Contributors

Monday, December 14, 2020

‘இஸ்ரேல் இல்லா உலகம் பாதுகாப்பாக இருக்கும்’

Iran: No sustainable security in region as long as Israeli entity exists

இஸ்ரேல் என்ற ஒன்று இருக்கும் வரை பிராந்தியத்தில் நிலையான சமாதானத்துக்கு வாய்ப்பில்லை

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாஃப் சிரிய வெளியுறவு மந்திரி பைசல் மெக்தாத் உடன் தெஹ்ரானில் டிசம்பர் 7, 2020 அன்று சந்தித்தார். (புகைப்படம் இகானா செய்தி நிறுவனம்)

சிரிய வெளியுறவு மந்திரி வருகையுடன் உயர்மட்ட ஈரானிய அதிகாரிகள் தனித்தனியாக சந்தித்துள்ளனர், பிராந்தியத்தில் இஸ்ரேலின் ஸ்திரமின்மைக்குரிய பங்கை எடுத்துரைத்து, சியோனிச ஆட்சி இல்லாமல் உலகம் ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று வலியுறுத்தினர்.

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், பிராந்தியத்தில் நிலையான பாதுகாப்பை அடைவதற்கு இஸ்ரேல் ஒரு தடையாக இருக்கின்றது என்று வர்ணித்து, ஆக்கிரமிப்பு ஆட்சிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான அமெரிக்க தரகில் ஏற்படுத்தப்பட்ட இயல்பாக்க ஒப்பந்தங்களுக்கு எதிராக முஸ்லிம் அரசாங்கங்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"அமெரிக்காவின் ஆதரவுடன், சியோனிச ஆட்சி சில முஸ்லிம் நாடுகளுடனான உறவை சீராக்க முயல்கிறது. அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சி எடுத்துவரும்  இந்த முயற்சிக்கு எதிராக முஸ்லிம்  அரசாங்கங்களும் சமூகங்களும் நிற்க வேண்டும் மற்றும் இவ்வொப்பந்தங்கள் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை இயல்பாக்குவது நியாயமற்ற, சர்வதேச சட்டங்களுக்கு உடன்படாத செயலாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் ”என்று திங்களன்று தெஹ்ரானில் சிரிய வெளியுறவு மந்திரி பைசல் மெக்தாத்துடனான சந்திப்பில் கலிபாஃப் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் எட்டிய, வாஷிங்டன் தரகு ஒப்பந்தங்களையே அவர் குறிப்பிடுகிறார்.

இன்னும் ஒரு மாதம் கழிந்ததும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும் சூடானும் பொருளாதார உறவுகளை இயல்பாக்கப்பட்ட உறவுகளை நோக்கிய பாதையாக நிறுவியுள்ளன என்றார்.

"அல்-குத்ஸை ஆக்கிரமித்துள்ள பயங்கரவாத ஆட்சி இருக்கும் வரை இப்பகுதியில் பொருத்தமான பாதுகாப்பு இருக்காது" என்று கலிபாஃப் எச்சரித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இஸ்லாமிய உம்மாவின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார், "இஸ்லாமிய நாடுகளின் மக்கள் மீதான நம்பகத்தன்மை, இஸ்லாம் மார்க்கம் மற்றும் எதிரிகளுக்கு எதிரான ஒத்துழைப்பு ஆகியவை முஸ்லிம்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்" என்றும் குறிப்பிட்டார்.

பிராந்திய பாதுகாப்பைப் பேணுவதில் ஈரானிய பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் காஸெம் சுலைமானி ஆற்றிய மகத்தான பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

ஈராக் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனவரி 3 ம் தேதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஜெனரல் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டார். பிராந்தியத்தில், குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான தாயெஸ் பயங்கரவாத குழுவை இல்லாதொழிக்க ஜெனரல் சுலைமானி ஆற்றிய பங்கு மகத்தானது.

சியோனிச அமைப்பின் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு  எதிராக முகம்கொடுக்கும் முன்னணி நாடாக சிரியாவை கலிபாஃப் குறிப்பிட்டார் மேலும் சிரிய அரசாங்கத்திற்கும் தேசத்திற்கும் இஸ்லாமிய குடியரசின் அயராத ஆதரவை வலியுறுத்தினார்.

தக்ஃபிரி பயங்கரவாதிகளுக்கு எதிரான சமீபத்திய வெற்றிகள் குறித்து சிரியாவை வாழ்த்திய அவர், “எதிரிகளுக்கு எதிரான போரில் அஸ்தானா சமாதான முன்னெடுப்பின் கட்டமைப்பிற்குள் அரசியல் பேச்சுவார்த்தைகள் நிலையான ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் பாராளுமன்றத் துறைகளில் சிரியாவுடன் ஈரானின் சகோதர உறவுகளை விரிவுபடுத்த மேலும் அவர் அழைப்பு விடுத்தார்.


பிராந்திய முன்னேற்றங்கள் ஈரான்-சிரியா விழிப்புணர்வு, ஆலோசனைகள்: எஃப்.எம்.சரீஃப்

ஈரானிய வெளியுறவு மந்திரி தெஹ்ரானும் டமாஸ்கஸும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். 

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கா தலைமையில் அதன் மேற்கு மற்றும் பிராந்திய நட்பு நாடுகள் பலவும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதங்களைத் வழங்கி உள்நாட்டு யுத்தம் ஒன்றை தொடங்கின. அச்சமயத்தில் ஈரான் சிரியாவுக்கு இராணுவ ஆலோசனை உதவிகளை வழங்கத் தொடங்கியது.

ஆரம்பத்தில் தாயெஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு கணிசமான அளவிலான நிலப்பரப்பை இழந்த போதிலும், ஈரான் மற்றும் ரஷ்யாவின் உதவியுடன் சிரியா மீண்டும் தனது வலிமையைப் பெற்றது, மேலும் போர்க்களத்தில் அதனால் தனக்கு சாதகமாக சமநிலையை மாற்றியமைக்கவும் முடிந்தது.

ஜெனரல் சுலைமானி மற்றும் ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே ஆகியோரின் படுகொலைகள் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களான வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றின் உண்மையான முகங்களை உலகுக்கு மீண்டும் வெளிப்படுத்தியதாக மெக்தாத் கூறினார்.

ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சரும், அமைச்சின் பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SPND) தலைவருமான ஃபக்ரிசாதே நவம்பர் 27 அன்று தெஹ்ரானுக்கு அருகே இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

சிரியாவின் எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானின் பொருள் மற்றும் ஆன்மீக உதவிகளை தனது நாடு ஒருபோதும் மறக்காது என்று உயர் சிரிய தூதர் வலியுறுத்தினார்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி அவர் குறிப்பிடுகையில் அமெரிக்க அரசாங்கங்கள் கொள்கை அடிப்படையில் வேறுபட்டவை அல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருத்தல் பிராந்தியங்களில் எப்போதும் பாதுகாப்பின்மை மற்றும் உறுதியற்ற தன்மை பரவுவதற்கு பங்களித்து வந்துள்ளது.

சியோனிச ஆட்சியின் நலன்களைப் பாதுகாப்பதில் அமெரிக்க ஜனாதிபதிகள் உடன்படுகிறார்கள், இது ஐரோப்பிய நாடுகளின் நலன்களைக் காட்டிலும் அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். பலஸ்தீன் விடயத்தில் பைடன் நியாயத்தை கடைபிடிப்பார் என்று நம்புவதற்கில்லை என்றும் மிக்தாத்  குறிப்பிட்டார்.

இஸ்ரேல் இல்லா உலகம் பாதுகாப்பாக இருக்கும்’

செவ்வாயன்று, மிக்தாத் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எஸ்.என்.எஸ்.சி) செயலாளர் அலி ஷம்கானியுடன் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, சிரியாவில் அமெரிக்காவின் இருப்பு அரபு நாட்டின் எண்ணெயைக் கொள்ளையடிப்பதற்கும், இஸ்ரேலின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், தாயெஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கி வலுப்படுத்துவதற்கும் ஆகும் என்றும், “இப்பகுதியில் அமெரிக்காவின் தீய இருப்பு முடிவுக்கு வர வேண்டும்” என்றும் ஷம்கானி கூறினார்.

இஸ்ரேல் அதன் இருப்புக்காக மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாதத்தை நம்பியுள்ளது, எனவே சர்வதேச சமூகம் "இந்த இரத்தவெறி ஆட்சியின்" நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"சந்தேகத்திற்கு இடமின்றி, சியோனிச ஆட்சி இல்லாமல் உலகம் பாதுகாப்பாக இருக்கும்," என்று அவர் கூறினார். "போலி சியோனிச ஆட்சியுடனான உறவை இயல்பாக்குவதற்கு மானம் கெட்டத்தனமாக முயலும், பிராந்தியத்தில் அமெரிக்க திட்டங்களை செயல்படுத்த உதவுகின்ற அந்த அரசாங்க அதிகாரிகளுக்கு வெளியேற்றப்பட்ட லிபிய தலைவர் முஅம்மர்] கடாபி மற்றும் சூடான் தலைவர் உமர் அல்-பஷீர் ஆகியோரை விட சிறந்த உதாரணம் இருக்காது.,” என்று ஷம்கானி கூறினார்.

இஸ்லாமிய குடியரசு, சிரிய அரசாங்கத்தையும் தேசத்தையும் ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களது போராட்டத்தில் ஒருபோதும் கைவிட மாட்டாது என்றும் ஷம்கானி குறிப்பிட்டார்.

https://www.presstv.com/Detail/2020/12/08/640255/Iran-Qalibaf-Syria-Mekdad-Israel 

Sunday, December 6, 2020

ஈரான் மீது சுமத்தப்படும் நியாயமற்ற அழுத்தம் அவர்களை அணு ஆயுதங்களை நாட வழிவகுக்கும்...?

Unjust pressure imposed on Iran may lead them to resort to nuclear weapons - political analysts fear

படுகொலை செய்யப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே 

அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் ராணுவ ஜெனரல்களையும்  படுகொலை செய்வதன் மூலம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தடுக்க முடியும் என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் எதிரிகள் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஈரானின் இஸ்லாமிய ஆட்சி முறையை வீழ்த்த கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் ஈரானுக்குள் எத்தனையோ பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்தினார்கள், பல தலைவர்களை கொலை செய்தார்கள், ஆட்சியைக் கவிழ்க்க பல சூழ்ச்சிகளை செய்தார்கள், யுத்தமொன்றைத் திணித்தார்கள், பொருளாதாரத் தடைகளை விதித்தார்கள். இவற்றில் எதனாலும் ஈரானின் முனேற்றத்தைத் தடுக்க முடியவில்லை.

பல பொருளாதார சோதனைகளுக்கு மத்தியிலும் ராணுவ ரீதியில் அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றம், பிராந்தியத்தில் ஈரானை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு, அதாவது அதனை ஒரு வல்லரசு என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.

ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸாதே கொலைசெய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்ய விஞ்ஞானி வாடிம் கோமென்கோவ் ஒரு அணு விஞ்ஞாணியை கொள்வதால் ஒரு நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தடுக்க முடியும் என்று நினைப்பது முட்டாள்தனமானது; விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவிடயங்கள் எந்த ஒரு நாட்டிலும் தனிநபர்களில் தங்கியிருப்பதில்லை; இந்த படுகொலையானது  ஈரானின் எதிரிகளின் பலவீனத்தின் அடையாளமாகவே நான் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய டாடர்ஸ்தான் குடியரசின் அறிவியல் அகாடமியின் துணை இயக்குனரான கோமென்கோவ், சமீபத்திய தசாப்தங்களில் ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வலுவான முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்றும், ஈரானின் எதிரிகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இந்த முன்னேற்றம் குறித்து பொறாமையும் கவலையும் கொண்டுள்ளன என்கிறார்.

ஈரான் விஞ்ஞான துறைகளில் முன்னேறுவதைத் தடுக்க ஈரானின் எதிரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பார்கள் என்பதையே பக்ரிஸாதேவின் படுகொலை காட்டியது என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27-11-2020) அன்று தலைநகர் தெஹ்ரானுக்கு வடகிழக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டமவண்ட் மாகாணத்தில் உள்ள அப்சார்ட் என்ற சிறிய நகரத்தின்  நெடுஞ்சாலையில் மொஹ்சென் பக்ரிஸாதே மீது குறிவைக்கப்பட்டது. தாக்குதலின் போது விஞ்ஞானி உயிர் இழந்தார், அதே நேரத்தில் அவரது மெய்க்காப்பாளர்கள் பலத்த காயமடைந்தனர்.

இந்த படுகொலைக்குப் பின்னால் கடந்த தசாப்தத்தில் ஈரானிய அணு விஞ்ஞானிகளுக்கு எதிராக படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்ட இஸ்ரேல் மீது ஈரானிய அதிகாரிகள் குற்றம்சாட்டினார். வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் வெள்ளிக்கிழமை ஒரு ட்வீட்டில் "இஸ்ரேலிய பங்கு பற்றிய தீவிர அறிகுறிகளுடன்" இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறினார்.

பக்ரிஸாதே உடன் கடந்த ஆண்டுகளில் இஸ்ரேல் இன்னும் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகளை படுகொலை செய்துள்ளது. மசூத் அலிமோஹம்மதி, மஜித் ஷாஹ்ரியாரி, தரியூஷ் ரெசய்நஜாத் மற்றும் மொஸ்தபா அஹ்மதி ரோஷன் ஆகியோரைக் கொன்றது. ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவரான ஃபெரெய்தன் அப்பாஸியையும் படுகொலை செய்ய இஸ்ரேல் முயன்றது, ஆனால் அது தோல்வியடைந்தது.

ஐ.நா.உட்பட பல உலக நாடுகளும் அமைப்புகளும் இந்த படுகொலையை வன்மையாக கண்டித்துள்ளன. எப்போதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் சார்பு நிலையை எடுக்கும் மேற்குலக நாடுகள் கூட குறிப்பிட்ட கொலை சம்பவத்தைக் கண்டித்தது மட்டுமல்லாமல் இது ஈரானுடனான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அச்சம் தெரிவித்தும் உள்ளன. அதேவேளை ஈரான் உச்சமட்ட பொறுமையை கையாள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.

https://www.tehrantimes.com/news/455355/Iran-s-enemies-cannot-hamper-its-scientific-progress-says-Russian

ஈரான் ஜூலை 14, 2015 அன்று கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA), அணுசக்தி ஒப்பந்தத்தில், அமேரிக்கா , ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டது.

எவ்வாறாயினும், மே 8, 2018 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறினார். ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்துகொள்ள அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை தெஹ்ரானுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்தம்” கொள்கையாகவும் மாற்றினார்.

ஈரானின் நிலைப்பாடு என்னவென்றால், பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எட்டப்பட்ட குறிப்பிட்ட இந்த ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைக்குத் திறந்த ஒன்றல்ல. அமேரிக்கா அது ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை அது மதிக்க வேண்டும் என்பதாகும். 

காலத்துக்குக் காலம் அமெரிக்காவில் ஏற்படும் தலைமைத்துவ மாற்றத்துக்கு ஏற்பவோ அல்லது அவர் போடும் தாளத்துக்கு ஆட்டம் போடவோ ஈரான் தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈரான் இஸ்லாமிய குடியரசை அச்சுறுத்தி காரியம் சாதிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்காவிற்கு கடமைகள், பொறுப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் தீர்மானமாக 2231 உள்ளது, அதற்கமைய அது நடந்துகொள்ள வேண்டும். பல விட்டுக்கொடுப்புகளை செய்தே ஈரானும் அதை ஏற்றுக்கொண்டு, கையெழுத்திட்டது. அதற்கப்பால் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக வேறு எதையும் ஈரானிடம் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.

ஈரானிய அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவின் படுகொலையைத் தொடர்ந்து, தம்மை நம்பவைத்து ஏமாற்றுகின்றனரா என்று சந்தேகிக்க நியாயமான காரணங்கள் பல ஈரானுக்கு உள்ளன என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் ஸ்தானிகர் ஜோசப் பொறேல் தெரிவித்தார்.

Josep Borrell

மொஹ்சென் பக்ரிசாதேவின் படுகொலையானது  ஈரானுக்கும் ஏனைய பலம் மிகுந்த நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் உரையாடலைத் தடம் புரட்ட முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பொறேல், “சரி, இந்த கொலையை யார் செய்தாலும் நிச்சயமாக உரையாடலை எளிதாக்க அதைச் செய்யவில்லை என்பது தெளிவு. நிச்சயமாக, இந்த ஒப்பந்தம் தொடரக்கூடாது என்பதில் ஆர்வமுள்ள பல தரப்பினர் இருக்கிறார்கள்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ஐரோப்பா குறிப்பிட்ட ஒப்பந்தம் தொடர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கொஞ்ச காலம் உறக்க நிலையில் இருந்தாலும் அது இறக்கவில்லை. இப்போது ஈரானியர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் ஈரானியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை எல்லோராலும் உணரக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து ஏமாற்றப்படாதிருக்க அவர்கள் சில நடவடிக்கைகளை எடுக்கக் கூடும். அவை என்னவென்று நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றும் கூறினார்.

தற்போதைய ஈரானியத் தலைவர்கள் அணு ஆயுதங்களை நோக்கி செல்வதில்லை என்ற தெளிவான உறுதிப்பாட்டுடன் உள்ளனர்; மனித பேரழிவவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரித்தல், இருப்பில் வைத்திருத்தல் மார்க்கத்துக்கு முரணான செயல் என்று என்று அவர்கள் மார்க்கத்தீர்ப்பும் வழங்கியுள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு கொடுக்கப்படும் நியாயமற்ற நெருக்குதல், அவர்கள் மீது விதிக்கப்பபடும் சட்டவிரோத பொருளாதாரத் தடைகள் அவர்களை அணு ஆய்தங்களில் நாட்டம்கொள்ளச் செய்துவிடுமோ என்று அரசியல் ஆய்வாளர்கள் அச்சம்கொண்டுள்ளனர்.

- தாஹா முஸம்மில்


Saturday, November 28, 2020

அமெரிக்கா கொள்ளையடிக்கும் சிரிய மக்களின் எண்ணெய் செல்வம்: ஈரான் ஐ.நா தூதர்

US looting oil, wealth of Syrian people: Iran UN envoy

உலகில் தம்மை நாகரீகமடைந்த நாடுகளாகவும் வளர்ச்சியடைந்த நாடுகளாகவும் காட்டிக்கொண்டு வறுமை நிலையிலும் பலமிழந்த நிலையிலும் உள்ள நாடுகளின் செல்வங்களை கொள்ளையடிக்கும் வெட்கம் கெட்டத்தனத்தை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அரபு நாடுகளில் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் சிரியாவில் ஆக்கிரமிப்பைத் தொடரும்  அமெரிக்கப் படைகள் சிரியாமக்களின் எண்ணெய் மற்றும் செல்வத்தை கொள்ளையடிக்கின்றன என்று ஐக்கிய நாடுகளுக்கான ஈரானின் தூதர் கூறினார். சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையுமின்றி திரும்பப்பெற வேண்டும் என்றும்  அவர்  வலியுறுத்தினார்.

சிரியா தொடர்பான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய மஜித் தக்த்-ரவாஞ்சி, "கிட்டத்தட்ட 10 ஆண்டுகால மோதல்களுக்குப் பின்னர், சிரிய மக்கள் அவர்கள் நாட்டின் மீது தொடரும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

"சட்டவிரோத ஆக்கிரமிப்பு, மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகள், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் வருகையை அரசியல்மயமாக்குதல் மற்றும் சிரியாவின் புனரமைப்புக்கு சர்வதேச ஆதரவைத் தடுப்பதன் மூலம், சில நாடுகள் சிரிய மக்கள் மீது தங்கள் சொந்த விருப்பத்தை / ஆதிக்கத்தை திணிக்க முயற்சிப்பது அங்கு இன்னும் மோதல் நீடிப்பதற்கு காரணமாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

"இத்தகைய முயற்சிகள் சட்டவிரோதமானவை, ஒழுக்கக்கேடானவை, நாகரீகமற்றவை; அவை தோல்வியிலேயே முடிவுறும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார், "சிரிய நெருக்கடியை அரசியல் வழிமுறைகள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும், சிரியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை சிரியர்களுக்கு மட்டுமே சொந்தமானது, இந்த உண்மையை உணருங்கள் சர்வதேச சமூகம் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்;."

"இதன் பொருள் இறையாண்மை, அரசியல் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு அனைவராலும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்." என்று ரவாஞ்சி தொடர்ந்து கூறினார்,

"எந்தவொரு பிரிவினைவாத சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல்களும், சட்டவிரோதமான பிரிவினைவாத முயற்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டும், மேலும் சிரிய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படாத அனைத்து வெளிநாட்டு சக்திகளும் உடனடியாக, நிபந்தனைகளின்றி சிரியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று அவர் எடுத்துரைத்தார்.

"சிரியாவில் பயங்கரவாதிகளை எதிர்ப்பது அவர்களின் அச்சுறுத்தல்களை முழுமையாக அகற்றும் வரை சிரிய அரசின் செயல்பாடு தொடர வேண்டும். இது பொதுமக்களின் உயிரை கவனத்தில் எடுத்து மிகுந்த அவதானத்துடன் செய்ய வேண்டும். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லவும் மற்றும் இட்லிப் போன்ற இடங்களை பயங்காரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாற்றவும் அனுமதிக்கக்கூடாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

"சிரியாவின் இறையாண்மைக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். சிரிய கோலான் பிரதேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் இஸ்ரேலுடன் அதை இணைப்பதை அமெரிக்கா அங்கீகரிப்பது செல்லுபடியற்றது. அமெரிக்க செயலாளரின் சிரிய கோலனுக்கு அண்மையில் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் பயணம் குறிப்பிட்ட இணைபை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது எனபதையும் ஈரானிய தூதுவர் சுட்டிக்காட்டினார். கோலன் என்பது சிரிய நாட்டின் ஒரு பகுதியாகும், எப்போதும் அது சிரியாவின் ஒரு பகுதியாகவும் இருக்கும்,” என்று தக்த்-ரவாஞ்சி மேலும் கூறினார்.

"சிரிய தலைமையிலான, சிரியருக்கு சொந்தமான மற்றும் ஐ.நா. வசதி கொண்ட அரசியல் செயல்முறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதன் மூலம், சிரிய நெருக்கடியின் அரசியல் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கிறோம்," என்றும் அவர் கூறினார்.

"இந்த சூழலில், திரு. பெடெர்சன் அண்மையில் தெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது, அரசியலமைப்புக் குழுவின் பணிகள் உள்ளிட்ட பயனுள்ள ஆலோசனைகள் நடந்தன, அங்கு அவர் நமது வெளியுறவு மந்திரி மற்றும் பிற உயர் அதிகாரிகளை சந்தித்தார்," என்று கூறினார். எந்தவொரு வெளிப்புற குறுக்கீடோ அல்லது அழுத்தமோ இல்லாமல் அது செயல்பட வேண்டும். அதன் பணிகளை முடிக்க எந்தவொரு செயற்கை காலக்கெடுவையும் அமைக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட அரசியலமைப்பு குழுவை ஆதரிப்பது, சிரிய மக்களின் உண்மையான நலன்கள் எல்லா நலன்களுக்கும் மேலாக மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," தக்த்-ரவாஞ்சி  தொடர்ந்தார்,

"அரசியல் செயல்முறைக்கு இணையாக, சர்வதேச முயற்சிகள் தொடர்ந்து சிரியாவின் புனரமைப்பு மற்றும் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரை சிரியாவில் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு பாதுகாப்பாகவும் தானாகவும் வந்து குடியேறுவதற்கு உதவ வேண்டும்," என்று அவர் கூறினார்.

"இது சம்பந்தமாக ஒரு முக்கியமான முயற்சியாக, நவம்பர் 11-12 அன்று டமாஸ்கஸில் நடைபெற்ற சிரிய அகதிகள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான சர்வதேச மாநாட்டை நாங்கள் வரவேற்கிறோம். மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான ஒவ்வொரு முயற்சியையும் அரசியல்மயமாக்கும் சில நாடுகளால் துரதிர்ஷ்டவசமாக இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. அகதிகள் திரும்புவது மற்றும் சிரியாவின் புனரமைப்பு. மில்லியன் கணக்கான சிரிய அகதிகளின் நலனை சில சக்திகளின் அரசியல் ஆதாயங்களுக்காக பிணைக் கைதிகளாக வைத்திருக்கக்கூடாது "என்று தக்த்-ரவாஞ்சி  குறிப்பிட்டார்.

"சிரிய மக்கள் மோதல் மற்றும் COVID-19 தொற்றுநோய்களின் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அகதிகள் திரும்பி வருவதற்கு உதவுவதைத் தவிர்ப்பது அவர்களின் துன்பங்களை அதிகரிக்கும் மற்றும் நீடிக்கும், இது அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை விதித்ததன் மூலம் ஏற்கனவே மோசமடைந்துள்ளது, " அவர் சொன்னார்.

ஈரான் ஐ.நா தூதர், "இந்த சட்டவிரோத பொருளாதாரத் தடைகளின் விளைவாக பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான போராட்டத்தில் சிரிய மக்களை சர்வதேச சமூகம் தனியாக விடக்கூடாது" என்று வலியுறுத்தினார்.

https://en.mehrnews.com/news/166377/US-looting-oil-wealth-of-Syrian-people-Iran-UN-envoy