Dramatic Images Show Scale of Damage to U.S. Bases - Media
U.S. Troops to Return in Coffins If Not Withdrawn - Nasrallah
பதுங்கு
குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் விழுந்தும், அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஒரு அதிசயம்…!
ஈராக்கில்
உள்ள இரண்டு அமெரிக்க வான்படை தளங்கள் ஈரானின் ஏவுகணை வீச்சுக்கும் இலக்காகிய
பின்னர், அத்தலங்கள் சேதமுற்று இருப்பதை வெளிக்காட்டும்
படங்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
அந்த
தளங்கள் தாக்கப்படவுள்ளதாக சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன் கிடைத்த ஐரோப்பிய
நாடொன்றின் ரகசிய தகவலை அடுத்து, அங்கிருந்த
படையணிகளில் அநேகர் வெளியேற்றப்பட்டனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'டெயிலி மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் 16 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக பென்டகன் தெரிவித்துள்ளது, அவற்றில் குறைந்தது 11 ஈராக்கின் அல்-ஆசாத் விமானத் தளத்தையும், எர்பில் ஒரு தளத்தையும் தாக்கியது, ஆனால் பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று பென்டகன் தெரிவித்தது.
சி.என்.என்
படி, ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் சுமார் இரண்டு மணி நேரம்
நீடித்தது. அமெரிக்க வீரர்கள் குவிந்துள்ள இடம் தான் இலக்கு வைக்கப்பட்ட தளத்தின்
ஒரே பகுதி. ஏவுகணைகள் பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் விழுந்தும்,
அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஒரு அதிசயம் என்று நிபுணர்கள்
சி.என்.என்-க்கு கூறினர்.
ஜனாதிபதி
டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஈரான் 'வீழ்த்தப்பட்டது' என்று கூறிய சில மணி
நேரங்களுக்குப் பின்னர் அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி கூறிய கருத்துக்களுக்கு இந்த
வெளிப்பாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.
அமெரிக்க
வீரர்கள் அல்-அசாத் தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் இரவு 11 மணியளவில் வெளியேற்றப்பட்டதாகவும் ஏனையோர் பதுங்கு
குழிகளில் இருந்ததாகவும் அதிகாரிகள் சி.என்.என். க்கு தெரிவித்தனர். புதன்கிழமை
அதிகாலை 1.30 மணியளவில் ஈரானிய ஏவுகணைகள் தளங்களை
பதம்பார்த்தன.
ஏவுகணைகள் பதுங்கு குழிகளிலிருந்து சில அடி தூரத்தில் தரையிறங்கின, இவ்வளவு துல்லியமாக இலக்குவைக்கப்பட்டது ஓர் "ஆச்சரியம்" என்று நிபுணர்கள் சி.என்.என்-க்கு கூறினர்.
லண்டனை தளமாகக் கொண்ட அல் மாயதீன் தொலைக்காட்சி சேனலும் பல ஈரானிய மற்றும் ஈராக் அரசியல்வாதிகளும் இந்த தாக்குதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர். மேலும் காயப்பட்ட அவர்களில் சிலர் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கும் மற்றவர்கள் பாக்தாத்தில் உள்ள ஒரு அமெரிக்க மருத்துவமனைக்கும் ஜோர்டானுக்கும் மாற்றப்பட்டனர், என்றும் தெரிவித்தனர்.
ஈரானிய அதிகாரிகள் கூறுகையில், அந்த நாடு 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, அவற்றில் குறைந்தது 11 ஈராக்கின் அல்-ஆசாத் விமானத் தளத்தையும், மீதமுள்ளவை எர்பில் இராணுவ தளத்தையும் தாக்கியுள்ளன.
ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக ஓர் ஐரோப்பிய தூதரகம் எங்களுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருக்கும் இரண்டு விமானத் தளங்களில் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஈரானியர்கள் தயாராக இருந்தனர், அமெரிக்க உளவுத்துறை மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் திட்டங்களைக் கண்டறியக் கூடியவாறு ஈரான், வேண்டுமென்றே தாக்குதலை உறுதிசெய்துள்ளது, அதிகாரிகள் டைம் பத்திரிகைக்குத் தெரிவித்தனர்.
ஈராக்
பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி கூறுகையில், ஈரான் தனக்கு ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்னதாக ஒரு சமிக்ஞையைக் வழங்கியிருந்தது.
ஆனால் தாக்கப்பட்டும் இடங்கள் பற்றி ஈரான் தனக்கு அறிவித்தல் வழங்கவில்லை, ஆனால் அவை அமெரிக்கப் படைகள் இருக்கும் இடங்களை மட்டுமே குறிவைப்பார்கள்
என்பதை அறிந்துகொண்டேன். அந்த செய்தியை குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன்
மூலம், துருப்புக்களுக்கு பதுங்கு குழிகளில் தங்குமிடம் பெற அவகாசம்
அளிக்கவும் முடிந்தது, என்று கூறினார்.
அதே நேரம் அமெரிக்க ராணுவம்
நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று ஈராக்கிய பாராளுமன்றம் ஏகமனதாக தீர்மானம்
நிறைவேற்றியுள்ள நிலையில்,
நாம் அத்தீர்மானத்துக்குக் கட்டுப்படப் போவதில்லை அமெரிக்க ஜனாதிபதி
கூறியுள்ளார்.
இதனையடுத்து
ஹிஸ்புல்லாஹ் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துருப்புக்களை
பிராந்தியத்திலிருந்து விலகுமாறு அழைப்பு விடுத்தார். மேலும்,
ஈரான் மீதான எதிர்கால அமெரிக்க தாக்குதல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு
ஆட்சிக்கு பதிலடி கொடுக்கும் என்று கூறினார்.
"வரவிருக்கும் நாட்கள் அல்லது வாரங்களில் அமேரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கிலிருந்து திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் அமேரிக்கா திரும்புவர்" என்று நஸ்ரல்லா அறிவித்தார்.
ஈரான், ஈராக்கில் உள்ள ராணுவ தளங்கள் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலானது அமெரிக்காவுக்கு தெஹ்ரானின் இராணுவ வலிமையைக் காட்டியுள்ளது. ஈரான் பயன்படுத்திய ஏவுகணைகள் அனைத்தும் ஈரானின் உள்நாட்டு தயாரிப்பாகும், என்று நஸ்ரல்லா கூறினார்.
சமீபத்தில்
அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி நினைவு
தொடர்பாக லெபனானில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நஸ்ரல்லா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
"மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும் ஈரானின் துல்லியமான ஏவுகணை எல்லைக்குள் உள்ளன," என்று நஸ்ரல்லா கூறினார். "ஈரானில் உள்ள உள்கட்டமைப்பு அல்லது அணுசக்தி நிலையங்களைத் தாக்க தனது விமானப்படையை அனுப்ப நெத்தன்யாகு தொடர்ச்சியாக கனவு காண்கிறார். இஸ்ரேல் ஈரானுடன்‘ விளையாட ’திட்டமிட்டுள்ளது. அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் சியோனிச நிறுவனத்திற்கு ஒரு வலுவான செய்தியாகும்", என்றும் நஸ்ரல்லா கூறினார்.
‘ஈரானுக்கு
எதிரான எந்தவொரு அமெரிக்க தாக்குதலும் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலைக்
கொண்டுவரும்’ என்ற செய்தியை தெஹ்ரான் நட்பு நாடுகள் ஊடாகவும்
ஊடகங்கள் மூலமாக வாஷிங்டனுக்கு தெரிவித்துள்ளதாக நஸ்ரல்லா கூறினார்.
No comments:
Post a Comment