Contributors

Tuesday, July 14, 2020

ஈரானிடம் தோல்வி கண்டு வரும் டொனால்ட் ட்ரம்ப்

Iran ‘Becoming Immune to Pressure’

ஈரான் இஸ்லாமிய குடியரசை நோக்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் 5 ம் தேதி "நீங்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு சிறந்த ஒப்பந்தத்தை என்னுடன் செய்துகொள்ள முடியும்" என்று கூறினார்.

ஈரானிய மருத்துவர் மஜித் தாஹெரிக்கு ஈடாக ஈரானில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் மைக்கேல் ஒயிட்டை அண்மையில் கைதி பறிமாற்றம் செய்த பின்னர் டிரம்பின் இக்கருத்துக்கள் வந்துள்ளன.

Admiral Ali-Shamkani

ஈரானின் முடிவெடுக்கும் உயர் அமைப்புகளில் ஒன்றான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி, ஒரு ஒப்பந்தத்திற்கான டிரம்ப் முன்வைத்த கோரிக்கைக்கு  பதிலளிக்கும் விதமாக, "கைதிகளின் பரிமாற்றம் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இடம்பெற்ற ஒன்றல்ல, டிரம்புடன் எதிர்காலத்திலும் சரி, எந்த பேச்சுவார்த்தைகளும் நடக்காது" என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். ஷம்கானியின் கருத்துக்கள் தெஹ்ரானில் ஒரு நிலையான கொள்கையை பிரதிபலிக்கின்றன என்பதையே காட்டுகின்றன: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் எமது நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் இல்லை. ஜனாதிபதி ஹசன் ரூஹானி, வெளியுறவு மந்திரி முஹம்மது ஜவாத் ஸரீஃப் மற்றும் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ ஆகியோர் கூட கைதிகள் பரிமாற்றம் பேச்சுவார்த்தை இல்லாமலே இடம்பெறலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பயங்கரவாதச் செயலுக்குப் பழிவாங்க வேண்டும் என்று பல மில்லியன் மக்கள் ஈரானின் நகரங்களில் திரண்டனர். பிப்ரவரியில் ரூஹானி இவ்வாறு தெரிவித்தார்: "அதிகபட்ச அழுத்தத்தினால் அவர்கள் எங்களை பலவீனமான நிலையில் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று நினைத்தார்கள் ... இது ஒருபோதும் நடக்காது.


ஈரானின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்தவொரு முயற்சிக்கும் விரோதமாக மாறியுள்ளது. பராக் ஒபாமா ஆட்சி கால  அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், பல ஆண்டுகளாக இருந்த தடையை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மூர்க்கமாக நிறுவியுள்ளது என்று அந்த அமெரிக்க சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

"உலகளாவிய ஆணவத்தின் மைய புள்ளியான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசம் பயனற்றது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது" என்றும் ஈரானின் புதிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபஃப் தனது கன்னி உரையில் "பயங்கரவாத அமெரிக்காவை நோக்கிய எங்கள் மூலோபாயம் தியாகி சோலைமானியின் இரத்தத்திற்காக நமது பழிவாங்கலை நிறைவு செய்வதாகும்", என்றும் கூறினார்..

Iran's Majlis Speaker Muhammad Baqer Qalibaf

இஸ்லாமிய புரட்சி காவல்படைப் படையின் முன்னாள் தளபதியும் சுலைமானியின் பழைய நண்பருமான கலிபாஃப் ஈரானின் 2013 மற்றும் 2017 ஜனாதிபதித் தேர்தல்களில் ரூஹானிக்கு எதிராக போட்டியிட்டவராகும். கடந்த பிப்ரவரியில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, மே மாதம் அவர் தனது நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னர் ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்து தனது நற்பெயரை வலுப்படுத்த விரும்பினாலும், ஈரான் மீதான அவரது "அதிகபட்ச அழுத்தம்" கொள்கை அனைத்தும் அமெரிக்க-ஈரானிய இராஜதந்திரத்திற்கான வாய்ப்பை இல்லாதொழித்துள்ளது, என்று "வெளியுறவுக் கொள்கை" (Foreign Policy) என்ற முன்னணி சஞ்சிகை கூறுகிறது. "அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்வதில் ஈரான் அதனது திறமையை நிரூபித்துள்ளது" என்று அது எழுதியுள்ளது.

பல சாதாரண ஈரானியர்கள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், வாஷிங்டன் எதிர்பார்த்தபடி பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சியடையவில்லை. அதற்கு பதிலாக, உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதால், நாடு பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது.

ஈரான் மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நாஸர் ஹெம்மதியின் கூற்றுப்படி, ஈரானின் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 1.1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈரானின் பொருளாதாரம் கொரோனா வைரஸ் தொற்று மத்தியிலும் இந்த ஆண்டு மேலும் வளர்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்றும் பிரபல ஈரானிய பொருளாதார நிபுணர் சயீத் லேலாஸ் வாதிடுகிறார்.

"ட்ரம்பின் போர்க்குணமிக்க வாய்ச் சவடால் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக அவருடன் ஓர் ஒப்பந்தம் செய்ய ஈரான் அதிக விருப்பம் காட்டவில்லை, அதேவேளை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஆதரித்த ஈரானிய அதிகாரிகளையும் கூட அதிலிருந்து தூரப்படுத்தியுள்ளது. மேலும் டிரம்ப்பின் கொள்கை மற்றும் புத்திசாதுரியமற்ற முடிவுகள் இராஜதந்திரத்திற்கான கதவுகளை மூடிவிட்டன" என்று "வெளியுறவுக் கொள்கை" சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

"வெளியுறவு கொள்கை" சஞ்சிகையின் படி சில மாதங்களுக்கு முன்பு நிலைமை இவ்வாறு இருக்கவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை பரிமாறிக்கொண்ட ஒரே நேரம் 2019 டிசம்பரில், ஈரானிய விஞ்ஞானி மசூத் சுலைமானிக்கு பகரமாக ஈரான் அமெரிக்கரான சியுவாங்கை விடுவித்ததாகும்.

சமீபத்திய வைட்-தாஹிரி கைதிகள் பரிமாற்றத்தைப் போலல்லாமல், டிசம்பர் பரிமாற்றம் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கிடையில் உயர்மட்ட சந்திப்புகளைக் கண்டது, இது டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இருதரப்பு அமெரிக்க-ஈரானிய பேச்சுவார்த்தைகளின் அரிய நிகழ்வாகும்.

இதுபோன்ற கூட்டத்திற்கு மீண்டும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் ஈரானிய அதிகாரிகள் இப்போது இராஜதந்திர முயற்சிகளை ட்ரம்பின் நடவடிக்கைகள்  நாசப்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். தெஹ்ரான் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை என்று ரூஹானி வெளிப்படையாக அறிவித்தார், ஆனால் ஈரானின் அரசியல் சூழ்நிலை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்தவொரு முயற்சிக்கும் விரோதமாக மாறியுள்ளது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட (கைதிகள் பரிமாற்றம் தொடர்பான) நேர்மறையான இராஜதந்திர நடவடிக்கையானது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இராஜதந்திர முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும், ஈரானிய இராணுவத் தளபதி ஜெனரல் காஸெம் சுலைமானியின் படுகொலையுடன் நசுக்கப்பட்டது.

ட்ரம்ப்பின் மறு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் அருகிவரும் நிலையில், ஈரான் தொடர்பான ஐ.நா. கூட்டத்தில் இடம்பெற்ற சூடான விவாதம், அமேரிக்காவை எதிர்ப்பதற்கு உலக சக்திகளிடம் இருந்த அச்சம் நீங்கிக்கொண்டு வருவதை காட்டுகிறது. ஈரான் மீதான ஆயுதத் தடையை புத்துயிர்ப்பதற்கான  அமெரிக்க முயற்சி, ஒப்பந்தத்தின் மீதிருந்த குறைந்தளவு நம்பிக்கையையும் இல்லாதொழித்துள்ளது.

'அதிகபட்ச அழுத்தம்' ஈரானை தன்னுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக இழுத்துவரும் என்று ட்ரம்ப் நம்புகிறார். ஆனால் ட்ரம்பின் இந்த கொள்கை ஈரானின் சரணடைதலுக்கோ அல்லது சரிவுக்கோ ஒருபோதும் வழிவகுக்காது, மாறாக அமெரிக்க-ஈரான் விரோதப் போக்கை அதிகப்படுத்தி, மத்திய கிழக்கு பிரதேசத்தில் நீண்டகால யுத்த சூழ்நிலைக்கே இட்டுச்செல்லும் என்று அந்த சஞ்சிகை மேலும் தெரிவித்துள்ளது.

"ஒரு மாற்று அணுகுமுறை சாத்தியமே, ஆனால் டிரம்ப் பயனளிக்காத அதிகபட்ச அழுத்தத்தைத் தள்ளிவிட்டு வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

சர்வதேச உறவுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆகியவை ஒத்தவை அல்ல. இருபக்க நன்மையின், பரஸ்பர மரியாதை அடிப்படையில் சமரசம் செய்துகொள்ளல் அன்றி அச்சுறுத்தல், கடும் தடைகளை விதித்தல் ஒருபோதும் ஒப்பந்தங்களை வெல்லாது.

ட்ரம்ப் தன்னை ஒரு டீலராக வடிவமைத்துக் கொண்டாரே அன்றி நடக்கவிருக்கும் நவம்பர் தேர்தலுக்கு முன்னதாக அவர் வெளியுறவுக் கொள்கை வெற்றிகளைப் பெறவில்லை. நேர்மறையான வெளியுறவுக் கொள்கை மரபின் ஏதேனும் ஒன்றை அவர் விரும்பினால், அவர் போருக்கான பாதையிலிருந்து விலகி ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கான பாதையில் செல்ல வேண்டும், ”என்று அந்த சஞ்சிகை மேலும் கூறியது.

http://kayhan.ir/en/news/80214/iran-%E2%80%98becoming-immune-to-pressure%E2%80%99

 


Wednesday, July 8, 2020

ஈரானில் இஸ்லாமிய ஆட்சி இருக்கும் வரை சியோனிச கனவு பலிக்காது.

Zionist dream will not come true as long as there is Islamic rule in Iran.

பலஸ்தீன் நிலங்களை அபகரிக்கும் சியோனிச, அமெரிக்க சதித்திட்டம் நிறைவேற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதில் ஈரான் இஸ்லாமிய குடியரசு உறுதியாக இருக்கிறது.

இஸ்லாமிய புரட்சியின் தலைவரான இமாம் கமேனி ஹமாஸ் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே அவர்களுக்கு 2020 ஜூலை 4 அன்று எழுதிய கடிதத்தில் முன்பு போலவே, இஸ்லாமிய குடியரசு, அதன் மத மற்றும் மனிதாபிமான கடமையின் அடிப்படையிலும், இஸ்லாமிய புரட்சியின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையிலும், பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் உரிமைகளை பாதுகாத்து புதுப்பிப்பதற்கும், அதற்கு எதிரான தீய சக்திகளின் அச்சுறுத்தலை அகற்றுவதற்கும் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வதற்கு பின் நிற்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் பெரும்பகுதியை இணைப்பதற்கான சியோனிச திட்டத்தை உலகின் பல நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன; குறிப்பாக துருக்கி மற்றும் அரபு நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன.

அமெரிக்க சார்ப்பு நாடென அறியப்பட்ட குவைத் கூட இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

குவைத் நாட்டின் தேசிய சட்டமன்ற சபாநாயகர் மர்ஸூக்  அல்-கானிம் ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்திக்குறிப்பில், மேற்குக் கரையையும் ஜோர்டான் பள்ளத்தாக்கையும் இணைப்பதற்கான இஸ்ரேலின் சூழ்ச்சியை கண்டித்த அதேவேளை, “இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு” எதிராக தீர்க்கமான அரபு மற்றும் சர்வதேச எதிர்வினைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலின் தீய நடைமுறைகளை அம்பலப்படுத்தவும், அதற்கு எதிராக ஒரு சர்வதேச நிலைப்பாட்டை திரட்டவும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்புடன் இணைந்து பணியாற்ற கானிம் தனது தயார்நிலையை வெளிப்படுத்தினார்.

ஜோர்டானிய பிரதிநிதியும் அரபு இடைக்கால நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவருமான அதெஃப் தாரவ்னேவுடன் ஒரு தொலைபேசி உரையாடலின் போது, கானிம் இஸ்ரேலுக்கு எதிரான பல்வேறு சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளார்.

கடந்த மாதம், குவைத் தலைமையிலான ஒரு அரபு குழு, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபையின் (யு.என்.ஜி.ஏ) அமர்வில் சட்டக் குழுவுக்கு இஸ்ரேல் பரிந்துரைக்கப்பட்டதை எதிர்த்தது. ஐ.நா. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், குவைத் தூதர் மன்சூர் அல்-ஒதைபி, “ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஐ.நா. தீர்மானங்களையும் சர்வதேச சட்டத்தையும் தொடர்ச்சியாக மீறிவரும் இஸ்ரேலுக்கு அதில் அங்கத்துவம் பெறும் தகுதி இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஆலோசகர் இஸ்ரேல் தனது மிகவும் சர்ச்சைக்குரிய இணைப்புத் திட்டத்துடன் முன்னேறினால் மூன்றாவது இன்திபாதா (எழுச்சி)யை  சந்திக்க நேரும் என்று எச்சரித்தார்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலின் ஆளும் கூட்டணி, ஜூலை 1 ஆம் தேதியை மேற்குக் கரையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான குடியேற்றங்கள் மற்றும் வளமான ஜோர்டான் பள்ளத்தாக்கு உட்பட்ட நிலப் பகுதியில் "இறையாண்மையை" திணிக்கும் தேதியாக அறிவித்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு வரைபடத்தை மீண்டும் வரைவதற்கான நோக்கத்துடன் ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட "நூற்றாண்டின் ஒப்பந்தத்தில்" நில அபகரிப்புக்கு ஏற்கனவே பச்சை விளக்கு காட்டியிருந்தார்.

ஆனால், குறிப்பிட்ட இந்த இணைப்பு ஒப்பந்தத்திற்கு ட்ரம்பின் ஆதரவு குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தலை சந்திக்கவுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உள்நாட்டில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளார். இனவெறிக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்காவை கோரமாக தாக்கியுள்ள கோவிட்-19 தொற்றுநோய் போன்றவற்றை சமாளிக்க முடியாது திண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நெத்தன்யாகுவின் நில அபகரிப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிலையில் இப்போது அமெரிக்க ஜனாதிபதி இல்லை என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

ஐம்பது முன்னாள் ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நூற்றாண்டின் ஒப்பந்தம் "நிறவெறிக்கு" ஒத்ததாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை சட்டவிரோதமாக ஒருங்கிணைப்பதற்கான இஸ்ரேலின் திட்டமிட்டம், அதன் நெருங்கிய நட்பு நாடுகளின் கடுமையான கண்டனங்களை ஈர்த்துள்ளது.

ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முக்கிய அரபு நாடுகள் அனைத்தும் மேற்குக் கரையை இணைப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், 1967 எல்லைகளில் ஒரு இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் கூறியுள்ளன.

இந்த வாரம் ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டில், பாலஸ்தீனிய குழுக்கள் ஹமாஸ் மற்றும் ஃபத்தா குழுக்கள் பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேல் இணைப்பதற்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன் ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை " தோற்கடிக்க" உறுதி பூண்டன.

மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதற்கான இஸ்ரேலிய சியோனிச திட்டங்களை எதிர்கொள்ள பாலஸ்தீனியர்களிடையே ஒற்றுமையையும் ஒன்றுபட்ட ‘எதிர்ப்பையும்’ ஹமாஸ் வலியுறுத்துகிறது.

ஐ.நா. தீர்மானங்கள் இஸ்ரேலை 1967 எல்லைகளுக்குப் பின்னால் விலகுமாறு கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக 600,000 க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள், 230 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டுள்ளனர்.


எதிர்காலத்தில் ஒரு சுயாதீன பாலஸ்தீனிய அரசின் தாயகமாக முழு மேற்குக் கரையையும் ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான ஜெருசலேம் அல்-குத்ஸின் கிழக்கு பகுதியையும் சர்வதேச சமூகம் கருதுகிறது.

பலஸ்தீனுக்கு எதிரான அமெரிக்க மற்றும் சியோனிச சூழ்ச்சியை தோற்கடிக்க முஸ்லிம் உலகின் ஒன்றுபட்ட செயற்பாடே அவசியமாகும்.

-      - தாஹா முஸம்மில்

 


Thursday, July 2, 2020

பயங்கரவாதி டிரம்பை கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்குமா?

Would Interpol Take the Historic Step for Arrest of Trump the Terrorist?

மனிதகுலத்திற்கு எதிராக குற்றமிழைத்த உலகின் மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவரையும் அவருடன் அவரது கூட்டாளிகளையும் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காக சிவப்பு அறிவித்தல் (Red Notice) விடுக்குமாறு சர்வதேச பொலிஸான இன்டர்போலை ஈரான் இஸ்லாமிய குடியரசு கோரியுள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, புகழ்பெற்ற ஈரானின் லெப்டினன்ட் ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி மற்றும் ஈராக்கின் ஜெனரல் அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஆகியோர் 2020 ஜனவரி 3 ம் தேதி பாக்தாத்தில் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளின் பிரதான குற்றவாளி டொனால்ட் டிரம்ப் என்பது தெளிவாகத் தெரிகிறது.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பிடி ஆணை பிறப்பிக்கவும், சர்வதேச நீதிமன்றங்களில் அவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் ஈரானுக்கு முழு உரிமை உண்டு.  இது தொடர்பாக சட்ட மற்றும் முறையான அனைத்து முயற்சிகளையும் ஈரான் தொடரும்.

சர்வதேச குற்றவியல் சட்டத்தின்படி, இனப்படுகொலை, பயங்கரவாதம் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட முக்கிய சர்வதேச குற்றங்களுக்கான வழக்கு பதியப்படுதல், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி வழங்குவதற்கும் அவசியமான முறைமையாகும்.

மாபெரும் குற்றங்களைச் செய்த, அப்பாவி ஜனங்கள் மீது அட்டூழியங்களை ஏற்படுத்திய தலைவர்கள், விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய கோரிக்கையாகும். இத்தகைய குற்றவாளிகள் மீதான வழக்கு தொடர்தல் சர்வதேச முறைமைகளில் நம்பிக்கையை வளர்ப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் நன்மை பயக்காது, அதுபோல் சட்டவிரோத செயல்கள் அவர்கள் ஆதிக்கம் செலுத்த முற்படும் மக்களுக்கு விமோசனமளிக்காது மேலும் பயங்கரவாதம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை என்றென்றும் அடிமைப்படுத்தி வைக்கவும் முடியாது.

இன்று, ஆப்கானிஸ்தானின் பரிதாபகரமான நிலைமைகள், யேமன் மீது சுமத்தப்பட்ட போர், பாலஸ்தீன மக்களின் நிலை, சிரியாவில் குழப்பம், ஈராக்கில் அரசியல் ஸ்திரமின்மை, லெபனானில் நிதி நெருக்கடி, பஹ்ரைனில் இனப்படுகொலை, அரேபியாவில் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் செய்துவரும் துரோகம் மற்றும் லிபியாவின் கொலைக் களங்கள் அனைத்துக்கும் அமெரிக்காவின் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்களே காரணமாகும்.

மனிதகுலத்திற்கு எதிரான இந்த படுபாதக செயல்களுக்கு  பதிலளிக்கப்பட்டே ஆகவேண்டும். வாஷிங்டன் அதன் பயங்கரவாதத்திற்கு உரிய தண்டனையின்றி தப்பித்துச் செல்ல முடியாது, சுதந்திர உலகிற்கு அது பதில் சொல்லியே ஆக வேண்டிய நேரம் இது. மனித இனத்திற்கு எதிரான செயல்களை தற்போது அமெரிக்காவிலேயே தெளிவாகவே காணக்கூடியதாக இருக்கிறது. ஆப்ரோ-அமெரிக்கர்கள் அவர்களின் தோலின் நிற அடிப்படையில் வெள்ளை மேலாதிக்க நிர்வாகத்தால் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள் என்பது நிதர்சனமாக தெரிகிறது.

அமெரிக்க பயங்கரவாதப் படைகளை எதிர்கொள்ளவும் விரட்டவும் நமது பிராந்திய மக்களுக்கு நிச்சயமாக அதிகாரமும் பலமும் உண்டு; அமேரிக்கா இராணுவ வலிமைகள் கொண்ட நாடு என்று அழைக்கப்பட்டாலும் அது வெல்ல முடியாதது அல்ல. மக்களின் பொறுமை ஏற்கனவே அளவு கடந்துள்ள நிலையில் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிரான குரல்கள் ஆங்காங்கே மெல்லியதாக கேட்கத் துவங்கியுள்ளன. இந்நிலை தொடர்ந்தால், எல்லா நகரங்களிலும் அமெரிக்கர்களுக்கு எதிரான மக்களின் கோபம் கட்டுக்கடங்காமல் போய்விடும்.

லெப்டினன்ட் ஜெனரல் சுலைமானி, ஜெனரல் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் மற்றும் அவர்களது தோழர்கள் ஆகியோருக்கு "தியாகி" என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இந்த இறையச்சம் கொண்ட மனிதர்களைக் கொல்ல ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கட்டளையிட்டார் என்பது அவரே ஏற்றுக்கொண்ட விடயமாகும். தீய அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அரச பயங்கரவாதத்தின் பிரதான குற்றங்களில் ஒன்று இது என்பது வெளிப்படையானது. (இதன் மூலம் சர்வதேச சட்டம், மனிதாபிமான விழுமியங்கள் மற்றும் மேற்கத்திய மக்கள் கடைபிடிக்க வேண்டிய கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைகளை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார்). மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பான அம்மனிதனை, ஒரு கொலைகாரனை கண்டிப்பாக தண்டனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.

கொல்லப்பட்ட தியாகிகளின் புனிதமான வாழ்க்கைக்கு இந்த 74 வயதான தரம்கெட்ட மனிதர், நிச்சயமாக, முற்றிலும் மாறுபட்ட ஒருவர். பொய் சொல்லுதல், அடுத்தவரின் செல்வத்தை அபகரிக்கும் ஆசை, விபச்சாரம் மற்றும் சிவில் மற்றும் தெய்வீக சட்டங்களுக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட பெரும் பாவங்களில் தனது முழு வாழ்க்கையையும் கழித்திருக்கிறார். நிச்சயமாக நரகத்தின் நெருப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நபரே, என்றாலும் அவரது பரிதாபகரமான வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னர் இந்த உலக நீதியின் அடிப்படையில் அவருக்கு தகுதியான தண்டனையை வழங்கப்பட வேண்டும்.

ஈரானிய மற்றும் ஈராக்கிய மக்களும், சிரியாவின் கிறிஸ்தவர்கள் உட்பட தங்கள் மரியாதை, கௌரவம், நம்பிக்கை, மத வழிபாடுகள், கலாச்சார விழுமியங்கள், வரலாற்று பாரம்பரியம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து  சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்க உதவியவர் என்ற அடிப்படையில் ஜெனரல் சுலைமானியின் கொலைக்காக, அவரால் உதவி செய்யப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் பதிலடி கொடுக்கும் உரிமை உண்டு.

அதேபோல், ஈராக்கும் ஈராக்கிய மக்களும், அமெரிக்க அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காது, தமது நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக, தமது உயர்மட்ட இராணுவத் தலைவர்களை படுகொலை செய்தமைக்காக, தமது நாட்டின் இறைமையை மீறிய குற்றத்திற்காக டிரம்பிற்கும் அவரது குற்றவாளி கூட்டாளிகளுக்கும் எதிராக இதேபோன்ற பிடி ஆணை பிறப்பிக்க முடியும்.

அனைத்து சென்ட்காம் (CENTCOM) பயங்கரவாதிகளையும் ஈராக் மண்ணிலிருந்து வெளியேற்றுவதற்கான தமது உரிமையை பாக்தாத்தில் உள்ள அரசாங்கம் பயன்படுத்த வேண்டும், மேலும் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் ஏதேனும் தயக்கம் காட்டினால், ஈராக் மக்களுக்கு அமெரிக்கப் படைகளை அடித்துத் துரத்த உரிமை உண்டு என்பதையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

http://kayhan.ir/en/news/80074/would-interpol-take-the-historic-step-for-arrest-of-trump-the-terrorist