Contributors

Saturday, February 10, 2024

உலகமே வியக்கும் அளவுக்கு வளர்ந்துவரும் இஸ்லாமிய ஈரான்

Islamic Iran is growing to the amazement of the world

ஈரான் அதன் இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 45 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொங்கிக்கிடந்த உலக முஸ்லிம்களின் தலைகளை நிமிரச்செய்தது இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் வழிநடத்தப்பட்டு, இப்போது இமாம் கமனேயி அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் இஸ்லாமிய புரட்சியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 45 ஆண்டுகளைக் கடந்த நிலையில் எல்லாத் தடைகளையும் தாண்டி வெற்றிப்பாதையில் அது வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

உலகின் பல நாடுகளில் புரட்சிகள் வெடித்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்போதெல்லாம் அதிகாரம் கைமாறியதே அன்றி, அந்நாடுகளில் உண்மையான மாற்றங்கள் ஏற்பட்டனவா என்பது கேள்விக்குறியே. இதுபோன்ற விளைவொன்றையே மேற்கின் வல்லாதிக்க சக்திகள் ஈரானிலும் எதிர்பார்த்தன. பயங்கரவாதம், யுத்த திணிப்பு, ஆட்சி கவிழ்ப்புக்கான சதிமுயற்சிகள், மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகள் போன்ற அனைத்தும் இன்றுவரை தொடர்கின்றன. இருந்தும் உலகமே வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய குடியரசு சகல துறைகளிலும் முன்னேறி வருகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

புரட்சியின் எதிரிகள், கடந்த காலத்தில் செய்து வந்தது போல், இன்றும் கூட பணம் மற்றும் தங்கள் வசம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி, இஸ்லாமிய ஈரானுக்கு எதிராக பொய்களை பரப்பும் அவர்களது முயற்சிகளில் உத்வேகம் கொண்டுள்ளனர் என்பது கண்கூடு.

ஆட்சி மாற்றம், யுத்தம், பொருளாதார பயங்கரவாதம் போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத தலைமைத்துவமும், அந்த தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் மக்கள் கூட்டமும் இருக்கும்வரை எந்த உலக சக்தியாலும் இஸ்லாமிய அரசை அசைக்க முடியாது.

சவுதி அரேபியா, எமிரேட்ஸ், எகிப்து மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளை அச்சுறுத்தி காரியம் சாதிப்பது போல் ஈரானிலும் செய்ய விரும்புகின்றது அமெரிக்கா. இந்த பிளாக் மெயிலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது; அதன் இலக்கை நோக்கிய பயணத்தை தடுநிறுத்தவும் முடியாது. 

இஸ்லாமிய சிந்தனைகளுக்கு புத்துயிர் அளித்த இந்தப் புரட்சி, பல்வேறு சமூகத் தளங்களில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் பங்கை முக்கியப்படுத்தியதுடன், இஸ்லாமிய அடையாளத்தின் கூறுகளை மேற்கத்திய அடையாளத்திற்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்பட்ட யதார்த்தமாக நிலைநிறுத்தியுள்ளது.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் முஸ்லிம்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள். "முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தைக் கண்டறிய வேண்டும், மேலும் அவர்களுக்கு ஒரு சுதந்திரமான கலாச்சாரம் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுரண்டுபவர்கள் நமக்கென்று ஒரு கலாச்சாரத்தை வழங்கியுள்ளனர் (அதுவே சிறந்தது என்ற மாயையையும் எம்மில் வளர்த்துள்ளனர்), அதனால் நம்மை நாமே அறியாமல் இருக்கிறோம். இது நமது உடைமைகளை கொள்ளையடிக்கவும், நமது ஆளுமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பளித்தது.”

நேர்மையான,  எதற்கும் சளைக்காத, உறுதியான தலைமைத்துவம், சரியான திட்டமிடல், அர்ப்பணமிக்க மக்கள் ஆகியனவே இந்த வெற்றியின் சூட்சுமங்களாகும்.

பிராந்தியத்தில் மிகவும் உறுதியான அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு நாடு இருக்குமாயின் நிச்சயமாக ஈரான் இஸ்லாமிய குடியரசு மட்டுமே என்றால் மிகையாகாது. (அமெரிக்க ராணுவ உதவியின்றி சவூதி அரசினால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள்).

பொருதாரத் தடைகளின் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்தி அடிபணியைச் செய்யலாம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கனவு கண்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக அது கனவாகவே முடியும்.

'இஸ்லாத்தை இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக எழுவதற்கு  முடியாதவாறு முதுகெலும்பை முறித்துவிட்டோம்' என்று எண்ணியிருந்த காலனித்துவ சக்திகள் ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தலைமையில் வெற்றிபெற்ற இஸ்லாமிய புரட்சியின் விளைவாக உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு கண்டு அச்சம் கொள்ளத் தொடங்கின.

புரட்சியின் குறிக்கோள்களான சுதந்திரம், அறநெறி, ஆன்மீகம், நீதி, கண்ணியம், பகுத்தறிதல் மற்றும் சகோதரத்துவம் ஆகிய பரிமாணங்கள் ஒருபோதும் காலாவதியாவது கிடையாது. காலவோட்டத்தில் எழுச்சிப்பெற்ற அல்லது வீழ்ச்சியடைந்த சமூகத்துக்கோ அல்லது தலைமுறைக்கோ அது மட்டுப்படுத்தப்பட்டதும் அல்ல. மக்கள் இந்தப் பெறுமானங்களை  அசட்டை செய்வர் என்று கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.

எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, கடந்த காலத்தைப் பற்றிய நல்ல அறிவை வளர்த்து, அதன் மூலம் படிப்பினைப் பெற வேண்டும். இந்த மூலோபாயம் புறக்கணிக்கப்பட்டால், சத்தியத்தின் இடத்தை பொய்மை ஆக்கிரமித்துவிடும் மேலும் எதிர்காலத்தில் அடையாளம் காணமுடியா அச்சுறுத்தல்களினால் அவதியுற நேர்ந்திடும்.

இன்னும், அடிமைத்தளையில் இருந்து தம்மை மீட்க போராடும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய அனுபவங்களை கொண்டு வெற்றிக்கு வழிகாட்டுவதை இஸ்லாமிய குடியரசு தனது கொள்கையில் ஒன்றாக ஆக்கிக்கொண்டுள்ளது என்பதை உலக நிகழ்வுகள் இன்று பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

மனித உரிமை மீறலில் மிக மோசமான மீறல் என்னவென்றால் மக்களை அடிமைப்படுத்துவதாகும். இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய மக்களை கொடுங்கோலன் ஷாவிடம் இருந்து விடுவித்து, அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் என்னவென்று உணரச்செய்தார் மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள். இறைவன் அருளால் ஈரானிய மக்கள் இன்று சுதந்திரமாக, இஸ்லாமிய மனங்கமழும் உன்னத காற்றை சுவாசிக்கின்றனர்.

இஸ்லாமியப் புரட்சி நாட்டினுடைய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்துள்ளதுடன் பல முனைகளில் முன்னேற்றத்திற்கான "இயந்திரம்" என செயல்பட்டதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளது.

இனவெறி பிடித்த இஸ்ரேல், தலைக்கனம் பிடித்த அமெரிக்கா  தலைமையிலான மேற்குலக வல்லாதிக்க சக்திகள், இவற்றின் தயவில் அவர்களுக்காக இயங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத சக்திகள் அனைத்திற்கும் முகம்கொடுத்து ஒரு நாடு முன்னேற்றப்பாதையில் பயணிப்பது என்பது இலேசான காரியமல்ல.

இன்னும், மேற்குலகினது  குறிப்பாக அமெரிக்காவினது குற்றச் செயல்கள், பலஸ்தீன் விவகார பின்னணி, பாலஸ்தீனிய தேசத்தின் வரலாற்று அடக்குமுறை, யுத்தவெறி நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு போன்ற அனைத்து தீயவற்றையும் நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள்.

எதிர்காலத்தை உருவாக்கும் நபர்களால் கருத்தில்கொள்ளப்பட  வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் நாம் இயற்கை மற்றும் மனித வளங்களின் அடிப்படையில் தனித்துவமான நாடொன்றில் வாழ்கிறோம் என்பதாகும். ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இந்த வளங்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாது உள்ளன அல்லது சிறிதளவே பயன்படுத்தப்படுகின்றன. துடிப்புள்ள இளைஞர்களின் புரட்சிகர முயற்சியினால் இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் ஒழுக்க முன்னேற்றத்தை முன்னோக்கி ஒரு உண்மையான பாய்ச்சலைக் ஏற்படுத்த முடியும்”.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈரான் அறிவியல் துறையில் முன்னேற்றத்தைக் கண்டதா அல்லது பின்னடைந்துள்ளதா? என்பது இன்று உலகில் பலரை ஆட்கொண்டுள்ள ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெற்றதில் இருந்தே பல சர்வதேச ஊடகங்கள், இஸ்லாமிய புரட்சியானது ஈரானை வெவ்வேறு பரிமாணங்களில் பின்வாங்க வழிவகுத்தது என்றும் புரட்சியைத் தொடர்ந்து ஈரானின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்றும் இன்றளவிலும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

விஞ்ஞான துறை முன்னேற்றம் மற்றும் அறிவியல் உற்பத்தியின் பெருக்கம் ஒரு நாட்டின் முன்னேற்றம் அல்லது பின்னடைவின் மிக முக்கியமான குறிகாட்டிகளில் ஒன்றாகும். ஆகவே, ஒரு நாடு வீழ்ச்சியடைந்துவிட்டதா அல்லது முன்னேறியுள்ளதா என்பதை யாராவது உண்மையில் புரிந்து கொள்ள விரும்பினால், இந்த இரண்டு குறிகாட்டிகளையும் ஆராய்வதன் மூலம் அதற்குரிய பதிலைப் பெறலாம்.

ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு விஜயம் செய்யும் எவரும் அந்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கண்டு உண்மையிலேயே பிரமித்துப் போவர். ஓர் அபிவிருத்தி அடைந்த நாடு எவ்வாறு இருக்குமோ, அந்த அங்கலட்சணங்கள் அனைத்தையும் அங்கு காணக்கூடியதாக இருக்கிறது; இஸ்லாத்துக்கு முரணான அம்சங்களைத் தவிர.

சகல துறைகளிலும் ஈரான் அடைந்துள்ள முன்னேற்றத்தை காண்கையில், அது பொருளாத தடைகளுக்கு உட்பட்ட ஒரு நாடு என்பதற்கான எந்த அறிகுறியையும் அங்கு காண முடியாது.

ஒரு நாட்டில் சரியான தலைமைத்துவம் இருந்தால் எந்த சவாலையும் முறியடித்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லலாம் என்பதற்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு நல்லதோர் உதாரணமாகும்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு இஸ்லாத்தை ஆட்சிமுறையாக கொண்டிருக்கும் காலம் வரை, எந்த ஒரு சக்தியாலும் அதனை அழிக்க முடியாது; அல்லாஹ் அதனை பாதுகாப்பான்….. அல்ஹம்துலில்லாஹ்.

- தாஹா முஸம்மில்

Monday, February 5, 2024

இஸ்ரேலிய ராணுவத்தில் பலஸ்தீனுக்கு எதிராக இந்தியர்கள்...?

 Are Indians fighting in Gaza? 

By Ali Karbalaei

காஸாவில் ஹமாஸுக்கு எதிராக போரிட இஸ்ரேல் ராணுவத்தில் சேரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸா பகுதி மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சின் 20 நாட்களுக்குப் பின்னர், அக்டோபர் 27 மாலையில், இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸை அழிப்பது மற்றும் முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்தில் அதன் நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற இலக்குடன் கடலோரப் பகுதி மீது அதன் பெரிய அளவிலான வான் மற்றும் தரைவழி படையெடுப்பைத் தொடங்கியது.

நவம்பர் 1 அளவில், இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலில் இடம்பெற்ற முதல் இறப்புக்கள் சியோனிச ஆட்சியின் இராணுவத்தால் அறிவிக்கப்பட்டன. கொல்லப்பட்ட முதல் இஸ்ரேலிய துருப்புக்களில் ஹாலெல் சாலமனும் (Halel Solomon) ஒருவர்.

சாலமன் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து கிவாட்டி படைப்பிரிவில் சேர்ந்தார். சியோனிச ஆட்சியின் அணுவாயுதத் திட்டத்திற்கு இழிபுகழ் பெற்ற தாயகமாக விளங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள டிமோனா நகரில் அவர் வசித்து வந்தார்.

நகரத்தில் உள்ள ஒரு பகுதி அங்கு ஏராளமான இந்தியர்கள் வாசிப்பதன் காரணமாக "குட்டி இந்தியா" ("little India") என்றும் விவரிக்கப்படுகிறது.

அக்டோபர் 7 அன்று 'அல்-அக்ஸா வெள்ளம்' நடவடிக்கையைத் தொடர்ந்து ஒரு பாரிய அளவிலான போர் உருவாகியதால், பல வெளிநாட்டினர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளை விட்டு வெளியேறினர்.

மறுபுறம், யூத பின்னணி கொண்ட இந்தியர்களில் ஒரு பிரிவினர், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடியேற தங்களால் முடிந்தவரை முயன்றனர், நூற்றுக்கணக்கானவர்கள் காஸா மீதான அதன் பேரழிவு போரை நடத்த இஸ்ரேலிய இராணுவத்தில் இணையவும் முயன்றனர்.

இந்தியாவின் 1.4 பில்லியன் வலுவான மக்கள்தொகையில் உள்ள சமூகங்களில் பினே மெனாஷே (Bnei Menashe) பழங்குடியினரும் உள்ளனர், இது சுமார் 5,000 உறுப்பினர்களைக் கொண்ட சமூகமாகும், அவர்கள் தங்கள் பாரம்பரியம் பண்டைய யூத ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு சொந்தமானது என்று நம்புகிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல ஆர்வமாக இருக்கும் பல இந்தியர்களில் அவர்களும் அடங்குவர்.

"நான் இஸ்ரேலுக்குச் சென்று இழந்த எனது பழங்குடியினருடன் என்னை இணைக்க விரும்புகிறேன். நான் [இஸ்ரேலிய இராணுவத்தில்] சேர விரும்புகிறேன், ஹமாஸுக்கு எதிரான போரில் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன், ஏனென்றால் நான் அந்த நிலத்தைச் சேர்ந்தவன்" என்று இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள பினே மெனாஷே சமூகத்தைச் சேர்ந்த ஜோசப் ஹாவோகிப் அல் ஜசீராவிடம் கூறினார்.

அவர் தனியாக இல்லை. காசா பகுதியிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும், லெபனானின் ஹெஸ்புல்லாவுடன் வடக்குப் பகுதியிலும் இஸ்ரேலிய வீரர்கள் பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்கும் போதுகாசாவில் சண்டை, நூற்றுக்கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள், இஸ்ரேல் செல்வதற்கான விசாக்களுக்காக விண்ணப்பிக்க டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் வரிசையில் நிற்பதைக் காட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

காஸா பகுதியில் சியோனிச ஆட்சியின் பேரழிவு போரில் இணைந்து இஸ்ரேல் சார்பாக போராட எத்தனை இந்தியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்களை இஸ்ரேலிய அதிகாரிகள் (classified) இரகசியமாக வைத்துள்ளனர்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம், இராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயமாக உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு Bnei Menashe இடம்பெயர்வதற்கான திட்டங்களில் பணிபுரிய ஒரு குழுவை அமைத்துள்ளதாகக் கூறுகிறது.

இந்தியாவில் பிறந்த நூற்றுக்கணக்கான யூதர்கள், குறிப்பாக மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இருந்து, காஸாவில் சண்டையிட இஸ்ரேலிய இராணுவத்தின் அழைப்பை ஏற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் இந்திய பினே மெனாஷே சமூகத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் காஸாவை சுற்றிய பகுதிகளில் சண்டையிடுகிறார்கள். அக்டோபர் 7 அன்று 'அல்-அக்ஸா வெள்ளம்' நடவடிக்கைக்குப் பிந்தைய வாரங்களில், குறிப்பிட்ட சமூகத்தின் 75 உறுப்பினர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து காஸாவில் சண்டையிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

இராணுவ இறப்புக்கள் தொடர்பாக செய்தி ஊடக அறிக்கைகளை சியோனிச ஆட்சி கடுமையாக தணிக்கை செய்வதால், சுற்றிவளைக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் எதிர்ப்புப் படைகளின் கைகளினால் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.

இஸ்ரேலிய இராணுவத்தில் மொத்தம் எத்தனை இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதும், பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களின் கைகளில் எத்தனை பேர் உயிரிழப்புகளைச் சந்தித்தனர் என்பது போன்ற தகவல்களை இஸ்ரேல் ரகசியமாக வைத்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளாக இருக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 7 க்குப் பிறகு இராணுவ சேவைக்கு வந்தவர்களின் சரியான எண்ணிக்கை இஸ்ரேலிய ஆட்சியால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள ஏராளமான ஏனைய தரவுகளில் ஒன்றாகும்.

அக்டோபர் 20, 2023 அன்று இந்தியா டுடே (India Today) வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, குறைந்தது 400 இந்தியர்கள் இஸ்ரேலிய இராணுவத்துடன் முன் வரிசையில் சண்டையிட்டனர், இதில் வடக்கு முன்னணியில் லெபனானின் ஹிஸ்புல்லாவின் தாக்குதல் காரணமாக கண் மற்றும் கையில் காயமடைந்த ஒரு சிப்பாயும் அடங்குவார்.

Pix: India Today

ஆனால் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நோர் கிலோன் (Naor Gilon) ஒரு படி மேலே சென்று, இந்திய செய்தி நிறுவனமான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனலுக்கு (ஏ.என்.ஐ) அளித்த பேட்டியில், "இது சாதாரண இந்தியர்களே, படத்தின் ஒரு பகுதி மட்டுமே. தூதரகத்தின் சமூக ஊடகங்களைப் பாருங்கள். இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, (இந்திய) தன்னார்வலர்களைக் கொண்ட மற்றொரு இஸ்ரேலிய இராணுவத்தை வைத்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். "நான் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புகிறேன், நான் சென்று இஸ்ரேலுக்காக போராட விரும்புகிறேன்," என்று ஒவ்வொருவரும் என்னிடம் கூறுகிறார்கள்,

கிலோன் மேலும் கூறுகையில், "இந்த பரந்த ஆதரவு, வலுவான ஆதரவு எனக்கு முன்னோடியில்லாதது. நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்.. ரொம்ப எமோஷனல், ரொம்ப ஆழம்... இது மிகவும் தனித்துவமான ஒன்று, என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் 7 அன்று காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட 27,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர். மேலும் 66,630 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி எந்த உணர்ச்சி வெளிப்பாடும் கிடையாது.

https://www.tehrantimes.com/news/494562/Are-Indians-fighting-in-Gaza

Friday, February 2, 2024

46வது ஆண்டில் பெருமையுடன் காலடி எடுத்துவைக்கும் இஸ்லாமிய புரட்சி

Islamic Revolution enters the 46th year

45 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வருட நாடுகடத்தலில் இருந்து இஸ்லாமிய புரட்சியின் தந்தை நாடு திரும்பியவுடன், பிப்ரவரி 11 அன்று பிரிட்டிஷ் நிறுவிய மற்றும் அமெரிக்க ஆதரவிலான பஹ்லவி ஆட்சியின் நுகத்தடியிலிருந்து நாட்டை விடுவித்து, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக பத்து நாள் விடியலைத் தொடங்கிய ஈரானின் வரலாற்றில் இன்று பிப்ரவரி 1 ஒரு சிவப்பு எழுத்து நாள்.

இன்று இந்த சுப்பர்னோர்வா நாடு, உள்நாட்டு கொடுங்கோன்மை மற்றும் அந்நிய மேலாதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்து, தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்த அண்டை நாடுகளிலும் அதற்கு அப்பாலும் உள்ள நாடுகளின் பாதையை ஒளிரச் செய்கிறது என்பது மட்டுமல்லாமல், அதன் பிரகாசமான கதிர்களான இஸ்லாமும் ஈரானும் மனிதகுல எதிரிகளின் கண்களைக் குருடாக்கியுள்ளன.

கடந்த நான்கரை தசாப்தங்களில் ஈரானின் முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் பிரமிக்கத்தக்கதாக உள்ளது, இது வான்வெளி, அணுசக்தி, கனரக தொழில்கள், மருத்துவம், விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, கல்வி, கலாச்சாரம், திரைப்படக் கலைகள், விளையாட்டு, பெண்கள் உரிமைகள் மற்றும் முக்கியமானக பாதுகாப்புத் துறையில் அதன் வெற்றியிலிருந்து தெளிவாகிறது.

சில நாட்களுக்கு முன்பு, இஸ்லாமிய புரட்சியின் தற்போதைய தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி கமனேயி, பல்வேறு துறைகளில் நாட்டின் தொழில்துறை மாதிரிகளைப் பார்வையிட்ட போது, முழுமையான சுதந்திரத்தை உறுதி செய்வதில் ஈரானிய மக்களின் திறமைகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, அணிசேரா இயக்கம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, யூரேசிய பொருளாதார ஒன்றியம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (ECO) போன்ற பெரும்பாலான சர்வதேச அமைப்புகளில் இன்று ஊக்கத்துடன் செயல்படும் ஈரான் அமெரிக்காவால் சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு இந்த வெற்றிகள் அனைத்தையும் அடைந்தது.

ஆயதுல்லா கமனேயி சுட்டிக்காட்டியதைப் போல, ஈரானுக்கு எதிரான அதன் வெளிப்படையான எதிரிகளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் தீவிரம் மற்றும் பன்முகத்தன்மை உண்மையில் இஸ்லாமிய அமைப்பின் சக்தியையும், இந்த சிக்கலான சதித்திட்டங்களை ஈரான் எவ்வாறு தோற்கடித்துள்ளது என்பதையும் காட்டுகிறது.

இமாம் கொமைனி (ரஹ்) அவர்களது ஞாபகார்த்தத்தை இன்று நாம் புதுப்பித்துக் கொள்கிறோம். அவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் தெஹ்ரானுக்கு வந்தவுடன், மில்லியன் கணக்கான மக்களால் வாஞ்சையுடன் வரவேற்கப்பட்டார். பஹ்லவி ஆட்சி அமெரிக்காவில் உள்ள அதன் எஜமானர்களின் உத்தரவின் பேரில் அதன் கொலைவெறியைத் தொடர்ந்த நிலையில் உயிர் நீத்த  இறைவிசுவாச போராளிகளின் புதிய கல்லறைகளால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பெஹெஷ்ட்-இ ஸஹ்ரா அடக்கஸ்தலத்திற்கு நேராக சென்றார்.

மனசாட்சிகள் நீண்ட காலமாக உறைந்து போயிருந்தாலும், உயிரற்றதாகிவிட்டிருந்த போதிலும், உலகெங்கிலும் இறைவனின் பாதையில் மரணித்தோர் உயிருடன் இருக்கின்றனர் என்ற குர் ஆனிய வசனத்திற்கு அமைய, முஜாஹிதுகளின் ஓய்விடத்தை முதல் உரையாற்றுவதற்காக அவர் தேர்ந்தெடுத்தார்.

அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பதிவு செய்யப்பட்டு, இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சரியான நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறது, மற்றும் இஸ்லாமிய குடியரசு அரசாங்க முறையை நிறுவுவதற்கான அவரது வலியுறுத்தல், அமெரிக்காவை "பெரிய சாத்தான்" என்று பெயரிட்டது மற்றும் பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் அளித்த வாக்குறுதி புதுப்பிக்கப்படுகின்றன.

கம்யூனிசத்தின் முடிவை அவர் கணித்தார், அது இனி இல்லை. முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை அவர் முன்னறிவித்தார், அது மேற்கில் அதன் கடைசி கால்களில் உள்ளது. இஸ்ரேல் என்று அழைக்கப்படும் புற்றுநோய் கட்டி களையெடுக்கப்படும் என்று அவர் தீர்க்கதரிசனம் கூறினார் மற்றும் அதன் உயிர்வாழ்வை நீட்டிக்க அமெரிக்காவின் பெரும்பிரயத்தனம் இருந்தபோதிலும் அதன் மரண ஓலங்கள் அனைவருக்கும் தெளிவாக உள்ளன.

புனித குர்ஆனின் போதனைகளை உறுதியாக பின்பற்றுபவராக இருந்த இமாம் கொமைனி (ரஹ்) ஈரானிய மக்களின் அடிமட்ட இயக்கத்தை வெற்றியை நோக்கி வழிநடத்தவும், இஸ்லாமிய குடியரசை நிறுவவும் இறைவனின் தீர்க்கதரிசிகளின் பாதையைப் பின்பற்றினார்.

ஈரானை வலிமைமிக்க மாபெரும் சக்தியாக மாற்றிய அந்த ஞானியை அல்லாஹ் அங்கீகரித்து அருள்பாலிக்கட்டும், இமாம் கொமைனி என்ற அந்த மனிதரின் பெயரே உலக ஆணவத்தை அதன் அஸ்திவாரங்களில் தொடர்ந்து உலுக்கி வருகிறது.

https://kayhan.ir/en/news/124288/islamic-revolution-enters-the-46th-year