Niger coup: End of democracy or end of French colonialism?
பிரான்சின் காலனித்துவ ஆட்சி
ஆப்பிரிக்காவில் 19 ஆம்
நூற்றாண்டில் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்களின் பிடிக்குள் வீழ்ந்திருந்தது. ஆனால்
இப்போது அவ்வாறல்ல, ஆபிரிக்க
மக்கள் மீதான கொடூரமான சுரண்டல், படுகொலை,
அடிமைத்தனம் மற்றும்
உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றின் காலம் முடிவுக்கு வந்துவிட்டன என்று
பலர் நினைக்கலாம், ஆனால்
நைஜர் போன்ற நாடுகளில் சமீபத்திய சம்பவங்கள் பாரிஸ் இன்னும் கண்டத்தின் மீது அதன்
பிடியைத் தளர்த்தவில்லை என்பதையே காட்டுகிறது.
பிரெஞ்சு மேலாதிக்கத்திற்கு
எதிராக கிளர்ந்தெழுந்த சமீபத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்று நைஜர் ஆகும்,
அங்கு இராணுவம் கடந்த
சில நாட்களுக்கு முன் மேற்கு-ஆதரவு கொண்ட மொஹமட் பஜூமின் அரசாங்கத்தை மக்கள்
ஆதரவுடன் மாற்றத்தை ஏற்படுத்தியது.
மேற்கத்திய அரசாங்கங்கள் தங்கள் வழக்கமான தந்திரோபாயத்தைக் கையாண்டு
ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. ஆட்சிக் கவிழ்ப்பு ஏன்
நடந்தது, முந்தைய
அரசாங்கத்திடமிருந்து மக்கள் என்ன கோரினர் என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்குப் பதிலாக,
மேற்கத்திய நாடுகள்
இந்த நிகழ்வை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்று தமது ஊடக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.
2021 மற்றும் 2022
ஆம் ஆண்டுகளில் மாலி
மற்றும் புர்கினா பாசோவில் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது அமெரிக்க மற்றும்
ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரே மாதிரியாக எதிர்வினையாற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜரைப் போலவே இந்த இரு நாடுகளும் இறுதியாக பிரெஞ்சு செல்வாக்கை வேரறுக்க முடிவு
செய்தன, இப்போது
இவ்விரு ஆப்பிரிக்க நாட்டு மக்களினால் தமது விவகாரங்கள் தொடர்பாக சுதந்திரமாக
தீர்மானம் எடுக்க முடியும். தங்கள் இயற்கை வளங்களை சுரண்டி ஆபிரிக்க செல்வத்தால்
தனது சொந்த பாக்கெட்டுகளை பிரான்ஸ் நிரப்பும் போது ஆபிரிக்க மக்கள் வறுமையில் வாடி
போராடும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது அவர்களது தலைவிதியா?
ஆபிரிக்காவில்
உள்ள அதன் முன்னாள் குடியேற்ற நாடுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளை திணிப்பதன்
மூலம், பிரான்ஸ் செல்வாக்கற்ற ஊழல் நிறைந்த பிரெஞ்சு சார்பு தலைவர்களின் சார்பாக
அதன் இராணுவத் தலையீடுகளை சட்டப்பூர்வமாக்க முயன்று அவர்களை அதிகாரத்தில்
வைத்திருக்க முயன்றுள்ளது.
ஆபிரிக்கர்கள் தமது வளங்களை
பிரெஞ்சுக்காரர்கள் திருடுவதற்கு இனியும் அனுமதிக்கப்போவதில்லை என்ற எளிய உண்மையை
உலகுக்கு உணர்த்திவிட்டனர். நியாயம், தர்மம்,
சம உரிமை என்று
உலகிற்கு பாடம் எடுக்கும் மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் எஜமானர்கள் இளைத்து வரும்
அநியாயங்கள் பற்றி ஒருபோதும் வாயைத் திறப்பதில்லை. மேற்கத்திய நாடுகளால்
ஓரங்கட்டப்படுவது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள,
ஆபிரிக்காவில்
பிரான்சின் காலனித்துவ கடந்த காலத்தையும், அது
இன்று கண்டத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதையும் பார்ப்போம்.
ஆங்கிலேயர்களும்
பிரெஞ்சுக்காரர்களும் ஒரு கட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் 95%
பகுதிகளை தமது அதிகார
வரம்பிற்குள் கொண்டுவந்தர்கள். மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள இன்றைய செனகல்,
மாலி,
புர்கினா பாசோ,
பெனின்,
கினியா,
ஐவரி கோஸ்ட் மற்றும்
நைஜர் உள்ளிட்ட 20 நாடுகளை
பிரான்ஸ் தனது அதிகாரத்திற்குள் கொண்டுவந்தது.
மேற்கு ஆபிரிக்காவில் பிரெஞ்சு
குடியேற்றத்தின் கொடூரம் மனிதகுல வரலாற்றில் மிகவும் வேதனையான மற்றும்
அதிர்ச்சியூட்டும் கதைகளில் சிலவாகும். விஷயங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
செல்லாதபோது பிரெஞ்சுக்காரர்கள் மிகவும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற
முறைகளைக் கையாள்வதில் இழிபுகழ் பெற்றவர்கள். ஆப்பிரிக்க மக்களின் ஆடைகளை களைந்து,
அவர்கள் மீது கனமான
சங்கிலிகளை அணிவித்து, அவர்களின்
உடல் பாகங்களை அறுத்து சுவரில் தொங்கவிட்டு, அவர்களின்
பெண்கள் மற்றும் குழந்தைகளை கற்பனைக்கு எட்டாத வகையில் பாலியல் துன்புறுத்தல்
செய்தனர்.
அல்ஜீரிய மக்களின் எலும்புகளை
சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தியதைப் போன்ற பிரெஞ்சுக்காரர்களின் ஒரு கொடூரமான
செயலை காண்பதற்கு நாம் வரலாற்றில் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. முழு
பக்கத்தையும் நிரப்பும் அளவுக்கு பிரான்ஸ் குற்றங்களைச் செய்துள்ளது.
தனது ஒன்றரை நூற்றாண்டு நேரடி
காலனித்துவத்தின் போது, பிரான்ஸ்
பல்வேறு காரணங்களுக்காக நூறாயிரக்கணக்கான ஆபிரிக்க மக்களைக் கொன்றுள்ளது. உதாரணமாக,
டிசம்பர் 1,
1944 அன்று,
பிரெஞ்சுப் படைகள்
தியாரோய் படுகொலையைச் செய்தன. இரண்டாம் உலகப் போரில் போரிட்டு நாடு திரும்பிய
நூற்றுக்கணக்கான செனகல் வீரர்களை அவர்கள் தனிப்பட்ட உரிமைகளை கோரியபோது கொன்றனர்,
போரில்
பிரான்சுக்காகப் போரிட்டு உயிர் துறப்பதை செனகல் மக்கள் பெருமையாக உணர்ந்திருக்க வேண்டுமே
தவிர, வேறு
எதையும் கேட்க அவர்கள் உரிமையற்றவர்கள் என்று பிரான்ஸ் கூறியது.
பிராந்தியத்தில்
தனது காலூன்றலை இழக்க நேரிடும் என்று கவலையடைந்துள்ள பாரிஸ், நைஜரில்
ஆட்சிக்கவிழ்ப்பை முறியடிக்க மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்
(ஈ.சி.ஓ.டபிள்யூ.ஏ.எஸ்) எடுக்கும் முயற்சிகளை வலுவாக ஆதரிப்பதாக அறிவித்தது.
தான் செய்த மனிதாபிமானமற்ற
குற்றங்கள் எதற்கும் பிரான்ஸ் ஒருபோதும் இழப்பீடு வழங்கவில்லை என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும். இன்று நீங்கள் ஒரு பிரெஞ்சு நபரிடம் கேட்டால்,
ஆப்பிரிக்காவுக்கு
"நவீனத்துவத்தை" கொண்டு வந்ததற்காகவும், கண்டத்தின் மக்கள் மிகவும்
"மனிதாபிமானமாக" மாற உதவியதற்காகவும் அவர்கள் தங்கள் பிரஞ்சு
மூதாதையர்களைப் பாராட்ட வேண்டும்; இது
தான் அவர்களது மனநிலை. கருமை நிற தோல் கொண்டோர் வெண்தோலர்களுக்கு சமமாட்டார் என்ற
எண்ணம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக
நடைமுறைகள் மூலம் பிரான்ஸ் இன்னும் ஆபிரிக்காவில் தனது காலனித்துவ ஆதிக்கத்தை
தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் பாரிஸ் இன்று 14 ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை
சூறையாடுகிறது; அதாவது
பெனின், புர்கினா
பாசோ, கினியா-பிசாவு,
ஐவரி கோஸ்ட்,
மாலி,
நைஜர்,
செனகல்,
டோகோ,
கேமரூன்,
மத்திய ஆப்பிரிக்க
குடியரசு, சாட்,
காங்கோ-பிரசாவில்,
ஈக்வடோரியல் கினியா
மற்றும் காபோன். இதன் மூலம் பிரான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன்
டாலர்களை சம்பாதித்து வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அச்சுறுத்தல் மூலம்
செய்யப்பட்டவை என்பதை மறத்தல் ஆகாது.
நைஜரில் ஆட்சிக்கவிழ்ப்பு பற்றிய
மேற்கத்திய பிரச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கு, பிரான்சின் அணுசக்தி
மின்சாரத்தில் குறைந்தது 20% மேற்கு
ஆபிரிக்க நாட்டிலிருந்து அது திருடும் யுரேனியத் தாதுவைப் பயன்படுத்தி உற்பத்தி
செய்யப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நைஜர், மாலி
மற்றும் புர்கினா பாசோவைத் தொடர்ந்து, இந்த
14
நாடுகளும் பிரெஞ்சு
மேலாதிக்கத்தை அகற்ற முடிவு செய்தால், பிரான்சின்
பொருளாதாரம் மற்றும் நலன்களின் எதிர்காலம் சீர்குலைந்துவிடும்.
இக்கட்டுரையை எழுதும் நேரத்தில்,
மேற்கத்திய அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்ட
மேற்குசார்பு பஜூமின் அரசாங்கத்தை மீண்டும் பதவியில் அமர்த்த நைஜரில்
ஒரு படையெடுப்பை
தொடங்குவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பிற
நாடுகள் சுயாதீனமாகச் செயல்படவும் இறுதியாக தங்கள் சொந்த மக்களுக்கு உதவவும்
முடிவு செய்யுமா அல்லது நைஜரில் இராணுவ ரீதியாக தலையிட்டு ஆபிரிக்காவின் வளங்களை
தொடர்ந்து கொள்ளையடிக்க பிரான்ஸை அனுமதிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.
https://www.tehrantimes.com/news/487624/Niger-coup-End-of-democracy-or-end-of-French-colonialism
No comments:
Post a Comment