The US plan to isolate Iran has failed
Velayati speaks to Al Mayadeen Net about Iran, BRICS, and US reactions affairs,
ஈரான், பிரிக்ஸ் (BRICS) மற்றும் அமெரிக்க எதிர்வினைகள் விவகாரங்கள் குறித்து அல் மயாதீன் நெட்டிடம் பேசிய அலி அக்பர் வெலாயத்தி, உலகம் மேலும் பல்துருவமாக மாறும் போது உலகளாவிய நாணயமான டாலர் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்று கூறுகிறார்.
அலி அக்பர் வெலாயத்தி |
ஈரானின் பிரிக்ஸ் உறுப்புரிமை தெஹ்ரானுக்கு இந்த ஆண்டின் மிக முக்கியமான இராஜதந்திர சாதனைகளில் ஒன்றாக மாறியுள்ளது, அந்த சூழலில், அல் மயாதீன் செய்தியாளர் சியாவாஸ் ஃபல்லாபோர் (Siavash Fallahpor) சர்வதேச விவகாரங்களில் ஈரானிய தலைவர் செய்யிதலி காமனெயின் மூத்த ஆலோசகர் அலி அக்பர் வெலாயத்தியுடன் ஒரு பிரத்யேக நேர்காணலை நடத்தினார். அதன் முழுமையான வடிவம் இதோ:
ஈரானின் பிரிக்ஸ் உறுப்புரிமை என்பது ஈரான் மீது திணிக்கப்பட்ட
தனிமைப்படுத்தல் கொள்கை முயற்சி தோல்வியடைந்ததன் அறிகுறியாகக் கருத முடியுமா?
ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒருபோதும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில்,
தெஹ்ரான் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு வடிவங்களில் தொடர்புகளை கொண்டிருந்தது, குறிப்பாக
ஈரான் கிழக்கு நோக்குநிலை மற்றும் அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகள் என அரசியல் கொள்கையை
ஏற்றுக்கொண்டது. இந்த கொள்கை மிகவும் முக்கியமானது என்று இமாம் செய்யிதலி காமனெய் வலியுறுத்தி
இருந்தார், மேலும் இதற்காக அனைத்து முயற்சிகளும் தீவிரத்தன்மையுடனும் எடுக்கப்பட வேண்டும்
என்று அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொள்கையின் விளைவாக சமீபத்திய ஆண்டுகளில், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில்
பாரிய முன்னேற்றகாரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காண்கிறோம்.
ஈரான் இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்த முயன்ற அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் கொள்கைகள் தோல்வியடைந்ததை நாம் காண்கிறோம், ஷாங்காய்
அமைப்பில் ஈரானின் உத்தியோகபூர்வ அங்கத்துவத்திற்குப் பிறகு இந்த தோல்வியுற்ற
கொள்கைகள் மிகவும் தெளிவாகத் தெரிந்தன.
இப்போது ஈரான் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளது, அமெரிக்கா மீதான பிராந்திய நாடுகளின்
நம்பிக்கையும் ஆட்டம் கண்டுள்ளது, ஏனெனில் இதன் உறுப்பு நாடுகள் ஒரு புறம் வெவ்வேறு
வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன, மேலும் இவை ஒரு வகையான கிழக்கு சார்ந்த கொள்கையையும்
பிராந்திய நாடுகளுடன் அதிக கூட்டணி மற்றும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த நாட்டம் கொண்டதாகவும்
இருக்கின்றன. அவற்றின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
எனவே, ஈரானுக்கு எதிரான தனிமைப்படுத்தும் கொள்கை
சந்தேகத்திற்கு இடமின்றி தோல்வியடைந்துள்ளது, மேலும்
மற்றொரு நாட்டை தனிமைப்படுத்த முயற்சித்தவர்கள் தங்களைச் சுற்றி ஒரு வேலியை அமைத்துக் கொண்டனர்.
புரட்சியின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை ஈரான் இஸ்லாமிய குடியரசு பொருளாதார மற்றும் அரசியல் முற்றுகையின் கீழ் உள்ளது,
இருப்பினும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் முடிவால்
ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஈரானுக்கு தன்னைத் தவிர
உலகத்துடன் பொருளாதார அல்லது வேறுவகையான தொடர்பு எதுவும் இல்லை என்றும் யாராவது
கூற முடியுமா?
அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் ஆரம்பத்திலிருந்தே ஈரானுக்கு எதிராக தனிமைப்படுத்தல்
என்ற பிரச்சார கோஷத்தை பயன்படுத்த முயன்றாலும், அவை தோல்வியடைந்துள்ளன. நிச்சயமாக,
ஈரான் இன்று அதன் அந்தஸ்தின் அடிப்படையில் உலகத்துடன் அதன் உத்தியோகபூர்வ உறவுகளை உறுதியாக
வளர்த்துக் கொண்டுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
பிரிக்ஸில் ஈரானின் உறுப்புரிமை தனிமைப்படுத்தல் திட்டத்தை
எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரும் அல்லது பலவீனப்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, இந்த குழு அதிக பொருளாதார திறன்களையும்
வாய்ப்புகளையும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் அதன் உறுப்பு
நாடுகள் உலகின் மொத்த மக்கள்தொகையில் [கிட்டத்தட்ட] பாதியைக் கொண்டுள்ளன.
இந்த சூழலில், உறுப்பு நாடுகளுடன் அரசியல் உறவுகளை வளர்ப்பதன்
மூலமும், பொருளாதார ரீதியாக அவர்களுடன் ஈடுபடுவதன் மூலமும், புதிய
வாய்ப்புகளை உருவாக்குவதிலும், புதிய திறன்களை வழங்குவதிலும் ஈரான் முக்கிய பங்கு
வகிக்க முடியும். எனவே, ஈரானுக்கு எதிராக அமெரிக்கர்களும் மேற்கத்திய
தலைவர்களும் அறிவித்த தனிமைப்படுத்தல் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.
பிரிக்ஸ் அமைப்பில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து போன்ற வேறு சில நாடுகள் ஒரே நேரத்தில்
உறுப்பினராக இருப்பதன் தாக்கம் என்ன?
பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற பொருளாதார வல்லரசுகள்
இருப்பது, இந்த குழுவில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பங்கேற்பு
மற்றும் உறுப்புரிமை ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளது
என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கத்துவத்தின் விளைவுகளில் ஒன்று, நான்
குறிப்பிட்டது போல,
பிரிக்ஸ் அமைப்பில் ஈரானின் அங்கத்துவம் உலகத்துடன் ஆக்கபூர்வமான உறவுகளை
ஸ்தாபிப்பதற்கான இஸ்லாமிய குடியரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது, மேலும்
இது அமெரிக்காவின் நீண்டகால தனிமைப்படுத்தல் திட்டத்தையும் உலகளாவிய ஆணவத்தையும்
முறியடித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசு கடந்த காலத்தை விட இன்று வலுவான நாடாக உள்ளது. அனைத்து துறைகளிலும் தனது செயலூக்கமான இராஜதந்திரத்தின் மூலம்
பிராந்தியத்திலும் உலகிலும் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான பாத்திரத்தை
வகிக்கிறது.
இந்நிகழ்வு மேற்காசிய நாடுகளின் பிராந்திய உறவுகளில்
சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமா?
உலகில் பல துருவ சக்திகளின் உருவாக்கம் மற்றும் ஒன்றிணைந்துள்ள பெரும்
பிராந்திய சக்திகளின் எழுச்சி ஆகியவை டாலரின் மையப்படுத்தலை
பலவீனப்படுத்துவதற்கும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, இது முன்னெப்போதையும் விட நாடுகளின் தீர்மானத்திலும்
விருப்பத்திலும் நாம் காணும் ஒரு முக்கியமான விளைவாகும்.
மேலும், இந்த நிகழ்வு மேற்கூறிய நாடுகளுக்கும் ஈரான்
இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான மிகவும் தீவிரமான ஒத்துழைப்பு மற்றும்
ஒற்றுமையைக் காட்டுகிறது மற்றும் பிராந்தியத்தில் வளமான இருதரப்பு உறவுகளை தெளிவாக
வலுப்படுத்தும்.
இந்த முன்னேற்றங்கள் குறித்த அமெரிக்காவின்
நிலைப்பாட்டை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
இந்த புதிய நிகழ்வுகள் மற்றும் பிராந்திய நாடுகளுடனான ஈரானின் நிலைப்பாடுகள், உறவுகள்
மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றால் அமெரிக்கர்கள் நிச்சயமாக அதிருப்தி
அடைந்துள்ளனர், எனவே அவர்களின் விரோதம் தொடரும். இந்த நடவடிக்கையும், பிரிக்ஸ்
அமைப்பில் ஈரானின் சேர்க்கையும் அமெரிக்கர்கள் வரலாற்று ரீதியாக கையாளும்
தந்திரங்களை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
பிரிக்ஸ் அமைப்பு தற்போது ஒருங்கிணைப்பை அடைவதற்கும், உலக
அரங்கில் பயனுள்ள பொருளாதார சக்தியை அதிகரிப்பதற்கும் அதன் உள்ளக நிறுவனங்களை
உருவாக்கி வருகிறது. உறுப்பு நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும்
வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதும், அவற்றின்
பிராந்திய மற்றும் சர்வதேச நிலைப்பாட்டை வலுப்படுத்துவதும் இக்குழுவின் முக்கிய
நோக்கமாகும். மேற்கத்திய நிறுவனங்களிலிருந்து சுயாதீனமான நிதி நிறுவனங்களை
நிறுவுவது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதில் மிக
முக்கியமான வெற்றியாகவும், உலகப் பொருளாதாரத்தின் புதிய கட்டமைப்பில் அவற்றின்
மிக முக்கியமான அனுகூலமாகவும் கருதப்படுகிறது.
உங்கள் பார்வையில், உலகின் வளர்ந்து வரும் சக்திகளுடனான ஈரானின் உறவுகளின் வளர்ச்சியின் வேகத்தை
குறைக்க வாஷிங்டன் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இந்த நடவடிக்கைகளுக்கு ஈரானின் பதில் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதன் நன்மைகளில் ஒன்று, குறிப்பாக ஈரானுக்கு, பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் திறன்களிலிருந்து பயனடைவதாகும். பன்னாட்டு அபிவிருத்தி வங்கி (Multinational Development Bank) என்று குறிப்பிடப்படும் இந்த வங்கி, உறுப்பு நாடுகளுக்கான கட்டண அறிவிப்பு முறையைக் கொண்டுள்ளது, இது SWIFT எனப்படும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையிலான தகவல்தொடர்புகளுக்கான நிதி முறையை மாற்றும்,
பிரிக்ஸ் நாடுகளின் மற்றொரு குறிக்கோள், உலகளாவிய வர்த்தக நாணயமாக
டாலரில் இருந்து பிரிந்து, உறுப்பு நாடுகளின் நாணயத்தின் அடிப்படையில் சர்வதேச
நாணய இருப்பு நிதியை உருவாக்குவதாகும். வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதார சமூகமான
பிரிக்ஸ் இல் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிரந்தர உறுப்புரிமை,
வெளிநாட்டு வர்த்தகம், தகவல்தொடர்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் உள்ள
முக்கிய சக்திகளுடனான ஒற்றுமை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான வாய்ப்பை
வழங்குகிறது, மேலும் இந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்த வேண்டும்.
1944 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய நாடுகளின் ஒப்பந்தங்களில் ஒன்றாக பிரெட்டன்
வூட்ஸ் (Bretton Woods) நாணய முறை
ஏற்றுக்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆகிவிட்டன, இதன்
மூலம் டாலர் ஒரு உலகளாவிய இருப்பு நாணயமாக அங்கீகரிக்கப்பட்டது,
உண்மையில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் அடிப்படையில், உலகில் ஒரு புதிய நாணய முறை நிறுவப்பட்டது. இதில் தங்கத்திற்கு
பதிலாக செல்லுபடியாகும் சர்வதேச நாணயமாக டாலர் பயன்படுத்தப்படுகிறது.
அப்போதிருந்து, அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தில் தன்னை
நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, ஆனால் காலப்போக்கில், உலகம்
ஒரு துருவத்திலிருந்து பல துருவத்திற்கு நகரும்போது, டாலரின்
வலிமையும் குறைந்துவிட்டது,
இன்று, ஷாங்காய் மற்றும் பிரிக்ஸ் போன்ற அமைப்புகளின்
உருவாக்கத்துடன், பிராந்தியத்தின் சக்திவாய்ந்த நாடுகள் ஒரு புதிய
பொருளாதார ஒழுங்கை உருவாக்க முயற்சிக்கின்றன.
No comments:
Post a Comment