Sheikh Qassem: Negotiations eye full ceasefire, cementing sovereignty
ஷேக் காசிம்: பேச்சுவார்த்தை முழு போர் நிறுத்தம், இறையாண்மையை உறுதிப்படுத்துகிறது
பொதுச் செயலாளர் ஷேக் நயீம் காசிம், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்பு ஆகிய இரண்டிற்கும் ஹிஸ்ப்-அல்லாஹ்வின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஹிஸ்ப்-அல்லாஹ் பொதுச் செயலாளர் ஷேக் நயீம் காசிம் நவம்பர்
20, 2024 அன்று ஆற்றிய உரையில் “லெபனான் தலைநகர் இஸ்ரேலிய எதிரியின் தாக்குதலுக்கு
உள்ளாகும் போது, எமது பதிலடி டெல் அவிவின்
இதயத்தை துளைக்க வேண்டும்" என்று என்று கூறினார்.
லெபனான் மீது நடந்து வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு
போர் குறித்து பேசுகையில் லெபனானின் இறையாண்மையை மீறும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்
படைகளுக்கு எதிரான எமது நடவடிக்கைகளைத் தொடரும் என்று வலியுறுத்திய அதே நேரத்தில்
நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் இஸ்லாமிய போராளிகளின் நிலைப்பாடு குறித்தும்
விபரித்தார்.
போர்க்களத்தில் வெற்றி
"இஸ்ரேல்" அதன் இராணுவ நோக்கங்களை அடையத்
தவறியிருப்பது ஹிஸ்ப்-அல்லாஹ்வின் வெற்றியின் தெளிவான சான்றாகும், "எதிரி அதன்
இலக்குகளை அடையத் தவறியுள்ளது என்பதன் அர்த்தம் நாம் வெற்றியடைந்துள்ளோம்
என்பதாகும்." போர்க்கள விளைவுகளின் முக்கியத்துவத்தை விவரிக்கையில் அவர்
"போர்க்களமே இறுதி முடிவைக் கொண்டுள்ளது, அதன் அடிப்படையிலேயே தீர்மானங்கள்
எடுக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.
மேலும் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் மீதான
தாக்குதல்களை ஹிஸ்ப்-அல்லாஹ் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது, [லெபனிய] தலைநகர் இஸ்ரேலிய விரோதியின் தாக்குதலுக்கு
உட்பட்டால், அதற்கான எமது பதிலடி டெல் அவிவின்
இதயத்தைத் துளைக்க வேண்டும்" என்றார்.
ஹிஸ்ப்-அல்லாஹ் முன்னாள் பொதுச்செயலாளரும்
தியாகியுமான சையத் ஹசன் நஸ்ரல்லாவால் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட பெய்ரூட்டிற்கான
டெல் அவிவ் சமன்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், "இஸ்ரேலிய எதிரியின் தாக்குதலுக்கு அஞ்சி நாம்
ஒருபோதும் தலைநகரை விட்டு வெளியேற முடியாது, தலைநகர் தாக்கப்பட்டால் நிச்சயமாக டெல் அவிவின் மையம் விலை கொடுக்கும்," என்பதை எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும்"
என்று ஷேக் காசிம் மேலும் கூறினார்.
தெற்கு லெபனிய எல்லையில் ஹிஸ்ப்-அல்லாஹ்வால்
நடத்தப்படும் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகையில் "[இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்
படைகளுக்கு எதிராக] முன்னரங்க விளிம்பில் உள்ள கிராமங்களில் நடவடிக்கைகள் 15
நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வலிமைமிக்க
மக்களின் எதிர்ப்பு மற்றும் நெகிழ்ச்சியின் காரணமாக அது நீண்ட காலம்
நீடித்தது" என்றார்.
"எதிர்ப்புப் போரானது ஓர் இராணுவம் செயல்படும்
அதே வழியில் செயல்படுவதில்லை", என்பது எந்தவொரு இராணுவ ஆய்வாளருக்கும் தெளிவாகத் தெரியும். "அதன் பணி
எதிரியின் முன்னேற்றத்தைத் தடுப்பதல்ல, மாறாக அது எங்கு முன்னேறினாலும் அதை எதிர்ப்பதாகும்" என்பதை
வலியுறுத்தினார்.
"எதிரிகள் இந்த கிராமத்திற்குள் அல்லது அந்த
கிராமத்திற்குள் நுழைந்தார்கள் என்று சொல்வது முக்கியமல்ல,
அவர்களில் எத்தனை பேர் இன்று கொல்லப்பட்டனர், எமது போராளிகள் எங்கு
அவர்களுடன் மோதல்களில் ஈடுபட்டனர்" என்பதே முக்கியமானது. "இந்த நிலம்
எங்களுடையது, போராளிகள் எங்கள்
இளைஞர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் எதிரி விலை
கொடுக்க வேண்டியிருக்கும்." என்று அவர் மேலும் கூறினார்,
போர்க்களத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடையில் ஹிஸ்ப்-அல்லாஹ்
போர்க்களத்தில் ஹிஸ்ப்-அல்லாஹ் உறுதியாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளில் அதன் அணுகுமுறை இராணுவ நடவடிக்கைகளுக்கு இணையாக
செயல்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டினார்.
"நாங்கள் இரண்டு பாதைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்: போர்க்களம் மற்றும் பேச்சுவார்த்தைகள்; பேச்சுவார்த்தைகளின் முடிவுகளுக்காக போராட்டத்தை நாங்கள் நிறுத்தி வைக்க மாட்டோம்."
"இஸ்ரேலின்" இராணுவ நடவடிக்கைகளின் அழுத்தத்தின் கீழ் நாம்
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார், "எங்கள் பேச்சுவார்த்தைகள் [இஸ்ரேலிய] துப்பாக்கிச்
சூடுகளின் கீழ் நடத்தப்படவில்லை, ஏனென்றால் இஸ்ரேலும்
எமது கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கிறது."
பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளை தெளிவுபடுத்திய
அவர், "எங்கள் பேச்சுவார்த்தைகள்
ஆக்கிரமிப்பை முற்றிலுமாக நிறுத்துதல் மற்றும் லெபனிய இறையாண்மையைப் பாதுகாத்தல்
என்ற நிபந்தனையின் அடிப்படையிலானது என்பதை அவர்கள் அறியட்டும்" என்றார்.
இராணுவ ரீதியில் அடைய முடியாததை "இஸ்ரேல்"
இராஜதந்திர ரீதியில் சாதிக்க முடியாது
ஹிஸ்ப்-அல்லாஹ் செயலாளர் நாயகம் போராளிகளின் வலிமையில் மேலும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், போர்க்கள தோல்வியைத் தவிர்ப்பதற்கு இராஜதந்திரத்தைப் பயன்படுத்த "இஸ்ரேல்"
மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் நிராகரித்தார்.
ஷேக் காசிம் லெபனானில் உள்ள இஸ்லாமிய போராளிகள் "பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்ட முன்மொழிவை பெற்றுக்கொண்டனார்" என்பதை உறுதிப்படுத்தினார், போராளிகள் "அதை ஆராய்ந்தது" மற்றும் அதன் "அவதானிப்புகள் மற்றும் கருத்துக்களை" வெளிப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தினார்.
"போர்க்களத்தில் சாதிக்க தவறியதை இந்த உடன்படிக்கையின் மூலமாக சாதிக்க முடியும் என்று ஆக்கிரமிப்பு
எதிர்பார்த்தது, அது சாத்தியமில்லை." "இஸ்ரேல் நம்மை தோற்கடித்து அதன் நிபந்தனைகளை எங்கள் மீது திணிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்," என்று அவர் வலியுறுத்தினார்.
உலக மௌனத்திற்கு மத்தியில் காஸாவுக்கு ஆதரவு கௌரவமானது
சர்வதேச சமூகத்தின் அலட்சியம் மௌனத்தை விமர்சிக்கும் அதே வேளையில், மற்ற பிராந்திய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஹிஸ்ப்-அல்லாஹ்வின் அசைக்க முடியாத ஆதரவை ஷேக் காசிம் மீண்டும் வலியுறுத்தினார்.
"ஒட்டுமொத்த உலகமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கையில், ஈராக், ஏமன் மற்றும் ஈரானுடன் சேர்ந்து காஸாவை ஆதரிக்கும் ஒரு சிலரில் நாங்கள் இருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்" என்று அவர் கூறினார்.
"போரை முடிவுக்குக்
கொண்டுவர முடியும் என்ற அடிப்படையில்
பைடன்-மக்ரோனின் முன்மொழிவுக்கு ஹிஸ்ப்-அல்லாஹ் முன்னர் உடன்பட்டது, ஆனால் பின்னர் அவர்கள் செயலாளர் நாயகத்தை படுகொலை செய்தனர்"
என்பதையும் ஷேக் காசிம் நினைவுபடுத்தினார்.
நெகிழ்ச்சியின் இதயத்தில் தியாகம்
இறுதியாக, ஷேக் காசிம் ஹிஸ்ப்-அல்லாஹ்வின் தியாகிகளை, குறிப்பாக பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்ப்-அல்லாஹ் ஊடக உறவுகளின் தலைமை முகமது அஃபிஃப் அல்-நபுல்சியை கௌரவித்தார்.
"சிவில் உடையில் இருந்த தியாகி முகமது அஃபிப்பை படுகொலை செய்ய இஸ்ரேலிய எதிரிகள் தலைநகர் பெய்ரூட்டை தாக்கினர்" என்று அவர் குறிப்பிட்டார்.
ஹிஸ்ப்-அல்லாஹ்வின் போராளிகளின் நெகிழ்ச்சித்தன்மை குறித்தும் அவர் பேசினார், "இழப்புகள் வலிமிகுந்தவை என்பது உண்மைதான், ஆனால் எங்கள் போராளிகள் வலிமையானவர்கள்."
ஷேக் காசிம் இடம்பெயர்ந்த
லெபனானியரை விழித்து, "உங்கள் தியாகங்களை நாங்கள் பாராட்டுகிறோம், எங்கள் கடமையை நாம் எமது திறன்களுக்கு
ஏற்றவாறு செய்கிறோம். பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்."
"நாம் நமது கௌரவமான தேசிய மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை மாற்றவோ அல்லது அவற்றில் இருந்து கீழிறங்கவோ இல்லை"
என்று அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.
ஷேக் காசிம் பின்னர் லெபனானின் உள்நாட்டு நிலைமை மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சினை குறித்தும் பேசினார்.
"நாட்டிற்கான ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் திறம்பட பங்களிப்போம், எங்கள் அரசியல் நடவடிக்கைகள்
மற்ற அரசியல் சக்திகளின் ஒத்துழைப்புடன், தாயிஃப் ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் இருக்கும்,"
என்று அவர் உறுதியளித்தார், "தேசத்தின் நலனுக்காகவும், அதே நேரத்தில் அதை கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் நாங்கள் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் இருப்போம்." அனைவருக்கும் உறுதியளித்தார்
திறமையான வலிமை மிக்க லெபனான் இராணுவம், மக்கள் மற்றும் எதிர்ப்பு சமன்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார், "நாங்கள் இராணுவம், மக்கள் மற்றும் எதிர்ப்பின் ஒற்றுமையை நம்புகிறோம்," மேலும் "ஆக்கிரமிப்பு
நிறுத்தப்பட்டவுடன், அரசு மற்றும் அனைத்து கெளரவமான தனிநபர்களின்
ஒத்துழைப்புடன், ஒன்றாக, நாம் கட்டியெழுப்புவோம்," என்றும் சூளுரைத்தார்.
No comments:
Post a Comment