Thursday, August 25, 2022

நாட்டை ஆட்சிசெய்தல் - இமாம் கொமெய்னி காட்டும் வழி

Government Week

Ruling the country - Imam Khomeini's guidance

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது இதயத்தை இறைவனுடன் இணைத்துக் கொண்டார், மேலும் அவரது முழு வாழ்க்கையும் மக்களுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை காலை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்துக்குச் சென்று இமாமின் கொள்கைகள் மற்றும் இஸ்லாமியப் புரட்சியில் விசுவாசத்தைப் புதுப்பித்துக்கொண்டபோது, ஆயத்துல்லா டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரயீஸி தியாகிகளையும் குறிப்பாக தியாகி ரஜாய் மற்றும் தியாகி பஹோனார், ஆகியோரையும் நினைவுகூர்ந்தார்,

இங்கு உரையாற்றும்போது "எங்கள் உன்னத இமாமின் அடக்கஸ்தலத்தில் 'அரசாங்க வாரத்தின்' முதல் நாளில் அரசாங்க உறுப்பினர்கள் முன்னிலையில் இமாம் கொமைனி (ரஹ்) உடனான இந்த உடன்படிக்கை (பைஅத்) மிகவும் சிறப்பான மற்றும் மதிப்புகள் கொண்ட உடன்படிக்கையாக அரசாங்கம் கருதுகிறது, என்று ஆயத்துல்லா ரயீஸி குறிப்பிட்டார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இதயம் எப்போதும் இறை நினைவில் நிறைந்திருந்தது என்று கூறிய ஜனாதிபதி, “இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் முழு வாழ்க்கையும் இறை திருப்தியை நாடி மக்களுக்குச் சேவை செய்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது. எனவே, அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கை மிகவும் சிறப்பானதோர்  உடன்படிக்கையாகும்", என்றார்.

மக்களுக்கு சேவை வழங்குவது போன்று சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் நெருக்கத்திற்கான அடிப்படை எதுவும் இல்லை என்று இமாம் ரிஸா (அலை) விளக்குவதைக் குறிப்பிடுகையில், "இன்று வெளிநாட்டில் வசிப்பவர்களிடம், 'இங்கே என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டாலும், சேவை செய்ய வந்ததாக பலர் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்வது சேவை அல்ல, சுயநலத்துக்காக உழைக்கின்றனர் என்பது தான் உண்மை," என்று டாக்டர் ரயீஸி கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, “இவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக வேலை செய்கிறார்கள், கேட்டால் தமக்கான பலனைத் தேடுவதாகக் கூறுகிறார்கள். நாட்டுக்காகவும், எங்கள் கொள்கைக்காகவும், எங்கள் இயக்கத்திற்காகவும் இவர்கள் எதையும் செய்வதில்லை, ஒரு முயற்சி கூட எடுப்பதில்லை. ஆக, சுயநலம்தான் அவர்கள் கூறும் சேவையின் பொருள்சார் பார்வையாகும், என்றார்.

"மற்றொரு வகையான சேவையும் உள்ளது, அதுதான் பொது நல சேவை என்று விவரித்தார், இதுவே தேசப் பற்றின் காரணமாக செய்யப்படும் சேவையாகும், உலகில் தன்னலமற்ற சேவை செய்பவர்கள் பலர் உள்ளனர். இந்த வகையான சேவையே மனிதநேய மற்றும் மனித மையக் கண்ணோட்டத்தில் இருந்து பெறப்பட்டது". என்று ஆயதுல்லா ரயீஸி தெளிவுபடுத்தினார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் எமக்குக் கற்றுத்தந்த சேவையானது இறைவனுக்குச் செய்யும் சேவையாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, “இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புக்கள் தொடர்பில் சளைக்கக்கூடாது. ஏனெனில் யாரேனும் இந்த வகையான சேவையை செய்வாராயின் இறை திருப்திக்காக மட்டுமே செய்ய வேண்டும். இந்த முக்கியமான விஷயமே இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களினால் இஸ்லாமிய ஈரானின் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கற்பிக்கப்பட்டது, என்று குறிப்பிட்டார்.

டாக்டர் ரயீஸி, “இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இந்த பார்வை சம்பிரதாயபூர்வமான ஒன்றல்ல இமாம் கொமெய்னி (ரஹ்) இறை நம்பிக்கையின் வெளிச்சத்தில் மக்களை நோக்கினார், மேலும் மக்களின் திருப்தியைப் பெறுவதே சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை நெருங்குவதற்கான அடிப்படையாக கருதினார். மேலும் அது மக்கள் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது வைத்துள்ள உண்மையான நம்பிக்கை ஆகும், மேலும் அதுவே இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழியாகும். இந்த அடிப்படையில் மக்கள் மீது கவனம் செலுத்துவதும், மக்கள் மீது நம்பிக்கை வைப்பதும், மக்களுக்காக நாட்டை நிர்வகிப்பதையும் தான் தனது பணியின் முன்னுரிமையாக இந்த நிர்வாகம் கருதுகிறது, மேலும் அதுவே இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழியாகவும் உள்ளது".

இமாம் கொமைனி (ரஹ்) அவர்கள் நாட்டின் பாதுகாப்பில் மக்களையும் இளைஞர்களையும் நம்பியிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, “மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் இமாம் வைத்திருந்த நம்பிக்கையே புரட்சிக்கும் புரட்சியின் வெற்றிக்கும் வழிவகுத்து இஸ்லாமிய அமைப்புக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியது. எனவே நாம் இமாம் கொமெய்னியின் வழிகாட்டலுக்கு அமைய, மக்கள் மற்றும் இளைஞர்கள் மீதும் நமது செயல்பாட்டில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

ஆயதுல்லா ரயீஸி, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளில் மற்றொரு முக்கியமான அம்சமான நீதியை நடைமுறைப்படுத்தல் பற்றி குறிப்பிட்டார், மேலும் "இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கு மறைந்த இமாமுடன் செய்த உடன்படிக்கையை மிகவும் முக்கியமானதாக மக்கள் நிர்வாகம் கருதுகிறது" என்று கூறினார்.

"இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களுக்கும் வேறு சில இறையியலாளர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், சமகால மனிதர்கள் சமூகத்தின் சூழலில் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் நம்பினார். அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதை ஒரு அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெளிவுபடுத்தினார்.

இமாம் கொமெய்னி (ரஹ்) உடனான எங்களின் மற்ற உடன்படிக்கை என்னவென்றால், அவரைப் போலவே, இஸ்லாத்தை மனித சமுதாயத்திற்கு ஒரு தீர்வாக, மகிழ்ச்சியை உருவாக்கும் மருந்தாகவும் கருதுகிறோம்; இது சமூகத்தில் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ரயீஸி கூறினார்.

ஹஜ் காசிம் சுலைமானி போன்ற தியாகியும் இந்த திசையில் நகர்ந்து மக்களின் கவனத்தைப் ஈர்த்த ஒருவர் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "இதனால்தான், உச்ச தலைவரின் விளக்கத்தின்படி, தியாகி சுலைமானி ஒரு பள்ளிக்கூடமாக கருதப்படுகிறார்" என்றார்.

"இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது போதனைகளிலும் புத்தகங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் நீதியை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை எப்போதும் வலியுறுத்தினார். எப்போதும் நீதியை நேசிக்கும் மக்களாலேயே நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை இமாம் கொமெய்னி (ரஹ்) வலியுறுத்தினார். எனவே சிறந்த மனித குணங்கள் மற்றும் குறிப்பாக உயர்தரம் கொண்டவர்களைத் நீதிக்காக தேர்ந்தெடுப்பதை எப்போதும் வலியுறுத்தினார்" என்று ஆயத்துல்லா ரயீஸி குறிப்பிட்டார்.

இன்று நாம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழியைப் பின்பற்ற விரும்பினால், அதற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவர் (ஆயத்துல்லா செய்யதலி காமனெய்) இருக்கின்றார் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, "இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் நீதியை நடைமுறைப்படுத்துவதை முக்கியமென கருதினார். எனவே, நாம் அனைவரும் ஒரு நியாயமான அணுகுமுறையில் கவனம் செலுத்த வேண்டும்." என்று கூறினார்.

இந்த அரசாங்க வாரத்தில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், இறை திருப்தி, மக்கள் சேவை மற்றும் நீதி ஆகிய மிக முக்கியமான கோட்பாட்டின் மீதான கவனம் அனைத்து அரச செயல்திட்டத்திலும் கடைபிடிக்கப்படும் என்றார்.

இந்த திசையில் ஓர் அடி எடுத்து வைத்தால், இமாம் கொமைனி (ரஹ்) அவர்களினதும் தியாகிகளினதும் படிப்பினைகள் இந்த பாதையில் வெற்றிபெற எமக்கு உதவும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, இதுவே மக்களின் திருப்தியையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும் வழியுமாகும்.

"இஸ்லாமிய அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இறைவனின் ஆசீர்வாதங்களில் ஒன்றாகும், மேலும் இது எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டிய ஒரு பெரிய சொத்து" என்று ஆயத்துல்லா ரயீஸி கூறினார்.

அரசாங்க வாரத்தில் அனைத்து அரச தலைவர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தில் உள்ள தனது சகாக்களின் கடின உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த வாரம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் விளக்கிக்கூறப்படும். நிர்வாகிகள் மற்றும் உயரதிகாரிகளின் கருத்துகள், மக்கள் கருத்துக்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மேலும் விமர்சகர்களின் விமர்சனங்களிலிருந்தும் நாம் பயனடைவோம்" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மற்றவர்கள், குறிப்பாக உயரடுக்கினரின் கருத்துகளை அரசாங்கம் தனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறது, மற்றவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம், ஏனென்றால் அரசாங்கம் ஒரு கப்பலைப் போல நகர்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அதில் குறைபாடு இருந்தால், அதன் இயக்கத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சீர் செய்யப்பட வேண்டும் என்பதை டாக்டர் ரயீஸி வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment