Wednesday, April 24, 2024

இன்று இலங்கை வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி

 President of the Islamic Republic of Iran Ebrahim Raisi is on an official visit of Sri Lanka today 

By தாஹா முஸம்மில் 

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். அரசியல் ரீதியாக மாறிவரும் மத்தியகிழக்கின் தற்போதைய நிலையில் ரயீஸியின் வருகையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1960 டிசம்பர் 14 இல் பிறந்த இப்ராஹிம் ரயீசுல் ஸாதாத்தி பொதுவாக இப்ராஹிம் ரயீஸி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் ஈரானிய அரசியல்வாதி, முஸ்லிம் சட்ட நிபுணர் மற்றும் 2021 ஜனாதிபதி தேர்தலில் 2021 ஆகஸ்ட் 3 அன்று ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக ஈரானிய மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.

ஈரானின் நீதித்துறை அமைப்பில் துணைத் தலைமை நீதிபதி (2004–2014), அட்டர்னி ஜெனரல் (2014–2016) மற்றும் தலைமை நீதிபதி (2019–2021) போன்ற பல பதவிகளில் உயர் பதவிகளை ரயீஸி வகித்துள்ளார். 1980கள் மற்றும் 1990களில் தெஹ்ரானின் வக்கீல் மற்றும் துணை வழக்கறிஞராகவும் இருந்தார். அவர் 2016 முதல் 2019 வரை "அஸ்தானே குத்ஸ் ரஸாவி"யின் பாதுகாவலராகவும் தலைவராகவும் இருந்தார். அவர் தென் கொராசன் மாகாணத்தில் இருந்து நிபுணர்கள் சபையின் உறுப்பினராக உள்ளார். முதல் முறையாக 2006 நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மஷ்ஹத் வெள்ளிக்கிழமை தொழுகைத் தலைவரும் இமாம் ரெஸா பள்ளிவாயனின் கிராண்ட் இமாமுமான அஹ்மத் ஆலமுல்லஹுதாவின் மருமகன் ஆவார்.

இப்ராஹிம் ரயீஸி 2021 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 62.9% வாக்குகளைப் பெற்று 2021 ஈரானிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேயி அவர்களின் நெருங்கிய சகாவான இவர் பிராந்திய நாடுகளுடன் நட்பையும் சகோரத்துவத்தையும் தமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக கருதி செயல்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இப்ராஹிம் ரயீஸி மஷ்ஹதின் நோகன் மாவட்டத்தில் பிறந்தார். ரயீஸி 5 வயதாக இருக்கும்போது அவரது தந்தை, செயத் ஹாஜி, உயிர்நீத்தார். ரயீஸி இமாம் ஹுசைன் இப்னு அலி (அலை) அவர்களின் வழித்தோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது.



ரயீஸி தனது ஆரம்பக் கல்வியை மஷ்ஹதின் "ஜவாதியே பள்ளியில்" முடித்தார்பின்னர் ஹவ்ஸாவில் (இஸ்லாமிய செமினரி) இணைந்து படிக்கத் தொடங்கினார். 1975 இல்அவர் கோம் செமினரியில் தனது கல்வியைத் தொடர "அயதுல்லா புரூஜெதி மத்ரஸா"வுக்கு சென்றார். அவர் ஆயதுல்லாஹ்  முதஹ்ஹரி பல்கலைக்கழகத்தில் தனியார் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் தனது 15வது வயதில் கோம் செமினரியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் நவ்வாப் பள்ளியில் சிறிது காலம் படிக்க முடிவு செய்தார். அதன் பிறகுஅவர் ஆயத்துல்லாஹ் சையத் முஹம்மது மூசவி நெஜாத் பள்ளிக்குச் சென்று கற்ற அதேவேளை மற்ற மாணவர்களுக்கு கற்பிக்கும் சேவையிலும் ஈடுபட்டார். 1976 இல்அவர் அயதுல்லா புருஜெர்த்தி பள்ளியில் தனது படிப்பைத் தொடர்வதற்காக கோம் சென்றார். அவர் செய்யத் ஹொசைன் புருஜெர்த்திமுர்தஸா முதஹஹரி,, அபுல்காசிம் கஸ்ஸாலிஹுசைன் நூரி ஹமதானிஅலி மிஷ்கினி மற்றும் முர்தஸா பசந்திதே ஆகியோரின் மாணவராக இருந்துள்ளார்.


No comments:

Post a Comment