகளின்படி தமது வாழ்க்கையையே அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது.  கிறிஸ்துமஸ் ஒரு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் ஆர்மீனிய மரபுவழி ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பின்பற்றும் ஆர்மீனியர்கள் அல்லது கிழக்கின் அசிரிய தேவாலயத்தைப் பின்பற்றும் அசீரியர்கள். ஆவர் .ஆர்மீனியர்கள் ஜனவரி 6 ஆம் தேதி கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள், அவர்கள் எபிபானியையும் (Epiphany), மற்ற கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். இருப்பினும், இந்த பண்டிகை நிகழ்வின் அரவணைப்பும், அழகும் ஆண்டின் கடைசி மாதத்தில் குளிர்காலத்தின் உறையும் குளிரையும் பொருட்படுத்தாது அடுத்த மாதம் ஜனவரி 6 ஆம் திகதி வரை அனைவரையும் ஈர்த்துவிடும்.

இத்தினத்தை குறிக்குமுகமாக கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மிகவும் உற்சாகமாக கழிப்பர். கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வர்.

கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் பச்சை, பொன் மற்றும் சிவப்பு நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் எங்கும் காணலாம். தெருக்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதே நேரத்தில், பொதுவாகவே ஈரானியர்கள் இத்தகைய பண்டிகையை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஈரானின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 1% க்கும் குறைவானவர்கள் என்றாலும், மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திலும் அரசியலமைப்பு ரீதியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முஸ்லிம்களுடன் ஒருபோதும் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவர்களது மதத்தைப் பின்பற்ற பூரண உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பல கிறிஸ்த்தவ தேவாலயங்கள் அரச செலவில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய கிறிஸ்தவர்கள் ஆர்மீனியர்களும் அசீரியர்களும் ஆவர். அவர்களின் சனத்தொகை 5 இலட்சத்துக்கு சற்று அதிகம். ஆர்மீனியர்கள் மற்றும் அசீரியர்களின் வழித்தோன்றல்கள். இவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பறந்து வாழ்ந்தாலும் கணிசமானோர் தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபாஹான் போன்ற நகரங்களின் சுற்றுப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

மத்திய கிழக்கில் ஈரான் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது, ஈரானிய மக்கள் கிறிஸ்தவர்களையும் அவர்களின் மதத்தையும் மிகவும் மதித்து கண்ணியப்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் நண்பர்களையும் அயலவர்களையும் மகிழ்விப்பதில் அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தெஹ்ரானின் வீதிகள் பலவும் அலங்கரித்து காணப்படும்.

ஈரானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பிரமாண்டமான ஹோட்டல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது என்று நினைக்க வேண்டாம். தலைநகரம் முழுவதும் கடைகளின் சிறிய மற்றும் பெரிய அளவிலான அலங்கார காட்சிப் பெட்டிகளுக்குப் பின்னால் உள்ள வார்ப்பு விளக்குகளால் நீங்கள் மயக்கப்படுவீர்கள். அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அவற்றின் சிவப்பு மற்றும் பச்சை ரிப்பன்களைக் கொண்டு சிறிய பொன் நிற பந்துகள் உங்கள் கண்களில் மின்னும். மிகவும் பிரபலமான ஷாப்பிங் மையங்களில், குறிப்பாக தெஹ்ரான், சாண்டா கிளாஸ் (Santa Claus) அல்லது பாபா நோயல் (பாரசீக மக்கள் அவரை அழைப்பது Bābā Noel) போல உள்ளவர்கள் உங்களை பிரதான நுழைவாயிலில் வரவேற்பார்கள்.

நீங்கள் தெஹ்ரானின் கிறிஸ்தவ சுற்றுப்புறங்களில் தெருக்களில் உலாவும்போது, கிறிஸ்துமஸ் மரங்களையும் அதன் அடையாள அலங்காரங்களையும் வாங்குவதில் மக்கள் மும்முரமாக இருப்பதைக் காண்பீர்கள்.

மற்ற நகரங்களும், கிறிஸ்துமஸுக்கான அவர்களின் கொண்டாட்டங்களும் (தெஹ்ரானில் நீங்கள் காணும் வண்ணம் வண்ணமயமாகவும் கண்களைக் கவரும் விதமாகவும் இல்லாவிட்டாலும்) குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஈரானிய-ஆர்மீனியர்கள் வாழும் தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபாஹானின் ஜோல்பா சுற்றுப்புற பிரதேசங்களிலும் காண்பீர்கள்.

கிறிஸ்தவ சுற்றுப்புறங்கள் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் கிறிஸ்துமஸின் நிறத்துடன் வண்ணமயமாக்கப்படுகின்றன, மேலும் கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதற்காக மக்கள் தங்கள் இதயங்களையும் ஆன்மாவையும் தயார் செய்ய தங்கள் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்.

ஈரானில் கிறிஸ்தவ மக்கள் டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து பால், முட்டை மற்றும் இறைச்சியைத் தவிர்க்கும் விரதமிருப்பர். இந்த விரதத்திற்குப் பிறகு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 அன்று புனித தேவாலயத்தில் ஒன்றுகூடி விசேட ஆராதனைகளில் ஈடுபடுவர். அதன் பிறகு ஒரு ஆடம்பரமான விருந்தைக் ஏற்பாடு செய்வர். இவ்விருந்தில் ஹரிசா எனப்படும் வறுத்த சுவையான வான்கோழி பரிமாறப்படுகிறது.

ஈரானில் கிறிஸ்துமஸ் பருவத்தை செலவிடுவது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். இந்த நாட்டின் கிறிஸ்தவ சிறுபான்மையினரால் மட்டுமே கொண்டாடப்படும் நிகழ்விற்காக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவதைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்..

எனவே, நீங்கள் இந்த கிறிஸ்துமஸை வேறு விதமாகவும், வெவ்வேறு கலாச்சார பின்னணியை கொண்டமக்களுடன் கொண்டாட விரும்புகின்றீர்கள் என்றால், ஈரான் ஒரு சிறந்த தேர்வாகும்.

https://www.visitouriran.com/blog/christmas-in-iran/

 

 

No comments:

Post a Comment