Contributors

Friday, September 16, 2022

வேகமாக நெருங்கி வரும் அதன் முடிவையிட்டு இஸ்ரேல் கலக்கம்...!

 Iran to definitely respond to any Israel intimidating actions


இஸ்ரேலிய ஆட்சியினதோ, அதன் கூலிப்படையினதோ அல்லது அதற்கு உதவி செய்யும் ஆட்சிகளினதோ எந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கும் ஈரானின் பதில் தீர்க்கமானதாக இருக்கும் என்று IRGC யின் காத்தமுல்-அன்பியா தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷித் கடந்த வாரம் தெரிவித்தார்.

எக்ததார் (வலிமை) 1401 பயிற்சியின் ஓரங்கமாக ஈரானிய இராணுவ தரைப்படைத் தளபதிகள் குழுவிடம் பேசிய மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷித்எமக்கு எதிரான தொடர் சதிகளை சியோனிச இஸ்ரேலிய ஆட்சியின் கிரிமினல் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஏற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஈரானிய அணுசக்தி நிலையங்கள், ஈரானின் ஏனைய நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல் பற்றியும் அலி ரஷித் குறிப்பிட்டார், "ஹஸ்ரத் காத்தமுல்-அன்பியா (ஸல்) தலைமையகத்தின் கருத்துப்படி, சியோனிச ஆட்சியின் தேசிய பாதுகாப்புக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு முதன்மையான அச்சுறுத்தலாக உள்ளது" என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

"இந்த தலைமையகத்தின் படி, ஈரானின் நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கிரிமினல் சியோனிச ஆட்சியின் எந்தவொரு அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் அமெரிக்காவின் தகவல், ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவைக் கொண்டதாகவே இருக்கும். [ஈரானிய] ஆயுதப்படைகளின் பதில் அவற்றின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும். அதே மட்டத்தில் தீர்க்கமானதாகவும் இருக்கும்," என்று ஈரானிய ஜெனரல் மேலும் கூறினார்.

"ஈரான் இஸ்லாமிய குடியரசின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சியோனிச ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து கூலிப்படைகளும் குழுக்களும் ஆட்சிகளும் அந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.

இராணுவ தரைப்படையின் எக்ததார் (வலிமை) 1401 இராணுவப் பயிற்சியை ஜெனரல் ரஷீத் மேலும் சுட்டிக்காட்டினார், "இராணுவ தரைப்படை சூட்சுமம் எதிர்கால போர்கள் மற்றும் கணிக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு ஏற்பவே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டன."

மத்திய ஈரானில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஈரானிய இராணுவத்தின் தரைப்படையின் வலிமைக்காண் பயிற்சி "புதிய அச்சுறுத்தல்களை" எதிர்கொள்ளும் வகையில் தரைப்படைகளின் வலிமையை மதிப்பிடும் நோக்கத்துடன் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்தார்.

இந்தப்பயிற்சியானது இராணுவ தரைப்படை UAVகள், T72S டாங்கிகளின், மற்றும் பல்வகை ஆயுதங்கள், வான் ஏவுகணை உட்பட பல்வேறு இராணுவ உபகரணங்களையும் கொண்டு நடத்தப்படுகிறது.

https://en.mehrnews.com/news/191158/Iran-to-definitely-respond-to-any-Israel-intimidating-actions


Israel Terrified at Its Fast-Approaching End

இது இவாறிருக்க, வேகமாக நெருங்கி வரும் அதன் முடிவையிட்டு இஸ்ரேல் கலக்கமடைந்துள்ளது...! என்பதை அதன் அண்மைய அச்சுறுத்தல்களில் இருந்து உணரக்கூடியதாக உள்ளது.

அலெப்போ விமான நிலைய ஓடுபாதையில் குண்டு வீசிய இஸ்ரேல் எனப்படும் பயங்கரவாத / இனவெறி அமைப்பால் சிரிய குடிமக்கள் வசதி மீது மற்றொரு தூண்டுதலற்ற தாக்குதலின் விளைவாக அலெப்போ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த சீண்டல் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளின் சில ஆட்சியாளர்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சியோனிஸ்டுகளை பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில், ஐ.நா வழக்கம் போல், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை விரும்பாததால், கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.

வலுவான, அரசியல் ஸ்திரமான மற்றும் தொழில்ரீதியாக சக்திவாய்ந்த நாடாக சிரியா ஆகிவிடுமாயின் அது ஒரு துடிப்பான பொருளாதாரத்துடன் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக காத்திருக்கும் போராளிகளின் பிரச்சாரத்தை வழிநடத்தும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை. மற்றும் அலெப்போ விமான நிலையம், மற்ற எதிரிகளால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப்போல், வலுவான பாதுகாப்பு வழிமுறைகளுடன் மீண்டும் கட்டமைக்கப்படும், இதன் மூலம் சிரியாவை பலவீனப்படுத்துவதில் தோல்வியுறும் சியோனிஸ்டுகளின் விரக்தி இன்னும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

தன்னை பெரும் புத்திசாலியாகவும் பலசாலியாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல் அதன் முடிவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதன் கொடூரமான கொலைகார ஏஜெண்டுகளான தக்ஃபிரி பயங்கரவாதிகள் மற்றும் சிரிய பிரதேசத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, Dayr az-Zore எண்ணெய் வயல்களை சூறையாடுவதில் மும்முரமாக இருக்கும் அதன் தோழர்களான CENTCOM பயங்கரவாதிகளின் இயலாமையால், இஸ்ரேல் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

இவ்வாறு, சிரிய ஜனாதிபதி ஆசாத்தை அச்சுறுத்தும் ஒரு வீண் முயற்சியில், சியோனிஸ்டுகள் ஈடுபட்டு உள்ளனர். சிரிய உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளில் அவசர அவசரமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், எந்த சாக்குப்போக்கை கூறியாவது முழு அளவிலான போர் ஒன்றுக்கு செல்வதவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இஸ்ரேல் அதன் சட்டமன்றத்துக்கான தேர்தலை எதிர்வரும் நவம்பரில் சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய போரொன்று அவர்களுக்கு அவசியமாகும். 

இஸ்ரேலின் சூழ்ச்சியை டமாஸ்கஸ் நன்றாகவே அறியும்; ஒரு அகால மோதல் ஒன்றுக்கு இழுக்கப்படுவதற்கு எதிராக சிரியா உறுதியாக உள்ளது, ஆனால் அதே நேரத்தில், சியோனிச கொசு கடித்தால், சிரியா தன்னை தற்காத்துக் கொள்ள தயாராக உள்ளது.

மேலும், கொசு மட்டுமல்ல கொடிய தேள் மற்றும் பாம்பு கடிகளை எதிர்கொள்வதற்கும் சிரியாவில் நோய் எதிர்ப்பு மருந்துகள் (அதிநவீன ஆயுதங்கள்) உள்ளன.

சிரியா 1948 முதல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள விஷ ஜந்துக்களை, இப்பகுதியில் இருந்து அழிக்க வேண்டிய நன்நாளை எதிர்பார்த்த வண்ணமும் இருக்கிறதது; ஒரு நாள் அது அளிக்கப்பட்டே தீரும் என்பதிலும் உறுதியாய் இருக்கிறது.

மேலும், சிரியாவை தக்ஃபிரிஸ்தானாக மாற்றும் பயங்கரவாத முயற்சியின் போது டமாஸ்கஸில் உள்ள சட்டப்பூர்வ அதிகாரிகளுடன் உறுதியாக நிற்கும் நண்பர்கள், எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கும் எதிராக அணிதிரள்வார்கள் என்பது உறுதி.

இம்முறை போராட்டம் சிரிய மண்ணிற்கு மட்டும் மட்டுப்பட்டதாக இருக்கப்போவதில்லை. முழு எதிர்ப்பு முன்னணியின் அணிதிரட்டலுடன், அது எதிரி முகாமுக்ககுள்ளேயே கொண்டு செல்லப்படும். 

அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய ஆட்சிகள் மற்றும் பாரசீக வளைகுடாவின் தேசத்துரோக அரபு நாடுகளின் இஸ்லாம் விரோத ஆட்சியாளர்களான இஸ்ரேலின் கூட்டாளிகள், அவர்கள் செய்யும் அரச பயங்கரவாதத்தை வழக்கம் போல் கண்களை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும்  பக்கச்சார்பான ஐ.நா. டமாஸ்கஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளை எவ்வளவு கடுமையாக கண்டிக்க முயற்சித்தாலும் பரவாயில்லை தொடரவிருக்கும் போராட்டத்தை அவற்றால் ஒருபோதும் தடுக்க முடியாது.

இஸ்லாமிய குடியரசு மற்றும் அதன் அமைதியான அணுசக்தி நிறுவல்களுக்கு எதிரான கிரிமினல் சியோனிச அமைப்பு அதன் அச்சுறுத்தல்களை ஏன் அதிகரித்தது என்பது இப்போது தெளிவாகிறது. இதுவே சிரியா தனது பதிலடி கொடுக்கும் உரிமையைப் பயன்படுத்தியிருந்தால், ஐ.நா. என்று அழைக்கப்படும் செவிட்டு அமைப்பு பெரும் கூச்சலுடன் துள்ளிக்குதித்திருக்கும்.

எவ்வாறாயினும், ஆக்கிரமிப்பு செய்தால் டமாஸ்கஸின் உதவிக்கு ஈரான் வருவதைத் தடுக்கும் ஒரு பயனற்ற முயற்சியே இதுவாகும்; இது ஓர் உளவியல் போரைத் தவிர வேறில்லை, மேலும் ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியபடி, இஸ்ரேலின் ஒரு தவறான நடவடிக்கை (அமெரிக்க ஆதரவுடனோ அல்லது இல்லாமலோ), அதன் அழிவுக்கே வழிவகுக்கும் என்பது திண்ணம்.

https://kayhan.ir/en/news/106682/israel-terrified-at-its-fast-approaching-end

Saturday, September 10, 2022

மெய்மண்ட் - 12000 ஆண்டுகள் பழமையான ஈரானிய கற்குகை கிராமம்

 Meymand – A 12000 year old village in Iran

தென்கிழக்கு ஈரானிய மாகாணமான கெர்மனில் ஷாஹர்-பாபக் நகருக்கு அருகில், கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் உள்ளது. மெய்மண்ட் என்ற அந்த கிராமம் குகைவாசிகளின் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

கெர்மன் மாகாணத்தில் உள்ள ஷஹர்-இ பாபாக் நகருக்கு வடகிழக்கே தெற்கில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்துடன் தெஹ்ரானை இணைக்கும் சாலையில் 35 கிலோமீட்டர் தொலைவில் மெய்மண்ட் அமைந்துள்ளது.

ஈரானில் உள்ள மெய்மண்ட் போன்ற ஒரு கிராமம் எவ்வளவு காலம் இருந்தது என்பதை புரிந்துகொள்வது கடினம் என்றாலும் ஈரானிய பீடபூமியில் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வசிப்பிடமாக மெய்மண்ட் நம்பப்படுகிறது.

12,000 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய பீடபூமியின் ஆரம்பகால குடிமக்களுக்கு மேமண்ட் கிராமம் வசதியான குகைகளையும் மற்றும் தங்குமிட பாறைகளையும் வழங்கி வருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த குடியேற்றம் தொடர்ந்து வருகிறது, இது ஈரானில் எஞ்சியிருக்கும் பழமையான கிராமங்களில் ஒன்றாகும்.

இந்த கிராமம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும், யுனெஸ்கோ 2005 இல் மெலினா மெர்கூரி சர்வதேச பரிசை இதற்கு வழங்கியது. உலகின் குறிப்பிடத்தக்க கலாச்சார நிலப்பரப்புகளைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான முயற்சிகளின் விதிவிலக்கான நிகழ்வுகளை அங்கீகரிப்பதே பரிசின் நோக்கமாகும்.

இந்த 12,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய குகை கிராமத்தில் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

மேமண்டில் உள்ள குடியேற்றத்தின் பிரமிக்கத்தக்க வயது, கல் பொறிப்புகளின் குறிப்புகளைக் கொண்டு மனித குடியேற்றங்களின் இருப்பை நிறுவ முடிந்தது.

இருப்பினும், கிராமத்தின் வரையறுக்கும் பண்பு, அதாவது அதன் 300+ நிலத்தடி குகை வீடுகள் கிட்டத்தட்ட 3-4,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இயற்கை குகைகளுக்கு அருகில், கையால் செதுக்கப்பட்ட வீடுகள் மலைகளின் வரம்பில் உள்ளன. அவை 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உள்ளூர் மக்களின் குடியிருப்புகளாக இருந்துவருவது மட்டுமல்லாமல் அவை இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

குகை குடியிருப்புகள் மத ஆசிரமங்களாக தொடங்கின, ஆனால் குடியேறியவர்கள் அந்த இடத்திலேயே நீண்ட காலம் தங்கியதால் மெதுவாக நிரந்தர வீடுகளாக பரிணமித்ததாகக் கருதப்படுகிறது. ஒற்றை அறை குடியிருப்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு மற்றும் ஐந்து அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் தரிசு ஒவ்வொன்றிலும் சமையலுக்கான பிரத்தியேக இடம் உள்ளது. உள்ளூர்வாசிகள் அவர்களின் மூதாதையர்கள் பாரம்பரிய கருவிகளுக்கு மாறாக அப்பகுதியில் காணப்படும் கடினமான, கூர்மையான கற்களைப் பயன்படுத்தி இந்த எளிமையான குகை வீடுகளை செதுக்கினர் என்று கூறுகின்றனர்.

700 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நாட்டிலுள்ள மற்றொரு குகை கிராமமான கண்டோவனுடன் ஒப்பிடும்போது, மெய்மண்ட் உண்மையில் அதை விட பழமையானது; 10,000 ஆண்டுகள் பழமையான கல் வேலைப்பாடுகள் மற்றும் 6,000 ஆண்டுகள் பழமையான மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கிராமங்களில் ஒன்றாகும். முதல் கோட்பாட்டின் படி, இந்த கிராமம் கிமு 800 முதல் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பழங்குடியினரால் கட்டப்பட்டது.

கிராமத்தில் தற்போது சுமார் 130-150 பேர் வசித்து வருகின்றனர், அவர்களில் பலர் நாடோடி மேய்ப்பர்கள், இம் மக்கள் குளிர்கால மாதங்களில் கிராம குகைகளில் வாழ்கின்றனர். கோடையில் உயரமான மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர்.

நிலப்பரப்பின் இயற்கையான மண் தன்மைக்கு கிராமவாசிகள் வண்ணம் சேர்க்கவில்லை. அவர்களின் வீடுகளிலோ அல்லது தெருக்களிலோ தொட்டிகளில் பூக்கள் அல்லது அலங்கார செடிகள் இல்லை. கிராமத்தின் அப்பட்டமான தோற்றம் அதன் குடிமக்களின் கடுமையான வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது.

மொத்தம் 2,560 அறைகளுடன் மொத்தம் 406 குடியிருப்பு குகை அலகுகள் உள்ளன. சில குகை குடியிருப்புகள் ஐந்து மாடிகள் உயரம் கொண்டவை. ஏராளமான அலகுகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

சுமார் 100 முதல் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கற்காலத்தில் அடுக்குகளில் படிந்திருந்த மலைப்பகுதியின் மென்மையான வண்டல் பாறையில் துளையிட்டு குடியிருப்பு அலகுகள் உருவாக்கப்பட்டன. மேமண்டின் வண்டல் பாறை கான்கிரீட் போன்ற நிலைத்தன்மை, குகை அலகுகளின் கூரைகளை தாங்கும் அளவுக்கு கடினமாக இருக்கும் அதே வேளையில், கைமுறை உழைப்பால் வடிவமைக்கும் அளவுக்கு மென்மையானது.

சில கீழுள்ள குகை குடியிருப்புகள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் நுழைவு அகழிகள் குடும்ப சந்திப்புகளும் சமூகக் கூட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் விதத்தில் அமையப்பெற்றுள்ளன.

கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் எட்டு அறைகள் கொண்ட விருந்தினர் இல்லமும் உள்ளது, இருந்தாலும் விருந்தாளிகள் சில நேரங்களில் சில குடியிருப்பாளர்களுடன் தங்குவதற்கு விரும்பினால், அவ்வாறும் செய்யலாம். விருந்தினர் விடுதியின் மாடிகளில், ஆடம்பரமான தங்குமிடங்கள் அல்ல என்றாலும், தரைவிரிப்புகள், சுவரில் செதுக்கப்பட்ட படுக்கைகள், மென்சூடான விளக்குகள் மற்றும் நீராவி குளியலுடன் கூடிய பகிரப்பட்ட ஆனால் சுத்தமான குளியலறைகள் உள்ளன.

ஈரான் வளமான வரலாற்றைக்கொண்ட ஒரு நாடு, மேலும் மேமண்ட் நாட்டின் பழமையான மற்றும் அழகிய கிராமங்களில் ஒன்றாகும். 2015 ஜூலை 4 அன்று, இந்த கிராமம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

மெய்மண்ட் கிராமம் ஈரானியர்களின் உறுதியான கலாச்சார பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாகும், இது ஏழாவது வரலாற்று, இயற்கை மற்றும் கலாச்சாரப் பணிக்கான விருதைப் பெற்றுள்ளது.

இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்கள் விசித்திரமான சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை இன்றளவிலும் கடைப்பிடித்து வருகின்றனர், இன்னும் சில சாசானிய வார்த்தைகளை தங்கள் மொழி மற்றும் பேச்சுவழக்கில் பயன்படுத்துகின்றனர்.

பழங்காலத்திலிருந்தே, கிராமவாசிகள், கிராமத்தின் சூழ்நிலை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் அதன் மதிப்புமிக்க இயற்கை வளங்களான நீர், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் மண் போன்றவற்றைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டு, தங்கள் குடியிருப்புகளை சூழவுள்ள ஏராளமான இயற்கை வளங்களை மதிக்க கற்றுக்கொண்டனர். மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையின் அமைதியை சீர்குலைக்காத வகையில் வாழ விரும்புகின்றனர்.

அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்த பிறகும் கூட இங்குள்ள இயற்கை சூழல் பழமை வாய்ந்ததாகவே உள்ளது. இந்த நவீன யுகத்திலும் குறிப்பிட்ட மாசடையாத, இயல்பு மாறாமல் நிலைத்திருக்கும் தன்மை தான், இப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

Tuesday, September 6, 2022

இஸ்லாமிய உலகிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது

Shiaphobia & Iranophobia are due to Domineering Powers’ rage over Iran countering their schemes

ஷியாஃபோபியா மற்றும் ஈரானோபோபியா ஆகியவை ஆதிக்க சக்திகளின் கோபத்தின் வெளிப்பாடாகும்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான இமாம் காமனெய், செப்டம்பர் 3, 2022 அன்று இமாம் கொமெய்னி ஹுசைனியாவில் அஹ்லுல்பைத் உலக சபையின் (ABWA) 7வது பொதுச் சபையில் பங்கேற்பாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தின் தொடக்கத்தில் அவர் பேசியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இல்லத்தாரின் பெருமையும், புகழும் இஸ்லாமிய உலகில் தனித்தன்மை வாய்ந்தது. “இஸ்லாமிய சமூகங்களுக்கு இன்று இந்த புனித குடும்பத்தினது போதனைகளின் பல்வேறு அம்சங்களுக்கான தீவிரத் தேவை உள்ளது. எனவே, விரிவான, சரியான திட்டமிடலின் அடிப்படையில் அஹ்லுல்பைத் உலகப் பேரவை இந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். மேலும், இந்த மகத்தான பொறுப்பை நிறைவேற்ற அவர்கள் நியாயமான முறைகளையும் பயனுள்ள கருவிகளையும் பயன்படுத்த வேண்டும்", என்பதை அவர் வலியுறுத்தினார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தைப் பின்பற்றுபவர்கள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் கொடியை உயர்த்த வேண்டும். மேலும், “அஹ்லுல்பைத் உலக பேரவையின் உருவாக்கம் ஷியா அல்லாதவர்களுடன் மோதலையும் பகைமையையும் வளர்ப்பதைக் குறிக்காது என்பதை நாங்கள் ஆரம்பம் முதலே கூறிவருகிறோம். சரியான பாதையில் செல்லும் ஷியா அல்லாத சகோதரர்களுடன் நாங்கள் இன்றளவிலும் ஒத்துழைத்து வருகிறோம்.

ஆணவ சக்திகளின் தற்போதைய கொள்கை இஸ்லாமிய உலகில் வேறுபாடுகளை உருவாக்கி உண்மையற்ற பிளவு கோடுகளை முன்னிலைப்படுத்துவதாகும். ஷியாக்களுக்கு எதிராக சுன்னிகளை மோதவிடுவதும், அரபி அல்லாதவர்களுக்கு எதிராக அரபிகளை மோதவிடுவதும், ஷியாக்களுக்கு எதிராக ஷியாக்களையும், சுன்னிகளுக்கு எதிராக சுன்னிகளையும் தூண்டிவிடுவது, இரு நாடுகளுக்கிடையே போர்களைத் தூண்டுவதும், சதி செய்வதும் இவர்களின் கொள்கையாகும். இப்போது சில நாடுகளில் காணக்கூடிய போர்கள் அமெரிக்க பெரும் சாத்தானின் திட்டமாகும்.இது தொடர்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

ஆணவ சக்திகளின் அமைப்பை எதிர்கொள்வதில் இஸ்லாமியக் குடியரசினால் உயர்த்தப்பட்ட கொடியைப் பற்றி குறிப்பிடுகையில், இஸ்லாமியப் புரட்சித் தலைவர்,  நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைப் பின்பற்றும் ஷியாக்கள் உலக ஏகாதிபத்தியத்தின் அமைப்புக்கு தலைமை தாங்கும் ஏழு தலை நாகத்திற்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொண்டதை பெருமையாக உணர்கிறேன். திமிர்பிடித்த சக்திகளே இப்போது தங்களின் பல திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்லாமியக் குடியரசின் ஸ்திரத்தன்மைக்கு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தான் காரணம். இதை அவர் பின்வரும் வார்த்தைகளில் விளக்கினார், "பிரகாசிக்கும் நட்சத்திரங்களான அவர்கள் தங்கள் தத்துவார்த்த அறிவு மற்றும் நடைமுறை வழிகளைக் கொண்டு எமது விருப்பத்திற்குரிய இஸ்லாத்தின் பாதையில் நடப்பதற்கும்  குர்ஆனை எவ்வாறு தியானிப்பது மற்றும் அதன்படி செயல்படுவது என்பதையும் எங்களுக்குக் கற்றுத்தந்தனர்."

"இஸ்லாமிய குடியரசின் கொடியானது நீதி மற்றும் ஆன்மீகத்தின் கொடியாகும். இந்தக் கொடிக்கு எதிராக உலகளாவிய ஏகாதிபத்தியம், அதன் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது மற்றும் செயல்களில் பொருள், பணம் மற்றும் பலத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்ப்பிலும் பகைமையிலும் கொதித்து எழுகிறது." என்று இமாம் காமனெய் தெரிவித்தார்..

திமிர்பிடித்த சக்திகளின் முன்னணியில் அமெரிக்கா இருப்பதாக குறிப்பிட்ட அவர் “குர்ஆனால் ஈர்க்கப்பட்டு, மதிப்பிற்குரிய எமது இமாம் கொமெய்னி (ரஹ்), அவர்கள் இஸ்லாமிய சமூகங்களுக்கிடையில் உள்ள அனைத்து கற்பனை பிளவுக் கோடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் இஸ்லாத்திற்கும் குப்ருக்கும் இடையே உள்ள ஒரே ஒரு பிளவு கோட்டை மட்டுமே கருத்தில் கொள்ளும்படியும் அனைவருக்கும் கற்பித்தார். அந்த பிளவு கோடுதான் இஸ்லாமிய உலகத்திற்கும் ஆணவ உலகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறிக்கும் எல்லை நிர்ணயம்.

பாலஸ்தீனத்திற்கான எமது ஆதரவு இந்த ஆழமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். இதன் விளைவாக, இஸ்லாமியப் புரட்சியின் ஆரம்ப நாட்களிலிருந்தே எமது நிகழ்ச்சி நிரலிலும் பாலஸ்தீனம் வைக்கப்பட்டது, மேலும் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் பாலஸ்தீனியப் பிரச்சினைக்காக தனது முழு இருப்பையும் கொண்டு நின்றார். மறைந்த இமாம் வரைந்த அதே அரசியல் வடிவியலின்படியே இஸ்லாமியக் குடியரசு இன்றும் செயல்படுகிறது. மேலும் அது எதிர்காலத்திலும் அதற்கு விசுவாசமாக இருக்கும், என்று இமாம் கமேனி வலியுறுத்தினார்,


ஈரானிய தேசத்துடன் இஸ்லாமிய உலக நாடுகள் கொண்டுள்ள விதிவிலக்கான மரியாதை, ஈரானிய மக்கள் இமாம் கொமெய்னியின் மூலோபாயத்தை கடைபிடிப்பதன் காரணமாகவே ஆகும்.என்று தலைவர் நம்புகிறார். இது இஸ்லாமிய உலகில் மத, இன வேறுபாடுகளை மறுக்கும் உத்தியாகும். “இதன் அடிப்படையில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஷியா - சுன்னி, அரேபி - அஜமி போன்ற பிரச்னைகளை புறக்கணிக்குமாறு நாங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டுள்ளோம். கொள்கைகள் மற்றும் அடித்தளங்களின் அடிப்படையில் அவர்களின் நடவடிக்கைகளை ஒன்றுபட்டு மேற்கொள்ள நாங்கள் அவர்களை அழைத்துள்ளோம்."

உலக ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நிற்பதற்கு ஏனைய நாடுகளை ஊக்குவிப்பது இந்த ஆணவ சக்திகளின் கோபத்திற்கும் பகைமைக்கும் காரணமாகும். "பல்வேறு நாடுகளில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வரும் கிரிமினல் திட்டங்களை ஈரான் முறியடித்துள்ளது; ஐஎஸ்ஐஎஸ் தோற்கடிப்பு இதற்கு ஒரு உதாரணமாகும். ஈரானோஃபோபியா மற்றும் ஷியாபோபியாவை தூண்டுவதற்கும், மற்ற நாடுகளில் ஈரான் தலையிடுவதாக குற்றம் சாட்டுவதற்கும் அவர்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட பிரச்சார முயற்சிகளை ஏற்பாடு செய்ய இதுவும் காரணமாக இருந்தது."

இஸ்லாமிய குடியரசு வேறு எந்த நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது என்று தலைவர் வலியுறுத்தினார். இஸ்லாமிய அமைப்பின் கணிசமான முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முயற்சிகள் தோற்றுப்போனதே உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் (ஈரானுக்கு எதிரான) குற்றச்சாட்டுகளுக்கான காரணமாகும். "நிச்சயமாக, திமிர்பிடித்த சக்திகளின் கொள்கைகள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் தீய நோக்கத்திற்கு ஒத்துழைக்காமல் கவனமாக இருக்க வேண்டும்." என்று தலைவர் வலியுறுத்தினார்,

இஸ்லாமிய உலகில் உள்ள வன்சக்தி மற்றும் மென்சக்தி திறன்களைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய உலகின் எதிரிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் திறன் ஏற்கனவே இஸ்லாமிய உலகில் உள்ளது என்று புரட்சித் தலைவர் வலியுறுத்தினார். "சத்திய இஸ்லாம் மற்றும் அதன் போதனைகள், இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், வரலாற்றை நோக்கிய நம்பிக்கையான கண்ணோட்டத்தைப் பேணுதல் மற்றும் இமாம் மஹ்தியின் வருகையில் நம்பிக்கை" ஆகியவை இஸ்லாமிய உலகின் மென்சக்தி திறன்களில் சில.

மேற்குலகில் இருக்கும் ஆன்மீக வாங்குறோத்து நிலை மற்றும் தாராளவாத ஜனநாயக அமைப்பு பற்றி குறிப்பிடுகையில் "இஸ்லாமிய உலகின் வளங்களைப் கொள்ளையடிப்பதற்கு, காலனித்துவம் போன்ற முறைகளைக் கையாண்டுள்ளனர், மேலும் பலாத்காரம் மற்றும் ஆயுத தலையீடு போன்ற அனைத்து வன்முறையினையும் திமிர்பிடித்த சக்திகள் கைக்கொண்டன, தங்களைத் தாங்களே பலப்படுத்திக் கொள்வதற்காக எல்லாவிதமான தந்திரங்களையும் வஞ்சகங்களையும் பயன்படுத்தினர். இருப்பினும், இஸ்லாமிய நாடுகள் உலகில் இருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் நமது முன்னேற்றத்திற்கு உதவும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கியத்துவம் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும், இது இன்று உலகில் உள்ள அனைவருக்கும் மிகவும் தெளிவான விடயமாகும்.

அவரது உரையின் முடிவில், "இஸ்லாமிய உலகிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது, மேலும் ஷியா சமூகமான நீங்கள் இந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கை வகிக்க முடியும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

https://english.khamenei.ir/news/9136/Shiaphobia-Iranophobia-are-due-to-Domineering-Powers-rage

 


Thursday, September 1, 2022

எமது பிரச்சினைகளை தீர்க்க பிறர் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்பது தீங்கு விளைவிக்கும்..!

 Waiting for Others to Solve Problems Harmful

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி செவ்வாயன்று, ஜனாதிபதி செய்யத் இப்ராஹீம் ரயீஸி மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்களை சந்தித்து உரையாற்றுகையில் உள்நாட்டு உற்பத்தியை பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக விவரித்தார், உள்நாட்டு உற்பத்திக்கு ஏதேனும் தடையாக இருந்தால் அதை அகற்ற நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.

ஆயதுல்லா காமனெய் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களைச் சந்தித்து, பொருளாதாரமே நாட்டின் முதன்மையான முன்னுரிமை என்று கூறினார், இருப்பினும் (இதனால் ஏற்படக்கூடிய) அறிவியல், பாதுகாப்பு அல்லது சமூக மற்றும் கலாச்சார பாதிப்புகள் போன்ற பிற அம்சங்களை புறக்கணிக்கக்கூடாது, என்றும் அறிவுறுத்தினார்.

பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, தனிநபர் வருமான வளர்ச்சி மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை குறைத்தல் போன்ற முக்கிய பொருளாதார குறியீடுகளை "கவனமாக மற்றும் தொடர்ந்து" கண்காணிக்குமாறு தலைவர் அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்தார்.

விவசாய உற்பத்தியின் முக்கியத்துவத்தை தலைவர் சுட்டிக்காட்டினார், உக்ரைனில் இடம்பெறும் போரை அடுத்து (உலகின்) உணவு நெருக்கடியை மேற்கோள் காட்டி, உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் கோதுமை போன்ற அடிப்படை தேவைகளின் உற்பத்தியில் தன்னிறைவு தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

"இன்று உலகின் ஒரு மூலையில் போர் ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது மற்றும் உணவுப் பாதுகாப்பு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. கோதுமை, மக்காச்சோளம், கால்நடை தீவனம் போன்றவற்றில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வந்தோம். ஈரானில் சிலர் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். ஆயினும், இது (சுய தேவையில் தன்னிறைவு) எவ்வளவு முக்கியமானது என்பது இன்று உலகில் உள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.

ஆயதுல்லா காமனெய் வீட்டுவசதியை சுட்டிக்காட்டி, வீட்டு நிர்மாண துறையில் உள்ள தளர்ச்சியானது வாடகை அதிகரிப்புக்கும் வீட்டு விலை அதிகரிப்புக்கும் காரணமாக அமைத்துள்ளது என்றும் இதனால் பலர் கஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். என்றும் கூறி, இதில் முக்கிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பாரிய இயற்கை மற்றும் மனித வளங்கள் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முயற்சிகளை தலைவர் வலியுறுத்தினார்.

பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணித்தல், சுரங்கத் தொழில்களில் மதிப்பு கூட்டுதல் சங்கிலியை நிறைவு செய்தல் மற்றும் மூலப்பொருட்களின் விற்பனையைத் தடுப்பது, இன்னும் முக்கியமான வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு வழித்தடங்களை முன்னேற்றுவதன் அவசியத்தை தலைவர் எடுத்துரைத்தார். சர்வதேச போக்குவரத்துக்கான திறன், மற்றும் கடல்களில் கிடைக்கும் இணையற்ற வளங்கள் ஊடாக வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் போன்ற அம்சங்களையும் தலைவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் நிர்வாகத்தின் வெற்றிகளில் நீதியை நிலைநாட்டல், ஆடம்பரத்தைத் தவிர்த்தல், ஒடுக்கப்பட்டவர்களை ஆதரித்தல் மற்றும் திமிர்பிடித்த சக்திகளை எதிர்த்தல் போன்ற இஸ்லாமியப் புரட்சி மற்றும் இஸ்லாத்தின் முழக்கங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததுள்ளதானது முக்கியமானது என்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதல்லா காமனெய் கூறினார்.

"புதிய நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்று, நம்மைப் பற்றி வெளியில் உள்ள மற்றவர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்பதை தொடர்ந்து எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கும் சமூகத்தின் நிலையை நீக்கியுள்ளது. ஆகவே, இந்த நிர்வாகம் உள்நாட்டு திறன்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றில் செயல்பட்டு வருகிறது,'' என்றார்.

ஆயத்துல்லா காமனெய் மேலும் தனதுரையில் “சிலர் எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு 'குறிப்பிட்ட' நாட்டுடன் கண்டிப்பாக உறவு வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் இவ்வாறு செய்வது நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் செயலாகும். நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிறர் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்காக காத்திருப்பது தவறான அணுகுமுறையாகும் என்று வலியுறுத்தி கூறினார்.

https://kayhan.ir/en/news/106367/waiting-for-others-to-solve-problems-harmful