Wednesday, August 5, 2020

அமெரிக்காவின் ஈரான் கொள்கை ஒரு ‘படு தோல்வி': முன்னாள் அமெரிக்க அரசியல் விவகார ராஜாங்க செயலாளர் வெண்டி ஷெர்மன்

U.S. Policy on Iran a ‘Costly’ Failure: Nuclear Negotiator Wendy Sherman

2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் அமேரிக்கா சார்பாக தலைமை வகித்த முன்னாள் அமெரிக்க அரசியல் விவகார ராஜாங்க செயலாளர் வெண்டி ஷெர்மன், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தெஹ்ரானுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்தம்” கொள்கையை அவரது “வேதனையான” மற்றும் “பாதகமான” வெளியுறவுக் கொள்கை தோல்விகளின் ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சித்தார்.

வெளியுறவுக் கொள்கை இதழில், ஷெர்மன் "டிரம்பின் கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மொத்த அழிவு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலேயே இவ்வாறு தெரித்துள்ளார்.

பல வருட முயற்சியின் பின் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை ட்ரம்ப்  "வரலாற்றின் ஒரு மோசமான ஒப்பந்தம்" என்று வர்ணித்து 2018 இல் அதிலிருந்து வெளியேறினார்.

"டிரம்ப் நிர்வாகம் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் இன்று அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டுள்ளது..., மேலும் அதிக இயக்க அணுசக்தி வசதிகள், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது" என்றும் அவர் எழுதியுள்ளார்.

"அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் ஈரான் விடயத்தை கவனிக்கும் தூதர் பிரையன் ஹூக் இதை ‘அதிகபட்ச அழுத்தத்தின்’ பிரச்சாரமாக விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் அவர்களின் இறுதி நோக்கம் ஆட்சி மாற்றம் அல்ல என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்  - இதன் நோக்கம் ஒரு மர்மமாகவே உள்ளது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

விரிவான கூட்டு செயல் திட்டம் (JCPOA) என அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்து, அமேரிக்கா 2018 இல் ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்த பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது.

ஒப்பந்தத்தில்  இருந்து தன்னிச்சையாக வெளியேறியதைத் தொடர்ந்து, வாஷிங்டன் ஈரானிய தேசத்தை " முன் ஒருபோதும் இருந்திராத கடினமான" பொருளாதாரத் தடைகளுடன் குறிவைத்தது.

தெஹ்ரான் மீது ஐ.நா. ஆயுதத் தடை இந்த ஒக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது; ஆனால் அதனை  நீட்டிக்க (JCPOA) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜே.சி.பி.ஓ.ஏவை முழுமையாகக் செயலிழக்கச் செய்யும் முயற்சிகளை அமேரிக்கா இப்போது எடுத்து வருகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஷெர்மன் தனது கட்டுரையில் டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு "தெளிவான குறிக்கோளும்" இல்லை என்று விபரித்துள்ளார்.

"டிரம்பின் இந்த புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையின் விளைவாக, மத்திய கிழக்கு, அவர் பதவியேற்ற காலத்தில் இருந்ததை விட இன்று அமைதியற்ற பிரதேசமாக உள்ளது, பாலஸ்தீனிய எழுச்சி முன்பை விட வீரியம் கொண்டதாகவும் மாறி உள்ளது; தென் அமெரிக்காவில் கியூபா மற்றும் வெனிசுலா மக்கள் கசப்பான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர், ஆப்பிரிக்க அபிவிருத்தி வாக்குறுதி ஓரங்கட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளினால் ரஷ்யாவுக்கோ அல்லது சீனாவுக்கோ உண்மையான சவால் எதுவும் ஏற்படவும் இல்லை,” என்பதையும் அவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுகின்றார்.

"ட்ரம்ப்பின் வெளியுறவு குறிக்கோள்களின் அடிப்படை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அல்ல, அது டிரம்ப்பின் பாதுகாப்பு என்பதே ஒரே முடிவு. குறிக்கோள்கள் அற்ற, மூலோபாயம் அற்ற, அமெரிக்கா அதன் நலனை பாதுகாத்து முன்னேறுகிறது என்பதற்கான எந்தக் அறிகுறியும் இல்லாமல், வெளியுறவுக் கொள்கையின் வெற்றிடத்தையும் மற்றும் வீண் அணுகுமுறையையும் அன்றி வேறு எதையும் இது காட்டவில்லை."

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி ட்ரம்பின் இந்த "அதிகபட்ச அழுத்தம்" தொடர்பாக தொட்டுப் பேசுகையில் தொடர்ச்சியாக அமெரிக்கா விடுத்துவரும் புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அழைப்புகளில் நாட்டம் கொண்டோரை கண்டனம் செய்தார்.

ட்ரம்பை பெயர் குறிப்பிடாமல், "பொறுப்புவகிக்கும் இந்த முதியவர், வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை தனது பிரசார உத்தியாக பயன்படுத்தினார். இப்போது அவர் (நவம்பர் 3 அமெரிக்க  ஜனாதிபதி) தேர்தலுக்கு (ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை) பயன்படுத்த விரும்புகிறார்," என்றும் ஈரானிய தலைவர் கூறியுள்ளார்.

"எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்; இதை நான் பலமுறை கூறியுள்ளேன், நான் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்கான காரணத்தை சிலர் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள் அல்லது அவர்களுக்கு புரியவில்லை என்பது போல் பாசாங்கு செய்கிறார்கள். "எதிரி எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன் நோக்கம் அவர்கள் 'பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து எம்மிடம் ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துங்கள் என்பார்கள், அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால்… நாம் எமது பாதுகாப்பில் பலவீனமடைவோம், நாங்களே பாதுகாப்பற்றவர்களாக ஆகுவோம்; அவர்கள் விரும்பும் விதத்தில் நாங்கள் செயல்படாவிட்டால், இதே நெருக்கடியை தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: ஆகவே அவர்களின் பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பு என்பது சச்சரவுகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் ஆகியவைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என்று இஸ்லாமிய புரட்சியின் தெளிவுபடுத்தினார்.

https://parstoday.com/en/news/iran-i124709-us_maximum_pressure_policy_on_iran_costly%E2%80%99_failure_chief_nuclear_negotiator

 


No comments:

Post a Comment