Sunday, June 20, 2021

செய்யித் இப்ராஹிம் ரயீஸி - ஈரான் இஸ்லாமிய குடியரசின் புதிய ஜனாதிபதி

 Ebrahim Raisi - President elect of Iran 

செய்யித் இப்ராஹிம் ரயீஸி-சதாதி 14 1960 டிசம்பர் பிறந்தார், பொதுவாக இப்ராஹிம் ரயீஸி என்று அழைக்கப்படும் இவர் ஈரானின் தலைமை நீதிபதி பதவி உட்பட பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

ஈரானின் நீதித்துறை அமைப்பில் சட்டமா அதிபர்  (2014–2016), துணை தலைமை நீதிபதி (2004–2014) போன்ற பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.


அவர் நிபுணர்களின் மன்ற உறுப்பினராக

2017 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 38.3% வாக்குகளை பெற்றார், 57% வாக்குகளை பெற்றிருந்த தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கு அடுத்த அதிகப்படியான அதிக வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 18ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளை பெற்று அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவி ஏற்பு வைபவம் ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெறும்.

இப்ராஹிம் ரயீஸி 1960 டிசம்பர் 14 அன்று மஷ்ஹத்தின் நோர்கான் மாவட்டத்தில் ஒரு சன்மார்க்க குடும்பத்தில் பிறந்தார். இப்போது அவருக்கு வயது 60 ஆகும். இவரின் 5வது வயதில் அவரது தந்தையான சையத் ஹாஜியை இழந்தார்.

 

மாணவ பருவம்

அவர் 15 வயதில் கோம் நகரின் புகழ்பெற்ற சன்மார்க்க கல்விக்கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் ஆயதுல்லா செய்யத் முஹம்மது மூசவி நெசாத் கல்விக்கூடத்தில் கற்கும் அதேவேளை மற்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதிலும் ஈடுபட்டார். 1976 ஆம் ஆண்டில், ஆயதுல்லா புரூஜெதியின் கல்விக்கூடத்தில் உயர் படிப்பைத் தொடர கோமுக்குச் சென்றார். தலைசிறந்த உலமாக்களான  சையத் ஹொசைன் புரூஜெதி, முர்த்தஸா முதஹ்ஹரி, அபுல்காஸிம் கஸாலி, ஹொசைன் நூரி ஹமதானி, அலி மெஷ்கினி மற்றும் முர்த்தஸா பஸான்திதே ஆகியோரின் மாணவராக இருந்தார்.


சட்டத்துறையில்

1981 இல், அவர் கராஜின் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் ஹமதானின் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டு இரு பதவிகளையும் ஒன்றாக வகித்தார். அவர் ஒரே நேரத்தில் 300 கி.மீ தூரத்தில் உள்ள இரண்டு நகரங்களில் தீவிரமாக செயல்பட்டார்.

 

தெஹ்ரான் துணை வழக்குரைஞராக

அவர் 1985 இல் தெஹ்ரானின் துணை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டு தலைநகருக்குச் சென்றார்.


உயர் பதவிகள்

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, அலி கமேனி அவர்கள் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயீஸி தெஹ்ரான் வழக்குரைஞராக, புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி முகமது யஸ்தி அவர்களால் நியமிக்கப்பட்டார். 1989 முதல் 1994 வரை ஐந்து ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். 1994 இல், பொது ஆய்வு அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2004 முதல் 2014 வரை, ரயீஸி ஈரானின் முதல் துணை தலைமை நீதிபதியாக பணியாற்றினார், தலைமை நீதிபதி மஹ்மூத் ஹஷேமி ஷாஹ்ரூதியினால் நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக சாதேக் லரிஜானியின் முதல் பதவியில் அவர் தனது பதவியை தொடர்ந்தார். பின்னர் அவர் 2014 இல் ஈரானின் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார், அவர் அஸ்தான் குத்ஸ் ரஸாவியின் தலைவர் பதவியை பொறுப்பேதார்.ற்கும் வரை (2016 வரை) அவர் அப்பதவியை தொடர்ந்து வகித்தார்.


பொருளாதாரக்கொள்கை

2017 ஆம் ஆண்டில் ரயீஸி "நாட்டில் வறுமை மற்றும் பற்றாக்குறையை ஒழிப்பதற்கான ஒரே வழியாக சுய உற்பத்தி பொருளாதாரத்தை செயல்படுத்துவதையே நான் காண்கிறேன்" என்று அறிவித்தார். வணிக ரீதியான விற்பனையை விட விவசாயத் துறையின் வளர்ச்சியை அவர் ஆதரிக்கிறார்,


வெளியுறவு கொள்கை

தனது வெளியுறவுக் கொள்கை குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், “இஸ்ரேலைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்றார்.


சொந்த வாழ்க்கை

ரயீஸி மஷ்ஹத் வெள்ளிக்கிழமை ஜும்மா இமாம், அஹ்மத் ஆலமுல்ஹுதாவின் மகள் ஜெமீலா ஆலமுல்ஹதாவை மணந்தார். ஜெமீலா தெஹ்ரானின் ஷஹீத் பெஹெஸ்த்தி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், பல்கலைக்கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

No comments:

Post a Comment