Saturday, February 19, 2022

பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுங்கள், வேண்டுமென்றால் டிக்கெட்டுகளுக்கு நாம் பணம் தருகிறோம் - நஸ்ரல்லாஹ்

 Nasrallah to Zionists:

Leave Palestine, Hezbollah ready to pay for tickets


1982 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய ஆட்சியின் சரிவு தொடங்கியது என்று கூறிய நஸ்ரல்லாஹ் இஸ்ரேலியர்களை பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

அநீதி எதிர்ப்புத் தலைவர்களான ஷேக் ரகேப் ஹர்ப், ஹிஸ்புல்லாஹ்வின் பொதுச் செயலாளர் சையத் அப்பாஸ் அல் மௌசாவி மற்றும் ஹஜ் இமாத் முக்னியேஹ் ஆகியோரின் தியாக நினைவு தின  வைபவத்தில் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ் செயலாளர் நாயகம் செய்யத் ஹசன் நஸ்ரல்லாஹ் அவர்கள் இமாம் அலி (அலை) அவர்களது பிறந்த தினத்தையிட்டு சகல முஸ்லிம்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.

ஷேக் ரகேப் ஹர்ப் உயிர் தியாகம் செய்து 38 வருடங்களும், சயீத் அப்பாஸ் மௌஸாவி உயிர் தியாகம் செய்து 30 வருடங்களும், ஹஜ் இமாத் உயிர் தியாகம் செய்து 14 வருடங்களும் கடந்துவிட்டன, இது 1982 ஆம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் அடையாளமாக 82 வருட கால தொடர் போராட்டம்  மற்றும் தியாகத்தின் எடுத்துக்காட்டுகள் என நஸ்ரல்லா கூறினார்.

1984 பிப்ரவரி 16, இல் ஷேக் ரகேப் ஹர்ப் இஸ்ரேலிய முகவரால் படுகொலை செய்யப்பட்டார். மறைந்த ஹிஸ்புல்லாஹ் பொதுச்செயலாளர் சையத் அப்பாஸ் அல்-மௌசாவி ஷேக் ஹர்ப்பின் நினைவேந்தல் ஆண்டு விழாவில் கலந்துகொண்டபோது 1992 பிப்ரவரி 16, அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது மனைவி மற்றும் மகனுடன் வீரமரணம் அடைந்தார்.

பின்னர் 2008 பிப்ரவரி 12, இல், ஹெஸ்பொல்லாவின் உயர்மட்ட இராணுவத் தளபதி இமாத் மொக்னியே இஸ்ரேலிய மொசாட் முகவர்களால் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

"1982 இல் இஸ்ரேலிய படையெடுப்பிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே எதிர்ப்பு போராட்டம் தொடங்கி விட்டது," என்று அவர் கூறினார். "லெபனான் அதன் அடையாளத்தை இரத்தம் மற்றும் தியாகங்கள் மூலம் பாதுகாத்துள்ளது, அது அப்படியே இருக்கும்."

"அநியாயத்துக்கு எதிரான எங்கள் போராட்ட தலைவர்கள் எங்கள் தொடக்கத்தையும் ஜிஹாத் மற்றும் போராட்ட பாதையையும் குறித்தனர், இது சமன்பாடுகளின் மாற்றம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லா தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "சகல விதமான சதிகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் எதிர்ப்பு உறுதிமொழியை காப்பாற்றும். ஹிஸ்புல்லா உட்பட பிராந்தியத்தில் உள்ள அநியாயத்துக்கு எதிரான சக்திகள் உறுதியாக உள்ளன, சியோனிசம் ஒரு போலியான நிறுவனம், அது பின்வாங்குகிறது என்று நம்பிக்கை கொண்டுள்ளன."

"இஸ்ரேலின் சரிவு 1982 இல் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய வீரர்களின் எதிர்ப்பால் அது 'நீலக் கோடு'க்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உயர்மட்ட இஸ்ரேலிய தளபதிகள் மற்றும் ஆய்வாளர்கள் 'இஸ்ரேல்' வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, அதன் அழிவை காலம் உணர்த்தும்," என்று அவர் மேலும் கூறினார்.

"பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற இஸ்ரேலியர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம், அவர்களின் டிக்கெட்டுகளின் விலையை நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்," என்று ஹெஸ்புல்லாஹ் செயலாளர் நாயகம் கூறினார்.

சியோனிச ஆட்சியுடனான சில அரபு நாடுகள் உறவுகளை இயல்பாக்குவதைப் பற்றி நஸ்ரல்லா கூறினார், "சில அரபு நாடுகள் சியோனிச நிறுவனத்துடனான உறவை இயல்பாக்குவது அது பிரச்சனைகலில் இருந்து தற்காலிகமாக  விடுபட உதவலாம்", ஆனால் எதிர்ப்பு பாதையில் விடுதலை அடிவானம் தெரியும் போது பாலஸ்தீன மக்கள் உறுதியுடன் இருப்பார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

நஸ்ரல்லாவும் சிரியாவை சுட்டிக் காட்டினார். "எதிரி சிரியாவில் அதன் ஆக்கிரமிப்பு மூலம்  லெபனானில் உள்ள எதிர்ப்பிற்கு சக்திகளுக்கு துல்லியமான ஆயுதங்களை அடைவதைத் தடுகலாம் என்று நினைக்கிறது."


"எங்களிடம் உள்ள ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை துல்லியமான ஏவுகணைகளாக மாற்ற எம்மால் முடிந்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

ஹெஸ்பொல்லாவின் துல்லியமான ஏவுகணைகளைப் பற்றி இஸ்ரேலியர்களை நோக்கி ஹெஸ்பொல்லா தலைவர் உரையாற்றினார், "நீங்கள் விரும்பும் அளவுக்குத் தேடுங்கள், நாங்களும் காத்திருக்கிறோம்."

"நாங்கள் லெபனானில் பல ஆண்டுகளாக ட்ரோன்களை தயாரித்து வருகிறோம், அவற்றை யாராவது வாங்க விரும்பினால்  அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார். "எங்கள் இளைஞர்கள் காலத்துடன் விரைந்து பயணிக்கின்றனர்; அனைத்து முன்னேற்றங்களும் விரைவாகவே இடம்பெறுகின்றன, இராணுவத் துறையில் அனைத்து முன்னேற்றங்களுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்."

"இஸ்ரேலின் ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் லெபனான் அதன் வான் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானித்தது" என்று ஹெஸ்பொல்லாவின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். "எதிர்ப்பு திறன்கள் மற்றும் கட்டமைப்பு தொடர்ந்து உருவாகி வருகிறது, கடந்த கோடை காலம் மிகப்பெரிய பயிற்சி பருவங்களில் ஒன்றாகும்," என்றார்.

அவர் தனது உரையில் லெபனான் நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டி, "நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும், தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகக் எம்மீது குற்றம் சாட்டுபவர்கள் தான் அதை ஒத்திவைக்க விரும்புகிறார்கள்" என்று கூறினார்.

https://en.mehrnews.com/news/183983/Leave-Palestine-Hezbollah-ready-to-pay-for-tickets

 

இது இவ்வாறிருக்க சில அரபு ஆட்சியாளர்கள் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொள்ள எடுத்துவரும் நடவடிக்கையினை, சுன்னி உலகு இஸ்ரேலுடன் இணங்கிச்செல்ல தயாராய் உள்ளது போலவும் அதனை எதிர்ப்பது ஷியாக்கள் மட்டுமே என்பது போலவும் ஒரு மாயையை உருவாக்க சியோனிச ஊடகங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஈரானை சுன்னி உலகுக்கு எதிரான நாடாக காட்டுவதற்கு அரபு அரச ஊடகங்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் உலகு ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் அவை கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வருகின்றன.

பக்கத்தில் பலம்வாய்ந்த நாடாக ஈரான் வளர்ந்து வருவதையும் அரபு மக்கள் படிப்படியாக அதன்பால் ஈர்க்கப்படுவதையும் இந்த அரபு ஆட்சியாளர்கள் தங்கள் பரம்பரை ஆட்சிக்கு பெரும் சவாலாகவே பார்க்கின்றனர்; அதனால் தான் எந்த சாத்தானுடன் கூட்டு சேர்ந்தாவது, ஈரானின் வளர்ச்சியை முறியடிப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதன் தொடர்ச்சி தான் தற்போது அவர்கள் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகும்.

அண்மையில் ஒரு வலைப்பதிவில், ஓய்வுபெற்ற யுஎஸ்ஏஎஃப் உளவுத்துறை அதிகாரி "சுன்னி அரேபியர்களுடன் இணைந்து பணியாற்ற இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள்" என்று எழுதினார். ஏனெனில் "அவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யெமனில் உள்ள அதன் ஷியா சிண்டிகேட்டை ஒரு பொது எதிரியாக கருதுகின்றனர்," என்று ரிக் ஃபிராங்கோனா விளக்கினார்.

இப்பிராந்தியத்தை நோக்குகையில் ஒருபுறம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சுன்னி அரபு நாடுகளின் பின்னிப்பிணைந்த நலன்கள் உள்ளன, (ஷியா பெரும்பான்மை பஹ்ரைன் சுன்னி கலீபா குடும்பத்தால் ஆளப்படுகிறது, இபாதி ஷியா பெரும்பான்மை ஓமான் பிராந்திய விவகாரங்களில் பல தசாப்தங்களாக நடுநிலை வகிப்பதில் இருந்து விலகிவிட்டது), அவற்றுக்கு பிராந்தியத்தில் சியோனிச பிரசன்னம் ஒரு பொருட்டல்ல; மறுபுறம் ஈரானுடன் கூட்டணி வைத்திருக்கும் அரபு நாடுகளும் அரச சார்பற்ற (ஹிஸ்புல்லாஹ், ஹாமாஸ், அன்ஸாருல்லாஹ் போன்ற) இஸ்லாமிய இயக்கங்களுமாகும்; இவையே சியோனிச உறவை தீவிரமாக எதிர்ப்பனவாகும்.

எவ்வாறாயினும், சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் சுன்னி அரபு நாடுகள் இன்னும் உள்ளன என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். உதாரணமாக, துனிசியா மற்றும் அல்ஜீரியா ஆகியவை இஸ்ரேலுடன் உறவு இயல்பாக்கத்திற்கு எதிரானவை.

ஈராக் அரசாங்கம் தனது நிலைப்பாடு மாறாது என்றும் இஸ்ரேலுடன் எந்த உறவும் இல்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment