ஈரானின் வறண்ட பகுதிகள் முழுவதும் வேளாண்மை மற்றும் நிரந்தர
குடியேற்றங்களுக்கு அவசியமான நீரை கொண்டுசெல்லும் அற்புதமான நீரமைப்பு திட்டமே ‘கனாட்’ (Qanat) ஆகும்.
பள்ளத்தாக்குகளில் 'கோஷ்கான்' என்றழைக்கப்படும் சுரங்கப்பாதைகள்
அமைத்து அதனூடாக பல கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஓரிடத்துக்கு நிலத்தடி நீரை
கொண்டுசெல்லும் 3000 வருடங்கள் பழமையான பாரசீக தொழில்நுட்பமும் பொறியியலும்
உலகை வியக்க வைத்துள்ளது.
கனாட் இன் அளவுகள் சாய்வு மற்றும் நீளம் ஆகியன அனுபவம்
வாய்ந்த தொழிலாளர்களால் பாரம்பரிய முறையில் கணக்கிடப்படுவதாகும். இம்முறையானது பல நூற்றாண்டுகளாக தலைமுறை
தலைமுறையாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலக்கீழ் கால்வாய்களின் அமைப்பானது பராமரிப்பு
கிளைகள், துணை கிளைகள் மற்றும் நீர்
அணுகல் தாழ்வாரங்கள், அதே போல் கனாட் தொழிலாளர்கள்
ஓய்வெடுக்கும் வசதிகள், நீராடிகள் உட்பட சார்பு
கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. நியாயமான மற்றும் நிலையான நீர் பகிர்வை உறுதிசெய்யும்
பாரம்பரிய நிர்வகிப்பு முறையானது இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.
பாரசீக கனாட் அமைப்பு என்பது வறண்ட பாலைவன குடியேற்ற
பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் மரபுவழி பாரம்பரியத்திற்கு ஒரு விதிவிலக்கான
எடுத்துக்காட்டாகும்.
கனாட் தொழில்நுட்பம் ஏற்படுத்திய சமூக சாதனைகள் பல்வேறு
நாகரிகங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஈரானின் வறண்ட பாலைவன பிரதேசங்களில் தோன்றிய நாகரீகங்கள் 'கனாட் நாகரீகம்' என்றழைக்கப்படுகின்றன. ஈரானின் பாலைவன பீடபூமி குடியேற்றங்களின் பரம்பல்,
நாடு முழுவதும், கனாட் நீர் விநியோக முறையுடன்
தொடர்புடையது. சமூக முகாமைத்துவத்தின் விதிவிலக்கான வாழ்க்கை கலாச்சார
பாரம்பரியத்தை இந்த நீர்வள ஆதார அமைப்பு வழங்குகிறது.
பாரசீக கனாட் அமைப்பு வறண்ட பிரதேசங்களில் மனித குடியேற்ற
வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிலைகளை விளக்கும் தொழில்நுட்ப குழுமத்தின் ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகும். சிக்கலான கணக்கீடுகள் மற்றும் விதிவிலக்கான கட்டடக்கலை
பண்புகளின் அடிப்படையில் நீரை சேகரித்தது, ஈர்ப்பின் துணைகொண்டு நீண்ட
தூரத்திலிருந்தே நீரை விநியோகிக்கும் இந்த அமைப்புகள், ஆயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
கனாட் அமைப்பு, குடியேற்றங்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றிற்கு உதவியது மட்டுமல்லாது ஒரு
பாலைவனத்துக்கே உரிய பாணியிலான கட்டமைப்பு மற்றும் நிலவமைப்பு, நீர்த்தேக்கங்கள், ஆலைகள், நீர்ப்பாசன
அமைப்புகள், மற்றும் தோட்டங்கள் போன்ற அவற்றுடன் தொடர்புடைய
அமைப்புகளையும் கொண்ட ஓர் அற்புதமான நாகரீகத்தையும் உருவாக்கியது.
பதினொரு கனாட்கள் இன்றளவிலும் செயற்படுவனாக உள்ளன. மேலும்
கட்டடக்கலை மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகளை மட்டுமல்ல, அவற்றின் செயல்பாடுகளையும்
இன்றளவிலும் தக்கவைத்துக் கொண்டது ஆச்சர்யப்படத்தக்கது.
இவை ஈரானிய பாலைவன
குடியேற்றங்கள் மற்றும் தோட்டங்களுக்கு ஆதாரமான அத்தியாவசிய நீரை வழங்குவதோடு தொடர்ந்து பாரம்பரிய சமூக ரீதியாக
நிர்வாக அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
இந்த மேலாண்மை அமைப்புகள், மக்களினதும் பாவனையாளர்களதும் ஒத்துழைப்புடன்,
காலம் காலமாக, மாற்றமேதும் இன்றி, அப்படியே உள்ளன.
இந்த கனாட்களின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி
செய்வதற்காக, நீர்த்தேக்க மண்டலத்துடன் நீர் பாசன பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும்
அவற்றின் அத்தியாவசிய செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு மிக உயர்ந்த பாதுகாப்பு
நிலைக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, நீர் வளங்களின்
விநியோகம், விவசாயப் பகுதிகள் மற்றும் பயன்பாடு, ஆகியவற்றை கனாட் அமைப்புகளின் முழுமையான, நீண்ட கால
பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இடையக மண்டலங்கள் மூலம்
பாதுகாக்கப்பட்டுள்ளன.
வடிவமைப்பு, தொழில்நுட்பம், கட்டுமானப்
பொருட்கள், மரபுகள், நுட்பங்கள்,
மேலாண்மை அமைப்புகள் மற்றும் இயற்கையான சூழல், பொருள் மற்றும் பண்டைய கலாச்சாரம் ஆகியவற்றுடன் அறிவை அடிப்படையாகக் கொண்ட
அருமையான மரபுவழி சங்கங்களும் பதினோரு கனாட்களின் நம்பகத்தன்மை
உறுதிசெய்யப்படுகிறது.
சமூக ஒத்துழைப்பு, சமூக நம்பிக்கை மற்றும் நேர்மை மற்றும்
பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கனாட்கள்
நிறுவப்பட்டு கட்டப்பட்டுள்ளது. மேலும், அவற்றின்
ஸ்திரத்தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவை கூட்டு ஒத்துழைப்பின் அடிப்படையில்
நிர்வகிக்கப்படுகின்றன, பாதுகாக்கப் படுகின்றன, விரிவுபடுத்தப்படுகின்றன.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாக்கப்பட்ட
நினைவுச்சின்னங்களின் தேசிய பதிப்பில் இந்த பதினொரு கனாட்களும் அடங்கியுள்ளன.
அவற்றின் நீர்ப்பாசன மற்றும் நீரேந்து பகுதிகள், விசேடமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு
மண்டலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பதினொரு கனாட்களின் விவரங்களை
விரிவாக்குதல் மற்றும் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்தல் ஆகியன, பாதுகாக்கப்பட்ட பண்புகளின் முழு நோக்குடன் இடம்பெறுவதைக் கண்காணிப்பதற்கும்
தொடர்பு கொள்வதற்கும் உதவுகின்றன.
இந்த கனாட்களின் பராமரிப்பு மேலாண்மை ஒரு
ஒருங்கிணைக்கப்பட்ட செயற்குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது. கனாட் கவுன்சில்
என்றழைக்கப்பட்டும் இக்குழுவில் கலாச்சார வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு, இயற்கை வளங்கள், வேளாண்மை, எரிசக்தி, சாலை
மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அமைப்பு, கிராமப்புற வீட்டு வசதி அறக்கட்டளை மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்கள்
ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த கனாட்களின் பராமரிப்பில் அதிக
அக்கறை கொண்டுள்ளது.
https://whc.unesco.org/en/list/1506
No comments:
Post a Comment