Leader Ayatollah Seyyed Ali Khamenei says 'strong blow' will ensue any vicious act by US or Israel
அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எந்தவொரு தீய செயலுக்கும் 'வலுவான அடி' நிச்சயம் என்கிறார் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ கமனேயீ.
தெஹ்ரான் - இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ கமனேயீ, இன்று (March 31, 2025) காலை தெஹ்ரானில் உள்ள இமாம் கொமைனியீயின் முசல்லாவில் ஈத் அல்-பித்ர் தொழுகையை தொழுவித்தார், இதில் ஈரானிய நாட்டின் ஒரு பாரிய கூட்டம்
கலந்து கொண்டது.
தொழுகையை தொடர்ந்து தனது முதல் பிரசங்கத்தில் ஆயத்துல்லாஹ் கமனேயீ ஈத்
அல்-பித்ர் பெருநாளை முன்னிட்டு ஈரானிய தேசத்திற்கும் இஸ்லாமிய உம்மத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், மேலும் இந்த
ஆண்டின் ரமலானை ஆன்மீக வளர்ச்சியின் மாதமாகவும், அரசியல் முயற்சிகள் மற்றும் தேசத்தின்
நம்பிக்கை சார்ந்த இயக்கத்தின் வெளிப்பாடாகவும்
விவரித்தார்.
இந்த புனித நோன்பு மாதத்தை மகத்துவமான இறைஅருள்களில் ஒன்றாகவும், ஏகத்துவத்தின்
வெளிப்பாடாகவும், தனது அடியார்கள் இறையச்சம் அடையவும், அவனிடம் நெருக்கமாகவும், தங்கள் ஆன்மாக்களை
தூய்மைப்படுத்தவும், தங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் புதுப்பிக்கவும் அல்லாஹ் கொடுத்த
வாய்ப்பாகவும் அவர் விவரித்தார்.
“நோன்பு, குர்ஆனுடனான தொடர்பு, லைலதுல் கத்ர் இரவுகள்,
பிரார்த்தனைகள், துஆக்கள் மற்றும் தொழுகைகள் புனித ரமலான்
மாதத்தின் விலைமதிப்பற்ற மற்றும் மனிதனை மாற்றும் வாய்ப்புகள்” என்று அவர்
குறிப்பிட்டார்.
ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச குத்ஸ் தின பேரணிகளில்
மக்கள் உற்சாகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் பங்கேற்றதை ஆயத்துல்லாஹ் கமனேயீ பாராட்டியதோடு தேசத்தின் இம் மாபெரும் பேரணி பல்வேறு
செய்திகளை ஈரானிய மக்களைப் புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டிய உலகெங்கிலும்
உள்ளவர்களுக்கு ஏந்திச் சென்றுள்ளதாகவும், மற்றும் இச் செய்திகள் உண்மையில் அவர்களின் இலக்காகக்கொண்ட ஆதரவாளர்களை சென்றடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இஸ்லாமியப் புரட்சித் தலைவர் தனது இரண்டாவது பிரசங்கத்தில், காசா மற்றும்
லெபனானில் சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை மற்றும் குழந்தைகள் படுகொலை ரமலான்
மாதத்தில் இஸ்லாமிய உம்மாவை ஆழமாக கவலைப்படுத்தியதாகக் கூறினார். பாலஸ்தீனத்தை
ஆக்கிரமித்துள்ள "குற்றவாளி கும்பலுக்கு" அமெரிக்காவின் தொடர்ச்சியான
ஆதரவு மற்றும் உதவியின் கீழ் இக் குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர்
குறிப்பிட்டார்.
அவர் சியோனிச ஆட்சியை காலனித்துவ சக்திகளின் பினாமி சக்தியாக விவரித்தார், மேலும் அவர்
விவரிப்பதாவது, "மேற்கத்தியர்கள் பிராந்தியத்தின் பலமான நாடுகளையும்
துணிச்சலான இளைஞர்களையும் பினாமிகளாக செயல்படுவதாக மீண்டும் மீண்டும் குற்றம்
சாட்டுகிறார்கள், ஆனால் பிராந்தியத்தில் உள்ள ஒரே பினாமி சக்தி ஊழல் நிறைந்த ஆட்சி என்பது
முற்றிலும் தெளிவாகிறது. அவர்கள் போர் வெறி, இனப்படுகொலை மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான
ஆக்கிரமிப்பு ஊடாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த பிராந்தியத்தில்
தலையிட்ட சக்திகளின் திட்டங்களைத் தொடர்ந்தும் நிவர்த்தி செய்கிறார்கள்."
செல்வம் மற்றும் ஊடகங்கள் மூலம் உலகை ஆளும் காலனித்துவவாதிகளின் பயங்கரவாத எதிர்ப்பு கூற்றுக்களைக்
குறிப்பிட்டு, ஆயத்துல்லாஹ் கமனேயீ, “தங்கள்
உரிமைகளையும் தாயகத்தையும் பாதுகாப்பதை பயங்கரவாதம் மற்றும் குற்றம் என்று
முத்திரை குத்தும் இந்த சக்திகள், சியோனிஸ்டுகளின் அப்பட்டமான இனப்படுகொலை மற்றும்
பயங்கரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் பாராமுகமாக இருக்கின்றன அல்லது அவர்களை
தீவிரமாக ஆதரிக்கின்றன” என்று கூறினார்.
அவரது பிரசங்கத்தின் பிற இடங்களில், சியோனிச ஆட்சியால் பல்வேறு நாடுகளில் படுகொலை
செய்யப்பட்ட நபர்கள் குறிப்பாக அபு ஜிஹாத், ஃபாத்தி ஷகாகி, அகமது யாசின் மற்றும் இமாத் முக்னியே போன்றோரை
குறிப்பிட்டார். இவ்வாறே, இந்த ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஈராக்கிய அறிஞர்கள் பலர் படுகொலை
செய்யப்பட்டதையும் தலைவர் சுட்டிக்காட்ட தவறவில்லை. அவர்
"அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் இந்த மோசமான பயங்கரவாத செயல்களை
ஆதரிக்கின்ற அதே வேளை உலகின் பிற பகுதிகள் இதனை அமைதியாகப் பார்த்துக்கொண்டு
இருக்கின்றன" என்று கூறினார்.
மனித உரிமை ஆதரவாளர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் கிட்டத்தட்ட 20,000 பாலஸ்தீன குழந்தைகள் இரண்டு
வருடங்களுக்குள் தியாகம்
செய்யப்பட்டதை முற்றிலுமாக பாராமுகமாக
புறக்கணித்ததை அவர் கடுமையாகக் கண்டித்தார். "நிச்சயமாக, ஐரோப்பா மற்றும்
அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகள், சியோனிஸ்டுகள் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக
இந்தக் குற்றங்கள் குறித்து அவர்கள் அறிந்திருக்கும் அளவிற்கு எதிர்ப்புத்
தெரிவித்து அணிதிரள்கின்றன" என்று அவர் கூறினார்.
"இந்த குற்றவியல், துன்மார்க்க மற்றும் தீய சியோனிசக் குழு
பாலஸ்தீனத்திலிருந்தும் பிராந்தியத்திலிருந்தும் அழிக்கப்பட வேண்டும், மேலும் வல்ல
நாயனாகிய அல்லாஹ்வின் கிருபையாலும் சக்தியாலும் இது நிறைவேறும். இது சார்ந்த
முயற்சிகள் மனிதகுலம் அனைவருக்கும் ஒரு மத, தார்மீக மற்றும் மனித கடமையாகும்" என்று ஆயத்துல்லாஹ் கமனேயீ மேலும் கூறினார்.
பிராந்திய தலையீடுகளில் இஸ்லாமிய குடியரசின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்த தலைவர், "எங்கள்
நிலைப்பாடுகள் மாறாமல் உள்ளன, மேலும் அமெரிக்காவிற்கும் சியோனிச ஆட்சிக்கும் உடனான எங்கள்
எதிர்ப்பு எப்போதும் போலவே உறுதியாக
இருக்கிறது." என்று குறிப்பிட்டார்.
தனது இரண்டாவது பிரசங்கத்தின் முடிவில், ஆயத்துல்லா காமெனி சமீபத்திய அமெரிக்க அச்சுறுத்தல்கள் குறித்து இரண்டு முக்கிய விடயங்களை எடுத்துரைத்தார். "முதலாவதாக, எந்தவொரு விரோதச் செயலும் வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தாலும், அது சந்தேகத்திற்கு இடமின்றி வலுவான எதிர் தாக்குதலை எதிர்கொள்ளும். இரண்டாவதாக, கடந்த ஆண்டுகளைப் போல், உள்நாட்டு தேசத்துரோகத்தை எதிரி தூண்ட முயன்றால், தூண்டுபவர்களுக்கு கடந்த காலத்திற்கேற்ப தீர்க்கமான பதில் அளிக்கப்படும்" என்று தனது உரையை முடித்தார்.
https://www.tehrantimes.com/news/511306/Leader-says-strong-blow-will-ensue-any-vicious-act-by-US-or
No comments:
Post a Comment