Let's turn conflicts with neighbours into cooperation - Imam Khamane'i
இஸ்லாமிய புரடசியின் வித்துக்கள் - அலி ரஜாய் மற்றும் பஹோனர்
1981 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 30 அன்று,
ஈரானில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பில் அப்போதைய ஜனாதிபதி முகமது அலி
ராஜாய், பிரதம மந்திரி முகமது ஜவாத் பஹோனர் மற்றும் ஆறு மூத்த அதிகாரிகள்
கொல்லப்பட்டனர். இவர்களது இந்த உயிர் தியாகத்தை நினைவுகூறுமுகமாக ஒவ்வொரு ஆண்டும்,
ஈரான் இஸ்லாமிய குடியரசில் அவர்களின் தியாக நினைவு தினத்திற்கு முந்தைய வாரம்
'அரசாங்க வாரமாக' அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி அன்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ்
செய்யிதலி காமனெய் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன் போது, இமாம் காமனெய், தியாகி ராஜாய் மற்றும் தியாகி பஹோனர் ஆகிய இருவரும் கொண்டிருந்த இரண்டு முக்கிய அம்சங்கள் பற்றி சிலாகித்துப் பேசினார், அவர்கள் இறைவனின் திருப்தியை
நாடியே மக்களுக்கு சேவை செய்ய உழைத்தனர் என்று கூறினார்.
"ரஜாய் மற்றும் பஹோனரின் நோக்குநிலை இஸ்லாமாகவும் புரட்சியையும் நோக்கியதாகவும்
இருந்தது. மக்களுக்கு சேவை செய்வது இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும் என்று அவர்கள்
உறுதியாக நம்பினார்கள். எனவே, இஸ்லாமிய அமைப்பின் அனைத்து அரசாங்கங்களுக்கான குறியீட்டு
வார்த்தைகள் இறைவனின் திருப்தியைத் தேடுவதாகவும், மக்களுக்கு சேவை செய்வதற்காக செயல்படுவதாகவும்
இருக்க வேண்டும்" என்று தலைவர் கூறினார்,
அண்டை நாடுகளுடனான உறவுகள் தொடர்பாக ஈரானின் கொள்கை உட்பட வெளியுறவுக்
கொள்கைத் துறையில் தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து இஸ்லாமியப்
புரட்சியின் தலைவர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார். அண்டை நாடுகளுடன் மோதல் கொள்ளக் கூடாது. முரண்பாடு
ஏற்பட்டால், அதை ஒத்துழைப்பாக மாற்ற வேண்டும். இது தொடர்பாக சில
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இது தொடர வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
ஈரானுடன் உறவு கொள்ள விரும்பும் அனைத்து அரசாங்கங்களுடனும் (ஒரு சில
விதிவிலக்குகளைத் தவிர) உறவுகளை நிறுவும் கொள்கைக்காக தற்போதைய நிர்வாகத்தை இமாம் காமனெய் பாராட்டினார்.
வெவ்வேறு நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அங்கீகரிப்பதும் சரியான
நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவதும் அவசியம் என்றும் சில நாடுகளுடனான ஒத்துழைப்பின்
அரசாங்கத்தின் எண்ணற்ற, நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது அவசியம்
என்றும், அவை வெறுமனே காகிதத்தில் எழுதப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடாது என்றும் கூறினார்.
உலக நாடுகளுடனான தொடர்புகள் ஒரு சில மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவு கொண்டவையாக
மட்டுப்படுத்தப்பட்டவை என்று சில அரசியல் கூறுகள் கருதுவதாக இஸ்லாமியப் புரட்சியின்
தலைவர் சுட்டிக்காட்டி, "இந்தக் கண்ணோட்டம் தவறானது, பிற்போக்குத்தனமானது,
100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில ஐரோப்பிய நாடுகள் காலனித்துவத்தின் ஊடாக உலகைக் கட்டுப்படுத்திய காலத்தைச்
சேர்ந்தது. ஆனால், அந்த பழைய, பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை நாம் இன்று ஒதுக்கி வைக்க
வேண்டும். உலகத்துடன் உறவு வைத்திருப்பது என்பது ஏராளமான மனித மற்றும் இயற்கை வளங்கள்
உள்ள ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவுடன் உறவுகளைக் கொண்டிருப்பது என்பதை
உணர வேண்டும். மேலும், சர்வதேச உறவுகளுக்கான அளவுகோல் நமது நாட்டின் நலன்கள் மற்றும்
பரஸ்பர மரியாதை கொண்டதாக இருக்கவேண்டுமே அன்றி. நமது உறவுகளில் ஆதிக்கமும், அடிபணிதலும்
இருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டினார்.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மிகவும் முக்கியமான விஷயம் என்று இமாம் காமனெய்
தனது உரையில் கூறினார். "மக்களின் வாழ்வாதாரப்
பகுதியில் உள்ள பிரச்சினைகள், வீடு அதிக விலைகள் மற்றும் அதிகரித்த வாடகையி போன்றவை
அரசாங்கத்தின் அனைத்து நல்ல வேலைகளையும் முயற்சிகளையும் மழுங்கச்செய்யும், அரசின் பணிகள்
பணிகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க காரணமாகின்றன" என்று அவர் கூறினார்.
எதிரிகளால் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளின் முக்கிய நோக்கம்
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்க வேண்டும் என்பதாகும். இதை நாம் நன்கு அறிவோம்.
"பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பேச்சுவார்த்தைகள்
நடந்து வருகின்றன. இது சரியான வழிமுறையாகும். ஆனால் அதே நேரத்தில், பொருளாதாரத் தடைகளின்
தாக்கத்தை சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைக்
குறைக்கும் மிக முக்கியமான குறிகாட்டிகளில் ஒன்று பணவீக்கத்தைக் குறைப்பதாகும்,
"என்று அவர் மேலும் கூறினார்.
பணவீக்கக் குறைப்பு தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் வழங்கிய புள்ளிவிவரங்களுக்கு
பதிலளித்த இமாம் காமனெய் , "இது [பணவீக்க விகிதத்தில் குறைப்பு] நல்லது, ஆனால்
அது போதாது. இரட்டை இலக்க பணவீக்க விகிதமும்,
தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடரும் பணவீக்கமும் முற்றிலும் பொருத்தமற்றது.
பணவீக்கத்தை முடிந்தவரை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
கூட்டத்தின் மற்றொரு பகுதியில், இமாம் காமனெய் நிர்வாகத் துறைகளில் அரசாங்கத்தின் செயல்பாடுகள்
குறித்தும் குறிப்பிட்டார். தற்போதைய நிர்வாகம் மக்கள் மத்தியில் சுறுசுறுப்பாக இருப்பதாக
பாராட்டிய அவர், "நாங்கள் யாரும் விசேட சிறப்பு
வாய்ந்தவர்கள் அல்ல, இங்கே இருப்பது அனைத்தும் மக்களுக்கு சொந்தமானது, நிறைவேற்ற
வேண்டிய பொறுப்பு மக்களாலேயே
எங்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது, எனவே, மக்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.
நிர்வாகத்தில் உள்ளோரின் எளிமையான வாழ்க்கை முறை, புரட்சிகர மனப்பான்மை, ஜிகாதி (தியாக) மனப்பான்மை மற்றும் பல்வேறு நிர்வாக பதவிகளில் இளைஞர்களை இணைத்துக் கொண்டிருப்பதற்காகவும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் பாராட்டினார்.
நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர்,
"மக்களைப் போல வாழ்வது மிகவும் மதிப்புமிக்கது, அது தொடர
வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
https://english.khamenei.ir/news/10047/Considering-the-world-to-be-just-several-western-countries-A
No comments:
Post a Comment