Thursday, May 30, 2024

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கிய அரிய செய்தி

 Leader to US students:

You are standing on the right side of history


காஸாவின் ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க மனசாட்சி தூண்டிய இளைஞர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அமெரிக்காவின் அன்பான பல்கலைக்கழக மாணவர்களே, இந்தச் செய்தி உங்களுடனான எங்களின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாகும். வரலாற்றின் சரியான பக்கம் நீங்கள் நிற்கிறீர்கள்.

நீங்கள் இப்போது எதிர்ப்பு முன்னணியின் ஒரு கிளையை உருவாக்கி, உங்கள் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற அழுத்தத்தை எதிர்கொண்டு கௌரவமான போராட்டத்தை ஆரம்பித்துள்ளீர்கள் - இது அபகரிப்பு மற்றும் மிருகத்தனமான சியோனிச ஆட்சியை வெளிப்படையாக ஆதரிக்கும் அரசாங்கம்.

இன்று உங்களுக்கு இருக்கும் அதே புரிதல்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் மாபெரும் எதிர்ப்பு முன்னணி, உங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்தில் (ஈரானில்) பல ஆண்டுகளாக இதே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பாலஸ்தீன தேசத்தின் மீது கொடூரமான சியோனிச பயங்கரவாத வலையமைப்பு செலுத்தி வரும் அப்பட்டமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தப் போராட்டத்தின் குறிக்கோள். அவர்களின் நாட்டைக் கைப்பற்றிய பின்னர், சியோனிச ஆட்சி பலஸ்தீன மக்களை மிகக் கடுமையான அழுத்தங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தியுள்ளது.

இனவெறி சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை இன்று பல தசாப்தங்களாக நடந்து வரும் தீவிர அடக்குமுறையின் தொடர்ச்சியாகும். பாலஸ்தீனம் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு சுதந்திர நாடு. இது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அடங்கிய தேசம்.

உலகப் போருக்குப் பிறகு, முதலாளித்துவ சியோனிச வலைப்பின்னலானது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியுடன் பல ஆயிரம் பயங்கரவாதிகளை படிப்படியாக இந்த மண்ணில் இறக்குமதி செய்தது. இந்த பயங்கரவாதிகள் நகரங்கள் மற்றும் கிராமங்களைத் தாக்கினர், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர் மற்றும் பல மக்களை அண்டை நாடுகளுக்கு விரட்டினர். அவர்களது வீடுகள், வணிகங்கள் மற்றும் விவசாய நிலங்களைக் கைப்பற்றி, அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் அரசாங்கத்தை உருவாக்கி அதை இஸ்ரேல் என்று அழைத்தனர்.

இங்கிலாந்து வழங்கி வந்த ஆரம்ப உதவிக்குப் பிறகு, அமெரிக்கா இந்த அபகரிப்பு ஆட்சியின் மிகப் பெரிய ஆதரவாளராக ஆனது, அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவை இடைவிடாமல் வழங்கியது. மன்னிக்க முடியாத பொறுப்பற்ற விதத்தில் அமெரிக்கா (சியோனிச) ஆட்சியின் அணு ஆயுத உற்பத்திக்கு உதவி செய்தது.

சியோனிச ஆட்சியானது ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்தின் பாதுகாப்பற்ற அப்பாவி மக்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்ட கொள்கையைப் பயன்படுத்தியது மற்றும் நாளுக்கு நாள், அனைத்து தார்மீக, மனித மற்றும் மத விழுமியங்களையும் முற்றிலும் புறக்கணித்து அதன் கொடூரம், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறையை தீவிரப்படுத்தியது.

அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் இந்த அரச பயங்கரவாதம் மற்றும் தொடர் அடக்குமுறையைக் கண்டுகொள்ள மறுத்துவிட்டனர். இன்று, காசாவில் நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் சில கருத்துக்கள் உண்மையானதை விட பாசாங்குத்தனமானவை.

இந்த விரக்தியின் இருண்ட சூழலில் இருந்து தான் எதிர்ப்பு முன்னணி வெளிப்பட்டது, மேலும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தை நிறுவியது அதை விரிவுபடுத்தி பலப்படுத்தியது.

உலகளாவிய சியோனிச உயரடுக்கு - பெரும்பாலான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடக நிறுவனங்கள் இவர்களுக்கு சொந்தமானது அல்லது நிதி மற்றும் லஞ்சம் மூலம் அவற்றை கட்டுப்படுத்துகிறது - எமது இந்த தைரியமான, மனிதாபிமான எதிர்ப்பு இயக்கத்தை "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்தியுள்ளது.

சியோனிஸ்டுகளின் குற்றங்களுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக போராடும் மக்களை பயங்கரவாத தேசம் என்று அழைக்க முடியுமா? அநியாயமிழைக்கப்பட்ட தேசத்துக்கு உதவி செய்து அதை வலுப்படுத்துவது பயங்கரவாதச் செயலா?

உலகளாவிய மேலாதிக்கத்தின் அடக்குமுறை தலைவர்கள் மிக அடிப்படையான மனிதக் கருத்துக்களைக் கூட இரக்கமின்றி சிதைக்கின்றனர். இரக்கமற்ற, பயங்கரவாத இஸ்ரேலிய ஆட்சியை தற்காப்புக்காகச் செயல்படுவதாக அவர்கள் சித்தரிக்கின்றனர்.

இன்று சூழ்நிலைகள் மாறி வருகின்றன என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். மேற்கு ஆசியாவின் முக்கியமான பகுதிக்கு வித்தியாசமான ஒரு விதி காத்திருக்கிறது. உலக அளவில் மக்களின் மனசாட்சி விழித்துக்கொண்டுள்ளது, உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும், எதிர்ப்பு முன்னணி வலுவடைந்துள்ளது; மேலும் வலுவடையும்.

மேலும் வரலாறு அதன் புதிய பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறது.

பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களாகிய உங்களுடன், ஏனைய நாடுகளிலும் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன.

உங்கள் பேராசிரியர்களின் ஆதரவும் ஒற்றுமையும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் விளைவான வளர்ச்சியாகும். இது உங்கள் அரசாங்கத்தின் பொலிஸ் மிருகத்தனம் மற்றும் அது உங்கள் மீது செலுத்தும் அழுத்தங்களின் நடுவே ஓரளவு ஆறுதல் அளிக்கும் சங்கதியாகும். இளைஞர்களாகிய உங்களுடன் ஒருமைப்பாட்டை பகிர்ந்து கொண்டவர்களில் நானும் ஒருவன், உங்கள் விடாமுயற்சிக்கு மதிப்பளிக்கிறேன்.

முஸ்லிம்களாகிய எமக்கும், மனிதகுலம் அனைவருக்கும் குர்ஆன் கூறும் பாடம், எது சரியானதோ அதற்காக உறுதியாக நிற்க வேண்டும் என்பதுதான். உங்களுக்குக் கட்டளையிடப்பட்டது போன்று நேரான வழியில் நிலைத்திருங்கள். (11:112).

மனிதர்களிடையேயான உறவுகளுக்கு குர்ஆனின் பாடம் நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. (2:279).

ஒரு விரிவான புரிதல் மற்றும் இதைப் போன்ற பிற நூற்றுக்கணக்கான கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்ப்பு முன்னணி முன்னேறுகிறது - மேலும் இறைவனின் அருளால் வெற்றியை அடையும்.

நீங்கள் குர்ஆனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதே உங்களுக்கான எனது அறிவுரை.

https://en.mehrnews.com/news/215893/You-are-standing-on-the-right-side-of-history  

 

No comments:

Post a Comment