Wednesday, June 23, 2021

தடுப்பூசி தயாரிப்பில் ஈரான் மாபெரும் சாதனை தொழில்நுட்ப அறிவை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார்

 Iran stands tall against COVID-19 ‘vaccine apartheid’

கோவிட் 19 இந்த "நூற்றாண்டின் மிகப்பெரிய நிறவெறியை" உருவாக்கியது எனலாம்; இது பிழைப்புக்கான முழு அளவிலான போராகும். தடுப்பூசி ஏகபோகம், பொது சுகாதாரத்தை அரசியலின் பாதாளத்துக்கு தள்ளிவிட்டுள்ள ஒரு நேரத்தில், தடுப்பூசிகள், மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் ஈரான் ஒரு மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியதும், பல்வேறு நாடுகளும் தடுப்பூசி உற்பத்தியில் உயிர்வாழ்வதற்கும், வணிக நோக்கங்களுக்காகவும் போட்டி தொடங்கின. அதன்படி, ஆய்வுகள் அடிப்படையில் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்த முறை, மருத்துவ மற்றும் சுகாதார சார்ந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதிலும் வாங்குவதிலும் வழக்கமான தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், நாடுகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுப்பட்ட தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதற்கிடையில், தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே, பல பணக்கார நாடுகள் தங்கள் தேவைகளுக்கும் மேலதிகமாக அவற்றை வாங்கின. நாட்டின் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, உலகின் 80 சதவீதத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை ஆறு செல்வந்த நாடுகள் வாங்கிக்கொண்டன, அமெரிக்கா போன்ற ஒரு நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று வாங்கி களஞ்சியப்படுத்திய தடுப்பூசிகள் 200 மில்லியன் அளவு காலாவதியாகின.

அமெரிக்க, பிரிட்டிஷ் தடுப்பூசிகளுக்கு ஈரானுக்கு தடை

ஜனவரி 8 ம் தேதி தனது உரையின் போது, இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி கமேனி ஈரானி விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசியை "பெருமைபடக்கூடிய சாதனையின் ஆதாரமாக" புகழ்ந்துரைத்தார், இந்த முன்னேற்றத்தை யாரும் மறுக்க முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தடுப்பூசி ஆய்வுகளை  நம்பமுடியாதுள்ளது என்பதால் அவற்றை இறக்குமதி செய்வதையும் அவர் தடை செய்தார்.

ஈரானிய ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு வழங்கி தங்கள் தடுப்பூசியை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர், மேலும் அவர்கள் இன்னும் சிறந்த மற்றும் பயனுள்ள தடுப்பூசியை வெகு சீக்கிரமாக உருவாக்குவர் என்று ஆயதுல்லா கமேனி நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தடுப்பூசிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை நான் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன், இப்போது அதை பகிரங்கமாக சொல்கிறேன். அமெரிக்கர்களால் பயனளிக்கக்கூடிய ஒரு தடுப்பூசியை தயாரிக்க முடிந்திருந்தால், இந்த கொரோனா பேரழிவு தங்கள் நாட்டில் நிகழ்ந்திருக்காது.

அவர்களுக்கு ஒரு தடுப்பூசி தயாரிப்பது எப்படி என்று தெரிந்தால், அவர்களின் ஃபைஸர் நிறுவனத்தினால் ஒரு தடுப்பூசியை தயாரிக்க முடிந்திருந்தால், அவர்கள் அதை எப்படி எங்களுக்குத் தருவார்கள்? அவர்கள் அதை  தாங்களே பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் அவர்களுக்குள் இத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்காது மற்றும் பாதிக்கப்பட்ட பலர் இருந்திருக்க மாட்டார்கள், இங்கிலாந்திலும் இதே நிலைதான். எனவே, அவர்கள் நம்பகமானவர்கள் அல்ல. நான் அவர்களை உண்மையில் நம்பவில்லை,” என்று தலைவர் கூறினார்.

அமெரிக்க ஒடுக்குமுறை

சுகாதார அமைச்சர் சயீத் நாமகி, உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை, “பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்” என்று பிப்ரவரி மாதம், வலியுறுத்தினார்.

நீண்ட காலத்திற்கு முன்பே தடுப்பூசி போடத் தொடங்கியதாகக் கூறும் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் பிற நாடுகளின் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. எந்தவொரு வெளிநாட்டு தடுப்பூசியையும் எங்கள் மக்கள் மீது மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்க நாங்கள் தயாரிக்கல்லை,” என்று நாமகி கூறினார்.

இதற்கிடையில், மற்றொரு முக்கியமான பிரச்சினை வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்குவதற்கு நிதி, இது பெருந்தொகை பணம் தேவைப்படுவது மட்டுமல்லாமல், அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக தடுப்பூசி இறக்குமதியை முன்னெப்போதையும் விட கடினமாக்கியது.

வளரும் நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண உலக சுகாதார அமைப்பின் (WHO) அனுசரணையில் ஒரு வழிமுறை அமைக்கப்பட்டிருந்தாலும், கோவெக்ஸ் (COVAX) இதுவரை வல்லரசு நாடுகளின் நடவடிக்கைகள் காரணமாக கால அட்டவணையில் பின்தங்கியிருக்கிறது மற்றும் அதன் இலக்குகளை அடையத் தவறிவிட்டது.

உற்பத்தியாளர்கள் வாக்குறுதிகளை மீறுகிறார்கள்

இதற்கிடையில், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஈரானுக்கு தடுப்பூசிகளை வழங்குவதாக பல வாக்குறுதிகளை அளித்திருந்தனர் மற்றும் பல ஒப்பந்தங்கள் நாட்டின் அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உற்பத்தியாளர்களால் இந்த துறையில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை.

"தடுப்பூசி வாங்க இந்தியாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம், முதல் கட்டத்தில், பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சினின் இரண்டு மில்லியன் டோஸை நாங்கள் வாங்கினோம்" என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் கூறினார்.

இருப்பினும், 125,000 டோஸ் மட்டுமே எமது நாட்டிற்கு வழங்கப்பட்டது, மீதமுள்ளவை இந்திய நீதித்துறையின் உத்தரவின் பேரில், விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜூன் மாத இறுதிக்குள் ஈரானுக்கு 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி வழங்குவதாக சீனா உறுதியளித்தது. இருப்பினும், 10,000,000 தடுப்பூசியின் 3,650,000 மட்டுமே இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.

ஈரானுடனான அதன் ஆரம்ப ஒப்பந்தத்தில், ரஷ்யா இரண்டு மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக இருந்தது, மற்றொரு ஒப்பந்தத்தில், 60 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை விற்பனை செய்வதாக உறுதியளித்தது, ஆயினும் இதுவரை 920,000 டோஸ் தடுப்பூசிகளை மட்டுமே அனுப்பியுள்ளது,” என்று அவர் கவலைப்பட்டார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 

இன்றுவரை, ஒரு ஈரானிய தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு உரிமம் கிடைத்துள்ளது, இது முதல் மாதத்தில் மூன்று மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்த COVIRAN BAREKAT எனப்படும் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும், மேலும் இதனால் செப்டம்பர் இறுதிக்குள் 30 முதல் 50 மில்லியன் டோஸ்களைவழங்க முடியும். என்று ஜஹான்பூர் கூறினார்.


ஈரானின் பாஸ்டர் இன்ஸ்டிடியூட் (Pasteur Institute) உருவாக்கிய பாஸ்டர் கோவக் தடுப்பூசி (Pastu Covac vaccine) விரைவில் அவசரகால பயன்பாட்டு உரிமத்தைப் பெறும் மற்றும் முதல் மூன்று மாதங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு மில்லியன் டோஸையும், இரண்டாவது மூன்று மாதங்களில் ஒரு மாதத்திற்கு இரண்டு மில்லியன் டோஸையும், மூன்றாவது மூன்று மாதங்களில் மூன்று மில்லியன் டோஸ்களை தயாரித்து வழங்கும்.

கூடுதலாக, கோவ்பார்ஸ் ராசி(CovPars Razi), ஃபக்ரா (Fakhra) மற்றும் ஸ்பைகோஜென் (Spicogen) தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்காக உரிமம் பெறலாம் மற்றும் அவற்றின் மருத்துவ சோதனை வெற்றிகரமாக இருந்தால் செப்டம்பர் பிற்பகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்.

கோவிரான் தடுப்பூசி வாங்க தென் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள், பல அண்டை மற்றும் இரண்டு ஐரோப்பிய நாடுகள் கேட்டுள்ளதாக தடுப்பூசி ஆராய்ச்சி குழுவின் இயக்குனர் ஹசன் ஜலிலி ஜூன் 8 அன்று தெரிவித்தார்.

இருப்பினும், தடுப்பூசியை எம்மால் ஏற்றுமதி செய்ய முடியும்  என்றாலும், சுகாதார அமைச்சினால் பின்பற்றப்பட்ட கொள்கையின் அடிப்படையில், உள்நாட்டுத் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் வரை எந்தவொரு தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்படாது என்று அவர் கூறினார்.

நிறவெறியை முறியடிக்கும் ஈரான்

ஈரான் இப்போது உள்நாட்டு தடுப்பூசிகளின் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது. பல நாடுகள் ஈரானின் திறனைப் பயன்படுத்தி வரும் வாரங்களில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் அல்லது தங்கள் நாடுகளில் கூட்டாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யலாம் என்று ஜஹான்பூர் கூறினார்.

இந்த நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் உலகளாவிய சுகாதார அணுகுமுறையுடன் ஈரான் இந்த வசதிகளை வழங்க முயற்சிக்கிறது, மேலும் இந்த நாடுகளில் சில தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் தயாரிப்புகளை இணை உற்பத்தி செய்வதற்கும் ஈரானிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன,

நிச்சயமாக, மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இன்று தடுப்பூசிகள் துறையில் உற்பத்தி செய்வதில் உள்ள நெருக்கடி ஆகியன அதிர்ஷ்டவசமாக, உள்நாட்டு திறன்களை பயன்படுத்திக் கொள்ள ஈரானினால் முடிந்தது.

இன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் உற்பத்தியாளராக, நாங்கள் நிச்சயமாக தடுப்பூசி ஏகபோகம் மற்றும் நிறவெறியைத் தடுக்க முயற்சிக்கிறோம். இந்த தொழில்நுட்ப அறிவை மனிதாபிமான முன்னோக்குடன், மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள ஈரான் தயாராக உள்ளது.

https://www.tehrantimes.com/news/462303/Iran-stands-tall-against-COVID-19-vaccine-apartheid 

No comments:

Post a Comment